
காதல் – 48
அஸ்வதி மற்றும் விஹான் ஒருவரை விட்டு ஒருவர் பிரியும் சமயம் வந்தது , இருவருக்கும் அதை நினைத்து ஆயிரமாயிரம் கஷ்டங்கள் மனதில் இருந்தாலும் அந்த கஷ்டங்களை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சந்தோஷமாக இருப்பது போல நடித்தனர்…….
காஷ்மீரில் அஸ்வதியை விஹான் கடைசியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றான்………
அஸ்வி முதல்ல நீ இந்த தெர்மல் இன்னர போட்டுக்கோ அது குளிருல இருந்து உன்ன காப்பாத்தும் அவன் கொடுத்த உள்ளாடையை அறைக்கு சென்று மாற்றி வந்தாள் பிறகு அவன் இரு கனமான ஸ்வெட்டரை போட்டுக்கொள்ள அவளுக்கு கொடுத்தான்…..
அங்க ரொம்ப குளிரும் என்று அவன் அவளுக்கு கனமான ஸ்வெட்டரை போட்டு விட்டான்…….
பிறகு சாக்ஸ் மற்றும் சௌகரியமாக அணியக்கூடிய ஷூக்களை அவளுக்கு போட்டு விட்டான்……..
இறுதியாக அவள் தலையில் குளிரை தாங்கக்கூடிய பெரிய குல்லாவை போட்டு விட்டான்……
அவனும் அவள் அணிந்தது போலவே உடைகளை அணிந்து கொண்டு இருவரும் வீட்டில் கூறிவிட்டு அவர்களின் காதல் ஆரம்பித்த காஷ்மீரில் கடைசி பயணத்திற்காக சென்று கொண்டு இருந்தார்கள்…….
விஹான் மற்றும் அஸ்வதியின் ஜீப் அவர்களின் வீட்டை விட்டு கிளம்பி சென்றது……..
“நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில்
தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே
தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே
உன்னை சேரட்டும்”
என்று அவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக செல்லும் வேளையில் அவர்களின் காதலுக்கு ஏற்பப் பாடல் ஒலித்தது…….
அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து சிரித்து பேசி கொண்டே ஜீப்பில் சென்று கொண்டிருந்தார்கள்……
ஶ்ரீநகரில் இருந்து அவர்கள் பண்டிபொரா செல்லும் வழியில் வூலர் ஏரி இருந்தது……
இந்த வூலர் ஏரி ஆசியாவின் மிகப்பெரிய நீர் ஏரிகளில் ஒன்றாகும், பண்டிபோரா அருகே உள்ளது , வூலர் ஏரியை மேலிருந்து பார்க்கும் அழகான வியூ பாயிண்ட் அது இயற்கை காட்சிகளுக்கு சிறப்பு இடமாக இருந்தது …….
நீல நிறத்தில் நீர் மற்றும் மீன் பிடி படகுகள், பறவைகள் , மலையில் சூழ்ந்த பணி மூட்டம் அப்படியே தண்ணீரில் தெரிந்தது ,அந்த இடமே மிகவும் ரம்மியமாக இருந்தது……
அங்கு இருந்த ஒரு சிறிய டீக்கடையில் இருவரும் சற்று நேரம் ஓய்வெடுக்க அமர்ந்தனர்…….
அஸ்வி எதாவது சாப்பிடுறயாம்மா?
காவா டீ குடிக்கலாம் …..
தன் காதலி கேட்டதை அவளுக்கு வாங்கி கொடுத்து விட்டு இருவரும் அந்த இயற்கை காட்சிகளை ரசித்தப்படி டீ குடித்து கொண்டு இருந்தார்கள்……
அஸ்வி நம்ம எங்க போறோம்ன்னு கேக்க மாட்டியா?
