Loading

ஆட்சியர் கனவு 29 💞

அழகான குருவி கூட்டம் அங்கும் இங்கும் பறந்து, பார்ப்பவர்களுக்கு சுறுசுறுப்பை ஏற்படுத்த, நீல மகள் தன் கருநிற போர்வையை விலக்கி ஆதவனின் வரவால் செம்மை நிற ஆடையை வெம்மை கலந்த புன்னகையோடு போர்த்திக் கொண்டாள்.

நீ
என்னை விட்டு
விலக நினைத்தாலும்
முடியாதடி…
ஏனெனில்
நான்
உன்னை
கட்டியுள்ளது
அன்பெனும்
பிணைப்பால்..

காலையில் எழுந்தவன் சோம்பல் முறித்துவிட்டு, ஜாகிங் செல்ல தயாரானான் ஆதி. தனது காலனியை (சூ வை) மாட்டிக்கொண்டு இருக்கையில், அவனின் அலைபேசி குறுந்தகவல் வந்ததற்கான சத்தத்தை எழுப்பியது. அதனை எடுத்துப் பார்த்தவன் புன்னகையோடு அதற்கு பதிலளித்தான், தகவல் வந்திருப்பது தன்னவளிடம் இருந்து தானே..

திவி “குட் மார்னிங் தியா..”

ஆதி” குட் மார்னிங் டி பொண்டாட்டி. எழுந்திரிச்சிட்டியா.?”

திவி “ஹான்.. இப்போ தான் எழுந்திரிச்சேன். நீ என்ன பண்ற.?”

ஆதி “நானா… ஓடப்போறேன் “

திவி ” ஹான்.. யார் கூட.?”

ஆதி” நீயே ஒரு ஐடியா குடேன்.. யார் கூட போலாம்னு?” என்று குறும்பாய் வினவினான்.

திவி ” 🤔.. ஹான் உனக்கு ஒரு அத்தை பொண்ணு இருக்காள்ல, பேர் கூட என்னமோ வருமே.. ஹான் யது.. அவள கூட்டிகிட்டு ஓடு.. ஹாப்பி ஜேர்னி” என்றாள்.

ஆதி “நீ வேற ஏன் திவி.. அவளுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்ல.. ஒன் இயர் கழிச்சு டிவோர்ஸ் வேற கேட்டு இருக்கா.. இதுல எங்க இருந்து அவள இழுத்துகிட்டு ஓடுறது.. அப்டி ஓடுனா கூட, அவளே என்ன போலீஸ் கிட்ட மாட்டி விட்டுட்டு போய்டுவா.” என்று சலிப்புடன் அனுப்பி இருக்க,

திவிக்கு தான் ஏதோ போல் ஆகி விட்டது. தன் விருப்பத்திற்காக, அவனின் விருப்பத்தை ஏற்க மறுத்தது தவறு தானே.. அவனின் பதிலில் பாவம் பெண்ணவளின் கண்களில் நீர் கோர்க்க, இணையத்தை முடுக்கி விட்டு, ஆதிக்கு அழைத்தாள்.

உடனே அலைபேசியை எடுத்தவன் “சொல்லு டி குட்டச்சி.. என்ன நான் சொன்னதுக்கு பதிலே காணோம்.. ம்ம்.? நான் யதுவ கூட்டிகிட்டு ஓடவா.?” என்று குறும்பாய் கேட்டிட, திவி அதனை கருத்தூன்றலாக (சீரியஸ்) எடுத்து கொண்டாள்.

திவி”சாரி ஆதி.. எனக்கு இப்போ என்ன முடிவு எடுக்குறதுன்னு தெரியல “என்று குரல் உள்ளே சென்று கூற, ஆதி தான் பதறி போனான்.

