“செல்லம்மா….இப்படி எல்லாம் பேசக் கூடாது…ஆதியே அப்படி பேசுனாலும்…. நீதான் அத்தைய நல்லபடியா புரிஞ்சுக்கனும்…. நீயே இப்படி பேசுனா நான் என்ன பண்ணுவேன்”
“நீங்க ஒன்னும் பண்ண வேணா….அங்கையே இருங்க…..”
பச்சைப் பிள்ளைகளின் பேச்சு வார்த்தை போலவே பல நிமிடங்கள் பேசிய படி அழுத இருவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஒருத்தரை மாற்றி ஒருத்தர் ஆறுதல் சொல்லிக் கொண்டார்கள்…..ஆனாலும் கால் கட் செய்யும் எண்ணம் இருவருக்குமே இல்லை….அந்த நேரம் பார்த்து ஆதிக்கு கண் பார்வை சொக்கி போய் மங்களாக….மீரா போதும்…நாளைக்கு நான் வேலைக்கு போன பிறகு ரெண்டு பேரும் இஷ்டத்துக்கு கத பேசுங்க…இப்போ என்னால முடியல…இப்பவே தூங்கனும் எனக்கு….என்று முனங்க….
அத்த இவ்ளோ நேரமா டிராவல் பண்ணி வந்தது ரொம்ப கஷ்டமா இருக்கு….நாங்க ரெஸ்ட் எடுக்குறோம்…நான் நாளைக்கு கால் பண்றேன் அப்படினு சொல்ல….அப்படியாமா சரி சரி ரெண்டு பேரும் பாத்து இருங்கனு சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு….இருவரும் படுக்கையறைய நாடினார்கள்…..
போனதும் பஞ்சு மெத்தையில் குதித்து தலையணையை கட்டிக்கொண்டு கண் மூடி பெரு மூச்சு விட்ட ஆதி தலையைத் திருப்பி அவள் படுத்து விட்டாளா என்று சோதித்தான்…..ஆனால் அவன் பக்கத்தில் அவள் இல்லை…அதனால் சுற்றி முற்றி பார்த்தான் அப்படியும் அவள் அவன் கண்ணிற்கு தென்படவில்லை….
சட்டென்று எழுந்து கதவைத் திறந்தான்….தனியா விட்டுட்டு எங்க போற என்ற சத்தம் கேட்கவும் திறந்த கதவை மீண்டும் மூடி வைத்துவிட்டு திரும்பினான்…..கட்டிலிற்கும் அந்த அறையின் சுவற்றிற்கும் இருக்கும் அந்த சிறிய இடைவெளியில் சுருக்கி படுத்துக்கொண்டு அவனையே பார்த்தபடி இருந்தாள்…..
அவளை அப்படி பார்த்ததும்…தொண்டைக்கும் நெஞ்சிற்கும் இடையில் ஏதோ ஒரு அழுத்தம் சிக்கிக்கொண்டு சித்திரவதை படுத்த அசையாமல் அங்கையே நின்று கொண்டு அவளைப் பார்த்தான்…..ஆனால் அவள் முகத்திலும் பேச்சிலும் எந்தவித மாற்றமும் இல்லை….ஆமாம் அவள் அப்படியேதான் இருக்கிறாள்…நாம்தான் மாறிவிட்டோம்…என்று திகைத்தபடியே கட்டிலில் போய் படுத்தான்…..
அவளை மேல வந்து தன் அருகில் தூங்க சொல்ல நினைத்தான்….ஆனால் அதை அவளிடம் வெளிப்படுத்த சரியான வார்த்தை கிடைக்காமல் தனக்குள் பேசிக்கொண்டு நேரத்தைக் கழித்தான்…
ஒரு முறை ஒருவர் மனதில் நாம் யார் என்பது எப்படி பதிவாகிறதோ….அதையே அவர் மனம் ஏற்றுக்கொள்கிறது…. சூழ்நிலை காரணமாக நான் அவ்வாறு நடந்து கொண்டேன் அது நான் அல்ல…என் குணம் வேறு என்று காட்ட எத்தனை வித்தை காட்ட வேண்டும் தெரியுமா…. என்னதான் மாய மந்திரம் செய்தாலும் கண்ணிமைக்கும் வேலையில் உடனே அந்த புரிதல் வந்துவிடாது….நேரம் காலமும் அதற்கு ஒத்துழைக்கனும்…..
எவ்ளோ பெரிய சிக்கலை சந்தித்துக் கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நமக்குள் இருந்து எட்டிப் பார்த்து….விடு எல்லாமே இன்னும் கொஞ்ச நாள்ல சரி ஆகிரும்….என்று ஒரு ஆழமான நம்பிக்கையைக் குடுத்து விட்டு தன்னிடம் சேரும்….
அதே நம்பிக்கையில்தான் அவன் அமைதிகாத்து உறங்கினான்….
