Loading

ஆட்சியர் கனவு – 18 💞

அவளின் நினைவுகளில் திளைத்திருந்த ஆதி, உடனே திவியை பற்றி அறிய முற்பட்டான்.

ஆதி “சக்தி நாலு நாள்குள்ள எனக்கு யதுவ பத்தி ஃபுல் டீடைல் வேணும் டா. என்று சக்தியிடம் கூறி விட்டு, விஷ்ணு அன்னைக்கு நீ சொன்னல இது பழைய திவி இல்லன்னு.. அப்போ பழைய திவி எப்டின்னு சொல்லு கேட்போம்” என்று கதிரையில் அமர்ந்தான் ஆதி.

விஷ்ணு”எப்போவும் அவ நினைக்கிறது யார்கிட்டயும் சொல்லவே மாட்டா. ஹாப்பியா தான் இருப்பா. எப்பவும் அவ பேஸ் ல குட்டியா ஒரு ஸ்மைல் இருக்கும். கண்ணுல கூட அந்த ஹாப்பினஸ் இருக்கும்டா.. ஆனா இப்போ ஸ்மைல் இருக்கும்.. ஆனா ஹாப்பினெஸ் இல்ல” என்றான்.

ஆதி யோசித்து விட்டு”இந்நேரம் அவ காம்படிஸன்க்கு கிளம்பி இருப்பா தான?”

சக்தி”ஏன் டா..? அவ வீட்டுக்கு போக போறியா.?”

ஆதி”ஐய்..இதுவும் நல்ல ஐடியா டா.. போலாம்”

சக்தி திருத்திருவென முழிக்க, விஷ்ணு “அங்க போய் என்னன்னு கேட்ப.?”

ஆதி”முதல வாங்க டா” என்று இருவரையும் இழுத்து கொண்டு சென்றான்.

மூவரும் ஆதியின் மகிழுந்தில் திவியின் வீட்டை அடைந்து இருக்க, இந்த இடைவெளியில் விஷ்ணு மற்ற நண்பர்களையும் அங்கு வரும்படி கூறி இருந்தான்.

விஷ்ணு திவி வீட்டின் காலிங்பெல்லை அமர்த்த, பாரதி கதவை திறந்தாள்.

பாரதி விஷ்ணுவை பார்த்து விட்டு “வாங்க அண்ணா.. இவங்க யாரு?”

விஷ்ணு திருத்திருவென முழிக்க,

ஆதி”ஹாய் குட்டி, நான் இவனோட பிரண்ட். இவன் என்னோட பிரண்ட்” என்று சக்தியை காட்டினான்.

பாரதி சக்தியை ஒரு கூர்ப்பார்வை பார்த்து விட்டு “அக்கா வீட்ல இல்ல! கொஞ்ச நேரம் முன்னாடி தான் கிளம்புனாங்க.!” என்றாள்.

ஆதி”அது தெரிஞ்சு தான வந்து இருக்கோம்” என்றிட,

பாரதி”ஹான் என்ன சொன்னிங்க?”

விஷ்ணு”இல்லமா. அவ கிளம்புறதுக்குள்ள வரலாம்னு தான் பாத்தோம். டைம் ஆயிடுச்சு.. அதான் சொல்றான்”

சக்தி”திவி வீட்ல இல்லையாம்.. வா கிளம்பலாம்”என்றிட, ஆதி முறைத்த முறைப்பில் அமைதி ஆனாள்.

ரோஜா”யார் டி .. வாசல்ல என்ன பண்ற.?”

பாரதி” விஷ்ணு அண்ணாவும் அவங்க பிரண்ட்சும் வந்து இருக்காங்க மா” என்றாள்.

பின்னாடியே அனைத்து தோழமைகளும் வர, ஆதி “இவங்கல யார் வர சொன்னா.?”

விஷ்ணு”ஈஈ.. நான் தான் ஒரு சேப்டிக்கு!” என்றான், தலையில் கை வைத்தபடி.

ஆதி “இருக்கட்டும்.. சமாளிக்க உதவுவாங்க” என்றான்.

சக்தி”இன்னைக்கு இவன் ஒரு முடிவோட தான் வந்து இருக்கான்” என்று விஷ்ணு காதில் கூற, விஷ்ணுவும் ஆம் என்றான்.