ஆதி “ஏய்.. இப்போ என்ன டி ஆச்சு.? ஏன் அழுகுற.? ” என்று கேட்டிட,

திவி “என் விருப்பத்துக்காக நான் எல்லாரையும் கஷ்டப்படுத்துறேன்ல தியா.. சாரி டா..” என்று விசும்ப,

ஆதி “லூசு குட்டச்சி! காலைல எந்திரிச்ச உடனே அழுகுற.. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் டி.. ஏன் அத நீ சீரியஸ்ஸா எடுத்துக்குற.?” என்று அதட்ட,

திவி “விளையாட்டா சொன்னாலும் அதானே உண்மை.. நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல.. நான் உனக்கு வேண்டாம்” என்று கூற, ஆதி தான் கடுப்பானான்.

ஆதி ‘அப்போ கூட, டிவோர்ஸ் வேண்டாம்னு சொல்றாளா பாரு.. லூசு’ என்று மனதில் அவளை வருத்துவிட்டு, “யது” என்றான் ஆழமாய்.

திவி “ம்ம்ம்” என்று மட்டும் பதிலளிக்க,

ஆதி “ரொம்ப குளிருது டி ” என்றான்.

திவியோ திருத்திருவென விழித்து “ஏன் டா சம்மந்தமே இல்லாம பேசுற.?” என்றிட,

ஆதி “நானா.?.. அது சரி.. வந்து பால்கனி கதவை திற டி.. குளிருது ” என்றான்.

திவி அதிர்ந்து கண்களில் நீரோடு, பால்கனி பக்கம் செல்ல, கதவைத் திறந்த உடன் நடுங்கிக்கொண்டே உள்ளே வந்தான் ஆதி..

திவி யதுவ கூட்டிட்டு போ என்று சொன்ன உடனே, அவளைக் காண தன் இரு சக்கர வாகனத்தை இயக்கியவன், சுவர் ஏறி அவளின் சாளரத்திற்கு வந்து விட்டான் காதலானவன்.

உள்ளே வந்தவனை ஒரு நிமிடம் ரசிக்கத் தான் செய்தாள் பெண்ணவள். இளஞ்சிவப்பு வர்ண டீ சர்ட்டும், கருப்பு வர்ண முழங்கால் பேண்டும் அணிந்து, அதற்கேற்றவாறு மிதியடி அணிந்து, ஒரு கையில் அலைபேசியும், மறுகையில் தன் சிகையையும் கோதிக் கொண்டு நின்றவனை ரசிக்கத் திகட்டவில்லை திவிக்கு. ( இந்த ரணக்களத்துலயும் உனக்கு ஒரு குதூகலம் கேட்குதுல திவி)

இருவரும் எதுவும் பேசாமல் இருக்க, திவி ஆதியைக் காண இயலாமல் மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.

அவள் முன்னே சென்றவன் “என்ன ஆச்சு என் குட்டச்சிக்கு.? காலையிலேயே அழுமூஞ்சி குல்பியா இருக்கீங்க ஹான்.?” என்று கொஞ்சலுடன் கேட்டிட,

திவி “நான்.. நான்.. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல ” என்றாள் பாவமாக. இதைக்கேட்ட ஆதிக்கு முறைப்பதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

அவளை மெத்தையில் அமர வைத்து, அருகில் அமர்ந்து ஒரு பக்கமாக அவளை அணைத்துக் கொண்டான். திவி எதுவும் கூறாமல் இருக்க, ஆதி “என் யது இப்டி இல்லையே.. யது ரொம்ப அன்பா, க்யூட்டா எப்பவும் சிரிப்பா” என்று கூற, அதில் அவனை பொய்யாய் முறைத்தவள்,

திவி “அப்போ திவி.?”என்று கேள்வி எழுப்ப,

ஆதி யோசிப்பது போல் பாவனை செய்து, “திவி…? திவி எப்பவும் தைரியமா, கெத்தா, ஒரு ஆளுமையோட இருப்பா. எனக்கு தெரிஞ்சு திவிக்கும் சரி, யதுவுக்கும் சரி அழுக தெரியாது.”என்று கூறி அவள் கண்களை துடைத்தவன், “ஏன் அவளோட அண்ணன் அடிச்சப்போ கூட, கண் கலங்குச்சே தவிர, ஒரு சொட்டு கீழே விழுகலயே” என்றான் கேலியாக.