நீங்க என்ன எங்க கூட்டி போனாலும் எனக்கு ஓகே தான், உங்க கூட எங்க போனாலும் எனக்கு ஹாப்பிதான் என்று அவள் அவனின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்……
இப்போ உன்ன நா ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போக போறேன் அங்க போயிட்டு உன்னோட ரியாக்ஷன நா பாக்கனும்…..
பில்ட் அப் எல்லாம் பலமா இருக்கே, வாங்க போவோம் என்று இருவரும் அவர்களின் பயணத்தை ஆரம்பித்தனர்……
அந்த வூலர் ஏரியை கடந்து இருவரும் அடுத்ததாக பண்டிபோராவிற்கும் வூலர் ஏரிக்கும் அருகில் அமைந்த, மலைச்சரிவுகள், குளிர்ந்த ஆறு மற்றும் மலையின் அற்புதமாக காட்சிகளுக்கு பிரபலமான இடத்தை கடந்து சென்றனர்…….
அங்கு இருந்த பனிமலைகளையும் பணிகள் மூடிய மரங்களையும் அஸ்வதி ரசித்துக் கொண்டே வந்தாள்…….
அடுத்ததாக அவர்கள் ராஸ்டன் பாஸ் செல்லும் வழிக்கு சென்றனர்…..
அந்த பாசிற்க்கு செல்லும் வழியில் அத்வட்டூ கான்சல்வான் ரோட் ஆரம்பித்தது ,பாதைகள் சற்று செங்குத்தாக மலைகள் மேலே ஏற தொடங்கியது…..
அடர்த்தியான கானிபர் மரங்களும் , பறவை சத்தங்களும், பைன் மரங்களில் உள்ள பைன் பழங்களின் புத்துனர்சியான வாசமும், ஹேர்பின் வளைவுகளும், ஒவ்வொரு வளைவுகளும் ஒவ்வொரு தனித்துவமான கோனத்தில் அழகாக இருந்தது……..
அந்த இடத்தில் ஆப்பிள் மரங்களும் வால்நட் மரங்களும் நிறைய இருந்தது…..
கிருஷ்ணகங்கா ஏரியின் அருமையாக காட்சிகளை அஸ்வதி ரசித்து கொண்டே வந்தாள்……
அடுத்ததாக அவர்களின் கார் கான்சல்வான் ரோட்டின் மெயின் இடத்திற்கு சென்றது……
ஆர்மி செக் பாயின்ட்டிற்கு இருவரும் சென்றனர்……
ஆர்மி போலீஸ் அவர்கள் இருவரின் ஆதார் அட்டை மற்றும் ஜீப்பின் உரிமம் மற்றும் ஆவணங்களை சரி பார்த்து விட்டு அவர்களை அனுப்பினார்கள்….
விஹான் இங்க ஏன் இவ்வளவு செக்கிங்?
இது காஷ்மீர் – பாகிஸ்தான் பார்டர் அதனால செக்கிங் கொஞ்சம் அதிகமா இருக்கும்…….
அகலமான பள்ளத்தாக்கு ,வேகமாக பாயும் கிருஷ்ன கங்கா ஆறு , மரத்தால் ஆன பாலங்கள் , பணியால் மேற்கூரை மூடப்பட்ட ஆர்மி கேம்ப்கள் என்று அந்த இடம் சற்று பரபரப்பாகவும் , அந்த இயற்க்கை காட்சிகள் கண்களுக்கு விருந்தாகவும் இருந்தது……
ஏழு மணி நேர பயணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் குரேஸ் பள்ளத்தாக்கை அடைந்தனர் அங்கிருந்து பார்த்தால் ஒட்டுமொத்த காஷ்மீரும் பணியில் சூழ்ந்தது போல வெள்ளை வெளேரென்று அழகாக இருந்தது……..
அந்த இடமே முழுக்க முழுக்க பணிகள் போர்த்திய போர்வை போல அழகாக இருந்தது……
நகரத்தின் ஒலிமயமான வாழ்க்கையில் இருந்து சற்று அமைதியான மற்றும் காற்று மாசு இல்லாத இடத்தை தேடுவோருக்கு இந்த குரேஸ் பள்ளத்தாக்கு அருமையான தேர்வு……
விஹான் இது எந்த இடம் இவ்வளோ அழகா இருக்கு???