ரோஜா “வாங்க ப்பா.. உள்ள வாங்க.”

பவி அனைவருக்கும் நீர் கொண்டு வந்து கொடுக்க,

சபரி”இன்னைக்கு ஸ்கூல் போகல.?”

பவி”சனிக்கிழமை நீங்க தான் ஸ்கூல் திறந்து வச்சு இருகிங்களா.?” என்றாள் நக்கலாக.

சபரி”சோ வாட்.. சனிக்கிழமை ஸ்கூல் போக கூடாதா என்ன.?”

பாரதி”அதுலாம் போலாம்..! நீங்க ஏன் எல்லாரும் காலேஜ் போகாம இங்க படையெடுத்து வந்து இருக்கீங்க.?”

கவி”சும்மா போர் அடிச்சது.. அதான் திவியை பாத்துட்டு போலம்ன்னு” என்று உளற,

பவி”அக்கா போட்டிக்கு போனது உங்களுக்கு தெரியாதா என்ன.?” என்றால் கேள்வியாக,

அனைவரும் கவிதாவை முறைக்க, “ஹான்.. தெரியும்.. அவ போறதுக்குள்ள வரலாம்னு தான் பாத்தோம். பட் டைம் ஆச்சு.. அதான் உங்கள அப்டியே பாத்துட்டு போலம்ன்னு” என்று கூற

பாரதி சக்தியையே குறுகுறுவென்று  பார்த்து கொண்டு இருந்தாள். சக்திக்கு தான் அய்யோ என்று இருந்தது.

ஆதியோ திவியை எண்ணி கொண்டு இருக்க, மனதில் ஒரு பாடலை முணுமுணுத்தான்.

சண்டாளி உன்அசத்துற அழகுல லேசாகி என் அந்திப்பகல் அத்தனையும் லூஸாகி  பய கெடக்குறேன்தரையில பீஸ் ஆகி 🎶🎶

சண்டாளி உன்சிரிப்புல பறக்குறேன் தூசாகி நா செவத்துல விட்டெறிஞ்ச காசாகிகொடி புடிக்குறேன்
நினைப்புல மாசாகி🎶🎶

கையும் காலும்உன்ன கண்டு ஓடவில்லடி ரா வந்தும்கூட கண்ணுஇரண்டும் மூடவில்லடி
பாவி புள்ள என்ன நீயும்ஆடவிட்டடி தாய் பாசத்தோடநெஞ்ச வந்து மோதிபுட்டடிதெரியலடி புரியலடி உன்இருவிழி மனுஷனாஇடுப்புல தூக்குதடி🎶🎶

சண்டாளி உன்அசத்துற அழகுல லேசாகிஎன் அந்திப்பகல் அத்தனையும்லூஸாகி  பய கெடக்குறேன்தரையில பீஸ் ஆக

சண்டாளி உன்சிரிப்புல பறக்குறேன்தூசாகி நா செவத்துலவிட்டெறிஞ்ச காசாகிகொடி புடிக்குறேன்நினைப்புல மாசாகி🎶🎶

அனைவரும் திவி வீட்டில் குழுமி இருந்தனர்.

பவி “உங்க கேங்ல எங்க ரெண்டு பேர காணோம்?”

கனகா:”அதுவா.. ரவீணா காலேஜ்க்கு போய்ட்டா.. பிரியா ஏதோ வேலை இருக்குன்னு வீட்ல இருக்கா”

பாரதி”ரவீ அக்கா எதுக்கு காலேஜ் போய் இருக்காங்க.?”

விஷ்ணு”திவியதான் மேம் வர சொன்னாங்க. அவ போட்டிக்கு போய்ட்டதனால ரவீ போய் இருக்கா”

பாரதி மற்றும் பவி இருவரும் ஒன்றாய் தலையை ஆட்டினர்.

அனைவரும் பேசி கொண்டு இருக்க,

ஆதி ரோஜாவிடம் “ஆண்டி நான் யது ரூம்க்கு போலாமா.?” என்று கேட்டான். இதில் அனைவரும் அதிர்ந்து விட்டனர் என்றால் பவியும் பாரதியும் யது என்ற பெயரில் சிலையாக நின்று இருந்தனர்.

