Loading

காதல் – 47

 

அஸ்வதி தன் காதலனை விட்டு பிரியும் நேரம் வந்துவிட்டது , அதனால் அவர்கள் அனைவரும் மிகவும் சோகமாக இருந்தனர்……

 

அஸ்வதி ஊருக்கு செல்கிறாள் என்று அறிந்த ஹர்ஷத் விஹானையும்  அஸ்வதியையும் தன் வீட்டிற்கு அழைத்தான் அவன் வீட்டில் அவர்கள் இருவரையும் ஹர்ஷத்தின் தாயார் நன்றாக கவனித்துக் கொண்டார்…….

 

அவர்கள் இருவருக்கும் உணவு சமைத்துக் கொடுத்து அவர்கள் அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது ஹர்ஷத் அவன் வீட்டை அஸ்வதிக்கு சுற்றிக் காட்டினான் அப்பொழுது அஸ்வதி சிறுவயதில் அவளது ஆசிரம நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அங்கு இருப்பதை பார்த்த அஸ்வதி அதிர்ச்சியாகி நின்றாள்…….

 

என்னாச்சு தங்கச்சி ஏன் அங்கேயே நின்னுட்ட?

 

விஹான்…….

 

என்னம்மா ஆச்சு?

 

விஹான் இந்த போட்டோ உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

 

ஆமா இது நீ அன்னைக்கு போன்ல காட்டுன உன்னோட ஆசிரமத்துல உள்ள பிரெண்ட்ஸ் கூட எடுத்த சின்ன வயசு போட்டோ தானே அது எப்படி இங்க வந்துச்சு?

 

அதான் எனக்கும் புரியல விஹான்…..

 

டேய் ஹர்ஷத் இந்த போட்டோ எப்படி உன்கிட்ட?

 

இந்த போட்டோ சின்ன வயசுல என்னோட பிரெண்ட்ஸ் கூட நான் எடுத்தது……

 

இந்த போட்டோல இருக்கறவங்க எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா?

 

நல்லாவே ஞாபகம் இருக்குதே…..

 

எங்க எல்லாரோட பேரையும் சொல்லு பாப்போம்………

 

இவன் பேரு மதன் , அப்புறம் இவன் பேரு சூர்யா, இவன் பக்கத்துல உக்காந்துட்டு இருக்குறது தான் நா , அப்பறம் இவ பேரு அஸ்வா ,அப்புறம் இவ பேரு வள்ளி அப்புறம் இவ பேரு  துவாயி , அண்ட் இங்க லெப்ட் சைடுல உக்காந்துட்டு இருக்குறாங்கல்ல இவங்க பேரு அக்னஸ் சிஸ்டர் அண்ட் ரைட் சைடு உக்காந்துட்டு இருக்கிறவங்க பேரு மரியா சிஸ்டர் ,அப்புறம் இந்த மஞ்சள் புடவை கட்டிட்டு இருக்கிறவங்க பேரு வாணி அம்மா , அப்புறம் இந்த போலீஸ் விஜய் அப்பா…….

 

ஹர்ஷத் நீ ஆசிரமத்துல வளர்ந்த பையனா?

 

ஆமாடா அதுக்கு என்ன இப்போ?          ஏன் இவ்ளோ கேள்வி கேக்குற?

 

உனக்கு தான் அம்மா அப்பா இருக்காங்களே, அப்புறம் ஏன் நீ  ஆசிரமத்துல வளந்த?

 

என்னோட பெத்த அம்மா அப்பா இவங்க கிடையாது என்ன தத்து எடுத்து வளத்த அம்மா அப்பா தான் இவங்க……

 

ஆனா அப்படி தெரியவே இல்லையேடா உன்ன ரொம்ப செல்லமா பாத்துக்கிட்டாங்க…….

 

அதான் என்ன இவங்க ரெண்டு பேரும் வளர்த்த வளர்ப்புல நா இதுவரைக்கும் ஆசிரமத்தில் இருந்து வந்தவன் அப்படிங்குற நினைப்பே எனக்கு மறந்து போச்சு அதான் இத்தன நாளா உங்கிட்ட கூட நா சொல்லல , ஆமா இப்போ ஏன் நீ இத கேக்குற?

