Loading

ஆட்சியர் கனவு 27 💞

திவி கூறியதை கேட்ட ஆதி, ஒரு தீர்க்கமான முடிவினை எடுத்தான்.

அனைவரும் வீட்டிற்கு கிளம்ப, ஆதிதான் தான் செய்த செயலை எண்ணி வருந்தினான். அவன் வந்ததை திவி உணர்ந்தாலும் ஏதும் பேசாமல் இருக்க, அனைவரும் ஆதியின் வீட்டிற்கு கிளம்பினர்.

அங்கு அனைவரும் சகஜ நிலையில் இருக்க, தன் கண் முன்னே உயிரோடு இருக்கும் கோகுலை கண்டு ஆதியின் மனது நிம்மதி அடைந்தது. மேலும் அவன்தான் தன்னை கொல்ல நினைத்தான் என்பதை அறிந்ததால் அப்படி நாம் என்ன செய்தோம் என்ற ரீதியில் தான் குழப்பத்தில் இருந்தான் ஆதி. ஹரியும் கோகுலும் சற்று திவியிடம் நெருக்கம் காட்ட, வில்லன் ரோல் போய் காமெடியன் ரேஞ்சுக்கு வந்துட்டாய்ங்க…

பின் ஒருவாறு அனைவரும் சகஜ நிலைக்கு வர, ஆதி சக்தியிடம் “இனிமே யதுவ நான் தனியா விடப் போறது இல்லடா. என் கூடவே வச்சிக்கணும். சீக்கிரம் எல்லார் கிட்டயும் சொல்லி நீ தான் மச்சான் கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கணும்.” என்றிட, அவனை கொலை வெறியில் முறைத்து கொண்டு இருந்தான்.

சக்தி “வாய் இருக்குன்னு நீ என்ன வேணா பேசுவ? அப்ரோம் சமாதானம் பண்ண உனக்கு நான் வேணுமா.? என்ன ஏதுன்னு தெரியாம வார்தையால ரொம்ப காயப்படுத்திட்ட டா. பர்ஸ்ட் அவள சமாதானம் பண்ணு. அப்ரோம் மத்த விஷயம்லாம் பேசிக்கலாம்” என்றினான். அப்போதுதான் தான் பேசிய வார்த்தைகளின் வீரியத்தை உணர்ந்தான் ஆதி.

திவி ஆதியிடம் பாராமுகமே காட்ட, ஆதி தான் நொந்து போனான்.

பின் சக்தி ஒரு திட்டம் தீட்ட, அனைவரும் அதிர்ந்தாலும் இதற்கு சம்மதித்தனர்.

சக்தியின் திட்டப்படி சிவஞானம் தனக்கு நெஞ்சு வலி வந்தது போல் நடிக்க, திவியும் மற்றவர்களும் பதறி போயினர்.

கோகுல் மகிழுந்து ஓட்டிகொண்டு இருக்க, பின் இருக்கையில் சிவஞானத்தின் வலது புறம் ஆதியும் இடது புறம் திவியும் இருக்க, திவியின் கையை இறுக்கி பிடித்து கொண்டு, சிவம் “நீ ஆதியை கல்யாணம் செஞ்சிகிறியா திவி?”

திவி “அதுலாம் அப்ரோம் பேசிக்கலாம் டார்லிங்க்.. நாம ஹாஸ்பிட்டல் போலாம்.. கோகுல் சீக்கிரம் போ” என்று அவனை துரித்தப்படுத்தினாள்.

சிவம் “நீ சொல்லு மா.. இந்த கிழவன் இன்னைக்கே போய்ட்டா, என்ன பண்றது.? சொல்லு திவி” என்றிட,

ஆதி தான் பதறி விட்டான்”அய்யோ தாத்தா.. கொஞ்சம் அமைதியா இருங்க.. அப்டி எதுவும் நடக்காது.. டேய் சீக்கிரம் போ டா” என்றிட, ஆதி தன்னிடம் பேசிவிட்டான் என்ற மகிழ்ச்சியில் கோகுல் காரை அதிவேகத்தில் செலுத்தினான். பின்னே அவன் வந்ததில் இருந்து ஆதி பாராமுகம் தானே காட்டி கொண்டு வருகிறான்..

மற்ற அனைவரும் வேறொரு மகிழுந்தில் வர, சக்தி தான் ஒரு வித பதற்றத்துடனே இருந்தான்.

