Loading

மீராவும் கூடவே போனா…மீரா போனா ஆதி எப்படி அங்கையே இருப்பான் அவனும் பின்னாடியே வந்துட்டான்….வசந்தி ரொம்ப வெள்ளந்தி அவளுக்கு மனசுல எதையுமே வச்சுக்கத் தெரியாது எதுவா இருந்தாலும் உடனே சொல்லிருவா….இடம் பொருள் ஏவல் பார்த்து எல்லாம் அவளுக்கு பேச தெரியாது….சில இடத்துல இது ப்ளஸா இருந்தாலும் கூட… நெறையா இடத்துல அப்படி பேசுறது மைனஸாதா தோனும்…. அன்னைக்கும் அப்படிதான் ஆகிருச்சு…

 

“மீரா…ஏன் உன்ன தட்டு தூக்க வேணானு சொன்னேனு‌… இப்போ உனக்கு தெரியுதா”

 

“இப்படி உங்களுக்கு மாதிரி வேர்த்து ஊத்தும்னு வேணானு சொன்னீங்களா?”

 

“இல்ல இல்ல…. ஒல்லியா இருக்க என்னாலையே இத தூக்கிட்டு ஏறி வர முடியலையே…நீ எப்படி வருவ…அத நெனச்சுதான்….நானே தூக்கிக்குறேனு சொன்னேன்…பாவம் நீயே வரும் போது நடக்க முடியாம வந்த….அதுக்கு மேலையும் உன்ன இத தூக்க விட்டிருந்தா…அவ்ளோதா நீ….ஒன்னு சொல்றேனு தப்பா நெனைக்காத…நீ கொஞ்சம் உடம்ப கொறைக்கனும்….இல்லைனா ரொம்ப கஷ்டம் ஆகிரும்….குழந்தை எல்லாம் பொறந்தா….எப்படி வெயிட் போடுதுனே தெரியாது…கப கபனு கூடிடும்….இப்பவே இந்த மாதிரி ஏரியாவுல நடக்க முடியலைனா…இன்னும் காலம் எங்க இருக்கு….யப்பப்பா………”

 

வசந்தி தெரிஞ்சோ தெரியாமலோ இப்படி பேசுனது ஆதிய பயங்கர கோவத்துக்கு ஆளாக்குச்சு…..சரி சரி பேசுனது போதும் நீ வழிய பாத்து நட போ…. அப்படினு ரொம்ப சிடு சிடுனு பேசுனான்…அப்போதைக்கு அவனோட முகமும் அந்த மாதிரிதா இருந்தது….

 

பேசுறதுக்கு வாய் எடுத்தான்….ஆனா மீரா பாவமா அவன் முகத்த பாத்து…எதுவும் பேசாதீங்க அமைதியா இருங்க அப்படினு சொல்லி ஜாட காமிக்க… அதுனால அவன் அமைதியா விட்டுட்டான்….

 

ஆதிக்கு மனசே சரியில்ல….மீரா எதாவது மனசுல நெனச்சுக்குவாளோனு மனசுக்குள்ள பயந்துகிட்டே இருந்தான்…ஏன்னா பல நேரம் அவனே மீரா அந்த மாதிரி எல்லாம் பேசிருக்கான்…அதுனால அவ பழைய விஷயம் எல்லாத்தையும் நியாபகம் பண்ணி வேதனப் படுவானு அவன் தவிச்சுட்டு இருந்தான்…

 

என்னென்னவோ யோசன மீரா மனசுல….அவங்க இருந்த இடத்துல இருந்த கோவிலுக்கு உள்ள போக ஒரு பத்து நிமிஷம் ஆகும்… மீனாட்சி கோவிலுக்கு உள்ளதா இருக்காங்கனு அங்க சமைக்க அடுப்பு ரெடி பண்ணிட்டு இருந்தவங்க சொல்ல…மூனு பேரும் கோவில நோக்கி நடந்துட்டு இருந்தாங்க …. அந்த பத்து நிமிஷத்துல மீராவோட உடம்ப பத்தி பேசுன நிகழ்வு எல்லாமே ஒவ்வொன்னா சொடக்கு போடுற நொடியில கண் முன்னாடி வந்துட்டு போச்சு….

