மீரா உங்க அத்தை எல்லாம் டக்குனு ஏறிடுவாங்க வாங்க நம்ம போலாம் அப்படினு மாமா சொல்ல… எல்லாருமே ஒன்னா சேந்து நடக்க ஆரமிச்சாங்க..
ஏற்கனவே மலை ஏறி கோவிலுக்கு போய் பழக்கம் ஆனவங்க எல்லாருமே வேகமா நடந்து முன்னாடி போய்ட்டாங்க…மீரா மாதிரி பழக்கம் இல்லாத நாலஞ்சு பேர் பின்னாடி மெதுவா வந்துட்டு இருந்தாங்க…அம்மா கூட இருந்தா கூட மீராவ கூட்டிட்டு வாங்கமானு சொல்லி விட்டுட்டு முன்னாடி ஏறி போகலாம்…அம்மாதான் சமயலே ஆரமிக்கனும் அதுனால அவங்க போய்ட்டாங்க…இப்போ வேற வழியே இல்ல மீராவ நம்மதான் பொருமையா கூட்டிட்டு போகனும்னு மீராவ அவனுக்கு முன்னாடி விட்டுட்டு அவன் பின்னாடியே நடந்து வந்தான்….
மேடா இருந்தனால மீரானால சுத்தமா ஏறவே முடியல…பயங்கரமா மூச்சு வாங்க ஆரமிக்குது…ரொம்ப கஷ்டப்பட்டா….ஒரு கட்டத்துக்கு மேல அவளால காலெடுத்து வச்சு நடக்கவே முடியல உக்காந்துட்டா….
“ஏய்…ஏய்…என்ன ஆச்சு”
“இல்ல என்னால சுத்தமா முடியல…(மூச்சு பயங்கரமா வாங்குது…அவளால பேசவே முடியல…அவ பேசுறதுல பாதி வார்த்த மட்டும்தான் ஆதிக்கு புரியவே புரியுது)”
“கால் வலிக்குதா?”
“ம்ம்ம் ஆமா பயங்கரமா வலிக்குது…என்னால நடக்கவே முடியல “
“இல்ல சொல்லாம கொல்லாம உக்காந்துட்டியா அதான் என்னமோ உதோனு பயந்துட்டேன் (இத சொன்ன உடனே மீரா முகத்துல சிரிப்ப பாக்கனும்…அட அட அப்படி ஒரு சிரிப்பு)”
“நீ போ நான் பின்னாடியே வந்தர்றேன் “
“இல்ல இல்ல நான் இருக்கேன் “
ரெண்டு பேரும் உக்காந்து இருந்த நேரத்துல அவங்களுக்கு பின்னாடி நடந்து வந்துட்டு இருந்த நாலஞ்சு பேருமே நடந்து முன்னாடி போய்ட்டாங்க…. ரெண்டு பேரும் கடைசில ஆளுக்கு ஒரு கல்லு மேல உக்காந்திருந்தாங்க…
அப்போ கீச்சு கீச்சுனு கத்திட்டு ஒரு பறவை கூட்டம் எங்க இருந்தோ பறந்து வந்து அவங்களுக்கு பக்கத்துல இருந்த மரத்துமேல உக்காந்தச்சு….அதுல நல்லபடியா கனிஞ்சு இருக்க பழத்த சாப்பிட எனக்கு உனக்குனு போட்டி போட்டுகிட்டு ஆளுக்கு ஒன்ன கொத்தி எடுத்துகிட்டு பறந்து போச்சுங்க….
கடைசியா ஒரு பறவ கடைசியா மிஞ்சி இருந்த ஒரு பழத்த கொத்தி எடுத்துகிட்டு பறக்க தயாரா இருந்தது….அப்போ தன்னையே ஏக்கத்தோட பாத்துட்டு இருந்த இன்னொரு பறவைய பாத்ததுமே அந்த பறவை கிட்ட போய் அது கொத்தி வச்சிருந்த பழத்த அதோட அலகுல வச்சு அதுக்கு கொஞ்சம் குடுத்துட்டு அது எடுத்துகிட்ட மீதிய அந்த பறவை சாப்பிட்டுட்டு சந்தோஷமா கீச்சு கீச்சுனு கத்திகிட்டே பறந்து போச்சுங்க அத பாத்து ரசிச்சு சிரிச்சிட்டு இருந்த மீரா ஏக்கத்தோட பாத்த பறவைய மாதிரியே ஆதிய பாக்க…அவன் சிரிச்சிட்டே தலைய குனிஞ்சு இங்க வா வேடிக்கை பாத்தது எல்லாம் போதும் அப்படினு சொல்லி கைய நீட்ட….
என்ன பண்றதுனே தெரியாம மீரா முழிக்க…என்ன தயக்கம் வா… அப்படினு ஆதி இன்னொரு முறை அழுத்தமா கூப்பிட….அவனோட கைய புடிச்சு எழுந்திரிக்க வந்தா அப்போனு பாத்து சரியா ஆதியோட ஃபோன்ல கால் வர… அந்த ரிங் டோன் இந்த நிகழ்வ இன்னும் மெருகேத்தி ரெண்டு பேரையும் வெக்கப்பட வச்சது….காதலுக்கு நடுவுல பாட்டு என்ன செய்யும் தெரியுமா…வெளிய சொல்லவே முடியாத உணர்வ கூட ஈசியா இன்னொருத்தர் கிட்ட கொண்டு போய் சேத்துரும்…கைய புடிச்சுகிட்டே ரெண்டு பேரும் நடந்து போக….அவங்களோட ஒவ்வொரு அடிக்கும் காதல நூறு மடங்கு கூட்டுற மாதிரி அந்த பாடல் அவங்களுக்கு அர்த்தமுள்ளதாவும் ரசிக்கும்படியும் இருந்தது…
கால் அட்டென்ட் பண்ணா பாட்டு பாதிலயே நின்னு போகுமேனு ஆதி வந்த கால அட்டென்ட் பண்ணவே இல்ல….