ரோஜாவிற்கு அனைத்து விஷயமும் திவி முன்பே கூறி இருந்ததால் அவர் அவனின் யது அழைப்பை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் அந்த குழந்தைகளோ கண்களில் கண்ணீருடன் நின்று கொண்டு இருந்தனர்.

ரோஜா கண்களாலேயே அவர்களை சமாதானம் செய்ய, அவர்களும் அமைதி ஆகினர்.

பிரவீன் “அந்த எருமை நம்மலேயே உள்ள விடாது. நாம கேட்டாலும் ஏதாவது காரணம் சொல்லி ஹால்ல இருந்து உள்ள வர விட மாட்டா.. இவன் என்ன அசால்டா கேக்கிறான்.. அதுவும் அம்மா கிட்டயே” என்று சபரி காதில் கூற,

சபரி “அவ்ளோ பெரிய ஆளா டா நீ” என்ற ரீதியில் அவனை பார்க்க, கவியோ “அவனாவது கேட்டான். நீலாம் அவ சொன்ன உடனே வாய மூடிக்கிட்டு இருந்த.. த்து” என்று துப்ப,

பிரவீன்”அரசியல்ல இதுலாம் சகஜமப்பா” என்று துடைத்துக்கொண்டான்.

ரோஜா”அவ ரூம்க்கு யாரையும் உள்ள விட மாட்டாப்பா” என்று கூற,

ஆதி”இல்ல ஆண்டி.. என்னோட நோட்ஸ் அவ கிட்ட தான் இருக்கு.. அதான்.. ” என்று இழுத்திட,

சக்தியும் விஷ்ணுவும் தான் இவனை பே வென பார்த்து கொண்டு இருந்தனர்.

பவி தன்னை சமன்படுத்திக்கொண்டு “எங்க அக்கா எங்களையே உள்ள விட மாட்டாங்க.. நீங்களே பாருங்க பூட்டு போட்டு தான் போய் இருக்காங்க” என்று கூற,

ஆதி”அவ்ளோ நம்பிக்கையா உங்க மேல அவளுக்கு”என்று கேலியாய் கூறினான்.

இதில் பொங்கி எழுந்த பவி “ஹாலோ.. எங்க அக்கா ஒன்னும் அப்டி இல்ல.. அக்கா ஐ.ஏ.எஸ்க்கு படிக்குறாங்க.. சோ நிறைய விஷயம் உள்ள வச்சி இருப்பாங்க. நாங்க ஏதாவது போய் கலச்சு விட்டா என்ன பண்றதுன்னு அக்கா உள்ள வர வேண்டாம்னு சொன்னாங்க” என்று கத்த,

ஆதி தான் மலைத்து போய் விட்டான். பாரதியோ “புள்ள பூச்சிக்குலாம் டயலாக் நல்லா வருதே” என்று முணுமுணுக்க, ரோஜா தான் அவளை சமாதானம் செய்தார்.

ரோஜா “பவி.. அமைதியா இரு.. ஏதோ நோட்ஸ் வேணும்னு தான அந்த தம்பி சொல்றாங்க.. நீ ஏன் கத்துற.?” என்று அதட்ட,

பாரதி”அம்மா.. என்ன நோட் வேணும்னு சொல்ல சொல்லுங்க நானே எடுத்துட்டு வரேன்” என்றாள்.

ஆதி”இல்ல குட்டிமா..! அது நாலு நோட் குடுத்து இருந்தேன். அது மட்டுமில்லாம அவளோட ரெண்டு நோட்ஸ்ஸும் வேணும். சோ நானே போய் எடுத்துக்குறேன்”என்று மலுப்ப,

பாரதி”அப்போ அக்காக்கு போன் பண்ணி கேட்டுட்டு போலாம்” என்று கூற, அதில் ஆதி தான் பதறினான். விஷ்ணு மற்றும் சக்தியோ “மாட்றா மவனே” என்ற ரீதியில் சிறு சிரிப்புடன் பார்க்க, அவனோ திருத்திருவென முழித்து கொண்டு இருந்தான்.

ஆனால் மற்றவர்களோ இதற்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்ற ரீதியில் சின் சானை சீரியசாக பார்த்து கொண்டு இருந்தனர்.

