350 views

ஆட்சியர் கனவு 17💞

அடுத்த நாள் பொழுது இனிமையாக விடிந்தது..

யது”திவி எந்திரி டி.. உன்ன பாக்க சக்தி அண்ணா வந்து இருக்காங்க..” என்று கூறி விட்டு குளியலறைக்குள் சென்றாள்.

ரோஜா”என்ன தம்பி.. காலையிலயே என்ன விஷயம்.?”

சக்தி”இல்ல ஆன்ட்டி.. திவி ஏதோ எக்ஸாம் எழுத போறேன்னு சொன்னா.. அதான் புக் கொடுத்திட்டு போலாம்னு வந்தேன்.”

ரோஜா”ம்ம் சரி ப்பா..இரு அவ வருவா.”

சிறிது நேரத்தில் திவி வந்தாள், சக்தி ஏதோ கூற வாயெடுக்க,

திவி”உஸ்.!” என்று விரல் வைத்து, சுற்றி முற்றி பார்த்து விட்டு, யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, ம்ம் இப்போ சொல்லுங்க.. ஆதி எப்டி இருக்கான்.?”

சக்தி”ம்ம் பரவால்ல திவி.. ஒன்னும் இல்லையாம். இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க.” என்று கூற,

திவி”அண்ணா இன்னொரு ஹெல்ப் ண்ணா.. தினமும் ஆதி எந்த ரூட்ல ஸ்கூலுக்கு போவான்னு எனக்கு தெரியணும்” என்று கூற,

சக்தி வாயடைத்து போனான். “இந்த வயசுல என்னாமா பேசுற நீ..?” என்று கேட்க,

திவி”நீங்க நினைக்குற மாதிரி ஒன்னும் இல்ல..! சீக்கிரம் அவங்கள எங்க குடும்பத்தோட சேக்கணும் அதான்.”

சக்தி”ம்ம் சரி திவ்யா.. ” என்று அவன் செல்லும் வழியை கூறிவிட்டு சென்றான்.

இரண்டு வாரங்கள் கழித்து,

திவி”யது கிளம்பிட்டியா?” என்று கத்த,

யது”ம்ம் வரேன் டி” என்று கூறி விட்டு தன் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

யது”திவி.. இது நாம போற வழி இல்லயே.. புதுசா இருக்கு.?”

திவி”இனிமே இந்த ரூட்ல தான் போகணும்.”

யது”ஏன் திவி.?” என்று கேள்வியாய் கேட்க,

திவி அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல்,”யது இறங்கு.. டி”

யது”எதுக்கு டி.?”

திவி”இறங்குன்னு சொல்றேன் ல” என்று விட்டு ஒரு மரத்தடியில் சென்று ஒழிந்து கொண்டாள்.

யதுவும் அவள் அருகே நின்று கொள்ள, யது”இங்க யாருக்கு வைட் பண்றோம்.?”

திவி”ப்ச்.. கொஞ்ச நேரம் அமைதியா இரு”

யது”இவ எதுவுமே சொல்ல மாட்டா..” என்று வழியில் யாராவது வருகிறார்களா என்று பார்த்து கொண்டு இருக்க,

திவி”யது… யது.. அங்க பாரு.. ” என்று கை காட்ட,

யது பார்த்த திசையில் ஆதியும் சக்தியும் தன் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

யது”ஏய்.. ஏய்.. ஆதி மாமா டி”

திவி”நான் மட்டும் என்ன எருமை மாடுன்னா சொன்ன.?”

யது அவளை முறைக்க, திவி”சரி சரி உடனே உன் கண்ணை உருட்டாத, இனிமே இந்த ரூட் ல தான் ஓகே வா..?”

யது”டபுள் ஓகே” என்றாள்.

தினமும் இவ்வாறு அவனை பார்த்து கொண்டே செல்ல, நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்கள் ஆகி, மாதங்கள் வருடமாகியது.  ஒரு வருடம் இரு யுவதிகளும் தன் மனங்கவர்ந்தவனை ரசித்து கொண்டு தான் இருந்தனர்.  திவியும் யதுவும் தன் பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைக்க, ஆதி தன் கல்லூரியில் அடியெடுத்து வைத்தான்.

