Loading

காதல் – 42

 

அஸ்வதி மற்றும் விஹான் சந்தோஷமாக தங்கள் காதல் உலகில் பயணித்து விட்டு வீட்டிற்கு திரும்பினர்……

 

அன்று இஸ்லாமியர்களின் பெருநாளான மிலாடி நபிக்கு இரு காதலர்களும் அருமையாக ரெடியாகி வந்தனர்….

 

அஸ்வதியை அங்கு அருகில் இருக்கும் ஆசிரமத்திற்கு சித்திக் மற்றும் அவரின் குடும்பத்தினர் அழைத்து சென்றார்கள் …….

 

அங்கு அஸ்வதி வளர்ந்த ஆசிரமத்தில் இருந்த மரியா சிஸ்டர் மற்றும் ஆக்னஸ் சிஸ்டர் இருவரையும் பார்த்து அஸ்வதி மிகவும் சந்தோஷப்பட்டு அவர்கள் இருவரிடமும் தன் ஆசிரமத்தில் தன்னுடன் வளர்ந்த தனது நண்பர்கள் பற்றி விசாரித்து கொண்டு இருந்தாள்……

 

அக்னஸ் சிஸ்டர் …..

 

சொல்லுடா கண்ணா….

 

வானியம்மா , விஜய் அப்பா ,சூர்யா வள்ளி, துவாயி ,மதன், ஹர்ஷா எல்லாரும் எங்க இருக்காங்கனு உங்களுக்கு தெரியுமா?

அவங்க கிட்டயெல்லாம் பேசுவீங்களா?

 

உன்ன தத்து கொடுத்த பிறகு ஹர்ஷாவ மட்டும் ஒரு முஸ்லிம் பேரன்ட்ஸ் வந்து தத்து எடுத்துட்டு போனாங்க அதுக்கப்புறம் மதன், துவாயி , வள்ளி, சூர்யா இவங்க எல்லாரையும் வேற ஒரு பெரிய ஆசிரமத்துக்கு அனுப்பி விட்டோம் அதுக்கப்புறம் அவங்க எப்படி இருக்காங்கன்னு தெரியல…….

 

ஹர்ஷா இப்போ எங்க இருக்கான்னு தெரியுமா உங்களுக்கு?

 

தெரியல அஸ்வதி……

 

நாங்க ரெண்டு பேரும் அந்த ஜீசஸ் கிட்ட டெய்லியும்  ஜெபம் பண்றது உங்களுக்காக தான்……

 

ஆசிரமம் மாறின பிறகு வாணி குடும்பத்தோட வேற ஊருக்கு போயிட்டா , விஜய் சார் அங்க தான் பக்கத்துலயே ஏழை பசங்களுக்கு ஃப்ரீயா டியூஷன் எடுப்பாங்க……

 

அப்படியா மரியா சிஸ்டர் , விஜய் அப்பா அட்ரஸ் எனக்கு கொடுப்பீங்களா?

 

கண்டிப்பா கொடுக்கிறேன்டா இப்போ இங்கே இருக்கிறவங்க எல்லாருக்கும் உன் கையால சாப்பாடு கொடு என்று அஸ்வதியின் கைகளில் ஒரு பெரிய சாப்பாடு  பேசினை அவர் கொடுத்தார் அந்த பேசினை அஸ்வதியால் தூக்க முடியவில்லை அவள் கஷ்டப்படுவதை பார்த்த விஹான் அவளுக்கு உதவி செய்தான்………

 

விஹான் அந்த பெரிய சாப்பாடு  பேசினை தூக்கிக் கொண்டு வந்தான் அஸ்வதி அங்கு இருந்த குழந்தைகளுக்கு சாப்பாடு பரிமாறினாள்…….

 

விஹான்  அஸ்வதி இருவரும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே சாப்பாடு பரிமாறுவதை ஆக்னஸ் சிஸ்டர் மற்றும் மரியா சிஸ்டர் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்……

 

அவர்கள் இருவருக்கும் ஏதோ புரிவது போல இருந்தது…….