இதான் குரேஸ் வேலி ( குரேஸ் பள்ளத்தாக்கு) , இந்த இடம் உலகத்துலருந்து துண்டிக்கப்பட்ட சொர்க்கம்ன்னு சொல்லுவாங்க …..
உண்மை தான் விஹான் இந்த இடமே சொர்க்கம் போலதான் இருக்கு…..
இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு நா டென்ட் போடுறேன் என்று அவன் கொண்டு வந்த டெண்டை போட்டு விட்டு,சிறிது நெருப்பு முட்டி இருவரும் ஒரு போர்வைக்குள் அமர்ந்தபடி அந்த இயற்க்கை காட்சிகளை ரசித்து கொண்டு இருந்தார்கள்……..
விஹான் …….
சொல்லும்மா …..
நம்ம ரெண்டு பேரும் இப்படி இங்கேயே தங்கிடுவோமா?
அவள் அவ்வாறு கேட்கவும் விஹான் சிரித்து விட்டான்……
என்ன சிரிக்குறீங்க?
இந்த இடத்துக்கு நம்ம வரதுக்கு எவ்வளோ செக்கிங் தாண்டி வந்தோம்ன்னு நியாபகம் இருக்கா?
ஆமா நியாபகம் இருக்கே…..
நம்ம நாளைக்கு ஆறு மணிக்குள்ள கீழ போயி ஆகனும் இல்லன்னா நம்மள தீவிரவாதின்னு உள்ள பிடிச்சி போட்டுருவாங்க……
அட கடவுளே அப்போ நம்ம வேற எங்கயாவது போயிடலாம்…..
இன்னும் கொஞ்ச நேரம் பொறுடா, நீ இதுவரை பாக்காத ஒன்ன உனக்கு நா காட்டுறேன் என்று அவன் அவளை இறுக்கமாக அனைத்து கொண்டு வானத்தை பார்த்து கொண்டு இருந்தான்……
விஹான் அஸ்வதியை பார்க்க அவளும் தன் காதலனை பார்க்க அங்கே ஒரு மோன காவியம் நிகழ்ந்தது…..
“ஒரு வேழம்
நாகம் ஒன்றை
வீழ்த்த பார்க்கையில்
ஒரு தாளம் பூத்தது
மறண்டதாம் சகி
அந்த வேழம் நோக்கி
இங்கு தாளை நோக்கிட
ஒரு மோன காவியம் பிறக்க
இது அந்தி பாகமா
இது அந்தி பாகமா
யுக நீள கானமா
ஒரு நொடி நேர யோகமா சகி”…….
என்று விஹான்னின் கையடக்க ரேடியோவில் இருவருக்கும் ஏற்ற வகையில் பாடல் ஒலித்தது…..
அஸ்வி அங்க மேல பாரு……
விஹான் இது…..
இது…..
மில்கி வே கேலக்ஸி தான?
வாவ்…..
என்னங்க…..
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு என்று அவள் அந்த பால் வெளி மண்டலத்தை பார்த்து சந்தோஷத்தில் விஹானை கட்டி பிடித்து கொண்டு குதித்து கொண்டு இருந்தாள்…..
வானம் முழுவதும் கருப்பாக இருந்தது, வானிற்கு நடுவில் பால் ஊற்றியது போல ஒரு நீளமான வெள்ளை மேகம் இருக்க, அந்த மேகம் வானத்தின் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் வரை விரிந்து காணப்பட்டது அதற்குள் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள், சில இடங்களில் மிகவும் ஒளிமயமாக இருந்தது அதே வேளையில் சில இடங்களில் அடர் கருப்பு நிற மேகங்களும் தென்பட்டது……
விஹான் என்னால நம்பவே முடியல மில்கி வே கேலக்ஸிய நா என்னோட வெறும் கண்ணால பாக்குறேன் என்று அவள் ஆச்சரியத்தில் குதித்துக் கொண்டிருந்தாள்……
அஸ்வதி நம்ம இந்தியாவுல இந்த மில்க்கி வே கேலக்ஸி மொத்தமா ஏழு இடத்துல தெரியும் அதுல இந்த குரேஸ் வேலி மூணாவது இடத்துல இருக்குது…..
