நான் பண்றதும் பேசுறதும் உனக்கு புதுசா வேணா இருக்கலாம் ஆனா பொய் இல்ல…உண்மையாவே சொல்றேன்…உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்…
என்னைக்கும் இல்லாத திருநாளா ஆதி இந்த மாதிரி பேசவும் மீராவுக்கு என்ன பதில் பேசுறதுனே தெரியல… அது மட்டும் இல்லாம அவ்ளோட கை ஆதி நெஞ்சு மேல இருக்கவும் அவ அதுக்கே தலைகால் புரியாத சந்தோஷத்துல இருந்தா… அவன் பேசுனது கூட அவளுக்கு முழுசா கேட்டு புரிஞ்சுச்சோ என்னமோ….
மீரா….ஏய்….இங்க பாரு என்னைய… ஒரு நிமிஷம் பாரு…இப்படி தலைய கீழ குனிஞ்சு இருந்தா என்ன ஆர்த்தம்…. ம்ம்ம்….எதாவது பேசு ப்ளீஸ்…. அப்படின்னு சொன்ன ஆதிய வா போலாம் அப்படினு சொல்லி ஒரே வார்த்தையில வாயடைக்க வச்சிட்டா…
அவனும் புரிஞ்சு கிட்டான்…சரி இத்தன நாள் வாய்க்கு வந்தத பேசிட்டு இப்போ மட்டும் கொஞ்சுனா யாருக்க இருந்தாலும் ஒரு மாதிரி புரியாமதான் இருக்கும்…அதோட இதுல எது உண்மைன்ற சந்தேகமும் இருக்கும்…அவளுக்கா சீக்கிரம் புரிய வரும் அப்படினு மனசுக்குள்ளையே நெனச்சுகிட்டு சரி வா அப்படினு சொல்லி…இங்க பாரு உன் இடது கைல இருந்த வேர்வை எல்லாம் என் சட்ட மேலையே ஒட்டிருச்சு….இப்போ உன்னோட இடது கைல ஒன்னுமே இல்ல…நீ வலது கைல முகத்த தொடச்சுக்கோ… அப்படினு சொல்லி அவளவே பாத்துட்டு இருந்தான்…அவளும் ஏதோ ஒரு தயக்கத்தோட தொடச்சிட்டு அவன பாத்தா அவன் உடவே அவளோட வலது கைய புடிச்சு…அவளோட உள்ள கையில அவனோட இடது கையால தொடச்சி விட்டான்…. ம்ம்ம் இங்க பாத்தியா உன் கையில ஒன்னுமே இல்ல….
ஆதி நடந்துக்கிட்ட விதம் அவளுக்கு மனசுக்குள்ள சந்தோஷமா இருந்தாலும் அத அவ அவன் கிட்ட காட்டிக்கல…ஏன்னா நடக்குறது எல்லாமே அவளுக்கு புதுசா இருக்கும் போது அத அவ அனுபவிச்சு புரிஞ்சுக்குறதுக்கே நேரம் பத்தல இதுல எங்க அவன் கிட்ட வெளிப்படுத்துறது….சரி அப்படியே வெளிக்காட்டுனாலும் எந்த விதமா காட்டுறது அப்படினு எந்த ஒரு ஐடியாவுமே அவளுக்கு அப்போ இல்ல….அதுனால அமைதியாவே இருக்கா…
கொஞ்ச தூரம் நடந்து…இதுக்கு மேல கை விரல கோர்த்து நடக்க முடியாதுனு தெரிஞ்சதும் கைய பிரிஞ்சு ரெண்டு பேரும் தனித்தனியா நடக்க ஆரமிச்சாங்க…. எப்படியோ ஒரு வழியா ரெண்டு பேரும் எல்லாரும் இருக்க இடத்த போய் சேந்தாங்க…
“ஆதி என்னடா…மலை ஏற தெரியாதவன் மாதிரி மெல்ல வர்ற…புதுப் பொண்டாட்டியாலையா?”
“ஆமா ஆமா…யேய் போய்ரு….அம்மா…இவள அமைதியா இருக்க சொல்லுமா”
(வழக்கம் போல ஆதிக்கும் வசந்திக்கும் லேசா சலசலப்பு)
அட அட வயசு எத்தனையாகுது ரெண்டு பேருக்கும்….ஆனா இன்னும் ஒன்னாங் கிளாஸ் ரெண்டாங் கிளாஸ் மாதிரியே மாறி மாறி சண்ட போட்டுகிட்டு…. அமைதியா இருக்க…இப்போ அடிச்சுக்குவீங்க….சாயங்காலமே…ஆதி இன்னும் ரெண்டு நாள் கூட இருந்துட்டு போயிருக்கலாம்லமானு நீயும்….அம்மா வசந்திய நல்லா பாத்துக்கோமானு அவனும்…பாச மழைய உங்க மேல பொழிஞ்சுக்காம எங்கிட்ட பொழம்பிட்டு உக்காந்திருப்பீங்க… எல்லாம் இருக்கட்டும் வசந்தி வா நீ….சாமி கும்பிட தேவையான பொருள் எல்லாம் தனியா எடுத்து வை பாக்கலாம் அப்படினு சொல்லிட்டு….வசந்தி திரும்பி பாக்குறதுக்குள்ள மீனாட்சி எங்கையோ போய்ட்டா….