அவனின் பதிலில் புன்னகைத்தவள், “திவிக்கும் யதுவுக்கும் அழுக தெரியாது.. ஆனா திவ்யதர்ஷினிக்கு அழுக தெரியுமே.. அவளுக்கும் உணர்வுகள் இருக்குல்ல” என்றாள்.

ஆதி”ம்ம்ம்.. இருக்கு.. அந்த எல்லா உணர்வுகளும் இனி என்கிட்ட மட்டும் தான் காட்டனும் சரியா.. அப்போ தான், உன்னை சமாதானம் பண்ண இப்டி வர முடியும்” என்றான் அவளின் குறும்புடன் நெற்றியில் முட்டியவாறு.

திவி “ஹான்… சமாதானம் செஞ்ச வரை போதும்.. கிளம்பு.. முகூர்த்த புடவை எடுக்க போகணும்.. நீ வீட்ல இல்லன்னா, எல்லாரும் தேடுவாங்க” என்று அவனை அனுப்ப,

ஆதி அவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டு, “இந்தக் குட்டச்சிய சமாதானம் பண்ண மாமா சுவர் ஏறிலாம் வந்து இருக்கேன்.. மாமாக்கு எதுவும் இல்லையா.?”என்று கண் சிமிட்டி கேட்க,

திவி ” அய்யோ ஆமா ல..! இரு டீ போட்டு தரேன்” என்று விலக,

ஆதி “என்னது டீ யா? போடி… போ போய் நீயே குடி.. இந்த பொண்ணுங்களே இப்டி தான்.. எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரியே இருப்பாங்க.. நாமளும் இறங்கி வந்தா கூட, நாம என்ன சொல்றோம்ன்னு நாமலே தான் ஓபன்னா சொல்லணும்” என்று அவன் கத்த,

திவி “டேய் கத்தாத டா” என்க, அவன் காதில் வாங்காமல் “நீ சரியான டியூப்லைட் டி.. டியூப்லைட் டியூப்லைட்.. உணக்குலாம் நான் செட்டே ஆக மாட்டேன்ட்டி.. குட்டச்சி” என்று கத்த,

திவி திடீரென்று அவன் கன்னத்தில் தன் இதழை பதித்தாள். அவளின் முதல் முத்தத்தில் ஆதி சிலையாய் நிற்க, திவி அவனை இழுத்துக் கொண்டு பால்கனியில் விட்டாள். வெளியில் அடித்த குளிர் காற்றில் தன்னிலை வந்தவன், விஷமமாய் திவியை நெருங்க,

திவி “இந்த டியூப்லைட்டுக்கு தான் ஒன்னும் தெரியாதே.. சோ நீ இப்போ கிளம்பு.. நாம கடைல மீட் பண்ணலாம்” என்று கூறி கதவை தாழிட்டாள். இப்போது திவி கூறியது அனைத்தையும் மறந்து விட்டாள்.

ஆதியும் புன்னகைத்து கொண்டு, அவள் இட்ட முத்தத்திலும், அவளை ஒரு வழியாக சமாதானம் செய்ததிலும் நிம்மதியாக தன் இல்லம் நோக்கி பயணித்தான். ஸ்ஸ்ஸாஆஆஆப்பா இந்த புள்ளைய சமதானம் செய்றதுக்குள்ள ஆதிக்கு வயசாகிடும் போலயே..

தன்னவளுக்காக ஒரு பெரிய கடையில் புடவை எடுக்க செல்ல, திவியோ அதனை அறவே மறுத்து, ஒரு சிறிய குடோன் போன்ற இடத்திற்கு அனைவரையும் அழைத்து வந்தாள்.