இந்த இடமே மூணாவது இடத்துல இருக்குது அப்படின்னா முதல் இரண்டு இடம் என்னது?
ஃபர்ஸ்ட் லடாக்ல உள்ள ஹான்லே கிராமம் இங்க தான் இந்தியாவோட மிக முக்கியமான ஆஸ்ட்ரோனோமிக்கல் அப்சர்வேடரி (Astronomical observatory) இருக்கு அண்ட் அங்க இந்தியாவோட முதல் “இருண்ட வானப் பூங்கா” (Dark Sky Reserve) இருக்கு. அங்க தெளிவான வானமும், கோடிக்கணக்கான நட்சத்திரங்களும், பால்வெளி மண்டலமும் (Milky Way) கண்களுக்கு விருந்தா இருக்கும் ……
அடுத்து ரெண்டாவதா இருக்குறது ஹிமாச்சல பிரதேசத்துல உள்ள ஸ்பிட்டி பள்ளத்தாக்கு இங்கேயும் மில்கி வே கேலக்ஸி வெறும் கண்ணுக்கு சூப்பரா தெரியும்……
அடுத்து மூணாவதா இருக்கிறது இப்ப நம்ம இருக்கிற குரேஸ் வேலி…..
அடுத்து நாலாவதா இருக்குறது உத்தரகாண்ட்ல உள்ள முன்சியாரி,சோப்டா, கேதார்காந்தாவுல அடிப்பகுதியில மில்கி வே கேலக்ஸி சூப்பரா தெரியும்…..
அடுத்து அஞ்சாவது ராஜஸ்தான்ல உள்ள ஜெய்சல்மேர் பாலைவனத்துலயும் மில்கி வே கேலக்ஸி சூப்பரா தெரியும்…..
அப்புறம் ஆறாவது வெஸ்ட் பெங்கால்ல உள்ள சண்டக்பூல இமயமலையோட பிரம்மாண்டத்தையும் பால்வெளி மண்டலத்தையும் (Milky Way galaxy) ஒரே இடத்தில காணக் கிடைக்கும் ஒரு அபூர்வ இடம்……
அடுத்து ஏழாவது அந்தமான் தீவுல, குறிப்பா ஹேவ்லாக் (Havelock) அண்ட் நீல் (Neil) தீவுகள்ல, கடற்கரையோரம் உக்கார்ந்து பால்வெளி மண்டலத்தைப் (Milky way galaxy) பாக்குறது அழகா இருக்கும்…….
விஹான் நீங்க சொன்ன இடத்துக்கு எல்லாம் நம்ம ஒருநாள் போவோம்…..
கண்டிப்பா உன்ன எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போறேன் என்று விஹான் அஸ்வதி நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்……
இருவரும் நீண்ட நேரம் அந்தப் பால் வெளி மண்டலத்தை ரசித்து கொண்டு இருந்தார்கள்…..
அந்த நட்சத்திரங்களின் ஒளியில் தெரியும் தன் காதலியின் முகத்தை விஹான் ரசித்துக் கொண்டிருந்தான்…..
அஸ்வதி விஹானின் தோள்களில் சாய்ந்து கொண்டு அவன் முகத்தையே பார்த்துக் ரசித்து கொண்டிருந்தாள்……
காதல் பொழுதுகள் முடியும் சமயத்தில் தான் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்……
அந்த தோன்றல் தான் இருவருக்கும்….
தொடரும்…….
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……..
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️
