Loading

“என்ன மீரா என்ன மறக்க முடியல உன்னால…என்னாச்சு உனக்கு”…என்று ஆதி மீராவின் கையை இருக்கி பிடித்து இருமுறை உதறும் போதுதான்…நினைவு கொண்டாள்…ஓஓ மனசுக்குள்ள பேசுறதா நெனச்சு வெளியவே பேசிட்டோமா…..

 

“அது ஒன்னு இல்ல…நம்ம ரெண்டு பேரும் கைய புடிச்சுக்கிட்டு நடந்து வந்தோம்ல அததான் என்னால மறக்க முடியலனு சொன்னேன்…வேற ஒன்னும் இல்ல”

 

“அது நல்ல விஷயம்தான அத ஏன் நீ மறக்கனும்னு நெனக்குற “

 

“இல்ல இப்போ அத தவிர வேற எதுமே தோனல…அதுவேதா மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு….”

 

“எத்தனையோ விதத்துல நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணிருக்கேன் ஆனா நீ இந்த மாதிரி டிஸ்டர்ப் ஆகுறது எனக்குப் புடிச்சிருக்கு மீரா “

 

மனதில் அத்தனை வேதனையை மறைத்துக்கொண்டு முகம் பார்க்கும் சிறு பிள்ளைப் போல வெகுளியாய் அவனைப் பார்த்து சிரித்தாள்….

 

பந்தி முடிந்ததும்… கொண்டு வந்த பண்டம் எல்லாம் கழுவியும் கழுவாமையும்…சிலது உடைந்தும்…சிலது உருப்படியாவும் சாக்கு மூட்டைக்குள் தஞ்சம் அடைந்தது…வந்த வழியே திரும்பி போன பாதையில் இருந்த மரங்களும் மலைகளும் செடி கொடிகளும்…காலையில் இருந்த சந்தோஷமும் சிரிப்பும் சோர்வடைந்த நிலையில் முகம் வாடி வரும் அத்தனை பேரையும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தது….

 

வீட்டிற்கு போகும் முன்னறே பாதி வழியில் வண்டியை நிறுத்தினான் ஆதி….

 

“என்ன ஆச்சு மாப்ள”

 

“மாமா நானும் மீராவும் கெளம்புறோம் மாமா…இதுக்கு மேல லீவ் போட்டா அது இப்போ செய்ற வேலைக்கே ஆபத்தா போய் முடிஞ்சிரும்”

 

“அப்படியா….ரொம்ப அசதியா இருக்கீங்க பாக்கவே… ரெஸ்ட் எடுத்துட்டு காலைல கூட கெளம்பி போலாம்ல”

 

“இல்ல மாமா அது சரிப்பட்டு வராது…இப்பவே போனாதான் நாளைக்கு வேலைக்கு போக கரெக்டா இருக்கும்”

 

“ம்ம்ம் சரி…ரொம்ப அவசியமா போகனும்னு சொல்றீங்க….இங்கையே இறங்கி என்ன பண்ண போறீங்க….பேக் எல்லாம் கொண்டு வரவே இல்ல “

 

“என் ஃபிரண்ட எடுத்துட்டு வர சொல்லிருக்கேன்….அவன் வர இன்னும் அஞ்சு நிமிஷம் ஆகும்…அதுக்குள்ள பஸ்ஸும் வந்துரும்…நேரம் சரியா இருக்கும் மாமா “

 

“முன்னாடியே ஏற்பாடு பண்ணீட்டீங்க போல….”

 

ஆதி மாமாவிடம் புறப்படும் சேதியை தெரியப்படுத்தும் வேளையிலே ஆதியின் வலது கையின் மீது வசந்தி சாய்ந்து…பேச்சற்று அமைதியடைந்தாள்….

 

மீராவின் ஒரு கையை மீனாட்சியும்…இன்னொரு கையை வசந்தியின் இரு மகன்களும் பிடித்துக்கொண்டு பிரிய மனம் இல்லாம் ஏக்கத்தோடு நின்றிருந்தார்கள்….

 

வண்டியை விட்டு இருவரும் கீழே இறங்க…. மாறி மாறி கண்ணீரால் பக்குவம் சொல்லி விடைபெற்றுக் கொண்டார்கள்….

 

தங்களை விட்டுக் கடந்து போன வண்டியில் கடைசி ஜன்னலின் வழியாக தலையை நீட்டி எட்டிப் பார்த்த மீனாட்சியின் அன்பு ஆதியையும் மீராவையும் அழ வைத்தது….கண்ணை விட்டு கண்ணீர் கீழே இறங்கியதும் உடனே துடைத்துக்கொண்டு…விட்டத்தைப் பார்த்தபடியே ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதல் சொல்லிக்கொண்டே நடந்து போனார்கள்….

 

ஆதியின் நண்பன் பேக்குகளைக் கொண்டு வந்து சேர்த்த அடுத்த நிமிடத்தில் பஸ் வந்து சேர்ந்தது….ஆதியுடன் தொடங்கும் முன்பு பழக்கப்படாத இந்த புதிய பயணம் என்னவெல்லாம் கற்றுத்தரப் போகிறதோ என்ற அச்சத்துடன் அடியெடுத்து வைத்து பஸ் ஏறி இருக்கையின் ஜன்னலோரப் பகுதியில் அமர்ந்தாள் மீரா….அவள் பின்னாலே வந்த ஆதிக்கோ அத்தனை புன்னகை முகத்தில்…சந்தோஷ வெள்ளத்தில் நீந்திக் கொண்டிப்பது போல புத்துணர்வுடன் இருந்தான்…

 

இருக்கையின் அருகே வந்து நின்றவன்…கீழயும் மேலயும் பஸ்ஸில் வேடிக்கை பார்த்தபடியே நின்றிருந்தான்……

 

“உக்காரு….”