 

அவர்கள் இருவரும் அஸ்வதி மற்றும் விஹானை பார்ப்பதை பார்த்து சித்திக்,  அஸ்வதி விஹானின் காதல் கதையை அவர்களிடம் கூறினார்……

 

அவர்களின் காதல் கதையைக் கேட்ட  அவர்களுக்கு தங்களின் குழந்தைக்கு ஒரு புதிய உறவு கிடைத்துள்ளது என்று அந்த இரு சிஸ்டர்களுக்கும் மகிழ்ச்சி தாளவில்லை……

 

ரொம்ப சந்தோஷம் சித்திக் சார், அஸ்வதி மாதிரி ஆஷ்ரமத்துல வளந்த குழந்தையை யாரும் அவ்ளோ ஈஸியா மருமகளா ஏத்துக்க மாட்டாங்க ஆனா உங்க ரெண்டு பேருக்கும் பெரிய மனசு அதான் எங்களோட செல்ல குட்டி  அஸ்வத்திய உங்க வீட்டு மருமகளை எடுத்துக்கிட்டு இருக்கீங்க……

 

அஸ்வதி ரொம்ப தங்கமான பொண்ணு அவ எங்க வீட்டுக்கு மருமகளா வர்றதுக்கு நாங்க தான் கொடுத்து வச்சிருக்கணும் என்று பீவி கூறினார்…..

 

இத்தனை வருஷமா அஸ்வதி கஷ்டத்துல இருந்ததுக்கு உங்க குடும்பம் மூலமா அவளுக்கு சந்தோஷம் கிடைக்குதுன்னா எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோஷம்……

 

அதற்குள் அஸ்வதி மற்றும் விஹான் அவர்கள் அனைவருக்கும் சாப்பாடு பரிமாறி விட்டு வந்தனர்……

 

சிஸ்டர் உங்க ரெண்டு பேருக்கும் என்னோட புது ஃபேமிலிய இண்ட்ரடியூஸ் பண்றேன் …….

 

இது சித்திக் அப்பா , இது பீவி அம்மா , இது என்னோட பெஸ்ட் பிரன்ட் விஹான்னா அண்ட் இது என்னோட விஹான் என்று அவள் அவனின் கைகளை பிடித்து கொண்டு அவர்களிடம் அனைவரயும் அறிமுகப்படுத்தினாள்…….

 

உன்னோட புது ஃபேமிலி ரொம்ப நல்லா இருக்குது நீ எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும் என்று இந்த இரு சிஸ்டர்களும் அஸ்வதியின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தனர்…….

 

ஆக்னஸ் சிஸ்டர் , மரியா சிஸ்டர் அஸ்வதி குட்டி பொண்ணா இருக்கும்போது ரொம்ப சேட்டை பண்ணுவாளோ?

 

விஹான் அவர்களிடம் அவ்வாறு கேள்வி கேட்கவும் அந்த இரு சிஸ்டர்களும் சிரித்து விட்டனர்……

 

எதுக்கு சிரிக்குறீங்க?

 

விஹான் எங்க  ஆசிரமத்துலயே அஸ்வதி ஒரு ஆளு மட்டும் தான் சேட்டை பண்ணாத ஒரே பீஸ் மீதி  எல்லாம் அறுந்த வாலு கேஸ் என்று கூறிவிட்டு மரியா சிஸ்டர் சிரித்தார்…..

 

அப்படியா அஸ்வதி சேட்டையை பண்ண மாட்டாளா?

 

அஸ்வதி அந்த சேட்ட புடிச்ச கும்பல் கூட சேர்ந்துகிட்டு ஒரே ஒரு தடவை சேட்டை பண்ணுனா …..

அதுக்கு அப்புறம் அவங்க ஆறு பேரும் அவ்வளவா சேட்டை பண்ண மாட்டாங்க சேட்ட பண்றத விட்டுட்டாங்க……

 

சேட்ட பண்றத விட்டுட்டாங்களா ?அது எப்படி சின்ன பசங்க சேட்டை பண்ணாம இருப்பாங்க??

