393 views

ஆட்சியர் கனவு 19💞

திவி அவள் அம்மாவிடம் “ஏன் மா.. என் ரூம்குள்ள விட்டீங்க.?” என்று முறைக்க,

ரோஜா”அப்டி என்ன தான் டி அங்க வச்சி இருக்க.? உள்ள போனா தான் என்ன.?” என்று அவளை எதிர் பார்வை பார்க்க, அவள் எதுவும் கூறாமல் அவள் அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டாள். செல்லும் அவளையே ஆதி பார்த்து கொண்டு இருந்தான்.

பாரதி அடுக்களையில் இருந்த ரோஜாவிடம் “அம்மா சக்தி அண்ணா நம்ம பழைய வீட்டுக்கு எதிரில குடி இருந்தவங்க தான.?”

ரோஜா “ம்ம் ஆமா.. அதுக்கு என்ன இப்போ.?”

பாரதி”ப்ச் அம்மா.. அவங்க எப்டி இங்க.? அதுவும் விஷ்ணு அண்ணா பிரண்ட்டா.?”

ரோஜா “கொஞ்சம் அமைதியா இரு.. எதுவா இருந்தாலும் அவங்க போன அப்ரோம் பேசிக்கலாம்”

பாரதி”என்னமோ..போங்க.. ” என்று அங்கிருந்த கேரட்டை சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.

உள்ளே சென்றவள் ஆதியின் புகைப்படங்கள் மற்றும் அவனின் பொருட்களையெல்லாம் எடுத்து ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு அவன் சம்மந்தப்பட்ட கோப்புகளையும் மறைத்து வைத்தாள்.

வெளியில் வந்தவள் “இனிமே எல்லாரும் என் ரூம்குள்ள போலாம். ஆனா எதையும் அலசி ஆராய தேவ இல்ல” என்று விட்டு ரவீணாவை அழைத்துகொண்டு மாடிக்கு சென்றாள்.

இப்போது அடித்து பிடித்து அனைத்து தோழமைகளும் உள்ளே செல்ல, பவியும் ரோஜாவும் கூட உள்ளே சென்றனர்.

ஆதியும் பாரதியும் உள்ளே செல்ல, அந்த அறையே முற்றிலும் மாறி இருந்தது. ஆதியை பற்றி ஒரு துருப்பும் அங்கே இல்லை. இதனை கண்ட பாரதி “இதற்கு முன்னாடி நாம வந்த ரூமா இது.. அப்டி தெரியலையே” என்று கண்டது கனவா நனவா என்று யோசித்து கொண்டு இருந்தாள்.

ஆதி”சரியான கேடி டி நீ.. எங்க மத்தவங்க வந்து பாத்துடுவாங்கன்னு எல்லாத்தையும் மறச்சு வச்சிட்ட” என்று அவளை மனதுள் புகழ்ந்து கொண்டே திட்டி கொண்டு இருக்க, பாரதி அவனருகில் வந்து, தொண்டையை கனைத்து”ம்க்கும்..பாஸ்.. நாம கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்கயா வந்தோம்.?”என்று யோசனையாக கேட்க,

ஆதி”ம்ம் ஆமா டா குட்டிமா.. ஆனா உங்க அக்கா தான் என்னமோ கேடி வேலை பண்ணி எல்லாத்தையும் மாத்திட்டா” என்று கூறினான்.

பாரதி அவனை ஹாலிற்கு அழைத்து வந்து”நீங்க ஏன் என்ன குட்டிமான்னு சொல்றீங்க ?”என்று கேட்க,

ஆதி”ப்ச்.. தெரியலையே.! ஏன் டா உனக்கு பிடிக்கலையா.?” என்றான்.

பாரதி “அப்டி இல்ல.. திவி அக்காவும் இப்டி தான் கூப்பிடுவாங்க” என்றாள்.

ஆதி சிரித்துவிட்டு “ஹாஹான்.. கொஞ்சம் உங்க அக்காவ பத்தி சொல்லு” என்று கேட்க,

பாரதி”எந்த அக்காவ பத்தி.?” என்று கேட்க,

ஆதி, “இவளுக்கு எத்தனை அக்கா இருக்காங்க? என்று யோசித்து விட்டு, வேற யாரு யதுவ பத்தி தான்” என்றான் சிரித்துகொண்டே..

பாரதி அதிர்ந்து “அ…அவங்கள பத்தி ஏ.. ஏன் கேக்குறீங்க.?” என்றாள் கண்களில் கண்ணீருடன்.

ஆதி பதறி”அதுக்கு ஏன் டா அழுகுற.. நான் தப்பா ஏதாவது கேட்டேனா.?” என்று கூற,

பாரதி”இல்ல.. ஆனா இப்போலாம் யது அக்காவ பத்தி பேசுனா திவி அக்கா ஒரு மாதிரி ஆகிடுவாங்க” என்றாள் கண்ணீர் வழிந்தபடி.

