454 views

ஆட்சியர் கனவு – 3

 

உன் மேல்
நான் கொண்ட
நம்பிக்கை கூறும(டா)டி
நீ என்னவ(ன்)ள் என்று..!
ஆயிரம் பேர்
பல்லாயிரம் கூறட்டும்
நின் நினைவுகளையும் சரி
நிஜங்களையும் சரி
நிந்தனை செய்பவ(ள்)ன்
நானல்ல..
நின் நிரந்தர
உறவுமானவன்(ள்) நான(டா)டி..!

விஷ்ணு ஒருவரைப் பற்றி விசாரித்துக் கொண்டு இருக்கையில், திவியின் பதில்கள் அவனை மேலும் கோபமேற்ற, திவி கன்னத்தில் பளாரென்று அறைய அவனின் ஐந்து விரல்களும் பெண்ணவள்  வதனத்தில் ஆழமாய் பதிந்து இதழோரம் இரத்தம் கசிந்தது.

 
இதுவரை தன்னை எதற்கும் திட்டாத தன் உடன் பிறவா சகோதரன் தன்னை உடலளவால் காயப்படுத்தியதை விட, அவன் கூறிய வார்த்தைகளே நெஞ்சில் ஈட்டியாய் பாய, பெண்ணவள் துடித்துடித்துப் போனாள். கண்கள் கலங்கிய நிலையில் அண்ணன் கூறிய வார்த்தைகளின் வீரியத்தை உணரவே அவளுக்கு நிமிடங்கள் பிடித்தது.

இதனைக் கண்ட அவர்களின் தோழமைகள் செய்வதறியாது திகைத்து நிற்க ரவீணாவின் கை விரல்கள் விஷ்ணுவின் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது. 

ரவீ “என்ன நினைச்சிட்டு இருக்க நீ.? அவள அடிக்க என்ன தைரியம் உனக்கு.? என் முன்னாடி என் திவிய அடிக்குற? அவளோட கேரக்டர தப்பா சொல்ற.? இதுதான் அவள நீ புரிஞ்சிக்கிட்டதா.?” என்று உச்சக்கட்டக் கோபத்தில் கத்தினாள்.

இவளுக்கு கோபம் கூட வருமா .? என்று ஒருவித ஆச்சர்யம் கலந்த திகைப்புடன் இருந்தனர் அவர்களின் நண்பர்கள். பின்னே எதற்கும் கோபப்படாதவள், அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்பவள் திவிக்காக கர்ஜித்தது அனைவருக்கும் ஆச்சரியமே.!

 
ஆதிதான் தான் வந்த முதல் நாளே என்னன்னமோ நடக்க செய்வதறியாது குழம்பியவன், திவியின் கண்களை கண்டவுடன் ஏதோ மனது வலிக்க, ஏதோ ஒரு வித கோபத்தில் விஷ்ணுவின் சட்டையைப் பிடித்து ‘எதுக்குடா அவள‌ அடிச்ச.?’ என்றான் கர்ஜிக்கும் குரலில்.

வந்த முதல் நாளே இவர்களின் நெருக்கம் என்னவென்று அனைவரும் உணர்ந்திட, திவிக்கோ ‘எந்த உரிமையில் இவன் நமக்காக சண்டையிடுகிறான்.? நான் இவனுக்கு என்ன செய்தேன்.? யார் இவன்.? எங்கோ பார்த்து இருக்கிறேன்.? எங்கு.?’ என்று தன் மனதிடம் பெரும் போராட்டத்தையே நிகழ்த்திக் கொண்டு இருந்தாள்.

விஷ்ணு “அவன் யாருன்னு இப்போ வரை அவ சொல்லலடா? அது யாருக்கும் தெரியலயா?”

திவி இன்னும் என்னை நீ சந்தேகத்துடன் தான் பார்க்கின்றாயா? என்ற வலி மிகுந்த பார்வையால் அவனை நோக்கினாள்.