 

உன் பக்கத்துல உக்காந்துட்டு இருக்குற பொன்னு தான் இப்போ என் பக்கத்துல நின்னுட்டு இருக்குற பொண்ணு என்று விஹான் சிரித்துக் கொண்டே கூறினான்……..

 

என்னடா சொல்லுற??

 

ஆமாடா உன்னோட சின்ன வயசு ப்ரெண்ட் அஸ்வா தான் இப்போ என் பக்கத்துல நின்னுட்டு இருக்குற என்னோட காதலி அஸ்வதி……

 

அஸ்வா நீயா???

 

ஹர்ஷா …….

 

இருவருக்கும் வார்த்தைகள் வரவில்லை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அழுதனர்……..

 

ஹர்ஷா நா  நம்ம ஆசிரமத்தையும் நம்ம பிரண்ட்ஸையும் எங்க எல்லாம் தேடுனன் தெரியுமா ? அன்னைக்கி ஆக்னஸ் சிஸ்டரையும் மரியா சிஸ்டரையும் பார்த்தேன் அவங்க தான் உன்ன ஒரு முஸ்லிம் பேரன்ட்ன்ஸ் கிட்ட தத்து கொடுத்ததா சொன்னாங்க…….

 

என்னது ஆக்னஸ் சிஸ்டரயும் மரியா சிஸ்டரையும் பாத்தியா?

 

ஆமாவென்று  மிலாடி நபி அன்று  ஆசிரமத்தில் வைத்து அவர்கள் இருவரையும் சந்தித்தது பற்றி ஹர்ஷத்திடம் கூறிக் கொண்டிருந்தாள் அஸ்வதி…….

 

அஸ்வதி நானும் இவ்வளவு நாளா நம்ம ஆசிரமத்தையும்  நம்ம ஆஷ்ரமத்து பிரண்ட்ஸயும் தேடாத இடம் கிடையாது சென்னையில எல்லா இடத்துலயும் தேடி பார்த்தேன்என்னோட அம்மா அப்பா கிட்ட கேட்டு கேட்டு  அந்த இடத்துக்கு போய் பார்த்தா அங்க வேற ஏதோ ஒரு பில்டிங் இருக்குது அதுக்கு அப்புறம் என்ன பண்றதுனே தெரியல அஸ்வதி…..

 

நானும் ரொம்ப சின்ன வயசுல தேவா அப்பா வீட்டுக்கு வந்துட்டேன், அதனால எனக்கும் நம்ம ஆசிரமம் எங்க இருக்குன்னு தெரியல, அன்னைக்கு ஆக்னஸ் சிஸ்டர் கிட்ட விஜய் அப்பா நம்பர் வாங்கிட்டு வந்தேன் விஜய் அப்பா கிட்ட நம்ம பேசலாம் என்று அவள் அவருக்கு போன் செய்தாள்……

 

அஸ்வதியும்  ஹர்ஷத்தும் ஒரு தைரியத்தில் விஜய் அப்பாவிற்கு போன் செய்து விட்டனர் ஆனால் போனில் போகும் ஒவ்வொரு ரிங்கிற்கும் இருவரின் இதயத் துடிப்பும் எகிறியது……..

 

முழு ரிங் சென்று கால் கட் ஆனது…..

 

ஹர்ஷா ஒருவேளை விஜய் அப்பா போன் நம்பர மாத்திருப்பாங்களோ?

 

எனக்கும் அப்படித்தான் தோணுது அஸ்வா என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது விஜய் அப்பாவின் நம்பரில் இருந்து அவர்களுக்கு அழைப்பு வந்தது இருவரும் அவரிடம் நீண்ட நாட்களுக்கு பிறகு பேச பயந்து போய் போனை விஹானிடம் கொடுத்து விட்டனர்……

 

ஹலோ…..

 

ஹலோ நீங்க விஜய் சார் தானே ?

 

ஆமா நா விஜய் தான் பேசுறேன் சொல்லுங்க, யாரு நீங்க ?                         என்ன வேனும்?