மற்ற அனைவரும் திவியின் அறையையே சுற்றி கொண்டு இருக்க, அறை முழுவதும் புத்தகங்கள் செய்திதாள்கள் தான் இருந்தது.

சபரி”இவங்க அப்பா இவளுக்கு கொடுக்குற காசு எல்லாம் புக்ஸ் மட்டும் தான் வாங்குவா போல” என்க,

பிரவீன்”என்ன டா இங்க ஒரு குட்டி லைப்ரரியே இருக்கு” தலையில் கை வைத்தான்.

கவி” வா கனகா கதை புக் ஏதாவது இருக்கான்னு பாக்கலாம்” என்று அவளை அழைக்க,

கனகா”நாம சிலபஸ்ஸயே படிக்க மாட்டோம். இதுல கதை படிச்சு என்ன பண்ண போறோம்.? வா வெளில போலாம்” என்று கெஞ்சினாள்.

ஆதி பாரதி கூறியதில் புரியாமல் விழித்து, “யதுவ பத்தி பேசுனா திவி என்னமோ ஆவாளா.?” என்று கேட்டான்.

பாரதி”ம்ம் ஆமா..! யது அக்கா இறந்ததுல இருந்து திவ்யா அக்கா அவங்கள பத்தி வீட்ல பேச மாட்டாங்க” என்று கூறியதில், ஆதி தான் அதிரிச்சியின் உச்சியில் இருந்தான். “ய..யது.. செத்துட்டாளா.?” என்று கண்களில் நீர் கோர்க்க கேட்டான்.

பாரதி”ம்..ஒரு வருஷம் ஆகுது.. உங்களுக்கு யது அக்காவ தெரியுமா.?” என்று ஆர்வமாய் கேட்க, ஆதி இறுகிய முகத்துடன் இல்ல என்று தலையசைத்தான்.

பாரதி”அப்போ நீங்க ஏன் கண் கலங்குறீங்க.? நான் அழுகுறத பார்த்தா.?” என்று கேள்வியும் கேட்டு விடையும் கூற, ஆதிதான் பதில் பேசாமல் தலையை மட்டும் ஆட்டினான்.

பாரதி ஒரு முறை மாடியை பார்த்து விட்டு “யது அக்கா ரொம்ப சாஃப்ட். ஆனா திவ்யா அக்கா ரொம்ப ஸ்ட்ரிக்ட். யது அக்காகாக திவ்யா அக்கா எதுவேனா செய்வாங்க. அதே மாதிரி தான் திவ்யா அக்கா எது சொன்னாலும் மறு பேச்சு இல்லாம யது அக்கா செய்வாங்க. சின்ன வயசுல இருந்து அப்டி தான்.

எங்க வீட்ல எல்லாருக்கும் யது அக்கா திவி அக்காவ ரொம்ப பிடிக்கும் சின்ன வயசுல இருந்து ஒண்ணா தான் இருப்பாங்க. ஆனா நான் பிறக்குறதுக்கு முன்னாடி எங்க ஆதி மாமா வீட்டை விட்டு போய்டாங்களாம் அதுக்கு யது அக்கா தான் காரணம்னு மாமா எப்போவும் திட்டுவாங்க. ஆனா திவ்யா அக்கா தான் ஆதி மாமாவ எப்படியாவது கண்டு பிடிப்பேன்னு சொல்லி பெரிய மாமாவை ரொம்ப திட்டிடாங்கலாம். அதுல இருந்து யாரும் அங்க போறது இல்ல” என்றாள்.

ஆதியோ பலத்த யோசனையில் இருக்க, பாரதியே தொடர்ந்தாள்.”அப்ரோம் அக்காங்க ரெண்டு பேரும் 10த் முடிச்சிட்டு யது அக்கா ஹையர் ஸ்டடிஸ்க்காக சென்னை போனாங்க.. ஆனா ஆனா” என்று அழுக,

ஆதி”ஆனா என்ன ஆச்சு டா.. சொல்லு மா” என்று பதட்டமாக கேட்க,

பாரதி”போனவங்க திரும்பி வரவே இல்லை. அப்பா தான் போய் என்ன என்ன செய்யணுமா செஞ்சிட்டு வந்தாரு. கடைசி வரை யாருமே அக்காவ பாக்கல. என்றாள் அழுது கொண்டே.