 
ரவீ “நிறுத்துறீயா.! அவள பத்தி எங்க எல்லாத்துக்கும் தெரியும். அவ அதுக்கு காரணம் சொல்லிதான் நிரூபிக்கணும்னு எந்த வித அவசியமும் இல்லை” என்றாள்.

திவி “இல்ல ரவீ, நான் சொல்லி தான் ஆகணும். இனியும் என்ன இவன் சந்தேகமா பாக்குறத தாங்க முடியாதுடி” என்றவளின் கண்களில் கண்ணீர் குளம் போல் நிறைந்து இருந்தது.

இதில் ஒருவளோ சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திகழ்ந்துக் கொண்டிருந்தாள்.

திவியின் ஒரு சொட்டு கண்ணீர் கூட கீழே விழாமல் கண்களுக்குள்ளேயே நர்த்தனம் இட, வலி மிகுந்த குரலில், “அவங்கள எனக்கு யாருன்னே தெரியாது. 2 வாரத்துக்கு முன்னாடி நான் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தப்போ ஒருத்தங்க மயக்கம் போட்டு என் கண் முன்னாடி விழுந்தாங்க. அவங்கள ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு ஈவ்னிங் வர அங்க தான் இருந்தேன். அவங்க போன்ல இருந்து அவங்க வீட்டுக்கு போன் பன்னேன். அங்க யாரும் சரியா ரெஸ்பான்ஸ் பன்னல. சோ, நானும் அக்காவும் ரெண்டு நாள் அவங்க கூட இருந்து பாத்துக்கிட்டோம். அன்னைக்கு அக்காவுக்கு வொர்க்னு வரல. எனக்கும் டைம் ஆச்சு.

அதனால நர்ஸ் கிட்ட  வீட்டுக்கு போய்ட்டு ஒன் ஹவர்ல வந்துடுறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். ஈவ்னிங் வந்து பாக்குறப்போ அவங்கள யாரோ டிஸ்சார்ஜ் பன்னி கூட்டிட்டு போய்ட்டதா சொன்னாங்க. யாருன்னு கேட்டேன் அவங்க பையன் தான்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறம் நான் எதுவும் கேட்கல.  காலேஜ் ஓபனிங்க்கு அப்புறம் அந்த விஷயம் எனக்கு சுத்தமா மறந்துடுச்சி. இன்னைக்கு காலைல வந்தவங்க அந்த அம்மாவோட பையன் தான். ஒரு வாரம் முன்னாடி அவங்க அம்மா நான் ஆட்டோ ஏறுறத பாத்துட்டு இவங்கக் கிட்ட சொல்லி இருக்காங்க, என்னைப் ஃபாலோ பன்னி பேசனும்னு நினச்சப்போ ஐடி கார்டு இல்லாததனால வாட்ச்மேன் உள்ள விடல, அதனால ஒரு வாரமா டெய்லி காலைல வந்து வெயிட் பன்னியிருக்காங்க.

இன்னைக்கு என்ன பார்த்ததுமே திடீர்ன்னு வழிமறிச்சு பேசுனாங்க. முதல்ல பயந்தேன். அப்புறம் அவங்க யாருன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் நார்மலா பேசுனேன். இது ரவீக்கும் தெரியும். உன்கிட்ட சொல்லலாம்னு வரப்போ மேடம் கூப்டாங்க. ஸோ மறந்துட்டேன். அவங்க வீட்ல அவங்கள பாத்துக்க யாருமே இல்லன்னும் அவங்களுக்கு இப்போதான் இங்க டிரான்ஸ்ஃபர் கிடச்சதுனால இனிமே அவங்க அம்மாவ பாத்துக்குவேன்னும் சொன்னாங்க.