 

“ம்ம்ம் (பதில் பேசாமல் ம்ம்ம் என்று மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் அது போலவே பார்த்துக் கொண்டிருந்தான்)”

 

“என்ன இவளே ரெண்டு சீட்ல முக்கால்வாசி இடத்துல உக்காந்துகிட்டா… நம்ம எப்படி இதுல உக்காருறது…இந்த இடம் எப்படி நமக்குப் பத்தும்…அப்படினு யோசிக்குறியா…. ஒன்னும் பிரச்சனையே இல்ல….நீ வேற சீட்ல கூட உக்காந்துக்கோ…நான் தனியாவே உக்காந்துக்குறேன்….தனியா இருக்குறது ஒன்னும் எனக்கு புதுசு இல்ல…..”

 

“மீரா……”

 

மீரா என்று வார்த்தையை இழுத்தவன் ச்ச்ச் ச்ச்சென்று சத்தமிட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தான்….பேக் எல்லாமே கரெக்டா கொண்டு வந்துட்டோமானுதா ச்செக் பண்ணேன்….நீ என்னடானா என்னைய வசந்தி மாதிரி நெனச்சுகிட்டு பேசுற…என்று ஆதி சத்தமில்லாமல் கேக்க….

 

“வசந்தி கூட உன்ன கம்பேர் பண்ணாத…அவங்க என்னைய காயப்படுத்துற மாதிரி சொல்லல “

 

“ம்ம்ம்…அப்போ நான் அப்படி பேசுறனா….நான் எப்போ மீரா உன்ன அப்படி பேசுனேன்….”

 

“நீ எப்பவுமே அப்படிதான் பேசுவ முன்னாடி எல்லாம் “

 

“பழச விட்று மீரா…அப்போ ஏதோ பைத்தியக்காரத்தனமா இருந்துட்டேன்….”

 

“பண்றது எல்லாம் பண்ணிட்டு ஈசியா பழச விட்றுனு சொல்லீருவீங்க….நாங்களும் விட்டுட்டு உங்களுக்கு ஏத்த மாதிரியே இருக்கனும்… அப்படிதான?”

 

“யேய் நான் என்ன சொன்னேன் இப்போ….வேணாம் இதுக்கு மேல நான் எதுவுமே பேசல…நான் அமைதியா இருக்கேன்…நீ ஏதோ கோவத்துல இருக்க போல…வாய்க்கு வந்தது எல்லாம் பேசிட்டு இருக்க….”

 

ஆதிக்கு மீரா மேல எந்த கோவமும் வரவில்லை ஏனென்றால் அவனுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை…இவன் இந்த அளவுக்கு பொறுத்துக் கொள்வதில் அவளுக்கு எந்த சந்தோஷமும் இல்லை….அவளுக்குத் தேவையான ஒரே பதில்…இப்போது நடந்து கொள்ளும் தன்மை ஆதியுடைய குணமா…இல்லை கல்யாணத்திற்கு முன்பு இருந்ததா என்றுதான்….அது மட்டும் அல்லாமல் இப்போதுதான் இந்த புதிய மாற்றமே அது எங்க இருந்து வந்தது என்ற கேள்விக்கும் அவளுக்கு பதில் தேவைப்பட்டது….அவளுக்குள் இருக்கும் இந்த நியாயமான ஆதங்கம் அவளுக்கு இதுவரை பழக்கமே இல்லாத கோபம் பிடிவாதம் வீம்பு என்று அத்தனை குணங்களையும் கற்றுக் கொடுத்தது….

 

வீட்டில் இருக்கும் போதே அவளுக்கு இவ்வாறான எண்ணம் எல்லாம் தோன்றி இருந்த போதிலும் எந்த சூழ்நிலையிலும் எவர் முன்னிலையிலும் அவனை விட்டுக் கொடுத்து பேசிவிடக் கூடாது….அவனைப் போல் நாம் என்னாலும் நடந்துகொள்ளக் கூடாது என்பதே அவளின் ஆகச் சிறந்த குறிக்கோளாக இருந்தது….

 

அதனால்தான் இருவரும் தனிமைப்படும் இவ்வேளையில் இருந்து அவனிடம் பதிலை பதிவிறக்க சில பல காரியங்களைக் கையாளத் தயாராக இருக்கிறாள்….

 

இப்போது அவளின் தன்மையை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் அவள் இருப்பதால்…குணத்தை மாற்றி பேச்சை மாற்றி நடந்துகொள்ளும் விதத்தை மாற்றி வேறொரு மீராவாக ஆதியின் கண்களுக்கு மட்டும் தென்படப் போகிறாள்….

 

பஸ் ஏறிய நேரம் சூரியன் மேற்கை நோக்கி நகர்ந்து நெருங்க இருந்த நேரம் அதனால் கொஞ்ச நேரத்தில் வானம் இருள் மயமானது…

 

 

…கதை தொடரும்…

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்