என்ன இது என்கிட்ட எடுத்து வைனு சொல்லிட்டு அம்மா எங்கையோ போயிருச்சு….இனி எல்லாத்தையும் எடுத்துகிட்டு அம்மாவ தேடி நான் போகனுமா…. எங்க போச்சுனு வேற தெரியாதே…அப்படினு சொல்லி வசந்தி பொழம்ப…
சரி விடுங்க….முதல்ல எடுத்து வைக்கலாம் அதுக்குள்ள அத்தையே வந்துருவாங்க…இல்லைனா நம்ம அவங்கள தேடி போகலாம்…அப்படினு மீரா ஐடியா குடுக்க…அதுவும் சரிதானு ரெண்டு பேரும் எடுத்து வச்சாங்க….
தம்பி கூட இருந்தா வசந்தி வாய் சும்மாவே இருக்காது….ஆதியும் அக்காவுக்கு ஈடு குடுக்குற மாதிரிதான் பேசுவான்… ரெண்டுக்கும் சரியா இருக்கும்….அப்பவும் அதே மாதிரிதா பேசிட்டு இருந்தாங்க….
“டேய் ஆதி..உன்ன இப்படி சந்தோஷமா பாக்க எனக்கு எவ்ளோ மன நிறைவா இருக்கு தெரியுமா”
“அப்படியா இருக்கட்டும் இருக்கட்டும்”
“ம்ம்ம் இப்படியே கூட கூட பேசிட்டு திரியாத…இப்போ உனக்கு கல்யாணம் ஆகிருச்சு…. பொறுப்பா நடந்துக்கோ”
“ஓஓஓ….எனக்கு கல்யாணம் வேற ஆகிருச்சா…சரி சரி நீ சொல்லிதான் எனக்கே தெரியுது…”
“டேய் வாய் பேசாதடா லூசு….மீராவ நல்லா பாத்துக்கோ புரிஞ்சதா….”
“ம்ம்ம் ம்ம்ம் நீ சொல்லிட்டீல செஞ்சர்லாம் செஞ்சர்லாம் “
வசந்தி நார்மலா பேசுனாலும் சரி….சீரியசா பேசுனாலும் சரி…வசந்தி கிட்ட ஆதி வீம்பு பண்ணிட்டுதான் எப்பவுமே பேசுவான்….அந்த வீம்புக்கு செல்லம்னு கூட இன்னொரு அர்த்தம் இருக்கு….
மீரா…இவன் இன்னும் அப்படியேதான் இருக்கான்…இன்னும் அந்த சுட்டித்தனம் கொஞ்சம் கூட மாறல… எனக்கு ஒரு சந்தேகம்…இவன் மத்த எல்லார்கிட்டையுமே நல்ல விதமாதான் பேசுறான்….ஆனா என் கிட்ட மட்டும்தான் இந்த மாதிரி எகிரி எகிரி பேசுறான்…என்னமோ தெரியல… ஆமா உங்கிட்ட எல்லாம் இந்த மாதிரி பேசுனத நான் பாத்ததே இல்ல…ஒரு வேள நாங்க எல்லாரும் இருக்கும் போது பேச மாட்டானோ என்னமோ…நீங்க தனியா இருக்கும் போது இந்த மாதிரி எல்லாம் பேசுவானா…. சந்தேகம் அதான் கேட்டுட்டேன்…..
வசந்தி இப்படி கேட்டதுமே…மீரா வெளிப்படையா ஒரு சிரிப்பு சிரிச்சா அந்த சிரிப்புக்கு பின்னாடி இவன் இப்போதா என் கிட்ட முகம் குடுத்து பேசவே ஆரமிச்சிருக்கான் அப்படின்ற சோகமான பதில் ஒழிஞ்சு இருந்தது…..
“என்ன மீரா சிரிக்குற….இந்த மாதிரிதான் பேசுவானா (உடனே ஆதி மீராவ பாத்தான்)”
“இல்ல இல்ல….இந்த அளவுக்கு இதுவரைக்கும் பேசுனது இல்ல”
“இதுக்கு மேல நடக்க வாய்ப்பு இருக்குனு சொல்றியா?”
“ம்ம்ம் கண்டிப்பா “
(ம்ம்ம் சரி சரினு சொல்லி மூனு பேருமே சிரிச்சாங்க)
பூஜைக்கு எடுத்து வச்ச பொருள் எல்லாத்தையுமே ஒரு தட்டுல அடுக்கி மீரா தூக்கி நின்னா….மீரா இங்க குடு….என் கைல குடு அப்படினு வசந்தி சொல்ல…இல்ல பரவாயில்ல நானே கொண்டு வரேன் அப்படினு சொல்லி தட்ட வசந்தி கைல குடுக்க மறுத்தா….
“மீரா சொன்னா கேளு…என் கைல குடு”
“ம்ம்ம்….இத தூக்ககுறதுல எனக்கு எந்த கஷ்டமு இல்ல…நீங்க வாங்க அத்தைய தேடி போலாம்”
“மீரா என்னாலையே இத தூக்கிட்டு நடக்க முடியாது….நீ எப்படி தூக்குவ?”
“அதெல்லாம் நான் பாத்துக்குறேன் “
மீரா அவ்ளோ சொல்லியும் வசந்தி அவள தட்டத் தூக்கவே விடல….வசந்தி தட்ட கைல வாங்கிட்டு போய்ட்டு இருந்தா….
…கதை தொடரும்…