 

இப்போதான் உடம்பு பருமன் அதிகமாகிருச்சு…முன்னாடி எல்லாம் அப்படி இல்ல….உடம்பு உயரத்துக்கு ஏத்த பருமன் தான் இருந்தது…. இடையில ஒரு நாலு வருஷமாதான் இந்த அளவுக்கு வெயிட் போட்டு இருக்கு…

 

எந்திரிக்க முடியாத நடக்க முடியாத அளவுக்கு எல்லாம் வெயிட் இல்ல…ஆனா முன்ன இருந்தத விட கொஞ்சம் பூசுன மாதிரி ஆகிட்டா….

 

ஏய் மீரா நீ பப்லியா க்யூட்டா இருக்கடி இன்னைக்கு அப்படினு பக்கத்து கிளாஸ் பொண்ணு சொல்லும் போதும்….உன் கண்ணம் புசு புசுனு அழகா இருக்கு அப்படினு பஸ்ல கூட வர்ற அக்கா சொல்லும் போதும்…நல்லா மெத்த மாதிரி இருக்கவும் என் புள்ள உன் தோள்லையே தூங்கிருச்சு பாரு அப்படினு சொல்லி பக்கத்து வீட்டு அத்த குழந்தைய எங்கிட்ட இருந்து வாங்கிட்டு போகும் போதும்…செல்ஃபி எடுக்கும் போதும்….முகம் கழுவும் போதும் புதுசா முதல்தடவ ப்ளைனான சேல கட்டி காலேஜ் ஃபங்ஷனுக்கு போகும் போது…ஏய் மீரா…நீயா இது….ப்ப்பா செம்மையா இருக்கடி…சேலைல நல்லா ஸ்ட்ரக்ச்சரா இருக்குடி உடம்பு…முகம் கொழு கொழுனு இருக்கவும் பாக்கவே சின்ன புள்ள மாதிரி இருக்கடி அப்படினு பல வருஷமா கூடவே படிக்குற ஃபிரண்டு சொல்லும் போதும்… எல்லாரும் சேந்து அமுல் பேபினு நிக் நேம் வைக்கும் போது….அப்படினு எல்லா நேரத்துலையுமே சந்தோஷம் மனசுல ஊஞ்சலாடுனாலும்….வெக்கத்துல வானத்துல பறந்தாலும்….அது என்னமோ கொஞ்ச நேரத்துக்குதான் அந்த சந்தோஷம் இருக்கும்….அதுக்கு அடுத்து உடனே மனச சங்கடப் படுத்துற மாதிரி எதாவது ஒரு கசப்பான விஷயம் நடந்துரும்…அதவே யோசிச்சுட்டு உக்காந்திருந்தா நேரம் எப்படி போகுதுனே தெரியாது….

 

உடம்ப வச்சு கேளியும் கிண்டலும் நடந்தா பரவாயில்ல….எல்லாருமா சேந்து கிட்டு நீ வெயிட்டா இருக்க குண்டா இருக்க அப்படினு சொல்லி ஒதுக்குவாங்க….இத நம்ம கூடவே இருந்து தினமு பாத்து பழகுற ஆட்களே பண்ணுவாங்க அது இன்னும் மோசமான மனநிலைக்கு ஆளாக்கிரும்…

 

அப்படிதான் காலேஜ் ஃபஸ்ட் இயர் படிக்கும் போது பரதநாட்டியத்துல சேர்ந்து இருந்தேன்….முக பாவனை எல்லாம் நல்லா இருக்குமா உனக்கு….நல்லா ஆடுற… பரவாயில்லமா பரதநாட்டியம் பழகாமையே நல்லா ஆடுற…உன்னைய பாத்தா எனக்கு ஆச்சர்யமா இருக்கு அப்படினு காலேஜ்ல இருந்து அரைஞ்ச் பண்ணி இருந்த டான்ஸ் டீச்சர் அப்போதான் சொல்லிட்டு வெளிய போனாங்க….