அண்ட் அந்த அம்மா கொஞ்சம் மனநிலை பாதிச்சவங்கன்னும் இப்போ தான் குணமானாங்கனும் சொன்னாங்க. நான் அத கேட்ட உடனே ‘ஒரு தங்கச்சியா உங்ககூட அம்மாவ பாத்துக்குவேன்’னு சொன்னேன். அப்போ அவங்க கண்கலங்கி நன்றி சொன்னாங்க. அவங்க மைண்ட் செட்ட மாத்தனும்னு தான் கொஞ்சம் சிரிச்சு பேசுனேன். இப்பவும் சொல்றேன் அவங்க எனக்கு அண்ணா தான்.!” என்று எங்கோ பார்த்தபடிக் கூறினாள்.

 
ஆதிக்கோ அவளின் இந்த நிலை கண்டு மனது வலியால் துடித்தது. திடீரென்று ஏதோ தோன்ற, “அவங்க பேர் என்ன.?” என்று ஒரு வித எதிர்பார்ப்புடன் கேட்டான்.

திவியோ கண்களை அழுந்த துடைத்தபடி தெரியாது என்று தலையை ஆட்டினாள். (பெயரை அறிந்திருந்தால் இருவரின் ஏக்கமும் இன்றே தணிந்திருக்கும்) தவறியும் அவளது கண்ணீர் கீழே உதிரவில்லை.

திவி விஷ்ணுவை பார்த்து மீண்டும் கண்கள் நிரம்ப “இன்னும் நீ என்ன நம்பலல.?” என்றிட,

ஆதிக்கோ “நான் நம்புறேன்டி” என்று கட்டியணைத்து கூற வேண்டும் போல் என்று இருந்தது, தன்னை கடினப்பட்டு சமன்செய்து கொண்டிருந்தவனின் மனசாட்சி ‘ஆதி இது தப்பு. உனக்கு ஏன் இப்படிலாம் தோணுது.? உனக்குன்னு இங்க யாருமே இல்ல. அப்புறம் உனக்குன்னு ஒருத்தியை நீ தேடிக்கிட்டு இருக்க மறந்துட்டியா.? அவள நீ இன்னும் கண்டுபிடிக்கல, நியாபகம் இருக்கட்டும்’ என்று எச்சரிக்கை விடுக்க, ஆதியோ ‘ஏன் அவ இவளா இருக்க கூடாது.? இவளா இருந்து நான் உணராம இருக்கேனா.?’ என்று மனதிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான்.

விஷ்ணு அதிர்ச்சியுடனும் குற்ற உணர்ச்சியுடனும் கண் கலங்க திவியைப் பார்க்க, மற்றவர்களோ ‘என்ன கூறுவது.? யாரை சமாதானம் செய்வது.?’ என்று அறியாமல் விழித்துக் கொண்டு இருந்தனர்.

திவி “ரவீ, நான் லைப்ரரி போய்டு கிளம்புறேன். நீ வீட்டுக்கு போய்டு எனக்கு கால் பன்னு, கனகா,கவி,கௌசி வீட்டுக்குப் போய்டு மெசேஜ் பண்ணுங்க. சுப்ரியா நான் இனி தனியாவே போய்க்குறேன்.

தரனேஷ், சபரி, பிரவீண், கமலேஷ் அண்ணா எல்லாரும் எல்லாத்தையும் வீட்டுக்கு அனுப்பிட்டு கிளம்புங்க. ஆதியிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் பாத்து வீட்டுக்கு போங்க.” என்று சொல்லிவிட்டு எங்கோ பார்த்தபடி, “ஹால்ஃப் ஆன் ஹவர்ல டிரெயின் வந்துடும் எல்லாரும் கிளம்புங்க” என்று விட்டு நகர்ந்தாள்.

ஆம்.! விஷ்ணு ட்ரெயினில் தான் பயணிப்பான், அதனாலேயே அவள் அவ்வாறு கூறினாள்.  இருந்தும் தன் தொலைபேசியை எடுத்து கமலேஷிற்கு “அவன பாத்து வீட்டுக்கு அனுப்பிடுங்க. ப்ளீஸ்… அப்புறம் நான் கால் பன்றேன்” என்ற குறுஞ்செய்தியை அனுப்பினாள்.
 