தேவ் “அண்ணி, ஏன் டி இவ்ளோ கஞ்சத்தனமா இருக்காங்க முட்டக்கன்னி?” என்றிட,

பாரதி “டேய்.. மரியாதையா பேசு.. இல்ல அக்கா கிட்ட சொல்லிடுவேன்” என்று கத்த,

தேவ் “நீ ஏன் இங்க தனியா பேசிக்கிட்டு இருக்க, வா இந்த மிகப்பெரிய மாளிகையில் சென்று திருமணத்திற்கு புடவை எடுக்கலாம்” என்று அவளின் வாயை பொத்தி அழைத்து சென்றான்.

அவர்கள் பின்னே வந்த கோகுலும் ஹரியும் நல்லா சமாளிக்குறாண்டா என்ற ரீதியில் அவனை பார்த்தனர்.

முதலில் பெரியவர்களுக்கு துணி எடுக்க, இளையவர்கள் ஓரமாய் நின்று கொண்டு இருந்தனர். ஆதி, திவி, தேவ் பாரதி, பவி, கோகுல், ஹரி, சக்தி என அனைவரும் வந்திருக்க, திவியின் வற்புறுத்தலின் பேரில் ரவீயும் வந்திருந்தாள்.

ஆதி “ஏன் டி குட்டச்சி.. இங்க எதுக்கு கூட்டி வந்த.? கடையே சின்னதா இருக்கு.. இங்க என்ன அப்டி பெருசா டிசைன் இருக்க போகுது.?” என்று கடுப்பாக கூற,

திவி “அறிவு கொழுந்து தியா.. இடம் சின்னதா இருந்தா டிசைன் இருக்காதா.? ஹான்.? இது ஹோல் சேல் கடை. இங்க இருக்க புடவை எல்லாமே கைத்தறி நெசவு.. இங்க இருந்து தான் பெரிய பெரிய கடைக்குலாம் டிஸ்ட்ரிப்பியூட் பண்றாங்க.. இங்க எடுத்தா நல்லா இருக்கும்னு எனக்கு தோணுச்சு” என்றாள் ரசனையுடன்.

ஆதி எதுவும் கூறாமல் புன்னகையை மட்டும் பரிசளிக்க,

பாரதி “வாங்க நாம போய் செலக்ட் பண்ணலாம் ” என்று அனைவரையும் அழைத்தாள்.

பெரியவர்கள் வெளியே காத்திருக்க, மற்றவர்கள் உள்ளே சென்றனர். அங்கு விதவிதமாய் பல வர்ண புடவைகளை காட்ட, திவி தான் சலித்துப் போய் ” தியா.. நான் உனக்கு செலக்ட் பன்றேன்.. நீ எனக்கு செலக்ட் பண்றியா.?” என்றாள் பாவமாக.

ஆதி “இதுக்கு ஏன் டி மூஞ்ச இப்டி வச்சிக்கிட்டு இருக்க.? உட்காரு” என்று அவளை கண்ணாடி முன் அமர வைத்து, ஒவ்வொரு புடவையாக அவளின் மேல் வைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

திடீரென்று அவன் கண்ணிற்கு ஒரு புடவை பட, அதைத் தான் திவியும் முன்பே தேர்வு செய்து வைத்து இருந்தாள்.

வெள்ளை மற்றும் இள நீல நிறம் கலந்த துணியில் பல வர்ணங்களில் பூ வேலைப்பாடு செய்திருக்க, முந்தானையில் அழகான இரண்டு மயில்கள் அலகோடு அலகு உரசியபடி, பொன்னிற ஜரிகையில் கண்ணைக் கவர்ந்தது அந்த புடவை. அதை ரசனையோடு எடுத்தவன் திவியின் மேல் வைத்திட, தான் தேர்வு செய்து விலை கூடுதலாக இருக்கிறது என்று ஓரமாய் வைத்ததை தன்னவன் தன்னிடம் சேர்க்கையில் ஆனந்தத்தில் பூரித்து போனாள் திவி.

ஆதி கண்களாலேயே அவள் விருப்பத்தை கேட்க, திவியும் சரியென்று கூறினாள். இவர்கள் ஒரு பக்கம் இருக்க, பவி, பாரதி சேர்ந்து அந்த வியாபாரிகளை பிழிந்து எடுத்து விட்டனர்.