விஷ்ணு”இப்போ எதுக்கு போலீஸ்கார் நீங்க மூஞ்ச இப்டி வச்சிக்கிட்டு இருக்கீங்க.. எல்லாம் நன்மைக்கே” என்றான்.

விஷ்ணு காரை ஓட்ட, அருகில் தேவ் அமர்ந்து இருந்தான்.பின் இருக்கையில் சக்தி, ரவீணா மற்றும் பாரதி இருந்தனர். ஹரி தன் இரு சக்கர வாகனத்தில் வந்தான்.

சக்தி கொஞ்சம் பதற்றத்துடன் இருக்க, ரவீ அவனின் கைகளை ஆறுதலாக பற்றினாள். சக்தி அவளின் முதல் தொடுதலில் மகிழ்ந்தாலும் திவி திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்ற பதற்றமும் இந்த தாத்தா சொதப்பாமல் சரியாக நடிக்க வேண்டுன் என்ற பயமும் இருந்தது.

மருத்துவமனை வர, கோகுலும் ஆதியும் சிவஞானத்தை ஸ்ட்ரக்ச்சரில் கொண்டு சென்றனர்.

அவரை உள்ளே மருத்துவர்கள் அழைத்து செல்ல, பின்னே சக்தி அண்ட் கோ வந்தனர். மேலும் பெரியவர்களும் வந்து விட, சக்திக்கு மேலும் பதற்றம் ஆனது.

விஷ்ணு”இப்டி மூஞ்ச வச்சிக்கிட்டு நீங்களே நம்ம பிளான்ன காட்டி கொடுத்துடுவீங்க போல.. சேஞ் யுவர் ரியாக்சன்” என்றிட,

சக்தி”மவனே மாட்ன நைட் டின்னர் நாம தான்.. வச்சு செஞ்சிடுவா..  திவிக்கு மட்டும் தெரிஞ்சது.. அவ்ளோதான்.. ஆதிக்கு கூட இந்த பிளான் தெரியாது.” என்றிட,

தேவ்”உங்களலாம் யாரு போலீசுக்கு எடுத்தது.. எது பண்ணாலும் சும்மா கெத்தா இருக்க வேண்டாம்.. இப்டி பயந்து சாகுறீங்க” என்று அவனை வார,

சக்தி”நீ லாம் கலாய்க்குற நிலைமைக்கு நான் வந்துட்டேன்ல அதை நினைச்சா தான் டா எனக்கு கேவலமா இருக்கு.. இரு டி.. திவிக்கு உண்மை தெரிஞ்சது நீ தான் ஐடியா குடுத்தன்னு சொல்லிடுவேன்”

தேவ்”ஆமா நீங்களாம் யாரு.. ஏய் முட்டக்கன்னி.. இவங்க கூடலாம் சேராத.. வா அங்க போலாம்” என்று அவளை இழுத்து கொண்டு சென்றே விட்டான்.

விஷ்ணு”தப்பிச்சான்.. இல்ல இந்த போலீஸ்கார் அவன ஒரு வழி ஆக்கி இருக்கும்.. நாமளும் அந்த பக்கம் போவோம்.. இங்க இருக்கிறது டேஞ்சர்.” என்று சென்று விட்டான்.

மருத்துவர் வெளியே வர, அவரை அனைவரும் சூழ்ந்தனர்.

பெருமாள்”அவர்க்கு இப்போ எப்டி இருக்கு டாக்டர்”

டாக்டர்”ஒன்னும் பிரச்சனை இல்லை.. மைல்டு அட்டாக் தான்.. ஆனா இனிமே கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க.. அதிர்ச்சியான எந்த தகவலும் சொல்ல வேண்டாம். அவர் என்ன கேக்குறாரோ அதை செய்ங்க” என்று விட்டு நகர,

திவி”அவர பாக்கலாமா.?”

டாக்டர் “ம்ம்.. போய் பாருங்க.. ஆனா அவரை கஷ்டப்படுத்தாதீங்க!” என்று விட்டு சென்றார்.

ஆதியும் திவியும் உள்ளே நுழைய, பின்னாலே அவர்களின் பெற்றோர்களும் வந்தனர்.

பெருமாள்”என்ன அப்பா ஆச்சு.. இப்போ எப்டி இருக்கு.?” என்றிட,

சிவம் கண்களை மூடி திறந்து நலம் என்பது போல் கூறினார்.

யாரும் எதுவும் பேசவில்லை.