திவியின் பின்னாடியே ரவீயும் நடக்க மற்றவர்கள் கிளம்பினர். அனைவரும் கிளம்ப, ஆதி, கமலேஷ் இருவரும் விஷ்ணு அருகில் வர, அதுவரை சிலையாய் இருந்தவன், தன் கைகளை முகத்தில் மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தான். “நான் பன்னது ரொம்ப தப்பு. நான் அவள நம்புனேன். அவ பக்கத்துல இருந்த பையன் ஒரு வாரமா அவள ஃபாலோ பன்னது எனக்கு தெரியும்.  அவனால திவிக்கு எதாவது ஆகிடுமோன்னுதான் அப்படி பன்னேன். அவள.. அவள… நான் இதே கையால தான் அடிச்சுட்டேன். திவி ஸாரி திவி. நான் உன்ன சந்தேகப்படலமா. நீ..நீ.. என் உயிர் திவி.. ஸாரி திவி.” என்று தேம்பி அழுதவனை இரு தோழமைகளும் கட்டியணைத்துக் கொண்டனர்.

கடினப்பட்டு அழுகையை கட்டுப்படுத்தியவன் “நான் உடனே திவியப்  பாக்கணும்” என்றிட கமலேஷ் “அவ எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசலாம். உன்ன வீட்டுக்கு கிளம்ப சொன்னாடா” என்றிட, ‘இன்னும் தன் மேல் அன்பைக் கொட்டும் திவியிடமா நான் அவ்வாறு பேசினேன்’ என்று தன்னையே நொந்து கொண்டான்.

திவி லைப்ரரிக்கு சென்று புத்தகத்தை ஒப்படைத்துவிட்டு திரும்ப, ரவீ அங்கு நின்று கொண்டிருந்தாள்.

திவி அவளை அணைத்துக் கொண்டு “நான் வழிஞ்சேனா ரவீ? என்றிட,

ரவீ “திவி, இப்போ நீ போய் அடுத்த வேலையைப் பாரு. எல்லாம் சரி ஆகிடும். அவன் அவன் ஆயிரம் சொல்லுவான் அதுலாம் நினச்சிக்குட்டு ஃபீல் பண்ணாத! நீ கிளம்பு. அம்மா உனக்கு வெய்ட் பன்னீட்டு சாப்டாம இருக்க போறாங்க.?” 

எப்பொழுதுமே தன்னையே எண்ணும் ரவீயின் நட்பைக் கண்டு பூரித்துப் போனாள் திவி. அவசர அவசரமாக பஸ் ஸ்டாண்டிற்கு சென்றவள் பேருந்திற்காகக் காத்திருந்து விட்டு, பேருந்து வரவும் கிளம்பினாள்.
சற்று தெளிவுடன் வீட்டிற்கு வந்தவள், அவள் அம்மாவிடம் எதை எதையோ கூறி தோழர்கள் சண்டையில் தான் குறுக்கே சென்றதால் என் கன்னம் பழுத்து விட்டது எனக் கூற, “உன்னலாம்…” என்று அவளின் அன்னை அவளை என்ன செய்வதென்று புரியாமல் “சாப்ட்டு படு‌.! அப்புறம் உனக்கு இருக்கு” என்றிட தன் அன்னையின் இரண்டொரு வார்த்தைகளில் அவரின் மனநிலை புரிய தன் தொலைந்த புன்னகையை கடினப்பட்டு வரவழைத்துக் கொண்டு சாப்பிட்டு அமர்ந்தாள்.

