Loading

“அப்படி ஒன்னும் இல்ல….நீங்க ரெண்டு பேரும் பேசமா இருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு….”

“இதெல்லாம் சும்மா….அவன் கிட்ட பேசாம நான் எங்க போக போறேன்…”

மீராவும் மீனாட்சியும் பேசிட்டு இருக்கும் போது…கப்புனு ஃகேட்டு போட்ட மாதிரி ரெண்டு பேரும் பேச்சை நிறுத்திட்டாங்க….ஏன்னா ஆதி வந்துட்டான்…..வந்ததுமே டிவிய ஆஃப் பண்ணிட்டு ரெண்டு பேருக்கு நடுவுல வந்து உக்காந்தான்…..

மீராவுக்கு அப்படியே என்னடா இது புதுசா இருக்குற மாதிரியே தோனுச்சு…அது அவ பார்வையிலயே தெரிஞ்சது….

என்ன மீரா ஏன் இப்படி பாக்குற அப்படினு ஆதி கேக்க….அவளால சந்தோஷத்துல பதில் சொல்ல முடியல…ஒன்னு இல்லனு சொல்லாம சொல்ற மாதிரி தலைய மட்டும் ஆட்டுனா….

அம்மா…இங்க பாரு நீ என்கிட்ட பேசாம இருக்க முடியாது…சின்ன புள்ள மாதிரி வீம்பு பண்ணாம சமத்தா இருக்க கத்துக்கோ சரியா…..ஆதி சொல்ல…. மீனாட்சி காது கேக்காத மாதிரியே உக்காந்திருந்தாங்க….

“என்னம்மா…உனக்கு என்ன பாத்தா பாவமா இல்லையா”

“இல்லடா இல்ல…இப்போ என்ன அதுக்கு”

“சரி சரி ஓவரா கோவப்பட்டு கத்தாதீங்க….உடம்பு வேற ரொம்ப வீக்கா இருக்கு”

“ம்ம்ம் போடா எல்லா தெரியும் எங்களுக்கு”

“சரி அது இருக்கட்டும்…..நான் சொல்றத கேளு… அப்புறமா கோவப்பட்டுக்கோ”

“நீ சொல்றத சொல்லு…அத கேக்கலாமா வேணாமானு நான் முடிவு பண்றேன்….”

“நீ கேட்டுதாமா ஆகனும் வேணானு சொல்றதுக்கு உனக்கு ஆப்ஷனே இல்ல….”

“விஷயத்த சொல்லுடா மொத”

“அம்மா நாளைக்கு காலைலயே கோவில்ல கெடா வெட்டி சாமி கும்பிட்றுவாங்கள்ல “

“இல்லடா அத உறுதியா சொல்ல முடியாது…எவ்ளோ நேரம் வேணாலும் ஆகலாம்….பொழுது முழுக்க அங்க இருக்க மாதிரி கூட நடக்கலாம்….ஏன் கேக்குற “

“இல்லமா இன்னைக்கோடவே எனக்கு லீவ் முடியுது….நாளைக்கு கண்டிப்பா நான் வேலைக்கு போய்தா ஆகனும் வேற வழியே இல்ல…ஆனா மாமா சொல்றத கேக்காமையும் இருக்க முடியாது….எல்லாமே யோசிக்குற மாதிரி இருக்கு…. சரி லீவ் கேக்கலாம்னு கம்பெனிக்கு கால் பண்ணேன்….நாளைக்கு ஒரு நாள் மட்டும்தா லீவ் தருவோம்….ஆனா ஒரு கண்டிஷன்னு சொன்னாங்க….”

“ஏன் என்ன கண்டிஷனு?”

“நாளைக்கு ஒரு நாள் சம்பளத்த புடிச்சுப்பாங்கலாம் “

“டேய் ஒரு நாள் சம்பளம்தான புடிச்சா புடிச்சிட்டு போகட்டும் அதுனால என்ன..‌.நீ என்ன இங்கையேவா இருக்க போற…என்னைக்காவதுதான வர்ற “

“ஆமா……ஆனா இது சம்பளம் சம்பந்தப்பட்டது மட்டும் இல்ல…. வேலைக்கு அதிகமா லீவ் போட்டா….அடுத்து புரோமோஷன்லாம் எதிர் பாக்கவே முடியாது…..எதாவது முக்கியமான பொறுப்ப யார் கைல குடுக்கலாம்ன்ற யோசன வரும்போது …. ஐயோ இவன் எப்போ லீவ் போடுவான்னே தெரியாது….இவன் கிட்ட அந்த வேலைய குடுக்க வேணாம்ற முடிவுக்கு அவங்களாவே வந்துருவாங்க….அந்த இடத்துல அவங்களுக்கு என் மேல ஒரு அவநம்பிக்கை கிரியேட் ஆகிரும்…”

“என்னடா என்னென்னவோ சொல்ற “

“ஆமாம்மா…நெறையா பிரச்சன இருக்கு இதுல… அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது….”

“சரி இப்போ அதுக்கு என்ன பண்ணலாம்னு சொல்ற?”

“நாளைக்கு காலைலயே கோவிலுக்கு போய்ட்டு சாமி எல்லாம் கும்பிட்டுட்டு…. எப்படியாவது மதியம் நேரம் ஆனதும் மாமா கிட்ட சொல்லிட்டு பஸ் ஏறிட வேண்டியதுதான்…. ஏன்னா நாளைக்கு நைட்டுக்குள்ள அங்க போனாதான்….. ரெஸ்ட் எடுத்துட்டு காலைல வேலைக்கு போற மாதிரி இருக்கும்….”