இதில் கடுப்பான தேவ் ஒரு தாவணியை எடுக்க, பாரதி அதனைப் பெற்று கொண்டாள்.

தேவ் “ஏய் முட்டக்கன்னி.. ரொம்ப யோசிக்காத.. இந்தா இத என்கேஜ்மெண்ட்க்கு போட்டுக்கோ, காலைல இந்த லெஹெங்காவ போட்டுக்கோ” என்று கூற, பாரதியும் சோர்வாக இருந்ததால், அதனைப் பெற்றுக் கொண்டாள்.

திவியின் வற்புறுத்தலால் சக்தி ரவீக்கும் ஒரு புடவையை எடுத்துக்கொடுத்தான்.

பவி மட்டும் இன்னும் துணிகளை அலசி ஆராய, கோகுல் புன்னகையுடன் அவளருகில் சென்றான்.

கோகுல் “இன்னும் நீ செலக்ட் பண்ணலயா டா மா.?” என்று வினவ, திடீரென்று கேட்ட ஆடவனின் குரலில் சற்று பயந்து விட்டாள் பாவையவள்.

பவி “ஹான்.. ஆமா மாமா.. எது செலக்ட் பண்றதுன்னு தெரியல” என்றாள் சிறுகுழந்தையாய்.

அவளை உள்ளுற ரசித்தவன், அவளின் மாமா என்ற அழைப்பில் அந்தரத்தில் பறந்தான், மனதில்தான்.. மனதில் தான்..

இதில் தன்னை தேர்வு செய்ய சொல்கிறாள் என்று ஆனந்தம் கொண்டவன், பிங்க் நிற தாவணியையும், நீல நிற லெஹங்காவையும் காட்டிட,

புன்னகையுடன் பவி “செமையா இருக்கு மாமா.. உங்க டேஸ்ட் சூப்பர்.. தேங்க்ஸ் மாமா” என்று முகம் மலர கூறினாள்.

பின் ஆண்களுக்கு வேறு கடைக்கு செல்ல, அனைவருக்கும் ஒரே மாதிரியாக துணியை எடுத்தனர். இருப்பினும் ஆதிக்கு திவி தான் தான் தேர்வு செய்வேன் என்று கூறிட, ஆதியும் மறுப்பேதும் கூறவில்லை.

வெள்ளை நிற மேல் சட்டையும், அதற்கு ஏற்றவாறு நீல நிற கோர்ட்டும் எடுத்தவள் தன்னவனை புன்னகையாய் பார்க்க, ஆதியும் அதை ஏற்றுக்கொண்டான்.

அப்போது திவிக்கு ஒரு அழைப்பு வர அதனை ஏற்றவள், தன் தோழியைக் காண செல்ல ஆயுத்தமானாள்.

திவி”ஆதி.. ரவீ வந்து இருக்கா.. இங்க தான் பார்க்ல.. நான் போய் பாத்துட்டு வரேன்” என்று கூற,

ஆதி “தனியாவா.? வேண்டாம் யது.. கொஞ்ச நேரம் இரு நானும் வரேன்” என்று கூற,

திவி “ப்ச்.. தியா ப்ளீஸ்.. ஒரு ஹால்ஃப்  ஆன் ஹவர் வந்துருவேன்.. கிளம்புறப்போ நீயே கூட்டிகிட்டு போ…ம்ம்.?” என்று கெஞ்சலாய் கேட்க,

ஆதி “இப்டி பேசியே என்னை கவுத்துடு டி குட்டச்சி..  சீக்கிரம் வர.. ஓகே” என்று அவளை அனுப்பி வைத்தான். தன் பெற்றோர்களிடம் கூறிவிட்டு ரவீணாவைக் காண சென்றாள்.

ரவீ திவியைப் பார்த்த அடுத்த நொடி பளாரென்ற சத்தம் திவியின் காதில் “கொய்ங்” என்று கேட்டது..