 

சார் என் பேரு விஹான் நா காஷ்மீரில் இருந்து பேசுறேன்……

 

சரி சார் , எதுக்கு கால் பண்ணீங்க?    என்ன மேட்டர்?

 

சார் நீங்க போலீஸா இருக்குற சமயத்துல உங்க வீட்டு பக்கத்துல இருக்கிற ஆசிரமத்துக்கு அடிக்கடி போவீங்கல்ள?

 

ஆமா போவேன், அதுக்கு என்ன இப்போ?

 

சார் உங்களுக்கு அந்த ஆசிரமத்தில உள்ள அஸ்வதி, ஹர்ஷா நியாபாகம் இருக்கா?

 

நியாபகம் இருக்கே……

 

அவங்க என் பக்கத்துல தான் இருக்காங்க பேசுறீங்களா சார்?

 

போன அவங்ககிட்ட குடுங்க சார் , என்னோட குழந்தைங்க இன்னும் என்ன  நியாபகம் வச்சி பேசுறாங்களே என்று அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி……

 

முதலில் அஸ்வதிதான் பேசினாள்…..

 

ஹலோ விஜய் அப்பா எப்படி இருக்கிறீங்க? நல்லா இருக்கீங்களா?

 

நா ரொம்ப நல்லா இருக்கேன்டா தங்கம் நீ எப்படி இருக்குற? ஆமா முன்னாடி பேசுனா அந்த பையன் விஹான் யாரு?

 

அப்பா விஹான் என்ன கல்யாணம் பண்ணிக்க போற பையன்…..

 

அட அதுக்குள்ள என்னோட செல்ல குழந்தை அஸ்வதிக்கு கல்யாணம் பண்ற வயசு வந்துடுச்சா !!!!                              ரொம்ப சந்தோஷம்டா கண்ணா இப்ப என்ன பண்ணிட்டு இருக்குற ? காஷ்மீர்லயே செட்டில் ஆயிட்டியா?

 

நா இப்போ சென்னையில உள்ள கவர்ன்மென்ட் காலேஜ்ல ப்ரொபசரா இருக்கேன்ப்பா, இப்போ செமஸ்டர் லீவுப்பா எனக்கு அதனால என்ன தேவா அப்பா அவங்க குடும்பத்தோட காஷ்மீர் கூட்டிட்டு வந்தாங்க அங்க தான் நா என்னோட விஹான பார்த்தேன் ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்சு போயிருச்சு ரெண்டு பேரும் காதலிக்கிறோம் இப்ப ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறோம்ப்பா……

 

நீ சொல்றத கேட்டு ரொம்ப சந்தோஷமா இருக்குடா கண்ணா, ஆமா என்னோட நம்பர் உனக்கு எப்படிடா கிடைச்சது?

 

அவர் அவ்வாறு கேட்கவும் அன்று காஷ்மீருக்கு ஆக்னஸ் சிஸ்டர் மற்றும் மரியா சிஸ்டர் வந்தது அவர்களிடம் பேசியது அவர்களிடம் விஜய் அப்பாவின் நம்பர் வாங்கியது என அனைத்தும் அஸ்வதி அவரிடம் கூறினாள்……

 

சரிடா கண்ணா , ஆமா விஹான் ஹர்ஷா பக்கத்துல இருக்குறான்னு  சொன்னாங்க ஆனா அந்த ராஸ்கல் சத்தமே கானும் …….

 

இங்க என்னோட பக்கத்துல தான் உக்காந்துட்டு இருக்கான்பா, அவன் கிட்ட போன குடுக்கிறேன் பேசுங்க என்று அஸ்வதி  ஹர்ஷாவின் காதுகளில் போனை வைத்தாள்……

 

ஹலோ …..

ஹலோ…..

அப்பே…..

நானு…..

ஹர்ஷா…..

 

டேய் ராஸ்கல் எப்படி இருக்க?

 

நல்லா இருக்கேன் அப்பே , நீங்க எப்படி இருக்கீங்க? ஊருல மழை தண்ணியெல்லம் எப்படி இருக்கு?