திவ்யா அக்கா தான் யது அக்கா இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க. ரொம்ப அழுவாங்க. நைட் திடீர்னு எந்திரிச்சு யது நானும் வரேன்.. என்ன மட்டும் ஏன் தனியா விட்டு போய்ட்ட.? என்னையும் கூட்டிட்டு போன்னு அழுவாங்க. நாங்களாம் அக்கா கிட்ட போகவே பயப்படுவோம். நான் தான் அவள கொன்னுட்டேன். நான் அவள அங்க அனுப்பாம இருந்து இருந்தா இந்நேரம் என் யது என் கூட இருந்து இருப்பாளன்னு தலையில அடிச்சு அழுவாங்க. பக்கத்துல போனளே எதையாவது தூக்கி மேல எரிவாங்க. பக்கத்துல வராதிங்க. அப்ரோம் என்னால நீங்களும் செத்துடுவீங்கன்னு சொல்லுவாங்க.

அக்காவ சமாதானம் பண்றது ரொம்ப கஷ்டம். அதுக்கு அப்ரோம் யது அக்காவ பத்தி வீட்ல யாருமே பேச மாட்டாங்க. இப்போ அக்கா பரவால்ல தான். ஆனா இப்போவும் யது அக்காவ பத்தி வீட்ல பேச மாட்டோம்.. ஆனா நீங்க யது அக்காவ பத்தி ஏன் கேக்குறீங்க.?” என்றாள் கேள்வியாக.

ஆதி தான் தான் என்ன உணர்கிறோம் என்றே புரியாமல் அமர்ந்து இருந்தான். அப்போது பவி அங்கு வர, “பாரதி! அம்மா எல்லாரையும் சாப்ட கூப்டாங்க. நீ உள்ள இருக்குறவங்களை கூப்ட்டு.. நான் போய் அக்காவயும் ரவீ அக்காவையும் கூப்டுறேன்” என்றாள்.

பாரதி சரி என்று விட்டு செல்ல, ஆதிக்கு யது இறந்துவிட்டாள் என்பதை உணரவே பல நிமிடங்கள் பிடித்தது. திவி மாடிக்கு சென்றதை கவனித்தவன் “பவிமா.. நான் போய் அவங்கள கூட்டிட்டு வரேன்..நீ போ” என்று கூறி விட்டு இறுகிய முகத்துடனும் திவியிடம் பல கேள்விகளுக்கு விடைகேட்கவும் சென்றான்.

ரவீயும் திவியும் மேம் கொடுத்த கல்லூரி வேலையை செய்து கொண்டு இருக்க, ஆதி வேகமாய் அங்கு செல்ல, திவியோ ரவீயிடம் புகார் செய்து கொண்டு இருந்தாள்.

திவி”ரவீ.. தியா ரொம்ப பன்றான்டி.. கொழுப்பு.. அப்டி கிட்ட வரான்.. எருமை எருமை”

ரவீ சிரித்துவிட்டு”34..” என்று எண்ண,

திவி”என்ன டி நான் இங்க பொலம்பிட்டு இருக்கேன். நீ என்ன டி எண்ணிக்கிட்டு இருக்க.?” என்று கடுப்பாக கேட்டாள்.

ரவீ”இல்ல திவி இதோட இதே டயலாக்கை நீ 34 தடவ சொல்லிட்ட..” என்று நக்கலாக கூற, திவி அவளை தீயாய் முறைத்தாள்.

ரவீ” சரி சரி முறைக்காத.. இப்போ என்ன பண்ணலாம். ஆதி உன்கிட்ட லவ் சொன்னா என்ன பண்ணுவ.?” இந்த கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்கிறாள் என்பதை அறிய ஆதி பெரும் ஆவலாக இருந்தான்.

திவி வெற்று புன்னகையை உதிர்த்தவள், “அவன் சொல்ல மாட்டான் ரவீ.. “, ரவீ அவளை கேள்வியாய் பார்க்க, “கவிதைலயே நான் என்னோட விருப்பத்த சொல்லிட்டேன். அண்ட் நான் யது இல்ல ரவீ.. அவன் யதுவ தான லவ் பன்ரான்.. திவிய இல்லயே..”

ரவீ”ஒரு வேலை அவன் கவிதையை புரிஞ்சிகலன்னா என்ன திவி பண்றது?”

திவி”கண்டிப்பா அவன் புரிஞ்சு இருப்பான். புரியலனா சார் இன்னைக்கு என் வீட்டுக்கு வந்து இருக்க மாட்டாரு” என்று நக்கலாக கூறினாள்.

ரவீ”எப்டி திவி சொல்ற.?”

திவி”நான் தான் நாலு நாள் போட்டிக்கு போறேன்னு சொன்னேன் ல.. அவன் கவிதையை புரிஞ்சிகிட்டதுனால தான் என்ன பத்தி தெரிஞ்சிக்க என் வீட்டுக்கே வந்து இருக்கான்.”

ரவீ.”ஆமா.. நீ ஏன் போட்டிக்கு போல.?”