ரவீ “கொஞ்சங்கூட உனக்கு அறிவே இல்ல திவ்யா. நான் கேம்ப் தான டி போனேன்.. வேறெங்காயவது போய்ட்டேனா ஹான்.? உன்னால என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பா செஞ்சிட்ட திவி. அறிவு கெட்டதனமா இப்படி ஒரு காரியம் செஞ்சி இருக்க?” என்று சரமாரியாய் கேள்வி மழைகளைப் பொழிந்தாள் திவியின் ஆருயிர் தோழி.

திவி தன் திருமணத்தைப் பற்றியும், ஒரு வருட விவாகரத்து பற்றியும் கூறியிருக்க, திருமணத்திற்கு சந்தோசப்பட்டவள், அவள் கூறிய விவாகரத்தையும் அதற்கான காரணத்தையும் கேட்டவள் அதிர்ந்து அவளை இப்படி வறுத்தெடுத்துக் கொண்டு இருக்கிறாள்.

திவி பதிலேதும் கூறாமல் தலை குனிந்தபடி இருக்க, ரவீயே தொடர்ந்தாள். “டிவோர்ஸ் கேட்குறதுலாம் உனக்கு சாதாரணமான விஷயமா போச்சா ஹான்.? ஒன் இயர் அக்ரீமெண்ட் போட்டு வாழ நீ பெரிய சிம்ரன். அவன் என்ன விஜய்யா டி.? இது படம் இல்ல திவ்யா. ரியாலிட்டி லைஃப். பீ தின்க் பிராக்டிக்கல். டிவோர்ஸ் வாங்கிட்டு அடுத்து என்ன பண்ண போற.?” என்று நிறுத்த, திவியிடம் பதிலேதும் இல்லை.

உண்மைதானே.. ஏதோ ஒரு வேகத்திலும், ஆற்றாமையினாலும் தானே விவாகரத்துக் கேட்டாள். மனதறிந்து கேட்கவில்லையே. விவாகரத்து வாங்கிய பிறகு அடுத்து என்ன செய்வது என்று அவள் யோசிக்கவே இல்லை.

ரவீ “இதுக்கு உன்கிட்ட பதில் இல்லன்னு எனக்கு தெரியும் திவி! ஓகே, இப்போ டிவோர்ஸ் நீ வாங்கிட்ட, உன் கனவையும் அச்சீவ் செஞ்சிட்ட கடமையையும் நிறைவேத்திட்ட. அடுத்து கண்டிப்பா கல்யாணம்னு ஒன்னு இருக்கு.. அப்போ நீ யாரை கல்யாணம் செஞ்சிப்ப? ” என்ற கேள்வியில் திவி அதிர்ந்து விட்டாள்.

இது தானே நிதர்சனம். நாம் எடுக்கும் முடிவு மற்றவர்களை நோகடிக்காமல் இருக்க வேண்டும் அல்லவா.. அதுவும் இது இருவரின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட  விஷயம். இதில் இருவரின் முடிவும் வேண்டும் அல்லவா..

ஆதியைத் தவிர வேறு யாரையும் அவ்விடத்தில் வைத்துப்பார்க்க அவள் மனது துளியும் ஒப்புக்கொள்ளவில்லை. திவி வலி மிகுந்த பார்வையை கண்களில் தேக்கி ரவீயை பார்க்க,
ரவீ “ஓகே.. உன்னை விடு.  உன்னையைப் பத்தி நீ எதுவும் நினைக்கல.. ஆனா ஆதி? ஆதிய நினைச்சுப் பாத்தியா.? அவன் சொன்ன கண்டீசன்ஸ்லயே பாத்தல, உன் மேல எவ்ளோ காதல் இருந்தா 24 மணி நேரமும் உன்னை பக்கத்துலயே வச்சிக்கணும்னு பார்ப்பாங்க.. எனக்கே இவ்ளோ டென்ஷன் ஆகுதே.  ஆதி எப்டி சாமளிக்குறாங்களோ எனக்கு தெரியல டி.  ஆதி மாதிரி யாரும் உன்னை புரிஞ்சுக்க முடியாது டி.. உனக்கு இப்போ கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னா தள்ளி போடு.. இல்ல ஆதியை உனக்கு பிடிக்கலன்னா” என்று அவள் கூறும் முன்னே, திவி அவளின் வாயை மூடி மறுப்பாக தலையசைத்தாள்.

