Loading

நம்ம மேல எல்லாம் அம்மாவுக்கு கொஞ்சம்கூட கூட பாசமே இல்ல….அப்படி பாசம் இருந்திருந்தாத்தான் நம்ம சொன்ன உடனே சரி வாரேன்னு சொல்லிருப்பாங்களே அப்படினு அப்போ அந்த வயசுல தப்பா புரிஞ்சுகிட்டு கோவப்பட்டு மறுநாள் யார் கிட்டையுமே போய்ட்டு வரேனு சொல்லாம கூட கெளம்பி போய்ட்டன்…

 

வீட்ல இருந்து கால் பண்ணா கூட எல்லார் கிட்டையும் பேசுவான் ஆனா அம்மா கிட்ட மட்டும் பேச மாட்டான்….

 

அன்னைக்கு அம்மா பேசுனதுதான் கரெக்ட்டுனு காலம் புரிய வச்சாலும்…அவன் கூட வர மாட்டேனு சொல்லிட்டாங்களேன்ற வருத்தம் அவனுக்கு ரொம்ப அதிகமாவே இருந்தது….அதுனாலையோ என்னமோ அவன் பேசவே இல்ல….அவன் அவங்க பேசுன எல்லாத்தையும் மறந்தாலும்…சுயநலமான ஆசை இருக்கக் கூடாதுனு சொன்ன அந்த ஒரு வார்த்த அவனுக்கு மறக்கவே இல்ல…

 

அதுக்கப்புறம் நீ என் கூட வந்துருனு ஆதி மீனாட்சி கிட்ட சொல்லவே இல்ல…அப்படியே விட்டுட்டான்….ஒரு வருஷம் கழிச்சு முன்ன மாதிரி கல கலனு பேசாட்டியும் ஓரளவுக்கு கேக்குற கேள்விக்காச்சும் பதில் சொல்லிட்டு இருந்தான்….

 

இந்த விஷயம் நடந்ததுதான் கிச்சன்ல மீனாட்சி கிட்ட ஆதி கோவப்பட்டதுக்கு காரணம்…அவன் கோவத்துல பேசுறதுக்கு எல்லாம் பதில் பேசிட்டு இருந்தா…இந்த விஷயத்த நியாபகப் படுத்தி அத பத்தி பேசி சண்ட போட்டு பழையபடி பேசாம போயிருவானோனு பயந்துதான் மீனாட்சி பதில் பேசாம இருந்தா….

 

இவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கும் போதே மீனாட்சி எந்திரிச்சிட்டா…. எந்திரிச்சு வந்து அத்த உங்க துணி ரூம்ல டேபிள்க்கு மேல இருக்க பையில எடுத்து வச்சிருக்கேன்…எல்லாம் சரியா இருக்கானு பாருங்க..அப்படினு சொன்னா….

 

என்னோடது எதுக்குமா…அப்படினு மீனாட்சி கேக்க…ஆதி மீனாட்சிய பாத்து மொரைக்க ஆரம்பிச்சான்…ஐயோ இவன் வேற மொரைக்குறானே…ஏம்மா நீ இவன் முன்னாடிதா எல்லாம் கேப்பியா…. எதுவா இருந்தாலும் ஒரு நேரம் காலம் வேணாம்…. வா முதல்ல அப்படினு சொல்லி கிச்சனுக்கு வெளிய கூட்டிட்டு வந்து…

 

“மீரா என்னோடது எதுக்கு எடுத்து வச்ச…நான் வர மாட்டேன்…நீயும் ஆதியும்தா போறீங்க….புரியுதா..”

 

“என்னத்த சொல்றீங்க?”

 

“ஏன் இவ்வளோ அதிர்ச்சி ஆகுற”

 

“நீங்க இல்லாம எப்படி அத்த இவன் கூட நான் தனியா இருப்பேன்…ஐயோ அவ்ளோதான் நானு…செத்தேன்… போச்சு போச்சு”

 

“அதான் இப்போ அவன் கூட நல்லா பேசுறான்ல… அதெல்லாம் சரி ஆகிரும்….சொல்லப் போனா நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கும் போதுதான் உங்கிட்ட பேசுறதுக்கு அதிக வாய்ப்பு இருக்கு…நான் கூட இருந்தா என் கிட்டையும் பேசுவான்ல…வீட்ல நீ மட்டும்தா இருக்கன்ற போது வேற வழியே இல்ல…அவன் உன் கிட்டதான் பேசி ஆகனும்…எல்லாம் நல்லதுக்குதான் சரியா “

 

“போங்கத்த…இது எல்லாமே கேக்க நல்லாதான் இருக்கு… ஆனா அவன் ஒரே மாதிரியே இருக்க மாட்டான்….எப்போ எப்படி இருப்பான்னே தெரியாது… எதாவது ஒன்னுனா சப்போர்ட் பண்ண நீங்க இல்லைனா நான் என்ன பண்ணுவேன் “

 

“அதெல்லாம் நீ சமாளிச்சிருவ…தனியா இருந்தாதானா உங்களுக்குள்ள நல்லா பேசி புரிஞ்சுப்பீங்க ஒருத்தர ஒருத்தர்…”

 

“போங்கத்த…ஈசியா சொல்றீங்க…எனக்கு இப்போ கை கால் நடுங்க ஆரமிச்சிருச்சு…எனக்கு பயமா இருக்கு “

 

“சரி ஆகிரும் எல்லாம்…நீ தைரியமா போ…ஆதி என் துணிய எடுத்து வைக்க சொன்னானா…இல்ல நீயாவே எடுத்து வச்சியா?”