“ஏன் கால் அட்டென்ட் பண்ணி பேச வேண்டியதுதான….எதாவது முக்கியமானதா இருந்துறப் போகுது….”
“இல்ல இல்ல என் ஃபிரண்டுதான் அப்புறமா நான் பேசிக்குறேன்….இப்போ கால் வலிக்குதா”
“இல்ல வலிக்கல”
“ம்ம்ம் வலிச்சா சொல்லு சரியா….உக்காந்து இருந்துட்டு கூட மெதுவா போய்க்கலாம்….ஒன்னும் பிரச்சன இல்ல”
“ம்ம்ம் சரி “
மனுஷங்களுக்கு இல்லாத சக்தி கூட இந்த இயற்கைக்கு இருக்குல….எதார்த்தமா நடந்த ஒவ்வொரு விஷயமுமே எதிரும் புதிருமா இருந்த ஆதியோட மனச லேசா மாத்தி மீரா பக்கம் கொண்டு போய் சேக்குது….இந்த ரெண்டு பேரும்தா இந்த பந்தத்துக்கு சரினு இயற்கையா பாத்து முடிவு பண்ணுச்சுனா அத யாராலையுமே தடுக்க முடியாது…
சீக்கிரம் கோவிலுக்கு போகனும்ற எண்ணத்தோட ரெண்டு பேரும் கொஞ்சம் வேகமா நடந்து போக… மறுபடியும் அந்த பறவைங்களோட கீச்சு கீச்சுன்ற சத்தம் கேக்க ஆரமிச்சது…உடனே சொல்லி வச்ச மாதிரி ரெண்டு பேரோட காலும் ஒரே நேரத்துல ஸ்டாப் ஆகிருச்சு…. ஆட்டோமேட்டிக்கா அந்த நாலு கண்ணும் சத்தம் மட்டும் கேக்குது பறவைங்கள காணோம்ற சந்தேகத்துலயே தேடுது….சுத்தி முத்தி எங்கையுமே இல்லாததால ரெண்டு பேரும் முகத்த பாத்து சிரிச்சுட்டு மறுபடியும் நடக்க தொடங்குனாங்க….
இன்னும் கொஞ்சம் தூரம் நடந்து போனா கோவில் வந்துரும் அப்படினு ஆதிக்கு நல்லாவே தெரியும்…எல்லாரும் இருக்க இடத்த நெருங்கிட்டா இப்படி கைய புடிச்சிட்டு இருக்க முடியாது….மீராவோட கைய பிரிஞ்சுதா ஆகனும்றதால…ஆதி எனக்கு மூச்சு வாங்குது உக்காரலாமா அப்படினு மீராவ பாத்து கேக்க…அதான் ஆளுங்க சத்தம் நல்லாவே கேக்குதுல்ல…ஒரே அடியா நடந்து போயிரலாம் லேட் பண்ண வேணாம் அப்படினு மீரா சொல்ல…
“இல்ல நீ வேணா போ என்னால நடக்க முடியல”
“யேய் உண்மையா உனக்கு கால் வலிக்குதா?”
“ஏன் என்ன பாத்த உனக்கு பொய் சொல்ற மாதிரி தெரியுதா….?…ஆமா இத்தன நாள் ஆதி அவன் இவன்னு சொல்லிட்டு இருந்த…இப்போ என்னடானா யேய்னு சொல்ற”
“ஏன் சொல்ல கூடாதா….சொன்னா என்ன தப்பு”
“ம்ம்ம் ம்ம்ம் சொல்லு சொல்லு”
மீராவுக்கு நெத்தில வியர்வை ஊத்தி வழிய ஆரமிச்சது அத தொடைக்குறதுக்காக ஆதி கைய விட்டா…
“என்ன கைய விடுற….”
“வேர்க்குதுல அதான் தொடைக்க…”
“இன்னொரு கை சும்மாதான இருக்கு அதுல தொடைக்க வேண்டியதுதான…”
“கையும்தா வேர்க்குது “
ம்ம்ம் அப்படினு பெருமூச்சு விட்டு… விட்டத்த பாத்துட்டு அப்புறம் மீராவோட முகத்த பாத்துட்டு அவன் கைக்குள்ள இருந்த மீராவோட கையெடுத்து அவனோட இடது பக்க நெஞ்சு மேல வச்சு அழுத்தி புடிச்சுகிட்டு….எனக்கு உன் கைய புடிச்சிருக்குறது ரொம்ப புடிச்சிருக்கு…இப்போ இந்த நொடி இதுவரைக்கும் நான் சந்தோஷப்படாத அளவுக்கு சந்தோஷமா இருக்கேன்…
…கதை தொடரும்…