Loading

இதெல்லாம் முன்ன பின்ன பழகியிருந்தா தெரிஞ்சிருக்காதோ என்னமோ….இப்போ இதை எல்லாம் ஏத்துக்கவே முடியல…ரொம்ப வருத்தமா இருக்கு…..

 

எப்படி மீரா இங்க நின்னுட்டு இருக்க அப்படினு மீனாட்சி கேக்க….

 

இல்ல அத்த அவன் எழுந்திரிச்சிட்டானானு பாக்கதான் இங்க வந்தேன்…..எனக்கு ஒரு மாதிரி தல சுத்தலா வருது….. வாங்க போலாம்….அவன் எழுந்து வந்த பிறகு எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் அப்படினு சொல்லி மீரா அவ அத்தைய கூட்டிட்டு சமயல் வேலைய பாக்க போய்ட்டா…..

 

ஒரு பக்கம் மீனாட்சி துணி துவைக்க…மீரா சமயல் வேலைய பாத்துட்டு இருந்தா…. அப்போ கிச்சன் பக்கம் கண்ணே முழிக்க முடியாம சோர்ந்து போய் வந்த ஆதி..கொஞ்சம் காஃபி குடுனு சைகையிலயே கேட்டான்……கேட்டுட்டு போய் டிவி முன்னாடி உக்காந்துட்டான்…..

 

ஐயோ…என் கிட்ட அவன் காஃபி கேட்டுட்டான்… ச்ச்சே ஒரு மாதிரி சந்தோஷமா இருக்கே….முதல் முறையா என் கிட்ட கேட்டிருக்கான்…..அப்படினு ஆஹா ஓஹோனு மனசுக்குள்ளையே பேசிட்டு பட்டாம்பூச்சி மாதிரி அங்கையும் இங்கையுமா ஜாலியா குதிச்சு பயந்துகிட்டு அவனுக்கு காஃபி போட்டுட்டு இருந்தா…..

 

சந்தோஷத்துல துள்ளி குதிச்சிட்டு இருந்த மீராவுக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வருது….இவன் போதைல யார் கிச்சன்ல இருக்கானு சரியா பாக்காம நம்ம கிட்ட கேட்டுட்டானோ அப்படினு நெனச்சுட்டு…. அப்புறம் சரி அப்படியாவது நம்ம கிட்ட கேட்டானே….அப்படினு சொல்லி அவள அவளே திருப்தி படுத்திகிட்டா….

 

காஃபி போட்டு முடிச்சிட்டு…கொண்டு போய் அவன் கைல குடுத்தா….. அவனும் வாங்குனான்….பாக்க நல்லா தெளிவா இருக்க மாதிரிதான் தெரிஞ்சது….அவ்ளோ ஒன்னும் மோசமா தெரியல….காஃபிய என் கையால குடுக்க அத அவன் கைல வாங்கிட்டானேன்ற ஆனந்தத்துல பெருமூச்சு விட்டு அந்த இடத்த விட்டு நகர அடி எடுத்து வச்சு திரும்புனே…உடனே… ஏய் போறதுதான் போற அந்த டிவி பக்கத்துல இருக்க ரிமோட் எடுத்து குடுத்துட்டு போ… அப்படினு ஆதி சொல்ல….இப்போ நம்ம காதுல கேட்ட விஷயம் நிஜமா இல்ல பிரம்மையானு தெரியாம அவ முழிக்க…..ஏய் சொன்னது காதுல கேக்கலயா…அத எடுத்து குடுத்துட்டு போ அப்படினு அவன் இன்னும் சத்தமா சொல்ல….வேகமா நடந்து போய் டிமோட் எடுத்து குடுத்தா…..வாங்கும் போது வெடுக்குனு வேகமா வாங்குனாலும் அவ கிட்ட அத எடுத்துக் குடுனு கேக்க பேசுன வார்த்தையிலதா அவளோட மொத்த சந்தோஷமு அடங்கி அன்னைக்கு நாள் முழுக்க அதவே நெனச்சு பூரிச்சு போய் இருந்தா…..

 

அது மட்டும் இல்லாம குளிச்சுட்டு வந்து ரூம்க்கு சட்ட எடுக்க போகும் போது அவன் படுத்து இருந்த ரூம்ல நேத்து அவன் செஞ்ச காரியத்தால பயங்கரமான கெட்ட நாத்தம் அத அவனாலையே தாங்கிக்க முடியல இதுல மீராவும் மீனாட்சியும் எப்படி தாங்கிருப்பாங்களோனு நெனச்சானோ என்னமோ தெரியல….அவனே அந்த ரூம தண்ணி ஊத்தி கழுவி விட்டுட்டு ஸ்ப்ரே எடுத்துட்டு போய் ரூம் முழுக்க அடிச்சிட்டு இருந்தான்…..