சிவம் தன் உயிர்வளி முகமூடியை அகற்றி “திவிம்மா.. ஆதி” என்று நிறுத்த,

திவி அமைதி காத்தாள். ஆதி”டார்லிங்க்.. நீங்க சரி ஆகி வீட்டுக்கு வாங்க எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்” என்றிட,

சிவம்”இந்த கிழவன் இங்கேயே போய்ட்டா என்ன பண்றது.?” என்று கூறவும்

திவி அழுதுகொண்டே “அப்டிலாம் ஒன்னும் ஆகாது. இப்போ என்ன நான் ஆதியை கல்யாணம் செஞ்சிக்கணுமா.? சரி செஞ்சிக்குறேன். நீங்க சரி ஆகி வீட்டுக்கு வாங்க. இப்டிலாம் பேசாதீங்க டார்லிங்க்” என்று கதற,

ஆதிக்கு இதில் மகிழ்ச்சி என்றாலும் திவி முழு மனதுடன் சம்மதிக்கவில்லை என்று குழப்பமும் வருத்தமும் மேலோங்கியது.

சிவம் அவள் கூறியதில் மகிழ்ந்து பெருமாளிடம் “இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம். சீக்கிரம் ஏற்பாடு பண்ணு டா” என்று உத்தரவு இட்டார்.

ராஜா “மாமா, ரெண்டு நாள்லா.? ஏன் இவ்ளோ சீக்கிரம்.?”

சிவம் “மாப்பிள்ளை, நான் சொன்னா அதுல நெறய அர்த்தம் இருக்கும்.. நீங்க கல்யாண வேலைய கவனிங்க.”

ரோஜா “ஆனா, அப்பா நீங்க இன்னும் டிஸ்சார்ஜ் கூட ஆகல”

சிவம் “டாக்டர் சாயங்காலம் டிஸ்சார்ஜ் ஆகிடலாம்னு சொல்லிட்டாரு. நீங்க ஆகவேண்டியத பாருங்க” என்று துரித்தப்படுத்தினார்.

அனைவரும் வெளியேற, ஆதி “நான் உன் கூட கொஞ்சம் பேசனும்” என்றான் திவியை நோக்கி..

திவியும் “நானும் தான்…” என்று விட்டு அருகில் இருக்கும் பூங்காவிற்கு சென்றனர்.

சக்தி அண்ட் கோ.. உள்ளே வர, சிவம் “டேய்.. வா டா..”

சக்தி “திவி என்ன சொன்னா.?”

சிவம்”ம்ம் சரின்னு சொல்லிட்டா.! டா..”

விஷ்ணு “ப்பா.. என்ன நடிப்பு.. செம தாத்ஸ்.. சூப்பரா நடிச்சீங்க..”

சிவம்”என்னது நடிப்பா.? போடா டேய்.. உண்மையாலுமே மைல்டு அட்டாக் டா..”

இதை கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்..

(ஒரு சின்ன ரீகேப்..) நடந்தது என்ன ?

ஆதியும் திவியும் மாடியில் பேசி கொண்டு இருக்க, கீழே சக்தி அனைவரிடமும் பேச தொடங்கினான்.

சக்தி”எல்லாரும் வாங்க.! உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”

விஷ்ணு”யெஸ்.. போலீஸ்கார் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல போறாரு.. அதை எல்லாம் நல்லா கவனிங்கோ..”

ரவீ”நீ என்ன அவர்க்கு எக்கோவா.. அமைதியா இரு” என்று அவனை அடக்கினாள்.

சக்தி”தாத்தா.. திவிக்கும் ஆதிக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கலாம் தாத்தா”

சிவம்”எனக்கும் அதே ஆசை தான் டா.. ஆனா அவங்கள பெத்தவங்க சொல்லனுமே”என்று நால்வரையும் பார்க்க,

தெய்வானை”இதுல நாங்க சொல்ல என்ன இருக்கு மாமா.. நம்ம பிள்ளைங்க தான் சொல்லணும்.. அவங்க சம்மதம் முக்கியம் இல்லையா?” என்று கூற, ரோஜாவும் அதையே ஆமோதித்தார்.

ராஜா”அது மட்டும் இல்ல.. திவ்யா இன்னும் காலேஜ்ஜே முடிக்கல.. அதுக்குள்ள எப்டி மாமா.?” என்று தடுமாற,

சிவம்”அதுல என்னங்க மாப்பிளை இருக்கு.? கல்யாணம் செஞ்சிக்கிட்டு படிக்கட்டுமே..” என்று கூறினார்.