திவி அதிகாலையில் எழுந்து படித்து கொண்டு இருக்க, யது இன்னும் எழாமல் தன் படுக்கையில் இருந்தவாறே கனவு உலகத்தில் லயித்து கொண்டு இருந்தாள்.

சரியாக மணி 7.00. திவி”யது எந்திரி.. அம்மா கத்துவாங்க..” என்று அவளை எழுப்ப,

யது”திவி.. இன்னும் கொஞ்ச நேரம்..” என்று போர்வையில் புகுந்தாள்.

பவித்ரா”வர வர இந்த வீட்ல எல்லாமே உல்டாவா நடக்குது..இல்ல பாரதி.?”

பாரதி”நீ எதை சொல்ற.?”

பவி”முன்னலாம் திவ்யா அக்கா லேட்டா எந்திரிச்சு அம்மா கிட்ட அர்ச்சனை வாங்குவாங்க.. யது அக்கா சீக்கிரம் எந்திரிபாங்க. ஆனா இப்போலாம் யது அக்கா லேட். திவ்யா அக்கா சீக்கிரம் எந்திரச்சுடுராங்க “

பாரதி.”மிகப்பெரிய கண்டு பிடிப்பு டி. இதை கல்வெட்டுல எழுதி வச்சு பக்கத்துலயே நீ உட்காந்துக்கோ” என்று கூற,

பவி”இந்த காலத்துல உண்மையை சொன்னா கூட கலாய்க்குறாங்கப்பா” என்று தலையில் அடித்து கொண்டாள்.

பாரதி”அமைதியா சாப்டு.. அக்கா வந்தா என்ன நடக்கும்னு தெரியும் ல”

யது”என்ன நடக்கும்.?” என்று கேட்டுக்கொண்டே அவர் அருகில் அமர,

பவி”என்ன நடக்கும். இன்னும் சாப்பிடலையா.? ஹோம்ஒர்க் முடிச்சாச்சா.? நேத்து ஏன் நான் வந்து பாக்குறப்போ ரெண்டு பேரும் கிளாஸ்ல இல்ல.?பேசாம சாப்ட மாட்டீங்களா.? பாரதி முடியல அடுத்து நீ சொல்லு” என்று தண்ணீரை குடிக்க,

பாரதி”ஏதாவது போட்டி வந்தா மறக்காம பார்ட்சிபேட் பண்ணுங்க.. கிளாஸ் ஒழுங்கா கவனிங்க..ப்ளாப்ளா..ன்னு அட்வைஸ் மழை பொழியும்.” என்று கூற,

யது சிரித்து கொண்டு,”திவிக்கு இவ்ளோ பயமா?”

பவி”வேற வழி.. உங்கள மாதிரி அக்கா இருக்க மாட்டிங்குறாங்க.. ரொம்ப ஸ்ட்ரிக்ட். கொஞ்சம் உங்க சிஸ்டர் கிட்ட சொல்லுங்க யது அக்கா..ப்ளீஸ்..” என்று கெஞ்சிட

யது”என்ன சொல்லனும்.?”

பாரதி”இன்னைக்கு ஒரு நாள் நாங்க லீவ் போடுறோம் ப்ளீஸ்..அக்கா.. “

யது”காரணம் கேட்பாளே.?”

பவி”அது தெரியாம தான நாங்களே அமைதியா இருக்கோம்.” என்று கூற,

யது”என்ன டி சொல்ற.?”

பவி”ப்ச் ஆமா அக்கா.. போர் அடிக்குது. நேத்து குடுத்த டெஸ்ட் ஹோம்ஒர்க் எதுவுமே செய்யல.. மிஸ் திட்றத கூட வாங்கிக்கலாம்.. ஆனா அக்கா திட்றது.. ம்ஹும்..” என்று கதற..
யது”சரி சரி அவ வரா.. உஸ்”

திவி”பார்ரா.. அதிசயத்தை அமைதியா சாப்டுரிங்க.?”

பாரதி”இப்போ இவங்களுக்கு என்ன பிரச்சனை? அமைதியா சாப்டனுமா இல்ல வேண்டாமா.?”