அலைபேசி எடுத்து அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனரா என்று உறுதிப் படுத்திக் கொண்டு தானும் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று செய்தியையும் அனுப்பினாள். இது இவளின் தினசரி வேலை என்பதால் அவளின் அம்மா மருந்தை எடுத்து விட்டு வந்து கன்னத்தில் மருந்திட, என்றுமே தன் அன்னையிடம்‌ எதுவும் மறைக்காதவள் இன்றும் அவரின் மடியில் படுத்துக் கொண்டு நடந்த அனைத்தையும் கூறி ‘ஆதி’ என்ற புதியவனின் வருகையை மேலோட்டமாக கூறினாள்.

நடந்த அனைத்தையும் கேட்டு சற்று கோபம் அடைந்தாலும் “திவ்யா, விஷ்ணுக்கு உன் பின்னாடி அந்த பையன் ஒரு வாரமா ஃபாலோ பன்னது தெரியும். உனக்கு ஏதோ ஆகிடுமோன்னு பயத்துல இருந்தான். நீ சிரிச்சு பேசுனப்போ அவன் அப்படி பன்னியிருக்கலாம்” என்ற அன்னையை புரியாமல் பார்த்தவள், “தினமும் அவன் உன்ன ஃபாலோ பன்றத என்கிட்ட சொல்லி உன்னயப் பாத்துக்க சொல்லுவான்மா” என்று அவளின் தலையைக் கோதிக் கொண்டே கூறினார்.

விஷ்ணுவைப் பற்றி அவள் அறிந்ததே.. இன்று அவனின் கோபத்திலும் அண்ணனின் அன்பை உணர்ந்தவள், இருந்தும் அவன் அடித்தது நினைவு வர “அவன் அடிச்சத கூட ஓகே மா. அவன் இன்னும் நாலு அடி அடிச்சு இருந்தாலும் எனக்கு பெருசா வலிச்சு இருக்காதுமா. அதுக்குன்னு இப்டியாமா பேசுவான்.? ‘நாவினால் சுட்ட வடு‘ ஆறாதேம்மா.!” என்றிட, “எல்லாம் சரி ஆகிடும் நீ தூங்கு” என்று விட்டு தன் வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார்.

தன் வீட்டிற்கு வந்த அனைவரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, திவி வீட்டிற்கு சென்று விட்டாள் என்பதே சற்று நிம்மதி அளித்தது. விஷ்ணுவிற்கு அழுது அழுது கண்கள் சிவக்க இருந்த திவியின் வாடிய வதனமே கண் முன் தோன்ற, ‘என்றும் ஆறுதலாய் இருக்கும் நானே என் தங்கையை காயப்படுத்திவிட்டேனே’ என்று தன்மேல் மிகவும் கோபம் தான் வந்தது.

தன் பெரிய மாளிகைக்கு ராயல் என்ஃபீல்டு மோட்டார் வண்டியில் வேகமாக வந்தடைந்த ஆதியை தனிமையே வரவேற்றது. இதுவரை முகத்தில் இருந்த சிறு புன்னகைக் கூட மறைந்து இறுக்கமாக மாறியது.

விரைந்து வந்த ஆதி தன் அறைக்கு சென்று வேகமாக அறைக் கதவை சாத்திவிட்டு படுக்கையில் அமர்ந்தான். திவியின் கண்ணீரும் வலி மிகுந்த முகமும் மட்டுமே தன் கண் முன் தோன்ற “உன்னைப் பார்த்ததுமே ஏதோ ஒரு மின்னல் வெட்டுன மாதிரி ஒரு உணர்வுடி.! நீ அழுததுமே எனக்கு ஏன் வலிக்குது.? எனக்கு ஏன் என்னனமோ தோணுது.? இந்நேரம் நீ என்னப் பன்னிட்டு இருப்ப.? முதல் நாளே என்ன இப்டி ஆக்கிட்டியேடி. இல்ல, இல்ல.! நான் உன்ன இன்னைக்கு பாக்கல. உன்கூட ரொம்ப வருஷமா பழகின மாதிரி தோணுதுடி. நீ தான் அவளா.?” என்று புலம்பிக் கொண்டிருக்க,