 

ரூம கழுவி விடுறதுக்காக அவன் பாத் ரூம்ல இருந்து பக்கெட் நெறையா தண்ணி தூக்கிட்டு போனத பாத்த மீரா இவன் என்ன பண்ண போறான் அப்படினு தெரிஞ்சுக்க அவன் பின்னாடியே போய் அந்த ரூம் வாசல்ல நின்னு எட்டி பாத்துட்டு இருந்தா….அவன் தண்ணி தூக்க வெளிய வரும் போது அவ அங்க இருந்த பீரோ பின்னாடி ஒழிஞ்சுகிட்டு….அவன் ரூம்க்கு உள்ள போன பிறகு அவன் என்ன பண்றான் அப்படினு எட்டி எட்டி பாத்து ரசிச்சிட்டு இருந்தா….இன்னைக்கு அது வரைக்கும் நடந்தது அப்போதைக்கு நடந்துட்டு இருந்ததுனு எல்லாத்தையும் பாத்துட்டு ஆர்வம் பொங்கி இத இப்பவே அத்தை கிட்ட சொல்லனும்னு மீரா வீட்டுக்கு வெளிய துணி தொவச்சிட்டு இருந்த மீனாட்சி கிட்ட போனா…..

 

“என்ன முகம் எல்லாம் ஒரே பல்லா இருக்கு… சமச்சு முடிச்சிட்டியா…..என்ன பண்றான் உன் உத்தம புருஷன்….தூக்கத்துல இருந்து எழுந்திரிச்சிட்டானா இல்ல இன்னும் இல்லையா”

 

“ஐயோ அத்த…..இது நம்ம வீடானே எனக்கு சந்தேகமா இருக்கு…..நடக்குறது எல்லாம் கனவு மாதிரி இருக்கு “

 

“ஏன் என்னாச்சு….கேக்குற கேள்விக்கு பதில் சொல்லு மீரா அத விட்டுட்டு சிரிச்சிட்டே இருக்க….யேய் இப்போ என்ன நடந்துருச்சுனு துள்ளிகிட்டு இருக்க “

 

“இன்னைக்கு காலைல இருந்து உங்க பையன் பன்றது எல்லாமே ஆச்சர்யமாவும் வேடிக்கையாவும் இருக்கு…..”

 

“என்ன பண்ணான்….”

 

“இங்க வாங்க ஒரு நிமிஷம் “

 

அப்படினு சொல்லி மீனாட்சிய மீரா வீட்டுக்குள்ள கூட்டிட்டு போய் அவ எப்படி மறஞ்சு நின்னு பாத்தாளோ அதே மாதிரியே பாக்க வச்சா…..அந்த காட்சிய தான் ரெண்டு கண்ணால பாத்த மீனாட்சிக்கு அப்படி ஒரு ஆனந்தம்…..சிரிச்ச முகம் மாறாம கொஞ்சம் கூட சலிக்காம பாத்துட்டு இருந்தாங்க….பையன் ரூம கழுவி ஸ்ப்ரே அடிச்சிட்டு…… ஹ்ம்ம் இப்போ ஓரளவு பரவாயில்ல…அப்படினு சொல்லிட்டு ரூம விட்டு வெளிய வந்தான்….அவன் வந்த நேரம் அப்படியே வசந்தியும் டேய் ஆதி அப்படினு சொல்லிட்டு வீட்டுக்குள்ள வந்தா…..

 

வசந்தி வீட்டுக்குள்ள வந்ததுமே…வாங்க அண்ணி….வாங்க…..அப்படினு கூப்பிட்டுட்டு உடனே கிச்சன்ல போய் டீ போட ஆரம்பிச்சா மீரா…..என்னவாம் ஆதிக்கு என்ன வச்சிருக்க அப்படினு ஆதி கேக்க….. ம்ம்ம் காசு எதாவது கேக்க வந்திருப்பாடா அவ அப்படினு மீனாட்சி சொன்னாங்க…..

 

ம்ம்ம் ஆளாலுக்கு ஒவ்வொன்னு சொன்னீங்கனா நான் கோச்சுகிட்டு போயிருவேன் பாத்துக்கோங்க….இந்த வீட்ல என்ன மதிக்குற ஒரே ஆள் மீராதான் அவள மட்டும் எனக்கு புடிக்கும்…..இவன் கூட நாளைக்கே போயிருவான்…..அம்மா நீ என் கூடதா இருக்கனும் மனசுல வச்சுக்க….அப்படினு வசந்தி உரிமையோட பேசிட்டு இருந்தா…..

 

இவ்ளோ உரிமையோட அதிகாரமா பேசுர பவர் இருக்குனா கண்டிப்பா அந்த வீட்ல ஒரு முக்கியமான ஆளாதா இருக்கனும்…. ம்ம் ஆமா முக்கியமான ஆள்தான்…வசந்தி வேற யாரும் இல்ல ஆதியோ கூட பொறந்த அக்கா… மீனாட்சியோட மகள்…..

 

ஆதி படிச்ச அளவுக்கு வசந்தி படிக்கல….ஸ்கூல் மட்டும்தான் படிச்சா காலேஜ் படிக்குற வாய்ப்பு எல்லாம் அப்போதைய நிலமையில அவளுக்கு கெடைக்கவே இல்ல…. ஏன்னா யோசிச்சு பாக்க முடியாத அளவுக்கு வறுமை இருந்தது வீட்ல…..அதுனால உள்ளூர்லயே பொண்ணு கேக்கவும் யோசிக்காம கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க….. கல்யாண வாழ்க்கையில எந்த கஷ்டமு இல்ல அவ நல்லாதான் இருந்தா….இப்பவும் நல்லாதா இருக்கா…. ரெண்டு ஆம்பள பசங்க அவளுக்கு….ரெண்டுல ஒன்னு வாலு இன்னொன்னு வாயாடி அப்படியே அவள மாதிரியே….

 

 

…கதை தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்