“அப்போ சரிடா… அப்படியே பண்ணிக்கோ…”

“ம்ம்ம் “

ஆதி அம்மா கிட்ட பேசும் போது அம்மாவ பாத்தத விட மீராவதா நெறையா டைம் பாத்தான்….. அங்க நடக்குற எல்லாமே ஒரு மாதிரி புதுசா இருக்கு…. மீனாட்சி கிட்ட விஷயத்த சொல்லிட்டு எழுந்த ஆதி….மீரா வா இங்கனு சொல்லி கூட்டிட்டு ரூம்க்கு போனான்…..

அத பாத்த மீனாட்சிக்கு அப்படி ஒரு பூரிப்பு…பையன் நல்லவிதமா நடந்துக்குறானேனு…அதே சமயம் ஆச்சர்யமாவும் இருந்தது…எதுனால இப்படி திடீர்னு மாறுனான் அப்படின்ற கேள்வியும் மீனாட்சி கிட்ட இருந்தது….ஆனா அத அவங்க வெளிய காட்டிக்கல…..

சரி ஊருக்கு போற விஷயமா ரெண்டு பேரும் எதாவது முடிவு எடுப்பாங்க போல…இதுல நமக்கு என்ன வேல…நம்ம அப்படியே மெதுவா நடந்து போய் வசந்தி புள்ளைங்கள பாத்துட்டு வரலாம்னு மீனாட்சி வீட்ட விட்டு கெளம்பிடாங்க…

மீனாட்சி வசந்தி வீட்ல இருந்து இங்க வீட்டுக்கு வரும் போது.. மீரா கட்டில்ல படுத்து இருந்தா….பாக்கவே ரொம்ப அசதியா தூக்கத்துல இருக்க மாதிரி இருந்துச்சு….ஆதி சாப்பாடு வச்சிட்டு இருந்தான்…..

என்னடா இவன் பாசமா இருந்தா இப்படி இருக்கான்….இல்லைனா சுத்தமா கண்டுக்க கூட மாட்டேன்றானு மீனாட்சி நெனச்சு கிட்டு கிச்சன்க்கு உள்ள போனா….

“டேய்”

“எங்கம்மா போன இவ்ளோ நேரம்”

“நான் போனது இருக்கட்டும்…என்ன புதுசா சமையல் எல்லாம் பண்ற…ஆச்சர்யமா இருக்கு”

“இருக்கும்ல ஆச்சர்யமா…..ஏன் இருக்காது….இத்தன வருஷம் எனக்காக நீயா சமச்ச…எனக்கு தேவையானத நானாதான செஞ்சு சாப்பிட்டுட்டு கெடந்தேன்….”

“என்னமோ வாழ்க முழுக்க உன்ன தனியா விட்ட மாதிரி பேசாதடா….ஒரு மூனு வருஷம் நீயா சமச்சிருப்பா…அவ்ளோதான்”

“ம்ம்ம்ம்ம் அவ்ளோதானு ஈசியா சொல்ற….எவ்ளோ கஷ்டம்னு அனுபவிச்சவனுக்கு மட்டும்தான் தெரியும்”

“சரி சரி”

“என்ன சரி….உனக்கு ஆயிரம்தான் இருந்தாலும் மகதான முக்கியம்….நான் எப்படி போன என்னனுதான இப்போ வர நெனச்சிட்டு இருக்க….”

“வாய்க்கு வர்றது எல்லாம் பேசாதடா….”

“ம்ம்ம் நியாயமா எதாவது பேசிட்டா மட்டும்….பேசாதடானு சொல்லி வாய அடச்சிருவியே….”

மத்த நேரம் மாதிரி ஆதி பேசுறதுக்கு மீனாட்சியால பதிலே பேச முடியல….என்ன அவன் சொல்றதும் ஒரு வகையில உண்மைதான்…..

ஆதியோட அம்மா ஒரு சாதாரண குடும்பத்துல பொளந்தவங்க….ஆனா அவங்க அப்பா முத்தய்யா….அந்த ஊர்லயே பேரும் புகழுமா இருக்க வீட்ல பொறந்தவரு….பயங்கர செல்வக்கான ஆளு….யாரு இல்லைனு கேட்டாலும் ஒவ்வொன்னும் பாத்து பாத்து செய்வாரு….நல்ல மரியாதையான ஆளு. ….

எவ்ளோ நல்ல குணம் கொண்டவங்களா இருந்தாலும் அவங்க கிட்ட எதாவது ஒரு கெட்ட குணமோ இல்ல பழக்கமோ இருக்கும்….அதே மாதிரிதா இவரும் குடின்ற ஒரு கொடூர அரக்கன் பிடில மாட்டி இருந்தாரு….

ஆரம்பத்துல ரொம்ப கம்மியா ஒரு சந்தோஷத்துக்காக ஆரமிச்சது….கொஞ்ச வருஷம் போக போக அதே விஷயம் அவரோட சந்தோஷத்த முழுவதுமா தொலைக்க காரணமா மாற ஆரம்பிச்சது….

பெரிய மதிப்பு மரியாதையோட குடும்பத்துக்கு மருமகளா போக போறோம்ற கொண்டாட்டத்துல இருந்த மீனாட்சிக்கு அப்போ தெரியாது… முத்தையாவோட குடி பழக்கத்தால ஓட்டு மொத்த குடும்பத்தோட வாழ்க்கையே தலைகீழா மாறப் போகுதுனு……

…கதை தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்