ராஜா மேலும் யோசிக்க, பெருமாள் “அவ நம்ம வீட்டு பொண்ணு.. நாங்க கண்டிப்பா நல்லா பாத்துக்குவோம்.. நம்புங்க” என்று அவரின் கையை அழுத்தி கூறினார்.

பெரியவர்கள் ஒரு வழியாக சம்மதம் தெரிவிக்க, சக்தி ஒரு குண்டை தூக்கி போட்டான்.

சக்தி” நீங்க இவ்ளோ சீக்கிரம் ஒத்துக்குவீங்கன்னு தெரியாம போச்சு.. ஆனா இந்த கல்யாணம் நடக்குறது கஷ்டம்”

சிவம்”என்ன ப்பா சொல்ற? ஏன் நடக்காது.?”

சக்தி நடந்த அனைத்தியும் கூறி, இறுதியாக ஆதி திவியின் உரையாடலையும் கூறினான்.

சக்தி”இது மட்டும் இல்ல தாத்தா.. திவி இன்னும் நிறைய விஷயம் மறைக்குறா.. எல்லாமே தெளிவா சொன்னாதான் அவ தெளிவா கல்யாணத்துக்கு ஒத்துக்குவா.!ஆனா இதுலாம் நடக்குறதுக்கு எவ்ளோ நாள் ஆகும்னு தெரியல.. இப்போ ஆதி திவி ரெண்டு பேரும் சேஃப்பா இருக்கணும்.. ஆதி கண் முன்னாடி திவியும்.. திவி கண் முன்னாடி ஆதியும் இருந்தா ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருப்பாங்க.. ரெண்டே நாள்ல கல்யாணம் நடக்கணும்..” என்றதும் அனைவரும் அதிர்ந்தனர்.

ராஜா”ரெண்டு நாள்ல எப்டி.? இதுலாம் நடக்குற காரியமா.?”

பெருமாள்”என்ன எல்லாரும் விளையாடுறீங்களா.? இது சும்மா கிடையாது.. ரெண்டு பேரோட வாழ்க்கை” என்று அதட்டிட,

தேவ்”அப்பா.. அதான் சக்தி அண்ணா சொல்றாங்கல ப்பா.. அவங்க சேஃப்டி நமக்கு முக்கியம்ல ப்பா.. ப்ளீஸ் ப்பா..”

ரோஜா”அது சரி.. ஆனா ரெண்டு நாள் எப்டி.?”

கோகுல்”இது என்ன பெரிய விஷயமா.. அத்தை.? காலைல கோவில்ல சிம்பிள்லா கல்யாணம்.. ஈவினிங் ரிசப்சன்.. முக்யமானவங்கல மட்டும் கூப்டலாம்..” என்றான்.

பாரதி”ஹலோ ஹலோ.. ஐடியலாம் ஓகே.. ஆனா அவங்கள எப்டி சம்மதிக்க வைக்கணும்னு யாரும் ஒரு ஐடியா கூட சொல்லல.?” என்று கூறினாள்.

தேவ்”பரவால்ல முட்டகண்ணி.. உனக்கும் மேல் மாடி வேலை செய்யுது… “

பாரதி”உனக்கு தான் இல்லன்னா, எனக்கும் இருக்காதா.?” என்று பதிலளித்தாள்.

ரவீ”இந்த வீட்ல திவிக்கு யாரை ரொம்ப பிடிக்கும்.?”

பாரதி”வேற யாரை என்னை தான்.”என்று இல்லாத காலரை தூக்கி விட்டு சொல்ல, அனைவரும் அவளை ஒரு மாதிரியாக பார்த்தனர்.

தேவ்”அண்ணிக்கு எப்போவும் தாத்தாவ தான் ரொம்ப பிடிக்கும்.. மாமா அத்தை சொல்றது கூட அவ்ளோவா கேட்க மாட்டாங்க.. ஆனா தாத்தா சொன்னா உடனே கேப்பாங்க.”

சக்தி”யெஸ்.. கரெக்ட்.. சின்ன வயசுல இருந்து தாத்தா சொன்னா அவ கேட்பா.. சோ தாத்தா தான் அவளை சம்மதிக்க வைக்கணும்”

சிவம்”டேய்.. அது சின்ன வயசுல.. இப்போ நான் சொன்னா கேட்பாளா.?”

தேவ்”அதுலாம் சொல்ற மாதிரி சொன்னா கேட்பாங்க.. என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு..”

பாரதி”என்ன ஐடியா.. எப்படியும் கேவலமான ஐடியா தான் சொல்லுவ.. சொல்லும் சொல்லிதொலையும்.”