திடீர் என்று கண் விழித்த மீரா…சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரத்தை கண்ணைத் தேய்த்தபடியே பார்த்தாள்….மணி ஒன்பது என காட்டியதும் போர்வையுடன் வேகமெடுத்து எழுந்த மீராவின் கவனம் கட்டிலை நோக்க….அங்கு தூங்கிய ஆதியைக் காணவில்லை என்றதும் கதவைத் திறந்து வீடு முழுக்கத் தேடியது…. எவ்விடத்திலும் அவனைக் காணவில்லை என்றதும் சட்று நேரத்தில் இடி விழுந்த மரம் போல பதற்றத்தில் எரிந்து புகைந்து கொண்டிருந்தாள்….
அவனைத் தேடியபடியே அங்கும் இங்குமாய் நடக்கும் போது கிச்சனில் சமையல் மேடையில் ஒரு காகிதத்தை கத்தி தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது….அதைப் பார்த்ததும் பிரித்துப் படிக்கத் தொடங்கினாள்…..
அவள் பார்வை அதில் இருக்கும் வார்த்தைகளை மேய….வாய் மென்று கொண்டு இருக்கையில்…. அவள் மனது அதை செரித்துக் கொண்டு….காதல் எனும் பேராற்றலைப் பெற்றது….
காகிதத்தில் முதல் வரி….என்ன மீரா தூக்கம் போதுமா என்று தொடங்கியது….
புதுசா ரொம்ப நேரம் டிராவல் பண்ணிருக்கீல அப்படிதான் டயடா இருக்கும்… அதுனாலதான் லேட்டா எந்திரிச்சிருக்க….இன்னும் கொஞ்ச நேரம் படுத்து தூங்கி எந்திரி மொத்தமா சரி ஆகிரும்….தூங்குறதுக்கு முன்னாடி மறக்காம சாப்பிட்ரு…. டேபில்ல எடுத்து வச்சிருக்கேன்….நான் எட்டு மணிக்கே கம்பெனிக்கு போகனும் அதுனாலதான் சீக்கிரமா கெளம்பிட்டேன்….. சொல்லிட்டு போலானு வந்தேன் நீ அசந்து தூங்கிட்டு இருந்த அத சொல்லதான் இந்த லெட்டர்…. எனக்கு வேற எப்படி சொல்றதுனு தெரியல…..அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்….ஐ லவ் யூ மீரா…..
காகிதத்தில் புதைத்து வைத்திருந்த வார்த்தைகள் அவள் கண்ணைப் பறிக்க அந்த கடைசி வார்த்தை மட்டும் இதயத்தில் ஒரு அதிர்வைக் கொடுத்தது….. சந்தோஷம், ஆர்வம், சந்தேகம், ஏக்கம் என பல உணர்வுகள் அவள் மனதை வட்டமிட்டு சூழ்ந்து கொண்டு அவளை அவளாய் அந்நாள் இருக்கவிடாமல் அலைக்கழித்தது….
நொடிக்கு நொடி மாறி மாறி வேடிக்கை காட்டும் அவள் உணர்வுகளோடு போராடி எப்படியோ பொழுதைக் கடந்தாள்….மாலை ஆறு மணி இருக்கும்…ஏதோ ஒரு சிந்தனையில் துணியை மடித்துக் கொண்டிருந்தாள் அவ்வேளையில் அவள் முதுகிற்கு கீழ் தொங்கும் சேலை முந்தானையில் கைவைத்து இழுத்து இடுப்போடு வளைத்து பிடித்துக்கொண்டான்…..அவன் மார்போடு முகம் உரசியதும் தலையை பின் தள்ளி அவனைப் பார்க்க….இதற்கு அதுவே மேல் என்று மீண்டும் மார்போடு சாய்ந்து கொண்டாள்…..
போதும் போதும் என்று அவள் விலக….இது எல்லாம் ரொம்ப கம்மி என்று அவன் விளக்கம் கொடுக்க…அவன் குறும்புதனத்தை ரசித்து சிரித்தபடியே அவனை விட்டு விலகி…. அவன் வியர்வையின் வீச்சம் பற்றி பேசினால்….இரு குளிச்சிட்டு வந்து வச்சுக்குறேன் என்று வீர வசனம் பேசியபடியே குளியலறைக்குள் புகுந்தான் ஆதி….
என்னதான் வெளியில் வீராப்பாக பேசினாலும்…உள்ளிருக்கும் ஆசைக்கு யாராலும் அணை போட முடியாது…அது உற்றவரைப் பார்த்ததும் வெளிப்பட்டுத்தான் ஆகும்…. அதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை….
அந்த அணைய சுக்கு நூறாய் உடைக்க உதவியது ஒரு காகிதமும் அவன் காதலும் கொஞ்சம் மையும்தான்….
சமையலறையில் இருந்த லெட்டரில் பதிக்கப்பட்ட ஐ லவ் யூ என்ற வார்த்தை தந்த உணர்வுகளோ ஏராளம்…. அதிலிருந்து மீள்வதற்கு முன்பே வேறொரு விதத்தில் வெளிப்படுத்திவிட்டான்…. கெட்டிக்காரன்….
வீட்டில் அவளுக்கான வேலை எதாவது இருக்குமா என்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள் எதுவுமே சிக்கவில்லை என்றதும் அவனது அலமாரியை கலைத்துக் கொட்டி…. மீண்டும் முதலில் இருந்து அடுக்க ஆரம்பித்தாள்….
அவளைக் கை பிடிப்பதற்காக வேர்வை ஊற்றியபடி….