அவன் மனசாட்சி பீறிட்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ‘ஏன்டா ஆதி.? இப்ப அவ என்ன பன்னிட்டு இருந்தா உனக்கு என்ன.? நீ இன்னும் உனக்கானவள கண்டுபிடிக்கல டா. ஆறு வருஷமா நீ இப்படி இல்லடா ஆதி. நீ ஒரு அனாதை டா. எந்த உரிமையில நீ அவள பத்தி நினைக்கலாம்.? அவ கிட்ட எத்தன வார்த்த பேசி இருப்ப.? அவ திமிர் பிடிச்சவடா. மறந்துட்டியா.?’ என்று அவனை மேலும் குழப்பமடையச் செய்தது.

ஆதி “நான் எனக்கானவள சீக்கிரம் கண்டுபிடிச்சு உன் கொட்டத்த அடக்குறேன்”என்று மனசாட்சியிடம் சபதம் மேற்கொண்டு இருந்தான்.

அவன் அறைக் கதவை தட்டும் சத்தம் கேட்க, தன்னை சமன்படுத்திக் கொண்டவன், கதவை திறக்க தன் கம்பெனியின்  பி.ஏ.”சார்,  இப்போ மீட்டிங் இருக்கு சார். நீங்க சீக்கிரம் வாங்க சார்” என்று பயம் கலந்த உணர்வுடன் கூற, ஆதியும் கிளம்பினான். அந்த மாளிகையின் ஒரு அறையில் 2 மணி நேர மீட்டிங்கை அட்டன் செய்தவன் அறைக்குத் திரும்பித் தன்னவளிடம் மானசீகமாக பேசிக்கொண்டு இருந்தான். அங்கு நிலவியிருந்த அமைதியை அவனின் கைபேசி கலைத்து.

அதை எடுத்தவனின்  முகத்தில் மீண்டும் புன்னகை படர “சொல்லுங்க ஏ.சி. சார் என்று விட்டு, தன்னவளை கண்டுபிடித்தாயா.? யாரு அவள்.? அவள் பெயரென்ன.? நான் படிக்கும் கல்லூரியில் தான் அவள் படிக்கிறாள் என்றாயே யாரு அவள்.? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க,

ஷக்தி “டேய், டேய்! இன்னும் ஒரே ஒரு வாரம் டைம் குடுடா. இப்போ தான் அந்த பொண்ணு உன் காலேஜ்னு தெரியும். அதான் உன்னை அங்கேயே ஜாயின்ட் பண்ண சொன்னேன். நான் டியூட்டில இருக்கேன் டா தெய்வமே. நீ பன்றது உனக்கே நியாயமா இருக்காடா.? இப்படி ஒரு ஏ.சி ய கதற விட்றது ரொம்ப பாவம்டா” என்று கதறிக் கொண்டு இருந்தான்.

ஆதி “என்கிட்ட மட்டும் தான்டா நீ ஏ.சி.ன்னு பில்டப் பன்ற. இந்நேரம் நான் நினச்சு இருந்தா கண்டுபிடிச்சி இருப்பேன்‌. என்னால அவளுக்கு எதுவும் ஆகிடக் கூடாதுன்னு தான் நான் உன்கிட்ட சொன்னா, நீ என்னடா பன்ற இடியட்?” என்று ஒரு வித கடுப்பில் கூற,

ஷக்தி ” ஆதி, ஐ கேன் அண்டர்ஸ்டான்ட்டா. உடனே என் இன்ஃபுளூயன்ஸ்ஸ வச்சி கண்டுபிடிக்கலாம். ஆனா போலீஸா போனா அந்த பொண்ணு என்னன்னு நெனப்பாங்க.? பொறுடா. ஆறு வருஷம் வெயிட் பண்ண, இன்னும் ஒரு வாரம் தான.?” என்றிட,

ஆதி தன்னவளை நினைத்து மெல்லிய புன்னகை கீற்றை இதழோரத்தில் உதிர்த்து “சரிடா.!” என்றான். ஒரு பக்கம் திவியை எண்ணியே ஆடவனின் மனம் கனத்தது. அவளின் வீங்கிய வதனமும் சிவந்த கண்களும் நினைவிற்கு வர அதில் தன்னை ஈடுபடுத்தியவனின் மனநிலையை ஷக்தியின் குரல் மீட்டது.