தேவ்”போ டி முட்டக்கன்ணி.. இங்க பாருங்க.”

பாரதி”அங்கலாம் பாக்க முடியாது..”

தேவ்”அய்யோ.. நான் இப்போ கலாய்க்குற மூட் ல நான் இல்லை.. அப்ரோம் உன்னை பாத்துகிறேன்”

பாரதி”இல்லன்னா மட்டும் அப்டியே மதுரை முத்து மாதிரி கலாய்ச்சி கிழிச்சிடுவ.. போ டா டேய்”

தேவ்”போ டி”

ஹரி”அய்யய்யய்ய.. கொஞ்சம் அமைதியா இருங்க.. தேவ் நீ சொல்லு.. என்ன ஐடியா.?”

தேவ்”யெஸ்.. தாத்தா.. இப்போ நாங்க எல்லாம் அவங்க அவங்க வேலைய பாக்க போய்ட்டுவோம்.. அப்போ நீங்க நெஞ்சு வலின்னு கத்தனும்.. நீங்க கத்துறது மேல இருக்க அந்த லவ் பேர்ட்ஸ்க்கு கேக்கணும்.. கண்டிப்பா திவியும் ஆதியும் வருவாங்க.. நீங்க திவிக்கிட்ட ஆதியை கல்யாணம் செஞ்சிக்க சொல்லுங்க.. “

பாரதி”ரொம்ப மொக்க ஐடியா..”

தேவ்”அப்போ இதை விட நல்லதா நீ சொல்லு.”

பாரதி”தாத்தா.. இவன் உங்கள இப்டியே மேல அனுப்ப பாக்குறான்….பீ கேர்ஃபுல்”

சக்தி”ஸ்சு..இது சரியா வருமா?”

தேவ்”எல்லாரும் கோ-ஆப்ரேட் பண்ணா 90% சரியா வரும்..”

தாத்தா”சரி டா.. என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவீங்கள.. டாக்டர் ஏதோ சொதப்பிட்டா.?”

ஹரி”இது ஒரு நல்ல கேள்வி.?”

பாரதி”ஹேய்.. பதில சொல்லு டா.!”

ஹரி”என்னது.?”

பாரதி”ஈஈ.. இல்ல அது கில்லி படத்துல அடுத்து இந்த டயலாக் தான் வரும்.. அதான்” என்று இழுக்க,

கோகுல்”கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.. தாத்தா.. அதுலாம் பிரச்சனை இல்லை.. நாம இப்போ போறது நம்ம ஹாஸ்பிட்டல் தான்.. அங்க என் பிரண்ட் தான் டாக்டர்.. நாம பேசிக்கலாம்..”

தேவ்”ஓகே.. ரெடி.. டேக்… ஆக்சன்”

அப்போது தான் சிவம் நெஞ்சுவலியில் கத்த, திவியும் ஆதியும் விரைந்து வந்தனர்.

ஆனால் காரில் சென்று கொண்டு இருக்க, சிவஞானத்திற்கு உண்மையிலேயே மாரடைப்பு வந்தது என்பது இப்போ அவர் கூறிய பிறகே அனைவரும் அறிந்தனர்.

பூங்கா..

ஆதியும் திவியும் அமைதியாக அந்த இயற்கை சூழலை உணர்ந்து கொண்டு இருக்க, நிலவிய அமைதியை ஆதியே கலைத்தான்.

ஆதி “உனக்கு ஏன் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல.?”

திவி அமைதி காக்க, ஆதியே தொடர்ந்தான் “சொல்லு யது.? ஏன் உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை.? நமக்கு தான் ஒருத்தர ஒருத்தர் பிடிச்சு இருக்குல்ல அப்ரோம் ஏன் நீ விருப்பம் இல்லாம சரி சொன்ன.?”

திவி “பிடிச்சா கல்யாணம் செய்துக்கணுமா.?”

ஆதி”என்ன கேள்வி யது இது.?” என்று அவளை புரியாமல் பார்க்க,

திவி”எனக்கும் நிறைய கனவுகள் இருக்கு.. எனக்கும் நிறைய கடமைகள் இருக்கு.. அது மட்டும் இல்ல நான் இன்னும் மனசு அளவுல கல்யாணத்துக்கு தயாராகல ஆதி.! ப்ளீஸ் இந்த கல்யாணத்தை நிறுத்து.. அதுவும் இல்லாம நான் தான் பணத்துக்காக என்ன வேணாலும் யார் கூட வேணாலும்.. ” என்று கூறியதில், ஆதி தான் அதிர்ந்து விட்டான்..