 

ஆமா விஹான்னா அவங்க சேட்டை பன்றதையே விட்டுட்டாங்க ஏன்னா அவங்களுக்கு நடந்த விஷயம் அப்படி….

 

அப்படி என்ன விஷயம் நடந்துச்சு சிஸ்டர்?

 

அந்த இரு சிஸ்டர்களும் அஸ்வதியை பார்த்தனர் அஸ்வதியின் கண்களில் கண்ணீர் குளம் போல தேங்கி இருந்தது……..

 

ஏன் அஸ்வதி அழுகுற மாதிரி இருக்குற? என்ன ஆச்சும்மா ?

 

சிந்திக் இவ்வாறு  கேட்கவும் அஸ்வதி அந்த இரு  சிஸ்டர்களையும் பார்த்தாள்……

 

அந்த சிஸ்டரே மேலும் கூறினார்…..

 

நானும் மரியாவும் ஆசிரமம் விரிவுப்படுத்துற விஷயமா மேலிடத்துல பேச போயிருந்தோம் அப்போ இந்த வாண்டுகள் எல்லாம் வானிய தொந்தரவு பன்னி பக்கத்துல இருக்குற சூப்பர் மார்க்கெட்க்கு போயிருக்காங்க அங்க அந்த சூப்பர் மார்க்கெட்ல வேலை பாக்குற ஆளுங்க அவங்கள உள்ளவே விடல என்று அவர் அஸ்வதியை பார்த்தார் அஸ்வதி அழுது கொண்டே விஹானை பார்த்தாள்……..

 

அவர்கள் கூற வருவதை விஹான் புரிந்து கொண்டான்…..

 

அஸ்வதி நீ அழாத , உன்ன நா ஆயிரம் சூப்பர் மார்க்கெட்க்கு  அழச்சிட்டு போறேன் என்று விஹான் அவளை தன் நெஞ்சோடு அனைத்து கொண்டான்……

 

ஆமா சிஸ்டர் அந்த சூப்பர் மார்கெட்ல உள்ள ஆளுங்க எதுக்கு எங்கள அன்னைக்கு உள்ள விடல?  நாங்க எல்லாரும் நல்ல ட்ரெஸ்தான் போட்டு போனோம் அப்புறமும் ஏன் எங்கள உள்ள விடல?

 

ஏன்னா நீங்க எல்லாரும் அனாதை இல்லத்துல இருக்குற பசங்க சோ உங்ககிட்ட பொருள் வாங்க காசு இருக்காதுன்னு நினச்சிருகாங்க அதான்  உங்களை உள்ள  விடல……..

 

ஆனா அன்னைக்கு எங்ககிட்ட ஆளுக்கு ஐம்பது ஐம்பது ரூபா வச்சிருந்தோம் என்று அஸ்வதி பாவமாக கூறவும் அந்த இரு சிஸ்டர்களும் அஸ்வதியை பார்த்து புன்னகைத்தனர்……

 

சரி சரி அஸ்வதி அழுதது போதும் இப்போ வா நம்ம எல்லாரும் இந்த குழந்தைங்க கூட சந்தோசமா சாப்பிடலாம் வாங்க என்று சித்திக் அனைவரையும் அழைத்துக் கொண்டு போனார்…….

 

அன்று முழுவதும் அஸ்வதி மிகவும் சந்தோஷமாக இருந்தாள்…..

 

அவளின் சிரித்த முகத்தை பார்த்த விஹானும் சந்தோஷமாக இருந்தான்……

 

அந்த நாள் முழுவதும் ஆசிரமத்திலே இருந்து விட்டு சாயங்காலம் போல வீட்டிற்கு வந்தனர்…..

 

சிந்திக்கப்பா இன்னைக்கு நா ரொம்ப சந்தோஷமா இருந்தேன் அதுக்கு நீங்கதான் காரணம் உங்களுக்கு நா எவ்வளவு தேங்க்ஸ் சொன்னாலும் பத்தாது ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அப்பா என்று அஸ்வதி  சித்திக்கை கட்டி அணைத்துக் கொண்டாள்……

 

அட அப்பாவுக்கு தேங்க்ஸ்  எல்லாம் சொல்லுவியா?