பாரதி திவிக்கு போன் போட ஆதியின் நேரம் திவி போனை எடுக்கவே இல்லை.

ரோஜா “சரி ஆதி… நீ போய் பாரு.. அவ கேட்டா நான் பேசிக்குறேன் ” என்று கூற, ஆதிக்கோ மகிழ்ச்சி தாளவில்லை.

ஆதி”ம்ம்ம் சரி ஆண்டி” என்று வேகாமாய் அவள் அறை அருகே போக, அப்படியே நின்று விட்டான்.

சக்தி”எல்லார்கிட்டையும் பேசுனா மட்டும் போதாது.. கொஞ்சம் மேல்மாடியையும் யூஸ் பண்ணனும்” என்றான்.

பவி சிரித்துவிட்டு”அம்மா உங்க கிட்ட எக்ஸ்டராவா ஒரு சாவி இருக்கும்ல மா” என்றிட, அவர் பாரதியை பார்த்தார்.

பாரதி”உள்ள போனும்னா ஒரு கண்டீசன்” என்க,

ஆதி தான் இது பெரிய அலிபாபா குகை போல, உள்ள போறதுக்குள்ள இவ்ளோ தடையா என்று அவளை என்னவென்று பார்த்தான்.

பாரதி”நானும் உள்ள வருவேன்.. எதுவா இருந்தாலும் என்ன கேக்கமா எடுக்க கூடாது”என்றாள்.

பவி”சந்தடி சாக்குல நீயும் உள்ள போறியா.?” என்று அவள் காதை கடிக்க,

பாரதி”இந்த மாதிரி சான்ஸ்ஸலாம் யூஸ் பன்ணிகனும்.. அப்ரோம் மிஸ் பண்ணிட்டதா பின்னாடி பீல் பண்ண கூடாது ல” என்றாள்.

ஆதி யோசித்து விட்டு,”ம்ம் சரி வா” என்றான். தவறியும் மற்றவர்களை உள்ளே அவன் அழைக்கவே இல்லை.

பாரதி கதவை திறக்க, இருவரும் உள்ளே சென்ற உடன் ஆதி கதவை அடைத்தான். அதில் மற்றவர்கள் தான் “என்னடா நடக்குது இங்க” என்ற ரீதியில் அங்கே அமர்ந்து இருந்தனர்.

உள்ளே சென்ற ஆதியும் பாரதியும் விழி விரித்தனர். எங்கு பார்த்தாலும் ஆதியின் புகைப்படம், ஆதி உபயோகித்த பொருட்கள் என்று இருக்க,  அலமாரியில் ஆதியை பற்றிய கோப்புகளே இருந்தது கலைந்த நிலையில்.

பாரதி அதை குழப்பமாகவும் புரியாமலும் புகைப்படத்தையும் ஆதியையும் மாறி மாறி பார்த்தாள்.

ஆனால் ஆதியோ யோசனையாகவும் ஆச்சரியமாகவும் பார்த்தான். தான் ஆறு வயது முதல் உபயோகித்த பொருட்களிலிருந்து நேற்று வரை உபயோகித்து தொலைந்த பொருட்கள் என அனைத்தும் அழகாக அமைந்து இருந்தன அவளின் அறையில். பொருட்களை எல்லாம் ரசனையுடன் வருடியவன், கோப்புகள் அருகில் சென்றான்.

பாரதிக்கோ தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. திவி எதையும் காரணம் இன்றி செய்ய மாட்டாள் என்று அறிந்ததால் பாரதி உடனே அவன் அருகே சென்று,”நீங்க நோட்ஸ் மட்டும் தேடுங்க” என்றாள்.

ஆதி அவளை முறைத்து விட்டு,” இங்க இருக்குறது எல்லாம் என் டீடெயில்ஸ் தான.? இதை நான் பாக்க கூடாதா.?” என்று கேட்க,

பாரதி”உங்களுதா இருந்தா கூட இப்போ இருக்குறது அக்கா இடத்துல அக்கா அனுமதி இல்லாம பாக்க கூடாது” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

அவனும் அமைதியாக நோட்ஸ்சை தேடுகிறேன் என்ற சாக்கில் அவள் அறையை அலசி ஆராய, பாரதி அமைதியாக புகைப்படத்தேயே பார்த்து கொண்டு இருந்தாள்.