பவி”கம்முன்னு இரு.. அப்ரோம் அவ்ளோதான்”

திவி “நேத்து ஹோம்ஒர்க் முடிச்சிங்களா.? இன்னைக்கு போட்டிக்கு பேர் கேட்க வருவாங்க, ரெண்டு பேரும் எதுலயோ ஒண்ணுல கலந்துகோங்க. நேத்து பிரேக்ல எங்க போனீங்க ரெண்டு பேரும்.?” என்று கேள்வி மழை பொழிய,

பவியும் பாரதியும் ஒருவரை ஒருவர் பாவமாய் பார்த்து கொண்டனர்.

யது நமட்டு சிரிப்புடன் சாப்பிட,

ரோஜா”திவ்யா.! இன்னைக்கு ஒரு நாள் ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு வர மாட்டாலுங்க” என்றார்.

பவியும் பாரதியும் ஒரு வித எதிர்பார்ப்புடன் திவி முகத்தை பார்க்க, அவள் ஏதோ யோசித்து விட்டு,”ம்ம் சரி.. இன்னைக்கு ஒரு நாள் தான் நாளைக்குலாம் வந்திடனும் ஓகே.?”

இருவரும் ஒன்றாய் தலை ஆட்டினர்.

திவியும் யதுவும் கிளம்ப, யது”லீவ் சொன்ன உடனே ஓகே சொல்லிட்ட, இந்நேரம் நீ திட்டி இருப்பியே.?”

திவி”அம்மாக்கு உடம்பு சரி இல்லை யது.. அவளுங்க லீவ் போட்டா கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும். அது மட்டும் இல்ல ரெண்டும் ஹோம்ஒர்க் முடிக்கல” என்று கூற,

யது”அம்மாக்கு உடம்பு சரி இல்லயா? நாணும் வீட்ல தான இருந்தேன். என்கிட்ட எதுவும் சொல்லல.?”

திவி”என்கிட்டேயே சொல்லல. அவங்க முகத்தை பாத்த உடனே கண்டு பிடிச்சிட்டேன். அதான் யது”
யது”அது சரி.. ஹோம் ஒர்க் முடிக்கலன்னு எப்டி கண்டு பிடிச்ச.?”

திவி”ஆமா இத கண்டு பிடிக்க ஐ.பி.எஸ் ஆபீசர் வரனுமா.. அதான் ரெண்டு மூஞ்ச பாத்தாலே தெரியுதே..” என்றால் சிரிப்புடன்.

யது”இப்போலாம் ஆதி மாமா வ பாக்கிறதே அத்தி பூத்தமாதிரி இருக்குள்ள திவி”

திவி”ஆரம்பிச்சிட்டியா.. அவன் தான் காலேஜ்க்கு போய்ட்டான்ல யது.. அவனும் காலேஜ் முடிக்கட்டும் அப்ரோம் நாமளும் ஸ்கூல் முடிப்போம். நீ ஒழுங்கா ஸ்டடீஸ்ல கான்செண்ட்ரேட் பண்ணு யது.. “என்று சற்று கோவமாய் கூறினாள். இதன் பிறகு யதுவும் ஆதியை பற்றி பேச்சை எடுக்கவே இல்லை. அவ்வப்போது அவன் நினைவு வந்தாலும் திவியின் வார்த்தை அவளை புத்தகம் பக்கம் திசை திருப்பி விடும்.

நாட்கள் ஒரு புறம் செல்ல, திவியும் யதுவும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுக்காக காத்து கொண்டு இருந்தனர்.

தேர்வு முடிவும் வந்தது. யதுவும் திவியும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருக்க, அவர்கள் பள்ளியில் சென்னையில் மேல்படிப்பை தொடர வாய்ப்பு இரு மாணவிகளுக்கு கிடைத்தது. தங்கள் தோழி மீனாவிற்கு அங்கு சென்று படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் திவி தனக்கு கிடைத்த வாய்ப்பை அவளுக்கு கொடுக்க, யது நான் சென்னை செல்லவே மாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு இருந்தாள்.