 

அப்பா எனக்கு இருக்குற சந்தோஷத்துக்கு என்ன பண்ணனும்னே தெரியல அவ்வளவு சந்தோஷமா இருக்கு என்று அவள் சந்தோஷத்தில் இருந்தாள்……

 

பிறகு அஸ்வதியும் விஹானும் தங்களின் அறையில் அமர்ந்து  பேசிக்கொண்டிருந்தனர்…….

 

அஸ்வதி நாளையிலிருந்து உன்ன நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் நீ என்ன மிஸ் பண்ணுவியா?

 

பின்ன மிஸ் பண்ணாம எப்படி இருப்பேன் நானு ? ஆனா எனக்கு இது புடிச்சிருக்கு நீங்க காலையில காலேஜ்க்கு கிளம்புவீங்க,  உங்களுக்கு காலையில சாப்பாடு வச்சு உங்கள ரெடி பண்ணி காலேஜுக்கு அனுப்புவேன் , நீங்களும் காலேஜுக்கு போயிடுவீங்க அப்புறம் உங்களுக்காக நீங்க வர வரைக்கும் நா வெயிட் பண்ணுவேன் நீங்க காலேஜ் விட்டு வந்த பிறகு இன்னைக்கு காலேஜ் என்னல்லாம் நடந்துச்சுன்னு என் மடியில படுத்துக்கிட்டே ஓவ்வொன்னா சொல்லுவீங்க இந்த விஷயம் எல்லாம் இப்பதான் நடக்க முடியும்  ஏன்னா நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு நானும் காலேஜ் போவேன் நீங்களும் காலேஜ் போவீங்க அப்போ இந்த மாதிரி எல்லாம் ரொமான்ஸ் பண்ண முடியாது அதான் இப்பவே நான் அனுபவிச்சுக்குறேன் என்று அஸ்வதி விஹானை பார்த்து அழகாக சிரித்தாள்……

 

அடியே கள்ளி இவ்வளோ ஆசை மனசுல வச்சிருக்கியா?

 

இன்னும் நிறைய இருக்குது…..

 

நிறைய ஆசையா? என்ன ஆசையெல்லாம் நீ வச்சிருக்க சொல்லு கேப்போம் என்று அவன் கேட்க……

 

நா உங்களுக்கு என்னோட ஆசை எல்லாம் பாட்டா பாடவா?

 

என்னடா செல்லம் கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்குற?  நீ உன்  இஷ்டத்துக்கு பாடு நா கேக்குறேன் என்று அவன் அவளின் மடியில் படுத்து கொண்டு அவளின் அழகிய முகத்தை பார்த்து கொண்டு இருந்தான்……

 

உன் பேர் சொல்ல ஆசைதான்

உள்ளம் உருக ஆசைதான்

உயிரில் கரைய ஆசைதான்

ஆசைதான் உன்மேல் ஆசைதான்

உன்தோள் சேர ஆசைதான்

உன்னில் வாழ ஆசைதான்

உனக்குள் உறைய ஆசைதான்

உலகம் மறக்க ஆசைதான்

ஒன்றும் ஒன்றும்

ஒன்றாய் ஆக ஆசைதான்”……..

 

அஸ்வதியின் ஆசைகளை அவளின் அழகிய குரலில் அவள் பாடவும் அவளின் குரலில் மெய்மறந்து விஹான் அவளேயே பார்த்துக் கொண்டிருந்தான்……

 

ஹலோ விஹான் புரிஞ்சதா என்னோட ஆசை எல்லாம்?

 

ரொம்ப நல்லா புரிஞ்சிருச்சு செல்ல குட்டி சரி நாளைக்கு என்ன டிரஸ் போடணும்ன்னு எனக்கு எடுத்து தரியா?

