Loading

முத்தையாவோட வீட்ல இருந்து மீனாட்சிய பொண்ணு கேக்கும் போது…. மீனாட்சி வீட்ல வேணானு சொல்றதுக்கு ஜீரோ சதவீதம் கூட வாய்ப்பு இல்ல…ஏன்னா அந்த வீட்டுக்கு மருமகளா புள்ளைய அனுப்பிற மாட்டோமானு ஏங்குன கூட்டத்துல இவங்களும் ஒருத்தவங்களா இருந்தாங்க….

 

மீனாட்சி வீட்ல இருந்து சீர் எதுவுமே வாங்கல….ஏன் சீர் செஞ்சு கல்யாணம் பண்ணி குடுக்குற அளவுக்கு அப்போ அவங்க இல்ல….அது மட்டும் இல்லாம முத்தையாவுக்கு மீனாட்சிய புடிச்சிருந்தனால மட்டுமே அந்த கல்யாணம் முழுக்க முழுக்க முத்தையா வீட்டு செலவோட எந்த தொந்தரவும் இல்லாம நல்லபடியா தடாபுடானு நடந்துச்சு…. அவங்க கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் வரைக்கும் அவங்க கல்யாணத்த பத்திதான் ஊரே பேசுச்சு…ஊரே மெச்சி போர அளவுக்கு கல்யாணம் நடந்துச்சு…

 

வாழ்க்கை ரொம்ப அழகுதாங்க…நமக்கானவங்க நம்ம கூடயே இருக்கும் போது , நம்ம ஆசை எல்லாம் நிறைவேறும் போது , நம்ம யோசன பண்ணி பாக்காத அளவுக்கு சந்தோஷம் கெடைக்கும் போது , அன்பு பாசம் காதல் அப்படினு எல்லாமே நமக்கு கெடைக்கும் போது…. பரவாயில்ல நம்ம நல்ல வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்குக்கோம் அப்படினு மீனாட்சி நெனச்சிட்டு இருக்கும் போதுதான்…ஒரு அதிர்ச்சியான நிகழ்வு அரங்கேறியது…

 

ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி இருந்தே அப்பப்போ வயிறு வலிக்குதுனு முத்தையா சொல்லிட்டே இருந்திருக்காரு… அது எதாவது சேராதது சாப்பிட்டிருப்பீங்க அதுனால வலிக்குது…இல்லைனா தண்ணி ஒழுங்கா குடிக்காம இருக்கீங்க அதுனாலதா வயிறு விட்டு விட்டு வலிக்குது அப்படினு சொல்லி….சரியான காரணம் என்னனு தெரியாம…அப்போதைக்கு வலிய கொறைக்க என்ன மருந்து குடுக்கனுமோ அத குடுத்தே சமாளிச்சு இருந்திருக்காங்க….

 

ஒரு குறிப்பிட்ட நாளுக்கு பிறகு விட்டு விட்டு வலிச்சிட்டு இருந்தது தொடர்ந்து வலிக்க ஆரமிச்சிருச்சு…. அதுனால வீட்ல பாக்குற மருத்துவம் எல்லாம் இதுக்கு மேல சரிபட்டு வராதுனு புரிஞ்சு கிட்ட முத்தையா ஆஸ்பத்திரிக்கு போனாரு….

 

போன இடத்துல குடி பழக்கம் ரொம்ப இருந்திருக்கு இவருக்கு….அது இப்போ மோசமான நெலமையில நிக்குது….இத சரி பண்றதுக்கு இங்க எந்த வசதியுமே இல்ல….நீங்க வேற இடத்துல போய் வைத்தியம் பாருங்க….அப்படினு அங்க வேல பாத்த டாக்டர் சொல்ல…..ஐயோ சார் ஏன் இப்படி சொல்றீங்க..நீங்களே இப்படி சொன்னா நாங்க எங்க போவோம்….நீங்களே எங்களுக்கு எதாவது வழி சொல்லுங்க… எனக்கு எங்க போறது யார பாக்குறதுனே ஒன்னும் புரியல அப்படினு மீனாட்சி தலையில அடிச்சிகிட்டு பொழம்பி அழறத பாத்து பாவப்பட்டு அந்த டாக்டர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியோட நம்பரையும் அட்ரஸையும் குடுத்தாரு…அது மட்டும் இல்லாம நீங்க அங்க போங்க…காச பத்தி கவலப்படாதீங்க…நான் பாத்து பேசிக்குறேன் அப்படினு வேற அவரு சொன்னாரு…அப்போதைக்கு கடவுளே அவர அந்த நேரத்துல அனுப்பி வச்சது மாதிரி ஒரு பெரிய உதவிய செஞ்சு குடுத்தாரு….

 

ஆனா எல்லா உதவியும் கெடச்சுமே முத்தையாவ காப்பாத்தவே முடியல…..கடைசில அவரோட உயிர் அவர விட்டு பிரிஞ்சிருச்சு…..காசு பணம் இருந்தது… நல்ல மருத்துவ வசதியும் இருந்தது….ஆனாலுமே அவர காப்பாத்த முடியல….ஏன்னா குடிப்பழக்கத்தால நோய் வரல….குடிப்பழக்கமே ஒரு நோய்தான்….

 

முத்தையாவுக்கு வைத்தியம் பாத்த காச ஆஸ்பத்திரிக்கு குடுக்கனும்னு இருந்த நெலத்துல முக்கால்வாசிய விக்க வேண்டிய நெலைமையில அந்த குடும்பம் இருந்தது….வேற வழி இல்லாம அத செய்யவும் செஞ்சாங்க….