யது”திவி.. உன்னை மாதிரி நானும் இந்த சீட்டை வேற யாருக்கோ குடுத்துடுறேன் டி.. நான் இங்கேயே இருக்கேன்.. நான் போல..” என்று அழுக,

திவி”யது சொன்னா கேளு டி… எல்லா சூழ்நிலையிலயும் நான் கூடவே இருப்பேன்னு நினைக்காத, ஒரு சுவிச்சுவேஷன்ல நீ தனியா செயல்படனும் டி. எல்லா இடத்துலயும் நம்ம கூட ஒருத்தர் இருப்பாங்கன்னு எதிர்ப்பாக்க கூடாது. புரியுதா ?”

யது”நான் சொல்றது இங்க யாருக்குமே புரியலையா? உன்னை அம்மா அப்பாவ இவளுங்களை விட்டுட்டு நான் எப்டி அங்க போறது.? இத்தனை நாள் உன்ன விட்டு நான் போனதே இல்ல திவி… நான் போல டி.”

திவி”நீ அங்க போற அவ்ளோதான்.. இல்லன்னா என்கிட்ட பேசாத”

யது அழுதுகொண்டு இருக்க, இருவரில் யாரை சமாதானம் செய்வது என்று அவர்கள் பெற்றோரே குழம்பி தான் போயினர்.

ராஜா”திவ்யா சாப்டு மா”

திவி”எனக்கு வேண்டாம்” என்று யாரிடமும் பேசாமல் இருக்க,

யது அழுது கொண்டே இருந்தாள். ரோஜா”யது நீயாவது சாப்டு டி”

யது”அம்மா நான் அங்கே போல மா. திவி கிட்ட சொல்லுங்க மா!”

ரோஜா”நீ சாப்டு நான் சொல்றேன்”

யது”நிஜமா.. சொல்லுவீங்கள?”

ரோஜா”சொல்றேன் யது நீ சாப்டு” என்று அவளுக்கு ஊட்டி விட்டார்.

அனைவரும் உறங்க, பாரதி தண்ணீர் குடிக்க சமையல் அறைக்கு வந்தாள். அங்கு திவியோ தட்டில் தோசையை வைத்து கொண்டு தன் குடும்பத்தினரை கருவி கொண்டு இருந்தாள்.

திவி”கொஞ்சம் கூட மணசாட்சியே இல்ல.. ஒரு பிள்ளை திங்காம உண்ணாவிரதம்லாம் இருக்காளே. நைட் பசி எடுத்தா ஏதாவது சாப்டட்டும்னு வச்சி இருக்காங்க.. எல்லாத்தையும் காலி பண்ணிட்டு தூங்கிட்டு இருக்காங்க. நம்ம நேரம் கண்ணுல எதுவுமே இல்லயே” என்று சமையல் அறையை அலசி கொண்டு இருக்க,

பாரதி”சரியான கேடி அக்கா நீங்க” என்று கூறியதில்,

திவி”ஈஈஈ என்று அசடு வழிந்து கொண்டே, சரி சரி அதான் பாத்துட்டல.. வா வந்து அக்காக்கு பொடி எடுத்து குடு” என்றாள்.

பாரதியும் எடுத்து குடுக்க, திவி ஒருவாறு சாப்பிட்டு முடித்தாள்.

பாரதி”இவ்ளோ பசி இருக்குல.. அப்போ ஏன் இந்த உண்ணாவிரதம் லாம்?”

திவி”என்ன பண்றது குட்டிமா.. இப்டிலாம் பண்ணலனா உன் அக்கா என் பேச்சை கேட்க மாட்டாளே”

பாரதி”யது அக்கா கண்டிப்பா ஹாஸ்டல் போனுமா அக்கா?”

திவி”நீயும் புரியாம பேசாதா டா.. ரெண்டு வருஷம்.. கண் இமைக்குற நொடி ல போயிடும். அங்க போய் இவ படிச்சா நல்ல எதிர்காலம் இருக்கு. அது மட்டும் இல்ல, தனியா சமாளிக்கவும் கத்துக்கணும்ல டா”

பாரதி”அப்போ நீங்களும் போலாம்ல கா?”