ஆதி “யது…”

திவி கையை உயர்த்தி, “போதும்.. அவ்ளோ நம்பிக்கைல என் மேல.? அப்படி இருக்கப்போ நான் ஏன் உன்னை கல்யாணம் செஞ்சிக்கணும்..?”

ஆதி “அது ஏதோ கோவத்துல பேசிட்டேன் டி”

திவி “கோவத்துல என்ன வேணாலும் பேசுவியா ஆதி.? இப்போவே இந்த கேள்வி கேக்குற.? அப்போ கல்யாணத்துக்கு அப்ரோம்.?”

ஆதி “யது நீ பேசுறதுல அர்த்தம் மாறுது டி.”

திவி “ஹோ.. அப்போ நீங்க பேசுனதுல.? நான் செய்ற எல்லா விஷயத்துலயும் காரணம் இருக்கும்னு நீ புரிஞ்சிக்குவன்னு தான் நான் அப்டி பேசினேன்.. ஆனா நீ.?” பின் சுப்ரியா வீடியோ எடுத்ததை கூறி அதற்காக தான் அவ்வாறு பேசியதாக கூறினாள்.

“இப்போ கூட என்ன நிரூபிக்கணும்ன்னு நான் சொல்லல. நடந்தது இதான்னு உனக்கு தெரியணும்ன்னு தான் சொல்றேன் ஆதி..”

ஆதி ஏதும் பேசாமல் நிற்க, “எனக்கும் உன்னை பிடிக்கும்டா.. ஆனா எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்..” என்று முடித்தாள்.

ஆதி “எனக்கு புரியல டி.. “

திவி”எப்பவும் பெண்கள் மனசு யாருக்கும் புரியாது ஆதி.. “

ஆதி”கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு திவி.. கடுப்பை கிளப்பாத.” என்று சற்று குரலை உயர்த்தி கூற, திவி வெற்று புன்னகையுடன் ஆதியை நோக்கினாள்.

திவி”உனக்கே நான் சொல்றது புரியல.. அண்ட் கேட்கவும் பொறுமை இல்லல.. ” என்று கூறி ஒரு பெரு மூச்சு விட்டவள் மேலும் தொடர்ந்தாள்.

“நான்லாம் மிடில் க்ளாஸ் தான் ஆதி.. எங்களுக்கும் கனவு லட்சியம் கடமைகள் இருக்கு தானா..?”என்று கேள்வியாய் அவனை நோக்கிட, ஆதி ஆம் என்பது போல் தலையசைத்தான். “வெல்.. அப்போ பெண்களுக்கும் கனவு லட்சியம் இருக்கும் தான ஆதி..” அதற்கும் அவன் ஆம் என்பது போல் தலையசைக்க,

“ஆனா அதை இந்த உலகம் புரிஞ்சிக்காது.. நான் நிறைய ஆண்கள பாத்து இருக்கேன். நட்பா பழகி இருக்கேன். எல்லார் கண்ணோட்டத்துலயும் பெண்கள்னா எப்படியும் ஒரு குடும்பத்துல வாக்கப்பட்டு அந்த குடும்பம் தான் தன் உலகமா நினைக்கனும்னு நினைக்குறாங்க. எல்லாரும் என்கிட்ட சொல்ற விஷயம் நீ இவ்ளோ நல்லா படிச்சு என்ன ஆகபோற? எப்படியும் ஒருத்தனை கல்யாணம் செஞ்சிக்கிட்டு அவனையும் அவன் குடும்பத்தையும் குழந்தைகளையும் தான பாத்துக்க போற.? அப்போ ஏன் படிக்குறன்னு கேட்டு இருக்காங்க.. என்ன பொறுத்த வரை நான் நல்லா படிச்சு கண்டிப்பா ஐ.ஏ.எஸ் ஆகணும்.. எனக்கு தங்கச்சிங்க இருக்காங்க அவங்கள ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும்.. நான் ஐ.ஏ.எஸ் ஆகுறது என் சின்ன வயசு கனவு, லட்சியம் வெறி.. எல்லாமே.. காதல் கூட என் கனவுக்கு தடையா இருக்கும்னு தான் நான் அதை கூட உன்கிட்ட சொல்ல ரொம்ப தயங்குனேன். ஆனா கடைசில என்னால முடியல, அந்த அளவுக்கு நீ எனக்குள்ள வந்துட்ட, நீ நினைக்கிற மாதிரி நடுத்தர வர்க்கம் மக்கள் சாதிக்கணும்னா நிறைய இழக்கணும் ஆதி.. உனக்கு இதுலாம் பெரிய விஷயம் இல்லை, எனக்கு அது நல்லாவே தெரியும்.. ஆனா என்னை பொறுத்தவரை இதுலாம் என்னோட கோல்.. இதுலாம் நான் முடிச்சா தான் கல்யாணம்னு ஒன்னு என் வாழ்க்கையில வரும் ஆதி.. “