 

“அவன் நாளைக்கு கெளம்புறோம்ல துணி எல்லாமே ப்பேக் பண்ணி வை அப்படினு சொல்லிட்டு அவனாவே சமைக்க போய்ட்டான்…நான் நம்ம மூனு பேரும்தான போவோம் அப்படினு நெனச்சு எடுத்து வச்சிட்டு கிச்சனுக்கு போனேன்….நான் பண்ணிக்குறேன் நாளைக்கு ரொம்ப அலைச்சலா இருக்கும் நீ இப்போ போய் தூங்கு அப்படினு சொல்லிட்டான்….”

 

“அடேங்கப்பா அக்கரை எல்லாம் வானத்த தாண்டுது…சரி சரி நல்ல விஷயம் தான்….அவன் கோவம் எல்லாம் கொஞ்ச நேரம்தான் அப்புறம் அவனாவே சரி ஆகிருவான்….”

 

“அப்போ உண்மையாவே நீங்க வர மாட்டீங்களா….”

 

“நீ அதவே கேக்காத…நான் வர மட்டானே…நீ அவன் முன்னாடி இத பத்தி கேட்டு என்ன அவன் கிட்ட மாட்டி விட்றாத…புரியுதா “

 

“சரி கேக்க மாட்டேன் விடுங்க “

 

அத்தையும் கூட வருவாங்கன்ற தைரியத்துல இருந்த மீராவுக்கு அத்த சொன்ன பதில் பெரிய நடுக்கத்த குடுத்துச்சு….எந்த காரணத்துக்காகவும் பெருசா எங்கையும் வெளியூர் பக்கம் போகாத மீரா…முதல் முறையா வெளியூர் போய் வாழ போற…அதுவும் உண்ண எனக்கு சுத்தமா புடிக்கல என்ன வற்புறுத்தி உன் கழுத்துல தாலி கட்ட வச்சு என் வாழ்க்கையவே கெடுத்துட்டாங்க அப்படினு கழுத்துல தாலிய கட்ட கட்ட கோவத்தோட மொனங்குன புருஷனோட போக போறா… 

 

கல்யாணம் ஆன மறுநாளே லீவ் இல்லனு சொல்லிட்டு மீராவ அங்கையே விட்டுட்டு வேல பாக்குற இடத்துக்கு வந்த ஆதி ஊர் திருவிழாவுக்கு கண்டிப்பா வந்துதான் ஆகனும்ற கட்டாயத்துல இருந்தனால மட்டுமே வந்தான்….வந்து மூனு நாள் ஆகுது…இப்போதான் கொஞ்ச கெஞ்சமா மீராவோட பேர் சொல்லியே கூப்பிடுறான்….

 

கல்யாணம் ஆகி இருபது நாள் ஆகுது… இப்போவாச்சும் மீராவ சென்னைக்கு கூட்டிட்டு போற அளவுக்கு அவனுக்கு மனசு மாறுனதே ரொம்ப அதிசயம்…அவளும் சந்தோஷமா ஊருக்கு என்னென்ன கொண்டு போகனுமோ எல்லாத்தையுமே எடுத்து வச்சிட்டு… ரெண்டு மனசோட நாளைக்கு நாள் எப்படி இருக்கும்னு கனவு கண்டுட்டு இருந்தா…சந்தோஷம் எந்த அளவுக்கு இருந்ததோ அத விட அதிகமா பயம் இருந்தது…

 

ரெண்டு பேரும் எங்க இருக்கீங்க வாங்க இங்க உக்காருங்க….வந்து சாப்பிடுங்க… நான் என் கையால சமச்சிருக்கேன் அப்படினு நக்கலா சொல்லிட்டு இருந்தான்… ரெண்டு பேரும் குருஞ்சிரிப்பு சிரிச்சுகிட்டே வந்து உக்காந்தாங்க….

 

மீனாட்சிக்கும் மீராவுக்கு ஆதி தன் கையால பரிமாறி சாப்பிட வச்சான்… ரெண்டு பேரும் சந்தோஷமா சாப்பிட்டாங்க…

 

சரி சாப்பிட்டுங்கல்ல…பாத்திரத்த எடுத்து கழுவி வச்சிருங்கனு சொல்லிட்டு ஆதி போய் படுத்து தூங்கிட்டான்….

 

வீட்ல இருந்த எல்லா வேலையையும் ஆளுக்கு ஒன்னா செஞ்சு முடிச்சிட்டு ரெண்டு பேரும் சோகமா ஒருத்தர் மூஞ்ச இன்னொருத்தர் பாத்து கிட்டு கவலையோட உக்காந்திருந்தாங்க…

 

நாளைக்கு இந்நேரம் எல்லாம் நான் வசந்தி வீட்ல ரெண்டு பேரனுங்களுக்கு நடுவுல படுத்திருப்பேன் உன்னையும் ஆதியையும் பிரிஞ்சு…சரி கவலைப்பட்டு என்ன பண்றது…காலைல சீக்கிரமே எழுந்திரிச்சு கெளம்பி நம்ம எல்லாரும் வசந்தி வீட்டுக்கு போகனும்…நீ போய் படு அப்படினு மீனாட்சி சொன்னா….

 

“இல்ல அத்த நான் உங்க கூடவே படுத்துக்குறேன்”

 

“இல்லமா நீ போய் உள்ள படு போ”

 

“இத்தன நாள் உங்க கூடதான படுத்தேன்….நான் போக மாட்டேன்…”

 

 

…கதை தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்