 

ஆமா இவரு பெரிய சென்னை கலெக்டர் ஊருல மழை தண்ணி ஒழுங்கா இல்லன்னா வானத்த பாத்து சரி பண்ணிடுவாரு…..

 

அப்படி இல்ல அப்பே ,அது ….

 

ஆமா நீ எப்படி அஸ்வாவ சந்திச்ச ?நீங்க ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்தே ஒண்ணா இருக்கிறீங்களா?

 

இல்லப்பா அஸ்வதிய  நா இங்க காஷ்மீரில தான் சந்திச்சேன் என்று தன்னுடைய நெருங்கிய நண்பனின் காதலியாக அறிமுகமாகி பின்பு  தன்னுடைய நெருங்கிய தோழியை அடையாளம் கண்டுபிடித்துவிட்டது முதல் எல்லாம் அவரிடம் கூறினான்….

 

ஓஹோ அப்போ உங்க ரெண்டு பேரையும் சந்திக்க வச்சது விஹான் தான் என்ன?

 

ஆமா அப்பா , விஹான் தான் எங்க ரெண்டு பேரையும்  சந்திக்க வச்சான்…..

 

டேய் ஹர்ஷா விஹான் தம்பி கிட்ட போன குடுடா……

 

டேய் விஹான்னு உன்கிட்ட அப்பே பேசனுமாம்……

 

சொல்லுங்க சார்…..

 

சார் எல்லாம் வேணாம்பா தம்பி என்ன நீங்க மாமான்னே கூப்பிடுங்க , அஸ்வதி என்னோட பொண்ணு மாதிரி அவளோட கணவர் எனக்கு மருமகன் அதனால நீங்க என்ன மாமான்னே  கூப்பிடுங்க சரியா…. ஆமா உங்க வீட்ல எத்தனை பேரு நீங்க என்ன பண்றீங்க?

 

நானும் அஸ்வதி மாதிரியே காஷ்மீர்ல கவர்ன்மென்ட் காலேஜ்ல ப்ரொபசரா இருக்குறேன்,  எங்க வீட்ல மொத்தம் நாலு பேரு நானு ,அப்பா ,அம்மா, அப்புறம் ஒரு தங்கச்சி இவ்ளோ தான் என்னோட ஃபேமிலி…..

 

உங்களோட அப்பா என்ன பண்றாங்க தம்பி?

 

என்னோட அப்பா அண்ட் அம்மா டூரிஸ்ட் பிசினஸ்  பண்றாங்க , என்னோட தங்கச்சி  நர்சிங் படிக்கிறா……

 

நல்லது தம்பி உங்க வீட்ல அஸ்வதிய எல்லாருக்கும் புடிச்சிருக்கா?

 

அஸ்வதி எங்க வீட்டோட செல்லக்குட்டி அவள யாருக்காவது புடிக்காம இருக்குமா சார் ?அய்யோ ஸாரி மாமா….

 

விஹான் அவ்வாறு மாற்றி பேசவும் விஜய் அப்பா சிரித்து விட்டார்…….

 

சரி விஹான் அஸ்வதி வீட்ல அஸ்வதி எல்லாரும் நல்லா பார்த்துப்பாங்களா?

 

இல்ல மாமா அஸ்வதி வீட்ல அவள யாருமே நல்லா பாத்துக்க மாட்டாங்க என்று தன் காதலி சிறுவயதில் இருந்து பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் அவரிடம் கூறினான்…..

 

அட கடவுளே என்னோட செல்ல குழந்தை, சின்ன வயசுல இவ்வளோ கஷ்டம் அனுபவிச்சிருக்காளா?ஆமா அஸ்வதிய தத்தெடுத்துட்டு போனவங்க பேரு தேவா தான?

 

ஆமா  மாமா , அப்புறம் நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனுமே……

 

சொல்லுங்க தம்பி என்ன உதவி செய்யணும் உங்களுக்கு?