 

ஓகே வாங்க எடுத்து தாரேன் என்று நாளை கல்லூரிக்கு விஹான் என்ன சட்டை அணிய வேண்டும்,  என்ன பேண்ட் அணிய வேண்டும் , என்ன வாட்ச் அணிய வேண்டும் , என்ன ஷூ அணிய வேண்டும் என்று ஒவ்வொன்றாக அஸ்வதி அவனுக்காக பார்த்து பார்த்து  எடுத்துக் கொடுத்தாள்……

 

விஹான் நாளைக்கு நீங்க கொஞ்சம் சேவ் பண்ணுங்க அப்போ பார்க்க இன்னும்  ரொம்ப  ஹேண்ட்ஸமா இருப்பிங்க என்று அவள் அவனின் தோள்களில் சாய்ந்து கொண்டு கூறினாள்……..

 

சரி வா நம்ம இப்ப சீக்கிரம் நைட் சாப்பாடு சாப்பிட்டு சீக்கிரம் தூங்கலாம் அப்பதான் நாளைக்கு சீக்கிரமா எந்திரிச்சு காலேஜ் கிளம்ப முடியும்…..

 

சரியென்று இருவரும் இரவு உணவு சாப்பிட்டு விட்டு உறங்க சென்றனர்……

 

மறுநாள் காலையில் அஸ்வதி ஐந்து மணிக்கே எழுந்து விட்டாள், விஹானுக்கு காலையில் சாப்பிட தேவையான உணவை பீவி அம்மாவுடன் சேர்ந்து  சமைத்து முடித்து விட்டாள்……

 

பிறகு விஹானை எழுப்பி , அவனை குளிக்க வைத்து விட்டு, நேற்று இரவே அவனுக்காக எடுத்து வைத்த சட்டையை  போடவைத்துவிட்டு , அவன் சட்டையில் உள்ள ஒவ்வொரு பட்டனாக அஸ்வதி போட்டுவிட்டாள் பிறகு அவனின் காலரை சரி செய்து டை போட்டுவிட்டு அவன் தலையை சீவி விட்டு அவனுக்கு பிடித்த நறுமன திரவியத்தை அவனுக்கு அடித்து விட்டு அவனைக் கிளப்பி வெளியில் அழைத்து சென்றாள்…….

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு விஹான் இவ்வாறு கல்லூரி பேராசிரியராக தயாராகி வருவதை அவனின் குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு பார்த்தனர்……..

 

விஹானுக்கு அஸ்வதி தான் சாப்பாடு  பரிமாறினாள் , விஹான் சாப்பிட்டு முடித்த பிறகு அவன் கல்லூரி பையை அஸ்வதி எடுத்துக் கொண்டு அவனை கார் வரை வழியனுப்ப சென்றாள்…..

 

விஹான் நல்லபடியா காலேஜுக்கு போயிட்டு வாங்க டாட்டா ,  என்று அஸ்வதி அவனுக்கு பாய் சொல்ல விஹான் தயங்கியபடி நின்றான்……

 

விஹானின் தயக்கத்தை   அவன் கூறாமலே அஸ்வதி புரிந்து கொண்டாள்……

 

அஸ்வதி விஹானை இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டு பேசினாள்……

விஹான் உங்க மேல தப்பு இல்ல அந்த பொண்ணு உங்க மேல பொய்யா கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கான்னு காலேஜ்க்கே தெரிஞ்சிடுச்சு அதனால இப்போ நீங்க ரொம்ப கெத்தா காலேஜ்க்கு போங்க என்று அஸ்வதி அவனுக்கு தைரியம் கொடுக்கவும் விஹான் அஸ்வதியின்  நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினான்…….

 

விஹானின் கார் அவள் கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தாள்…….

 

விஹானின் கார் திரும்ப ரிவர்ஸ் வந்து அஸ்வதிக்கு பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பிவிட்டு தனது கூலர்சை அணிந்து விட்டு விஹான் கல்லூரிக்கு சென்றான்…….

 

தொடரும்……

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….

 

💕❄️💕❄️💕❄️💕❄️❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்