“ஓகே.. பிடிக்கலன்னு வார்த்தையால கூட உன்னால ஏத்துக்க முடியலல.. அப்போ டிவோர்ஸ்…?.. நீ நினைக்குற மாதிரி இதுலாம் சின்ன விஷயம் இல்லை திவி.. ரெண்டு பேரோட வாழ்க்கை.. நீ போய்ட்டா ஆதி எப்டி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு கூடவா உனக்கு தெரியல. யூ நோ வாட் அ ஸ்டுபிட் தின்க் திஸ் இஸ்..” என்று கத்த, திவி மௌனமாய் கண்ணீர் வடித்தாள்.

ரவீ அவளின் முகத்தை தன் முகத்திற்கு நேராக நிமிர்த்தி “திவி.. உன்னோட ஹாபினஸ்ல மட்டும் நான் கூட இருக்க நினைக்கல. உன்னோட சுக துக்கம் எல்லாத்துலயும் நான் கூட இருக்க ஆசைப்படுறேன்.. அது மட்டும் இல்ல, ஒரு பிரண்ட் தப்பு பண்ணா அதை திருத்துறது தான் உண்மையான பிரண்ட். இந்த லைஃப் உனக்கு கிடைச்சு இருக்க பொக்கிஷம் திவி. தேவை இல்லாம குழம்பி நீயும் ஹர்ட் ஆகி, மத்தவங்களையும் காயப்படுத்தாத.  என்னை நீ என்ன நினைச்சாலும் எனக்கு அதை பத்தி கவலை இல்லை.  உன்னோட வாழ்க்கை எப்படியோ போகட்டும்னு என்னால விட முடியாது” என்றாள் அழுத்தமாக.

இதல்லவா தோழமை.. சரியாக பார்த்துக்கொள்ளவில்லை, சரியாக பேசிடவும் இல்லை.. ஆனால் துவண்டு விழும்போது தூக்கி நிறுத்தவும், தவறு செய்யும்போது தண்டித்து சரியாக வழிநடத்தவும் இது போன்ற தோழமை நிச்சயமாக தேவை தானே..

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவள் இப்போது தான் வாயைத் திறந்தாள். திவி “இப்போ நான் என்னடி பண்றது?” என்று கேட்க,

ரவீ ” ஒரு விஷயத்துல நல்லது கெட்டது தான் டி என்னால சொல்ல முடியும். முடிவு எடுக்குறது உன்னோட கடமை. சாய்ஸ் இஸ் அதர்ஷ்.. பட் டிஸிஷன் இஸ் யுவர்ஸ் இது நீ தான் சொல்லுவ அடிக்கடி. நல்ல முடிவா எடுப்பன்னு நம்புறேன்”என்றாள்.

திவி தலையசைக்க, ரவீ “ஓகே.. அப்ரோம் பாக்கலாம்.. பை” என்று விட்டு கிளம்பினாள்.

திவி அங்கிருந்து ஆதிக்கு அழைக்க,
ஆதி “வெளில தான் யது இருக்கேன்.. நீ வந்தா போலாம்” என்றான்.

மென்மையாய் புன்னகைத்தவள் பூங்காவிற்கு வெளியே வந்து “உள்ளே வந்து இருக்கலாம் ல”  என்று கேட்டாள்.

ஆதி “ஆக்சுவலி.. வந்தேன் யது.. ரெண்டு பேரும் சீரியஸ்ஸா பேசிக்கிட்டு இருந்தீங்க.. அதான் வெளில வெய்ட் பன்றேன்” என்றான் புன்னகையுடன்.

திவி “எப்போ வந்த .?” என்று ஆர்வமாய் வினவ,

ஆதி “இப்போ தான் ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருக்கும்”என்றான் தன் சிகையை ஒத்துகியவாறே..