திவி”டேய்.. நாமலாம் மிடில் கிளாஸ் குடும்பம் டா. நம்ம நாலு பேர படிக்க வைக்கவே அப்பாவும் அம்மாவும் எவ்ளோ கஷ்டப்படுறாங்க. இதுல நானும் போய்ட்டா.? காசு வேணும்ல டா.. அதுவும் இல்லாம அவ அங்க ஒன்னும் தனியாலாம் இருக்க மாட்டா.. மீனாவும் இருப்பா.. ரெண்டு வருஷம் தான”

பாரதி”அப்போ யது அக்கா போக மட்டும் செலவு ஆகாத?”

திவி”இது வரை அக்கா எவ்ளோ காம்படிசன் போய் இருக்கேன்ல, பாரதியும் ஆம் என்று தலைஅசைக்க, “மொத்தம் பரிசு தொகை, அப்ரோம் நான் சேத்து வச்சதுன்னு என்கிட்ட 50,000 இருக்குடா.. அப்பா மேல பணம் போட்டு தான் அவள அங்க அனுப்புறோம்” என்றாள்.

பாரதியும் தன் அக்கா எதற்கு தன்னை போட்டியில் கலந்து கொள்ள சொன்னார் என்று புரிய, திவி”எப்போவும் அப்பா அம்மாக்கு நாம கஷ்டத்தை குடுக்க கூடாது டா.. அதான் நீங்க எவ்ளோ அடம்பண்ணியும் உங்கள ப்ரைவேட்ல சேத்தாமா கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல சேக்க சொன்னேன். நிறைய சாதனையாளர்கள் எல்லாரும் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல தான் படிச்சாங்க” என்றிட,

பாரதி”சாரி அக்கா.. எதுவும் புரியாம நாங்க ரொம்ப அடம்பண்ணிட்டோம்ல?”

திவி”அப்டிலாம் இல்ல குட்டிமா.. “என்று விட்டு,”இங்க நடந்ததை..” என்று இழுக்க,

பாரதி”கண்டிப்பா நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்”

திவி”தட்ஸ் மை கேள்” என்று விட்டு இருவரும் உறங்க சென்றனர்.

மூன்று நாட்கள் திவி இரவு யாருக்கும் தெறியாமல் உண்டு கொண்டு யதுவிடம் பேசாமல் இருக்க, யதுவும் ஒரு வழியாய் சென்னை செல்ல ஒப்புக்கொண்டாள்.

யது”திவி பேசு டி.. நான் சென்னை போறேன்” என்க,

திவி”நிஜமாவா யது.?”

யது”ம்ம் ஆமா.. ஆனா ஒன் கண்டிஷன்?” திவி கேள்வியாய் பார்க்க, “ரெண்டு வருஷம் முன்னாடி சொன்னல ஆதியை பத்தி வீட்ல சொல்ல வேண்டாம்னு சொன்னல அதுக்கு என்ன காரணம்.?”

திவி யோசித்து விட்டு”அதுக்கு முன்னாடி நான் கேக்குற கேள்விக்கு நீ பதில் சொல்லு யது” என்றாள்.

யது”ம்ம் கேளு திவி”

திவி”அன்னைக்கு மாமா உன்கிட்ட என்ன சொன்னாரு.?” என்று கேட்க,

யது”அ..அது…அவர் ஒன்னுமே சொல்லல திவி.. நான் தான் அவரை பாத்தேன் அவர் என்ன பாக்கலன்னு அன்னைக்கே சொன்னேன்ல”

திவி”பொய் சொல்லாம என்கிட்ட சொல்லு யது”

யது”ஒன்னும் இல்ல திவி”

திவி”நான் சொல்லவா?”

யது அவளை கலவர முகத்துடன் பார்க்க,

திவி”அன்னைக்கு மாமா என்ன சொன்னருன்னு எனக்கு தெரியும் யது.. நான் அங்கே தான் இருந்தேன்.” என்றாள்.

யது அவளை அணைத்து கொண்டு “உன்கிட்ட சொன்னா அது பெரிய பிரச்சனை ஆகிடும், திவி. அதான் சொல்லல”

திவி”என்கிட்ட மறைக்குற அளவுக்கு நான் உனக்கு வேண்டாதவளா போய்ட்டேன்ல யது.?”