ஷக்தி– இளம் வயதிலேயே காவல் துறையில் கால் பதித்த இளைஞன். ஆணுக்கே உண்டான கம்பீரமும், உடல்வாகும் கொண்ட இளைஞன். ஏ.சி.யாக வலம் வருபவர். 2 வாரம் முன்பாக தான் சேலத்தின் ஏ.சி.யாக பதவியேற்றவன், தன் நண்பனின் அவனவளை தேடி ஒரு வழியாக பாதி கிணற்றைத் தாண்டி விட்டான்.

ஷக்தி “டேய், மச்சான். அப்புறம் காலேஜ்லாம் எப்படி இருந்துச்சு.? ஃபர்ஸ்ட்டே… ம்ம்ம்ம்ம்ம்… பொண்ணுங்களாம் சூப்பரா இருந்தாங்களாடா..? ஆனாலும் ஒரு பொண்ணுக்காக மறுபடியும் காலேஜ் போன ஒரே ஆளு நீயா தான்டா இருப்ப” என்றிட,

ஆதி திவியை நினைத்துக் கொண்டே ஏன் இவளின் வலி என்னையும் ஆட்கொள்கிறது என்றவாறு “டேய், கம்முனு இருடா. இன்னைக்கு க்ளாஸ் சூப்பர் டா. எனக்கு எவ்ளோ ஃப்ரண்ட்ஸ் தெரியுமா.? அதுவும் ரெஃப் ஒரு பொண்ணுடா. சரியான திமிர் பிடிச்சவ எனும் போதே இருந்தாலும் ரொம்ப கேரிங்டா மாப்ள.” என்றான்.

ஷக்தி “என்னடா..? ஃபர்ஸ்ட்டேவே ஒரு பொண்ண பத்தி காண்டக்ட் சர்டிஃபிகேட் தர.? வாட் இஸ் த மேட்டர்.” என்றிட,

“டேய் சும்மா சொன்னேன் . நீ முதல்ல என் வருங்காலத்த கண்டுபிடிடா. அவ நினப்பு என்ன ரொம்ப படுத்துதுடா.” என்றான்.

“டேய் ஆரம்பிக்காதடா. ஆதி, நான் சீக்கிரம் கண்டுபிடிக்குறேன். பை டா. டைம் ஆச்சு. நீ போய் தூங்கு.” என்று அலைபேசியை துண்டித்தான்.

அப்போது தான் தன்னவளின் நினைவும் திவியின் நினைவும் ஒரு சேர வர தலையைப் பிடித்துக் கொண்டு மணியைப் பார்த்தான். மணி 10 எனக்காட்ட,  ‘திவி என்ன செய்து கொண்டு இருப்பாளோ.?’ என்றே முதலில் தோன்றியது.

கடினப்பட்டு மனதை அடக்கிக் கொண்டவன் தன்னவளின் நினைவோடு பயணித்து, திவியின் வலியில் மீண்டு, விஷ்ணுவின் நட்பில் வெளிவந்து பல சிந்தனைகளில் இருந்தவனை தனிமையை ஆட்கொண்டு இம்சிக்க, நித்ராதேவி அவனை அணைத்துக் கொண்டாள். அதில் உறங்கியும் போனான் மனதில் ஒரு வித வலியுடன்.

கனவு தொடரும்…🌺🌺🌺

தங்களின் பொன்னான கருத்துக்களை பகிருங்கள் நட்பூக்களே.🌺🌺🌺🌺

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்