 

இப்போ உதவி தேவைப்படாது மாமா கொஞ்ச நாள் கழிச்சு தான் நீங்க எனக்கு உதவி செய்ற மாதிரி இருக்கும் அதனால உங்களோட நம்பர  நா அஸ்வதி கிட்ட வாங்கிக்கிறேன்……

 

சரிங்க தம்பி நீங்க எப்ப வேணாலும் எனக்கு போன் பண்ணலாம் சரியா என்னோட குழந்தையை நல்லா பாத்துக்கோங்க , அப்புறம் அந்த ஹர்ஷா ராஸ்கலையும் கொஞ்சம் நல்லா பாத்துக்கோங்க ரொம்ப சேட்டை பிடிச்ச பையன் அவன்…….

 

மாமா ஹர்ஷா அப்படி என்ன சேட்டை பண்ணான்?எதுக்கு அவன நீங்க ராஸ்கல் ராஸ்கல்ன்னு சொல்றீங்க?

 

அவன் என்ன சேட்டை பண்ணலன்னு கேளுங்க தம்பி ….                                       ஊருல உள்ள அவ்வளவு சேட்டையும் அவன் தான் பண்ணுவான் ஒரு தடவை ஆசிரமத்தில இருந்து தப்பிச்சி வெளியே ஓடி போயிட்டான் , நாங்க எல்லாரும் அவன எல்லா இடத்துலயும் தேடு தேடுன்னு தேடிகிட்டு இருக்கிறோம் ஆனா கடைசில அவன் எங்க இருந்தான் தெரியுமா?

 

எங்க இருந்தான் மாமா?

 

ஒரு புரோட்டா கடையில் உட்கார்ந்துட்டு எக்ஸ்ட்ரா ஹாப்பாயில் வேணும் ஆம்லெட் வேணும்னு சண்டை போட்டுட்டு இருக்கான்……

 

அந்த வயசிலேயே ஆம்லெட் , ஆப்பாயில் சாப்பிடுவானா?

 

 

அவன்  எல்லாம் சாப்பிடுவான் தம்பி அப்போ  அவன் கையில ஒரு பைசா காசு கிடையாது அங்க புரோட்டா கடையில உட்கார்ந்துட்டு ரொம்ப  அதிகாரமா பேசிட்டு இருக்குறான் அப்புறம் நாங்க எல்லாரும் போய் அவனை கூப்பிட்டு வந்தோம்……

 

இவன நீங்க ராஸ்கல்ன்னு கூப்பிடுறது ரொம்ப சரிதான் மாமா…..

 

அதான் நா அப்பவே சொன்னேனே மாப்பிள்ள…..

 

இப்ப புரியுது மாமா……

 

சரிங்க மாப்பிள்ளை அடிக்கடி நீங்க பேசுங்க நான் வச்சிடறேன் என்ற அவர் போனை கட் செய்துவிட்டார்……

 

டேய் ஹர்ஷத் அந்த வயசுல நீ அவ்ளோ சேட்டா பண்ணி இருக்க என்ன?

 

கொஞ்சம் லைட்டா……

 

பிறகு ஹர்ஷத்தின் அப்பா வந்துவிட அவரும் இவர்களோடு இணைந்து சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்……

 

பிறகு அஸ்வதி மற்றும் விஹான் தங்கள் வீட்டிற்கு வந்தனர்……

 

அஸ்வதி நாளைக்கு ஒரு நாள் மட்டும் தான் நீ இங்க என்கூட  இருப்ப அதுக்கப்புறம் நீ சென்னை கிளம்பிடுவ அதனால நாளைக்கு கடைசியா உன்ன ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன் என்று  விஹான் கூறவும் அஸ்வதி தன் கைவிரல்களால் அவனின் வாயை மூடினாள்……

 

கடைசியான்னு சொல்லாதீங்க , இங்க காஷ்மீர்ல இப்போ இதுதான் கடைசி , இன்னும் நம்ம உலகத்துல சுத்தி பார்க்க நிறைய இடம் இருக்குது நம்ம உலகம் ஃபுல்லா சுத்த போறோம் அதனால இது கடைசி கிடையாது சரியா என்று அவள் அவனை கட்டி அணைத்துக் கொண்டாள்……

 

விஹான் அஸ்வதியை கட்டி அணைத்து கொண்டு அவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்தான்

 

தொடரும்……

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……..

 

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்