பாரதி”நம்ம அக்காவா இது.. எதுக்கு தேவ இல்லாம இவங்க போட்டோவ இங்க மாட்டி வச்சி இருக்கணும்.? சும்மா நாம ஏதாவது பசங்கள பத்தி பேசுனாலே அப்டி முறைப்பாங்க. இங்க என்னடான்னா இவங்களோட மொத்த வண்டவாளம் தண்டவாளம் லாம் இருக்கு” என்று நினைத்து கொண்டு,”இது கேஸ் விஷயமா இருந்தாலும் அக்கா இன்னும் எக்ஸாம் கூட எழுதலையே” தன் மனதில் பட்டிமன்றமே நடத்தி கொண்டு இருந்தாள்.

ஆதியோ அங்கு இருந்த இரண்டு நோட்டுகளை எடுத்து ஓரமாய் வைத்து விட்டு மீண்டும் அறையில் பார்வையை சுழல விட்டான்.

பாரதிக்கு தன் தோழியிடம் இருந்து அழைப்பு வர சென்று விட்டாள்.

ஆதி இது தான் சாக்கு என்று அந்த அலமாரி அருகில் செல்ல, அது ஒரு கதவாய் இருப்பதை அறிந்தான். அதன் அருகில் செல்ல, சரியாய் அதனை மறைத்து அவன் முன் திவி கோவமாய் வந்து நின்றாள்.

ஆதிக்கோ பக் என்று இருந்தது. “இவ போட்டிக்கு தான போனா.? இங்க எப்டி” என்று அவளை பார்க்க, அவளோ இவனை கொலைவெறியில் முறைத்து கொண்டு இருந்தாள். அதில் அசடு வழிந்தவன், “யது..நீ.. நீ.. போட்டிக்கு போல.?” என்றான்

திவி”போல.. இப்போ நீங்க வெளில போலாம்” என்று கதவினை காட்ட,

ஆதி கதவு மூடி இருப்பதை கண்களால் உறுதி செய்து கொண்டு, மர்ம புன்னகையுடன் திவியின் அருகில் வந்தான்.

திவி அவன் அருகில் வருவதை உணர்ந்தவள்”நீ.. நீ.. வெ..வெளில போ..” என்று தட்டு தடுமாறி கூற,

ஆதி இதையெல்லாம் காதில் வாங்கவே இல்லை.  அவள் அருகில் நெருங்கி, அவள் முகத்தில் இருந்த முடியை காதின் அருகில்  எடுத்து விட்டு, வேகமாய் வந்ததில் அவள் நெற்றியில் பூத்திருந்த வியர்வை துளிகளை சுண்டிவிட்டான்.

இவன் செய்கையில் பெண்ணவள் தான் நடுங்கி போனாள். மேலும் நெருங்கிய ஆதி”என் போட்டோலாம் எதுக்கு இங்க மாட்டி வச்சி இருக்க” என்று அவள் காதருகில் ஹஸ்கி வாய்ஸில் கேட்க,

திவிதான் அவன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து போனாள். பெண்மைக்கே உண்டான வெட்கமும் பயமும் வர, அவள் நா வேறு மேல்அண்ணத்தில் ஒட்டிக்கொண்டு வருவேனா என்றது.. இதில் அவள் உதடும் சேர்ந்து தந்தியடிக்க, ஆதி தான் மொத்தமாய் அவளுள் விழுந்தான்.

ஆதி”ம்ம் சொல்லு யது.. எதுக்கு என்ன பத்தி இவ்ளோ டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணி வச்சி இருக்க.?” என்று கேட்க,

அவனின் அழைப்பில் தன்னிலை வந்தவள், அவனை தள்ளிவிட்டு “இட்ஸ் நன் ஆஃப் யூவர் பிசினஸ்.. என் ரூம்ல யாருக்குமே அனுமதி இல்லை” என்று கத்தி அவனை வெளியில் செல்ல சொல்ல,

அதில் கோபமானவன், “எப்டி.? இது எனக்கு தேவ இல்லாததா இருக்கும். என்ன பத்தி என்ன தெரிஞ்சிக்க இந்த டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ண?” என்று திமிராய் கேட்க,

திவி “அது உங்களுக்கு தேவ இல்ல.. தேவ இல்லாம என் கோவத்தை கிளற வேண்டாம். இப்போ நீங்க வெளில போனா மரியாதையா இருக்கும்னு நினைக்குறேன்.” என்றாள்.