திவி “சரி போலாம்” என்று கூறி, அவனோடு மகிழுந்தில் அமர்ந்தாள்.

இருவரும் மௌனத்தின் ஊடே பயணிக்க, திவி இருளை வெறித்துக் கொண்டும் பல வித யோசனையுடன் வந்தாள்.

ஆதி அவளை திரும்பி திரும்பி பார்த்து விட்டு, “யது எதாவது ப்ராப்லம்மா.?” என்று வினவ,

திவி அவனைக் காணாது “ப்ச்.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ” என்று மலுப்ப, ஆதி அவனை நம்பாத பார்வை பார்த்தான்.

திவியின் வீடு வர, அமைதியாக கண்களை மூடி அமர்ந்து இருந்தவள் ஆதியின் அழைப்பில் கண் விழித்தாள்.
” யது..”

திவி அவனைப் பார்க்க, ஆதி “வீடு வந்துடுச்சு டி”என்றான் புன்னகையாய்..

திவி அவனின் புன்னகையைப் பார்த்து, இதே புன்னகை அவன் முகத்தில் வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று எண்ணிட, தான் இல்லையேல் அப்புன்னகை என்னவாகும் என்று கேள்வி அவளுள் எழுந்தது.

திவி அவனின் புறம் திரும்பி “தியா” என்று அவன் கையைப் பிடித்திட,

ஆதி “என்ன டி ஆச்சு.? ஏன் ஒரு மாதிரி இருக்க.?” என்றான், அவளின் இரு கன்னங்களையும் பற்றியபடி.

திவி அவன் கை மேல் தன் கைகளை வைத்து “நாம இப்போவே கல்யாணம் செஞ்சிக்கலாமா மாமா.?” என்றாள் கண்களில் ஏக்கத்துடன்.

ஆதி அவளின் அழைப்பில் மெய்சிலிர்த்தவன், புன்னகையுடன் “என்ன டி குட்டச்சி ஆச்சு உனக்கு.?”என்றிட,

திவி “கேட்டதுக்கு பதில் சொல்லு ” என்றால் குழந்தை தனமாய்..

ஆதி “அதான் நாம இன்னும் 5 நாள்ல கல்யாணம் செஞ்சிக்க போறோம்ல” என்று குறும்பாய் கேட்டிட,

திவி”என்கூடவே இருப்பல்ல மாமா.?” என்றாள் ஆர்வமாய்.

ஆதி “இதென்ன கேள்வி.. கடைசி வரை என் யது கூட நான் இல்லாம வேற யார் இருக்க போறா ஹான்.?”என்று வினவ, திவி மென்மையாய் அவனின் நெற்றியில் முத்தமிட்டு “லவ் யூ தியா” என்றாள் காதலாக..

ஆதிக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இவளின் திடீர் மாற்றம் அவனுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் அவளின் முகத்தில் படர்ந்த குழப்ப ரேகை ஏனோ அவனைத் தாக்கியது.

அவனும் அவளின் நெற்றியில் இதழ் பதித்து “லவ் யூ டூ டி” என்றிட, அவள் அவன் நெற்றியில் முட்டினாள்.

ஆதி “எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்.. டைம் ஆச்சு.. குட் நைட்” என்று அவளை அனுப்ப,

திவியும் ஒரு வித தெளிவுடன் வீட்டிற்கு சென்றாள்.

விவாகரத்து வேண்டாம் என்று சொல்ல அவளின் ஈகோ தடுத்தாலும், விவாகரத்து அவன் கொடுக்கக்கூடாது என்ற வேண்டுதலை கடவுளிடம் போட்டாள்.

ஏனோ இன்றே கூறியிருந்தால் இருவரும் மகிழ்ச்சியாய் இருந்திருப்பார்கள். இந்த விவாகரத்து என்ற வார்த்தை இருவரின் வாழ்வை எவ்வாறு தலைகீழாய் மாற்றப் போகிறது என்பதை இருவரும் உணரவே இல்லை..

கனவு தொடரும்…🌺🌺🌺🌺

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்