 

பெத்த மகனும் கூட இல்ல…. கஷ்டப்பட்டு உழச்சு கொஞ்ச கொஞ்சமா சேத்த நிலமு நம்ம கைல இல்லனு ஆன பிறகு…. வயசான முத்தையாவோட அம்மா அப்பா மன உளைச்சலுக்கு ஆளாகி வேதனையிலயே உடல் நலம் பாதிக்கப்பட்டு கொஞ்ச நாள்லயே அடுத்தடுத்து இறந்து போய்ட்டாங்க….

 

ரெண்டு குழந்தைய வச்சிட்டு… ரெண்டு வீடு கொஞ்சம் நிலத்தோட ஒத்தையா மீனாட்சி அன்னைக்கு நின்னா….சொந்த பந்தம் எல்லாம் கூட இருந்தாங்க….உதவி பண்றதுக்காக இல்ல…இவங்கள வேடிக்க பாத்து சிரிக்க….

 

குடும்பம் நல்லா இருக்கும் போது அவங்க கையால கை நீட்டி காசு வாங்கும் போது எல்லாம் வாய் மனக்க அவங்கள பத்தி பெருமைமா பேசிட்டு….அவங்க வாழ்க்க சரிஞ்ச உடனே பழச மறந்துட்டு அவங்கள பாத்து…இருக்கும் போது நான்தான் பெருசுனு ஆடுனாங்க இப்போதான் ஒன்னுமே இல்லையே…இப்போ எப்படி ஆடுறாங்கனு பாக்கனும் அப்படினு கேளிக்கையா பேசி சிரிப்பாங்க….அந்த மாதிரியான ஆட்கள்தான்…இந்த மண்ணுல அதிகபட்சமா இருக்காங்க….இதே கொடுமதா மீனாட்சிக்கும் நடந்தது….

 

ஆரம்பத்துல இந்த மாதிரியான வார்த்தைகள் எல்லாம் கேக்கும் போது வேதனையா இருந்து அப்புறம் போக போக பழகிருச்சு…. வேற வழி இல்ல நடக்குற எல்லாத்தையும் ஏத்துகிட்டுதான் ஆகனும்ன்ற மனநிலை மீனாட்சிக்கு காலப் போக்குல வந்துருச்சு…

 

எல்லாத்தையும் சகிச்சுகிட்டு வாழ்ந்துட்டு இருந்தா மீனாட்சி…. கஷ்டத்துக்கு மேல கஷ்டம் குடுக்க நெனச்சு கடவுள் ஒரு வேலைய பாத்து விட்டுட்டாரு…தோட்டத்துல மீனாட்சி வேலை செய்யும் போது குட்டி பிள்ளையா இருந்த வசந்தியும் ஆதியும் பக்கத்துல விளையாடிட்டு இருந்தாங்க…அப்போ அங்கையும் இங்கையுமா ஓடிட்டு இருக்கும் போது அங்க இருந்த தகரம் ஒன்னு வசந்தியோட கால்ல கிழிச்சிருச்சு…

 

தகரம் கால்ல தையல் போடுற அளவுக்கு ஆழமா நீளமா கிழிச்சிருந்துச்சு…. ஆஸ்பத்திரிக்கு போய்ட்டு வந்து வீட்ல விட்டுட்டு வேலைய பாக்கலாம்னா அதுக்கு வாய்ப்பு இல்லாம போய்ருச்சு…குழந்தைய கூடவே இருந்து பாத்துக்க வேண்டிய சூழ்நிலை….வேலையும் எதுவும் செய்ய முடியல‌….கையில இருந்த காசும் கொஞ்சம் கொஞ்சமா கரஞ்சிட்டே இருந்தது….கையில காசும் இல்ல இனி இதுக்கு அப்புறம் என்ன பண்ண போறோம்னு தவிச்சிட்டு இருந்த மீனாட்சிக்கு ஒரு தகவல்…. வெளியூர்ல இருந்து ஒருத்தர் இங்க எதாவது நிலம் கெடைக்குமானு பாக்க வந்திருக்காரு….அவரு நில உரிமையாளர் என்ன விலை சொல்றாங்களோ…அது நியாயமானதா இருந்தா….உடனே கையில காச குடுத்து பத்திரம் எழுதிக்கலாம்னு சொல்றாருனு கேள்வி பட்டதுமே…..அவர பாத்து பேசி அவ கிட்ட மீதம் இருந்த கால் வாசி நெலத்தையுமே வித்துட்டா…‌

 

நிலத்த வித்த காசு இருக்கவும் அத வச்சு செலவு பண்ணிகிட்டு ரெண்டு வருஷமா எந்த வேலைக்குமே போகல..‌.குழந்தைங்க கூடவே வீட்லயேதா மீனாட்சி இருந்தா….அதே கால கட்டத்துலயே ரெண்டு பேரும் கொஞ்சம் வளந்துடாங்க…வசந்திய ஸ்கூல்லயும் ஆதிய கொண்டு போய் பால்வாடில போய் விட்டுட்டு மீனாட்சி அடுத்தவங்க தோட்டத்துக்கு கூலிக்கு வேலைக்கு போவா….

 

நிலத்த வித்த காசும் இன்னும் கொஞ்ச நாளுக்கு மட்டும்தா தாக்கு புடிக்கும்னு தெரிஞ்சும் அடுத்த வேலைக்கு போகாம இருந்து செலவுக்கு என்ன பண்றதுன்ற எண்ணம் அவள அதுக்கு அப்புறம் ஓய்வெடுக்க விடல….

 

 

…கதை தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்