திவி”அது திடீர்னு கேன்சல்னு சொல்லிட்டாங்க.. அதான் இங்க வந்தேன்.. வந்து பாத்தா அவன் என் ரூம்குள்ளயே அலசி ஆராஞ்சிட்டு இருக்கான். அம்மா கிட்ட, உங்க கிட்ட தான் என்ன பத்தி விசாரிப்பன்னு நினைச்சா ரூம்குள்ள போனது நானே எதிர்பாக்கல”

ரவீ”அப்டி என்ன தான் அங்க இருக்கு?”

திவி புன்னகையை மட்டுமே பதிலாக தந்தாள்.

ரவீ”ஒரு வேலை ஆதி யதுவ பத்தி கேட்டா. என்ன பண்ணுவ திவி?”

திவி”உண்மைய ஒரு நாள் சொல்லித்தான ஆகணும் ரவீ..”

ரவீ “உன்னோட காத…” என்று கேட்க வர, திவி தான் கண்களாலேயே சொல்ல வேண்டாம் என்றாள். ரவீ திரும்பி பார்க்க ஆதி நின்று கொண்டு இருப்பதை பார்த்து”ஹான் வா ஆதி” என்றாள்.

ஆதி”உங்கள ஆன்டி சாப்ட வர சொன்னாங்க”

திவியோ அவனை கண்டு கொள்ளவே இல்லை.  ரவீயிடம்”எனக்கு பசிக்கல ரவீ.. நீ போ.. நான் இதை முடிச்சிட்டு வரேன்” என்றாள்.

ஆதி”ஆண்டி கண்டிப்பா வர சொன்னாங்க ரவீணா” என கூற,

ரவீணாக்கு தான் “இவங்க ரெண்டு பேரும் இப்போ ஏன் என் தலைய உருட்டுறாங்க” என்று இருந்தது.

ரவீ “வா திவி சாப்டு மத்தத பாக்கலாம்” என்றிட,

ஆதி அவளையே பார்ப்பதை உணர்ந்தவள் போக வில்லை என்றால் ஏதாவது வில்லத்தனம் செய்வான் என்று கீழே சென்றாள்.

ஆதியோ எத்தனை நாள் நீ தப்பிப்பாய் என்று அவளை பின் தொடர்ந்தான்.

அனைவரும் மதிய உணவு திவி வீட்டில் உண்டு முடிக்க, திவியோ உண்டு விட்டு மாடிக்கு சென்றவள் அனைவரும் கிளம்பும் தருவாயில் தான் ரவீயுடன் கீழே வந்தாள்.

பாரதி ஆதியிடம்”அக்கா கிட்ட நான் சொன்னதை சொல்லாதீங்க.. அப்ரோம் அக்காக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா.?” என்று பயந்து கூற,

ஆதி”கண்டிப்பா சொல்ல மாட்டேன்.. நீயும் எதுவும் சொல்லாத” என்றான். அவளும் அதை ஆமோதித்தாள்.

இரவு அனைவரும் கிளம்ப, ஆதி தான் திவியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. திவியும் அதை அறிந்து இருந்தாலும் அவளும் அவனிடம் பேசவில்லை. இதை யாரும் அறியவில்லை என்றாளும் ஒருவர் இதை குறித்து கொண்டு தான் இருந்தார்.

அனைவரும் அவர் அவர் வீட்டிற்கு சென்று விட, திவியோ வழக்கம் போல் ஆதியிடமும் யதுவிடமும் மானசீகமாக பேசிகொண்டு அப்படியே கண் அயர்ந்தாள்.

ஆதியோ பலவித குழப்பங்களுடனும், யது இறந்து விட்டால் என்ற பெருத்த வலியிலும் தன் காதல் இல்லை என்ற ஏமாற்றத்துடனும் படுக்கையில் வீழ்ந்தான். அப்போது அவன் திவியின் வீட்டில் இருந்து எடுத்து வந்த நோட்டுகளை எடுக்க, அதில் இருந்து ஒரு டயரி கீழே விழுந்தது.

அதை யோசனையுடன் எடுத்தவன் முதல் பக்கத்தை திருப்ப,

என்னால் சென்றாய்..
என்னாலே வருவாயாடா.. என்னவனே…
உனக்காக உன்னவள் உயிராக காத்துகொண்டு இருக்கிறேன்.. உன் வரவுக்காக மட்டும்..

என்று எழுதி இருக்க அதன் கீழ்
திவி – தியா பிரியாத பறவைகள்..என்று எழுதி இருந்ததை பார்த்து இறுகிய முகத்துடன் அதனை அப்படியே வைத்து விட்டு தன் மெத்தையில் வீழ்ந்தான்.

கனவு தொடரும் 🌺🌺🌺🌺🌺

கமெண்ட்ஸ் முக்கியம் நட்பூக்களே.. ❣️❣️❣️😍😍

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்