ஆதி அவளை அர்த்தப்பார்வை பார்த்துவிட்டு “என் நோட்ஸ் இருக்கு அத எடுத்துட்டு போறேன்” என்று அவன் ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த நோட்டுகளை எடுத்து கொண்டு சென்றான்.

திவிக்கோ தன் அன்னை மீது பயங்கர கோவம் வந்தது. கதவை பூட்டிக்கொண்டு வெளியில் வந்தவள், “இது என்ன நோட்ஸ்.?” என்று ஆதியின் கையில் இருந்ததை பார்த்து கேட்க,

ஆதி அவள் காதருகில் சென்று”என் நோட்ஸ் தான் டி செல்லம்.. சும்மா உன்னை பாக்கணும்ன்னு வீட்ல இருந்து கொண்டு வந்தேன்”என்றான்.

திவி தான் சிலையாகி போனாள். கனகா வந்து அவளை உலுக்கவே தன்னிலை வந்தவள், ஆதியை முடிந்த வரை மட்டும் முறைத்தாள்.

ஆதியோ அதனை கண்டு கொள்ளாமல் அவளை முடிந்த மட்டும் சைட் அடித்து கொண்டு இருந்தான்.

விஷ்ணு”ஏன் ப்ரோ.. போட்ட பிளான் சுத்தமா புஸ்னு போச்சு.. கொஞ்சம் கூட கவலை இல்லாம இவன் ஏன் இப்படி வலியிறான்.?”

சக்தி”இதை நீ அவன்கிட்டயே போய் கேளு.. நானே எப்ப டா மாட்டுவோம்னு பீதியில்ல இருக்கேன். இவன் வேற” என்றான்.

கவி”எதுக்கு மாட்டுவீங்க.?”என்று கேட்க,

சக்தி தான் பேந்த பேந்தவென விழித்து”அது..அதுவா.. நான் இன்னும் ட்யூட்டிக்கு போலல.. திவி அத பத்தி கேட்டா என்ன பண்றது. அதான் அப்டி சொன்னேன்” என்று கூற,

கவி”திவி இங்க பாரு இவர் இன்னும் டூயூட்டிக்கு போகாம இருக்காரு” என்று போட்டு குடுக்க,

திவி இப்போது சக்தியை முறைக்க, அவன் வராத அலைபேசியை காதில் வைத்துக்கொண்டு “ஹலோ.ஹலோ.. ஹான்.. ஆமாங்க.. இங்க கொஞ்சம் சிக்னல் கிடைக்கல என்று விட்டு நான் கிளம்புறேன் என்று ஒரேடியாக வெளியில் ஓடினான்.

சரியாக அந்நேரம் ரவீணாவும் உள்ளே வர, இருவரும் ஒருவரை ஒருவர் மோதி கொண்டதில் ரவீணா “அம்மா” என்று கீழே விழுந்தாள்.

சக்தி தான் என்ன செய்வது என்று விழித்துக்கொண்டு இருக்க, சத்தம் கேட்டு வெளியில் வந்த விஷ்ணு “லூசு பாத்து வர மாட்ட, கண்ணை என்ன பின்னாடியா வச்சிக்கிட்டு வந்த” என்று அவளை தூக்கி விட்டான்.

சக்தி தான் ஏன் என்றே தெரியாமல் விஷ்ணுவின் மேல் கோபம் கொண்டு இறுகிய முகத்துடன் வெளியில் கிளம்பினான். விஷ்ணுவும் அவனுடன் சென்று விட, செல்லும் அவனையே ஒரு நிமிடம் பார்த்து விட்டு ரவீ உள்ளே சென்றாள்.

கனவு தொடரும்.. 🌺🌺🌺

ஹாப்பி ரீடிங் பிரண்ட்ஸ்.. படிச்சுட்டு உங்க கருத்தை கமெண்ட்ஸ்ல சொல்லுங்க..

நன்றி.. 💜

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்