 

டீச்சர் எங்கையோ போறாங்க கொஞ்ச நேரம் ரிலாக்ஸா உக்காரலாம் அப்படினு உக்காந்தா அடுத்த செக்கன்டே டீச்சர் பரபரப்பா உள்ள வந்து…என்னம்மா உக்காந்துட்டீங்க…எந்திரிங்கமா….பிரின்ஸிபல் மேடம்…உங்க டான்ஸ ஒரு ரிகர்சல் பாக்குறதுக்காக வரேனு சொல்லிருக்காங்க… நாளைக்கு ஃபங்ஷன்ல பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் ச்சீஃப் கெஸ்ட்டா வந்து உக்காந்திருப்பாங்க அப்போ எந்த ஒரு சொதப்பலும் நடந்திரக் கூடாது அப்படினு மேடம் சொன்னாங்க….அதுனாலதா இப்போ ஒரு டைம் உங்க டான்ஸ பாக்க வர்றாங்க அப்படினு டீச்சர் சொன்னாங்க….

 

டீச்சர் சொன்ன மாதிரியே கொஞ்ச நேரத்துல பிரின்ஸிபல் மேடம் வந்தாங்க…டான்ஸையும் பாத்தாங்க….பாத்து முடிச்ச பிறகு….இந்த பொண்ண பின்னாடி நிக்க வச்சிருங்கமா….நல்லாதான் ஆடுறா…ஆனா முன்னாடி இருக்க எல்லா பொண்ணுங்களுமே ஒரே அளவா இருக்காங்க….இந்த ஒரு பொண்ணு மட்டும் அதுல வித்தியாசமா தெரியுது….ஓரமா நின்னிருந்தா கூட பரவாயில்லை…நடுவுல நிக்க வச்சிருக்கீங்க….நீங்க இந்த பொண்ண பின்னாடி நிக்க வச்சிட்டு பின்னாடி இருக்க பொண்ண முன்னாடி நிக்க வச்சிருங்க அப்படினு சொல்லிட்டு போய்ட்டாங்க…

 

அந்த நொடி என் மேல எனக்கே முதல் முறையா வெறுப்பு உருவாகுச்சு…அடுத்து அதே வார்த்தையவே டீச்சரும் சொல்லிறக் கூடாதுன்றதுக்காக மறுநாள் ஃபங்ஷன்ல ஆடும் போது நானாவே பின்னாடி போய் நின்னு கிட்டேன்….

 

எங்க டீச்சர் என்ன சமாதானம் பண்ண என்னென்னவோ பேசி பாத்தாங்க ஆனா அதெல்லாம் என் காதுல கூட விழல…கொஞ்ச நாள் அதே நியாபகத்துலயே கஷ்டப்பட்டுட்டு இருந்தேன்….

 

இதுதான் என் வாழ்க்கைல என் உடம்பு வெயிட்ட காரணமா காட்டி எனக்கு நடந்த முதல் நிராகரிப்பு….

 

 

…கதை தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. கதை ஓட்டம் கதை ஓட்டம் நல்லா இருக்கு.
      இன்னும் கொஞ்சம் உணர்வுகளோடு கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் எழுத்து நடையும் இன்னும் கொஞ்சம் நல்லா கொடுத்திருக்கலாம். அங்கங்க சின்ன சின்ன எழுத்து பிழை இருக்கு அதையெல்லாம் கொஞ்சம் சரி பண்ணிக்கோங்க

      1. Author

        சரிங்க… ரொம்ப நன்றி ❣️