ஆதி”எல்லா ஆண்களும் ஒண்ணா யது.? நானும் மத்தவங்க மாதிரி தான் நீ நினைக்குற?” என்று அழுத்தி கூற,

திவி”எல்லா ஆண்களும் ஒண்ணுன்னு நான் சொல்லல ஆதி.. முக்கியமா நீ இல்ல.. ஐ நோ அபௌட் யூ.. ஆனா, நான் என்ன சொல்ல வரேன் தெரியுமா.? ஆண்களுக்கு எப்பவும் தன் மனைவி அவங்களுக்கு கீழ ஐ மீன் ஒரு ஆண் வேலையை முடுச்சிட்டு டயர்டா வந்தா அவனோட மனைவி அவனுக்கு ஆறுதலா இருக்கணும்.. சில நேரத்துல மனசாலயும் சில நேரத்துல உடம்பாலயும்.. மனைவியும் வேலைக்கு போனா அங்க ஆரம்பிக்குது ரெண்டு பேருக்கும் ஈகோ..

நீயே சொல்லு.. உனக்கு வர போற மனைவி உனக்கு அன்பாவும் உன்கூட நேரம் ஒதுக்குற பொண்ணாவும் இருக்கணும்.. நீ டிப்ரஷன்ல இருந்தா உனக்கு ஆறுதலா இருக்கணும்.. ஆனா நீ இப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா இது எதுவும் உனக்கு கிடைக்காது தியா.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ.. மனசு அளவுல நான் இன்னும் அந்த பக்குவத்துக்கு வரல.. நான் இப்போ என் ஸ்டடிஸ்ல தான் கவனமா இருப்பேன்.. என் லட்சியத்தை அடையுற வரை எனக்கு வேற எதுவும் பெருசா தெரியாது” என்று அவள் பக்கம் நியாயத்தை கூறினாள்.

ஆதி பெருமூச்சை ஒன்றை விட்டவன், “ஓகே.. இப்போ நான் கொஞ்சம் பேசலாமா யது.?” திவி அமைதிகாக்க, “நான் உன்னை படிக்க வைக்குறேன்.. உன்னோட கடமை எல்லாம் நானே ஏத்துக்குறேன்.. நீ என்கூட மட்டும் இரு டி.. எனக்கு அது போதும்.. ஏன்னா எனக்கு நீ முக்கியம்” என்று கூற, திவி தன் நிலையிலேயே உறுதியாக இருந்தாள்.

ஆதி”இங்க பாரு யது.. எல்லார்க்கும் கனவு இருக்கு.. எனக்கும் ஒரு கனவு இருக்கு.. அது என்னன்னு உனக்கு தெரியுமா.?” என்று அவளை பார்க்க, அவள் புரியாது பார்க்க, “என் மனைவியை சந்தோசமா பாத்துக்கனும். அவளோட கனவை நான் அவ கூட சேர்ந்து நிறைவேத்தனும். என் குழந்தைகளுக்கு நல்ல தகப்பனா இருக்கணும். இந்த கனவை நான் நிறைவேத்தனும்னு ஆசைபடுறேன்” என்றான் கண்ணில் காதலாக,

திவி கண்களில் கண்ணீரோடு அவனை பார்க்க, ஆதி “இந்த கல்யாணம் நடக்கணும் யது.. ” என்க,

அவள் என்ன கூறுவது என்று தெரியாமல் நிற்க, தன்னுள் ஒரு முடிவை எடுத்தவள் ஆதியிடம் “ஓகே எல்லார் சந்தோசத்துக்காகவும் இந்த கல்யாணம் நடக்கும். ஆனா எனக்கு டிவோர்ஸ் வேணும். என்னோட கடைமைய உன் தலையில சுமத்த நான் விரும்பல. சோ டிவோர்ஸ் குடுத்தா நான் படிச்சிகிட்டே வேலைக்கு போய்ட்டு என் கடைமைய செய்வேன். என் கனவையும் அடைவேன்.” என்றதில் ஆதி மேலும் உடைந்தான்.

