“இப்போ நான் இருக்க டென்ஷன்ல நீ கேக்குற கேள்விக்கு வேற பதில் சொல்லனுமா…. சரி என்னனு சொல்லு “
“தம்பி இங்க இருக்க எல்லா ச்சேர்களுக்கும் சொந்தக்காரன் நான்தான் “
“அப்படியா….சரி இருந்துட்டுப் போ….இப்போ என்னன்ற “
“இல்ல ஒடஞ்ச ச்சேருக்கு காசு குடுத்தீங்கன்னாஹ… உங்களுக்கு புன்னியமா போகும்….கோவக்காரரா வேற இருக்கீங்க…உங்க கிட்ட கேக்கவே எனக்கு பயமா இருந்துச்சு…ஆனா வேற வழி இல்லாமதான் நான் கேக்கவே கேட்டேன் “
“ச்சேரா… யார் ஒடச்சா?”
“உங்க பின்னாடி உக்காந்திருக்கே….அந்த பொண்ணுதான் ஒடச்சது “
அதுவரைக்கும் இருந்தது எல்லாம் ஒரு கோவமே இல்லன்ற அளவுக்கு அவனோட முகம் இன்னும் கொஞ்சம் பயங்கரத்த காட்ட….அத பாத்த எல்லாருமே ச்சே என்ன இப்படி கோவப் படுறான்… இதெல்லாம் நல்லதுக்கா?…அப்படினு நெனைக்குற அளவுக்கு அதிகமாக எரிச்சலோட இருந்தான்…..
ஏய் நீ சொல்றனு காசு தர முடியாது…வந்து காட்டு…. அப்போதான் தருவேன்….அப்படினு அவன் சொல்ல….இதோ இதுதான் அப்படினு அவரும் காட்டுனாரு….பாக்க சின்னது மாதிரி இருந்தது…..
“யோவ் சின்ன ச்சேரா இருக்கு….இத எப்படி அவ ஒடச்சானு சொல்ற நீ “
“தம்பி இதுல வந்து அந்த பொண்ணு உக்காந்துச்சு…..அப்படியே இந்த ச்சேர் ஒடஞ்சிருச்சு தம்பி “
“என்னது இதுல உக்காந்தாளா…..யோவ் யார் கிட்ட பொய் சொல்ற…ஒருத்தன் கெடச்சிட்டா போதுமே…உடனே ஊரே சேந்து மிளகா அரச்சிருவீங்களே….இந்த சின்ன ச்சேர்ல எப்படி அவ உக்கார முடியும்…. ம்ம்ம் “
“ச்சேர் சின்னது கிடையாது….அளவான ச்சேர்தான்….இதே அளவு ச்சேர்தான் கோவில் முழுக்க எல்லா இடத்துலயும் போட்டிருக்கோம்….ஆனா பிளாஸ்டிக் ச்சேர் ஓரளவுக்குதா பாரம் தாங்கும்…சரியா….பாக்க படிச்ச பையன் மாதிரி தெரியிரிங்க….இன்னும் விளக்கமா நான் எதையும் சொல்லனும்னு அவசியம் இல்ல…உங்களுக்கே புரிஞ்சிருக்கும்னு நெனைக்குறேன் “
ச்சேர் உரிமையாளர் இந்த மாதிரியான கடுமையான வார்த்தைய ரொம்ப சாதாரணமா சிரிச்சு கிட்டே பேசிட்டாரு…..அவனுக்கு ஆத்திரம் இவ்ளோதா வருதுனு எல்லாம் ஒரு கணக்கே இல்ல…என்ன பண்றது எதுவும் எதிர்த்து பேச முடியாத நெலமையில இருந்ததால மொரச்சுகிட்டே ச்சேருக்கான காசு எவ்ளோனு மட்டும் சொல்லு தேவையில்லாத பேச்ச எல்லாம் பேசாத அப்படினு சொல்லிட்டு அதுக்கான காச குடுத்துட்டு….அங்க இருந்து கெளம்புனான்…
இதெல்லாம் நடக்கும் போது மீராவோட மனநிலை எப்படி இருந்திருக்கும்னு கொஞ்சம் நெனச்சு பாருங்க….நெனைக்கவே ரொம்ப பயமா இருக்குல…பாவம் அவ…வீட்டுக்கு போன பிறகு இன்னும் என்னென்ன பேசப் போரானோ அப்படின்ற பயத்துலயே இருந்தா……
ஆனா வீட்டுக்கு போனதும் அவ நெனச்சது மாதிரி அவன் எதுவுமே பேசல…தனியா ஒரு ரூம்ல போய் இருந்துகிட்டான்…இவளும் இருந்த வேலைய பாத்துட்டு அவளோட மாமியார் கூடவே உக்காந்து சீரியல் பாத்துட்டு இருந்தா…..
நாலு மணி நேரமா ரூம் உள்ளையே இருந்தவன் வெளிய வந்து அம்மா பசிக்குது அப்படினு சொல்லிட்டு வந்து உக்காந்தான்…..டிவி முன்னாடி உக்காந்திருந்த மாமியாரும் மருமகளும் ஒருத்தர ஒருத்தர் பாத்துகிட்டாங்க…..
“அவனுக்கு நீ போய் சாப்பாடு எடுத்து வைமா போ….”
“இல்ல அத்த அவன் என்ன திட்டுவான்….உங்களதான கூப்பிட்டான் நீங்களே போய் எடுத்து வைங்க “
“அதெல்லாம் ஒன்னும் திட்ட மாட்டான்….நீ போ….”