யது”அப்டிலாம் இல்ல டி.. ஏன் நீ இப்டிலாம் பேசுற.?”

திவி”இப்போவாவது மறைக்காம சொல்லு யது” என்று அவளிடம் கூற,

யது”அவருக்கு ஆதி எங்க இருக்காருன்னு தெரியும். ஆனா தப்பா தெரிஞ்சு வச்சி இருக்காரு. ஆதி நம்ம கூட இருக்குறதா அவர் நினைச்சிக்கிட்டு இருக்காரு. நாம எல்லாரும் அவங்க சொத்துக்காக தான் இப்டி பண்றோம்னு சொன்னாரு. அப்ரோம் அப்ரோம்” என்று அழுக,

திவி”அப்ரோம் நீ அனாதைனு சொன்னாரா யது” என்றாள் அழுது கொண்டே..

யது “ம்ம் ஆமா திவி.. நான் அநாதயாம். அப்பா எங்க இருந்தோ என்ன தூக்கிட்டு வந்தாராம்” என்று அழுக,

திவி”இதை நீ நம்புரியா.? யது?”

யது”சத்தியமா இல்ல திவி.. அப்டியே இருந்தாலும் அதுக்காக நான் வருத்தபட மாட்டேன். எந்த அப்பா அம்மாவும் இவ்ளோ தூரம் நல்லா பாத்துபாங்களா.. அத விட உன்னை மாதிரி ஒருத்தி அக்காவாவும் பெஸ்ட் பிரண்ட்டாவும் எனக்கு கிடச்சி இருப்பாங்களா? அழகான ரெண்டு தங்கச்சிங்க.. இதை விட என்ன வேணும் திவி. இந்த உலகத்திலேயே நான் தான் ரொம்ப குடுத்து வச்சவ”

திவி”அப்போ நீ அவர் சொன்னதை நம்புற தான.?”

யது ஆம் என்பது போல் தலையசைக்க, திவி இல்லை என்று தலையசைத்து “அவர் நம்மள பிரிக்க பொய் சொல்லி இருக்காரு டி. நீ அதை நம்பாத யது..” என்று கூற,

யது “நிஜமா இல்ல தான திவி” என்று சிறு பிள்ளை போல் கேட்டவளிடம் என்ன சொல்வது என்று புரியவில்லை திவிக்கு.

திவி”இப்போ புரியுதா.. நான் ஏன் ஆதிய பத்தி வீட்ல சொல்ல வேண்டாம்னு சொன்னேன்னு?”

யது”ம்ம் புரியுது.. என் திவி எது செஞ்சாலும் காரணம் இருக்கும்” என்று மீண்டும் அவளை அணைத்து கொண்டாள்.

திவி”கரெக்ட்.. அதே மாதிரி தான். நீ சென்னைக்கு போன்னு நான் சொல்றதுலயும் காரணம் இருக்கும் புரியுதா யது”

யது”ம்ம் புரியுது திவி.. நான் போய்ட்டு நல்லா படிச்சு வரேன்”

திவி”தட்ஸ் மை கேள்” என்று அவளை அணைத்து கொண்டாள்.

இரண்டு நாட்களில் யதுவை அவள் தந்தை சென்னை பள்ளியில் சேர்த்து விட, இங்கு திவ்யா இது வரை அடக்கி வைத்து இருந்த அழுகையை ஒரே இரவில் அழுது கரைத்தாள். 

இவ்வாறு இரண்டு வருடங்கள் செல்ல, ஆதியை பற்றி அனைத்து விவரமும் சக்தியின் மூலம் அறிந்து கொண்டால் திவி.

பன்னிரண்டாவது முடிக்கும் தருவாயில் யது திவியின் செல்பேசி உரையாடல்,

யது”ஹாலோ திவி.!”

திவி”யது.. எப்டி டி இருக்க?”

யது”ம்ம் நல்லா இருக்கேன்டி. நீ எப்டி இருக்க.? அம்மா அப்பா பாப்பாலாம் எப்டி இருக்காங்க.?”

திவி”எல்லாரும் சூப்பர் டி. எக்ஸாம் எப்டி எழுதின?”