ஆதி என்ன தான் கூறுவான். தான் விரும்பும் ஒரு பெண், தன்னை விரும்பும் அதே பெண் காதலை ஒப்புக்கொண்டு கல்யாணம் செய்து கொள்ளும் நிலைமையில் கல்யாணம் நடந்தேறினாலும் அடுத்து விவாகரத்து வேண்டும் என்று கேட்பவளிடம் என்ன தான் கூறுவான் ஆண்மகன்.?

ஆதி ‘இவ ரொம்ப குழம்பி போய் இருக்கா. இவ ரூட்லயே போனா தான் இவள சரி பண்ண முடியும்..’ என்று நினைத்து விட்டு, “ஓகே.! அதான் உன் முடிவுனா நான் அதுக்கு குறுக்க நிக்க மாட்டேன். ஆனா, அதுக்கு நான் சொல்றத நீ கேட்கணும்” என்று கூறியதில் இந்த முறை அதிர்வது திவியின் முறையாயிற்று.

திவி “என்ன.?” என்று மனதை திடப்படுத்திகொண்டு கேட்க,

ஆதி “எப்படியும் கல்யாணம் ஆன உடனே டிவோர்ஸ் தர மாட்டாங்க. சோ, நீ கண்டிப்பா ஒன் இயர் என்கூட வாழனும். இட்ஸ் பாயிண்ட் நம்பர் ஒன். பாயிண்ட் நம்பர் டூ. நீ காலேஜ் போகலாம். ஆனா இனிமே என்னோட பெர்சனல் பி.ஏ. நீ தான். சோ, நீ ஆபிஸ் வரனும் பார்ட் டைம்மா, அண்ட் லீவ் டேஸ்ல ஃபுல் டைம். பாயிண்ட் நம்பர் த்ரி. உனக்கும் எனக்கும் தவிர இந்த விஷயம் யார்க்கும் தெரிய கூடாது.. பாயிண்ட் நம்பர் ஃபோர். எங்க போனாலும் என்கிட்ட சொல்லிட்டு தான் போகணும்.. பாயிண்ட் நம்பர் 5. இதான் ரொம்ப முக்கியமான கண்டீசன் இந்த ஒன் இயர்ல நீ மனசு மாறுனா ஆர் இந்த விஷயம் வெளில தெரிஞ்சா நான் டிவோர்ஸ் தர மாட்டேன்.. காலம் முழுக்க என் கூட தான் நீ வாழனும். இதுக்குலாம் ஒகேன்னா உன்னோட கனவுக்கும் கடமைக்கும் என்னால முடிஞ்சத நான் செய்வேன்”என்றான்.

திவியும் பல முறை யோசித்தாள். ‘நீ இதுக்கு சரின்னு தான் சொல்லி ஆகணும்.. பிகாஸ், ஆதியோட சந்தோசம் உனக்கு முக்கியம். அவன் கூட நீ இருந்தா எல்லாமே சரி பண்ணிடலாம்.’ என்று ஒரு மனம் கூற, ‘நீ அவன் கூட இருந்தா அவன் சும்மா இருப்பானா.? அவன் பக்கத்துல வந்தாலே நீ டோட்டல் பிளாட்.. இதுல கல்யாணம் செஞ்சி.. ஒரே ரூம்ல ஒரே பெட்ல..’ என்று இழுக்க, நினைத்து பார்த்திடவே திவிக்கு பக் என்று ஆனது. ‘ஏய் அதுலாம் ஒன்னும் ஆகாது.. திவி நீ நல்லா யோசி.. ஆதியும் சந்தோசமா இருக்கணும்.. நீயும் எல்லா பிரச்சனையும் தீக்கணும்.. நீ கண்ட்ரோல்லா இருந்தா யார் என்ன பண்ண முடியும்.?’ என்று அவளை சமாதானம் செய்ய, இரு மனதையும் கடிவாளம் இட்டு அடக்கியவள் ஒரு முடிவை எடுத்தாள்.

ஆதி “என்ன முடிவு எடுத்து இருக்க, யது.?”

திவி “சரி.. நீ சொன்ன கண்டீசன்க்கு நான் ஒத்துக்குறேன்..” என்றாள்.

இதில் சக்தி அண்ட் கோவின் திட்டம் தெரிந்தால் இருவரின் நிலை..?

கனவு தொடரும் 🌺🌺

உங்களின் கருத்துக்களை பகிரவும் வாசகர்களே.. 🙏🙏

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
1
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்