“எனக்கு பயமா இருக்கு அதான் உங்கள போக சொன்னேன் “
“என்ன பயம் உனக்கு?”
“அதான் சொன்னனே….கோவில்ல நடந்தத “
“ஓஓஓ….அதுவா….அட அதுக்கு அப்புறம்தா அவன் அதப் பத்தி பேசவே இல்லையே “
“இல்ல அத பத்தி பேசாமதா இருக்கான்….ஆனா நான் போய் என் முகத்த பாத்தான்னா அவனுக்கு எல்லாமே நியாபகம் வந்துரும் அதான் சொல்றேன் “
“அதுக்காக கட்டுன புருஷன் கிட்ட முகத்த காட்டாமையே இருக்க முடியுமா….நீ போ அவன் எதாவது பேசுனா நான் பாத்துக்குறேன் “
“ம்ம்ம் “
அத்த குடுத்த நம்பிக்கையில…ஒரு தயக்கத்தோடைய எழுந்து போனா…..அவங்க சொன்னது மாதிரியே சாப்பாடும் எடுத்து வச்சா….அவனும் எதுவுமே பேசல….அமைதியா சாப்பிட்டுட்டு எழுந்து போய்ட்டான்…..
பைக் சாவி எடுத்து பர்ஸ் எல்லாமே எடுத்துட்டு அம்மா கிட்ட… ஃபிரண்ட்ஸ பாத்துட்டு வரேன்மா அப்படினு சொல்லிட்டு போனான்…..
மணி நைட் பத்துக்கு மேல ஆகியும் வீட்டு பக்கம் வராததால பதறிப் போன அம்மாவும் மீராவும்…அவனுக்கு மாத்தி மாத்தி கால் பண்ணாங்க…ஆனா அவன் எடுக்கவே இல்ல….அதுனால வழில போற வர்ற எல்லார் கிட்டையும் என் பையன எங்கையாவது பாத்தா வீட்டுக்கு வர சொல்லுங்க அப்படினு சொல்லி விட்டுட்டு…வாசல்லையே ரெண்டு பேரும் காவக் காத்துட்டு இருந்தாங்க…..
இருட்டுல தூரத்துல ரெண்டு லைட் எரியுர மாதிரி வெளிச்சம் தெரிஞ்சது….பைக்லதான் யாரோ வர்றாங்க அப்படினு பாத்துட்டு இருந்தாங்க அது கிட்ட வர வரதான் தெரிஞ்சது அது ரெண்டு பைக் இல்ல….காருனு….வீட்டு வாசல்ல வந்து நிறுத்துன பின்னாடிதா தெரிஞ்சது அது போலீஸ் கார்னு….என்ன அது போலீஸ் வண்டி எல்லாம் நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்குது…என்னவா இருக்கும்…அப்படினு அவங்க ரெண்டு பேரும் முனுமுனுத்த சத்தம் வண்டிய விட்டு கீழ இறங்குன போலீஸ் ஆஃபிசருக்கு கேட்ருச்சு…..
ஒன்னும் இல்ல பயம் வேண்டாம்…
“இது ஆதியோட வீடுதான……நீங்க ஆதியோட அம்மாதான?”
“ஆமா சார்….என்ன விஷயம்….நீங்க எதுக்கு வந்திருக்கீங்க….என் பையன் என்ன தப்பு பண்ணிருக்கான்….ஏன் அவன கேக்குறீங்க….நீங்க தப்பான செய்திய கேட்டுட்டு….இங்க வந்துட்டீங்கனு நெனைக்குறேன்…நீங்க நெனைக்குற மாதிரி எல்லாம் அவன் கிடையாது…..கொஞ்சம் கோவக் காரன் அவ்ளோதான்…மத்தபடி அவன் தங்கம் சார்…..”
“அம்மா…. அம்மா…. கொஞ்சம் பொறுங்க….நான் இப்ப எதுவுமே சொல்லலையே….நீங்களா பேசிட்டே போறீங்க…. ஒன்னும் பிரச்சன இல்ல…நீங்க பயப்படாதீங்க…..அவர் எனக்கு ஒரு உதவி செஞ்சாரு…அதுக்காக அவர பாத்து ஒரு நன்றி சொல்லலானு பல
ஃபிளாட்ல இருக்க உங்க வீட்டுக்கு போனே….வீடு பூட்டி இருந்தது….அதுனால அங்க இருக்க வாட்ச் மேன் கிட்ட கேட்டேன்….அவர்தான் நீங்க திருவிழாவுக்கு ஊருக்கு வந்திருக்குறதா சொன்னாரு….அதுனால இங்கையே வந்துட்டேன்…நிறையா டைம் ஆதி கிட்ட பேசிருக்கேன் பாத்திருக்கேன்…ஆனா நம்பர் வாங்காம எப்படி இருந்தேனு தெரியல…அந்த வாட்ச்மேன் கிட்டையும் கேட்டேன்…. அவர் நான் புதுசு சார் ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் வேலைக்கு சேந்தேன்….அதுனால எனக்குத் தெரியாது அப்படினு சொல்லிட்டாரு…..சரி முதல்ல ஊருக்கு போவோம் அங்க போய்ட்டு எப்படியாவது விசாரிச்சு வீட்ட கண்டுபுடிச்சுக்கலாம் அப்படினுதான் வந்தேன்……”
“ஓஓ…அப்படிங்களா…ரொம்ப சந்தோஷம் நான் கூட என்னமோ ஏதோனு பயந்துட்டேன் “
…கதை தொடரும்…