யது”ம்ம் நல்லா எழுதி இருக்கேன் டி. எப்டியும் நல்ல மார்க் வரும்”

திவி”சூப்பர் யது.. அப்டியே அங்க எல்.எல்.பி க்கு அப்ளை பண்ணிடு. அங்கேயே டிகிரி முடி டி”

யது அதிர்ந்து”என்னது.. கொன்னுடுவேன் உன்ன.. டிகிரி நாம ஒண்ணா தான் பண்ண போறோம். நான் இங்களாம் பண்ண மாட்டேன்” என்று கதற,

திவி”சரி சரி.. நீ வா.. பாத்துக்கலாம்” என்றாள்.

யது”ம்ம் சரி திவி. டைம் பினிஸ்.. நாளைக்கு கால் பன்றேன்”

திவி”ம்ம் சரி டி”

இது தான் நான் அவகிட்ட கடைசியா பேசுனது.

ரவீ “அப்ரோம் யதுக்கு என்ன ஆச்சு திவ்யா.?” ரவீயும் அதே கேள்வியை தன் முகத்தில் தாங்கி கேட்க,

திவி”ஒரு வருஷம் முன்னாடி அவ இறந்துட்டா” என்றாள் இறுகிய முகத்துடன்.

ரவீ”எப்டி திவி.?”

திவி”அவ.. அவ.. சூசைட் பண்ணிக்கிட்டா ரவீ.. “

ரவீ “ஏன் எதனால.?”

திவி”அது மீனாவுக்கு மட்டும் தான் தெரியும் “

ரவீ”ஆனா.. அவளும் இப்போ உயிரோட இல்ல தான திவி”

திவி ஆம் என்பது போல் தலையசைத்தாள். “ஒரு வருஷம் முன்னாடி  அவகிட்ட இருந்து லெட்டர் தான் வந்துச்சு. சென்னையிலயே எல்.எல்.பி பண்றதா சொல்லி இருந்தா. நானும் இங்க ஆதிய பத்தின பிரச்சனைல பெருசா எடுத்துக்கல. அவ இறந்த அடுத்த நாள் மீனாவும் சூசைட் பண்ணிக்கிட்டதா நியூஸ் வந்தது. எனக்கு என் மேல தான் கோவம். அவள அனுப்பாம இருந்து இருந்தா இந்நேரம் என் யது என்ன விட்டு போய் இருக்க மாட்டால” என்று விம்மி அழுது கொண்டு இருந்தவளை  ரவீ தான் சமாதானம் படுத்தினாள்.

ரவீ “திவ்யா.. இப்போ ஆதிக்கு நீ என்ன பதில் சொல்ல போற.?”

திவி”ஆதி என்ன யதுன்னு நினச்சு தானே லவ் பண்றதா சுவிச்வேசன் சொன்னான். யதுவும் ஆதிய லவ் பண்ணா.. இப்போ நான் யது இல்லன்னு தெரிஞ்சா அவன் கண்டிப்பா என்ன வெறுத்துடுவான் தான.. அதான் நானே வேண்டாம்னு கவிதை மூலமா சொன்னேன்.”

ரவீ”அவன் வார்த்தையால நேர்ல சொன்னா என்ன சொல்லுவ திவி?”

திவி”அப்பவும் இதே பதில் தான் ரவீ”

ரவீ “அப்போ உன்னோட காதல் திவி?”

திவி தான் கூறியதிலேயே தன்னுடைய காதலை அறிந்து கொண்ட ரவீயை எண்ணி திவிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. ஆனால் முகத்தில் ஒரு வெற்று புன்னகையை சிந்தியவள்”சொல்லாத காதல்.. இருந்தா என்ன இல்லன்னா என்ன டி” என்று விட்டு, “நேரம் ஆயிடுச்சு கிளம்பலாம்” என்று கூறினாள்.

இவள் கூறாமலேயே இந்த விஷயம் ஆதியை அடையும் என்பது இவள் அறியாத ஒன்று.

கனவு தொடரும்..🌺🌺🌺🌺

உங்க கமண்ட்ஸ் ரொம்ப முக்கியம்.. கதை எப்படி இருக்கு.. எப்படி போகுதுன்னு சொல்லுங்க..

நன்றி.. 💜

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்