Loading

நான் நினைத்தால் வருவாயோ அன்பே

டீசர்

சென்னையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் பிஎம்டபிள்யூ கருப்பு நிற கார் ஒன்று அதிவேகமாக வந்தது..

மதுரையை நெருங்கும் சற்று நேரத்தில் திடீரென ஏற்பட்ட வானிலை மற்றம் காரணமாக சிறிதாக ஆரம்பித்த மழை துளி சிறிது நேரத்தில் வேகம் எடுத்தது..

அவளுக்கு கார் ஓட்டுவதும் அந்த காரை வேகமாக ஓட்டுவதும் அதிகமாக பிடித்தவையில் ஒன்று.

அவளுக்கு மிகவும் பிடித்த ஒருவனே வந்து அதை பலமுறை கூறியும் அவள் அந்த வேகமாக கார் ஓட்டும் பழக்கத்தை மட்டும் தவிர்க்க விரும்பவில்லை.

திடீரென பெய்த மழையால் எதிரில் வரும் வாகனங்கள் கொஞ்சமும் அவளுக்கு தெரியவில்லை.. ஆனாலும் இந்த நடுவீதியில் காரை நிறுத்தி விட்டு மழை விட்டதும் செல்லும் அளவிற்கு அவளுக்கு பொறுமையும் இல்லை..

விருப்பமில்லாத அவளின் இந்த பயணத்திற்கு இந்த மழையும் இடைஞ்சலாக இருந்ததால் கடும் கோபத்தில் இருந்தவள் வேகத்தை சற்றும் குறைக்காமல் அந்த காரில் பயணித்தாள்..

அந்தோ பரிதாபம்..

வீதியிலும் இருந்து சற்று ஓரமாக ஆட்டோ ஒன்று மழை காரணமாக ஒதுங்கி நின்றது..

வேகத்தை கட்டுப்படுத்தாமல் அவள் கோபமும் சேர்ந்து அந்த ஆட்டோ மேல்
அவளது கார் மோதியது..

ஆட்டோவும் காரும் மோதியதால் ஆட்டோ டிரைவரும் ஆட்டோவில் இருந்த பயணியும் ஆட்டோவுடன் சேர்ந்து சரிந்து வீதியில் சற்று உருண்டோடி அருகில் இருந்த ஒரு மரத்தில் மோதி நின்றது..

இந்த விபத்தை சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை..

இந்த விபத்து அவளால் நடந்தது என்பதற்கான அதிர்ச்சி மற்றும் எந்த உணர்வும் அவளது முகத்தில் சிறிதளவும் இல்லை..

ஆட்டோவை இடித்து தள்ளிவிட்டு கார் நின்றதும் அவள் காரில் இருந்து இறங்கி கூட அவர்களைப் பார்க்கவில்லை..

ஆட்டோ டிரைவருக்கு அதிகமாக காயம் இல்லை கையில் மற்றும் தலையிலும் சிறிய அளவு அடி மற்றும் சிராய்ப்பு காயம்..

பயணியும் பெரிய அளவில் அடிபடவில்லை .. அவருக்கும் தலையில் சிறிய அளவு காயத்தினால் ரத்தம் மட்டும் கசிந்தது..

இதோ யார் செய்த புண்ணியமோ நல்ல நேரத்தில் உயிர் ஆபத்து எதுவும் இல்லை..

தன்னை நம்பி வந்தவரை காக்கும் பொருட்டு லட்சுமி அதிகமாக அனைத்து அடிகளையும் தாங்கியது..

அவன் அவனது தந்தை மற்றும் தங்கையை எவ்வளவு பாசமாக பார்த்துக் கொள்வானோ அதை விட ஒரு படி மேலாகவே ஆட்டோவை அதாவது லட்சுமியை பார்த்துக் கொள்வான்..

ஆட்டோவை நிமிர்த்தி விட்டு அவரையும் கை கொடுத்து இறக்கி வெளியே விட்டுட்டு அந்த மழையில் நனைந்தபடியே கார் கண்ணாடியை வந்து தட்டினான்..

தொடர்ந்து அந்த மழையில் செல்ல முடியாது என்பதால் அங்கேயே காரில் கண்களை மூடி தலையை சாய்த்து அவளுக்கு பிடித்த விஐபியின் பாடலைக் கேட்டபடி அமர்ந்திருந்தாள்..

காதில் ஹெட்செட் போட்டு பாட்டு கேட்ப்பதால் அவளுக்கு கண்ணாடி தட்டும் சத்தம் கேட்கவில்லை..

இவ்வளவு நடந்த பின்பும் பொறுமையாக இருக்க விரும்பாமல் அருகே கிடந்த கல்லை எடுத்து கார் கண்ணாடியை நோக்கி அடிக்க அந்த கண்ணாடி உடையும் சத்தத்தில் தான் அவள் சுயநினைவுக்கு வந்து கார் கதவை திறந்து வெளியே இறங்கினாள்..

” ஏய் இடியட் அறிவில்ல.. முட்டாளா? மேன் நீ. உள்ள ஆள் இருக்கு கார் கண்ணாடிய உடைக்கிற கண்ணாடி பீஸ் என் மேல பட்டால் பிளட் வரும் பெயின் வரும்.. ” என்று இன்னும் அவள் வாயில் வந்த நல்ல ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தி அவனை திட்டிக் கொண்டிருந்தாள்..

அவள் திட்டியது அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவன் சற்று அவள் வாயை மூடியதும் இடையில் கட்டி இருந்த அவனது வாலட்டில் இருந்து கார் கண்ணாடியை உடைத்ததற்காக புது கண்ணாடி மாற்றுவதற்கான பணத்தை அவளின் கையில் வைத்தான்..

அந்த வாலட்டையும் மீறி மழை நீரில் நனைந்த அந்த 100 ரூபா தாள்களை அவள் கையில் இருந்த்தை முகத்திற்கு நேராக தூக்கி வீசி விட்டு..

” ஏய் யாருகிட்ட உன் பிச்சை காசு தூக்கி போடற.. 100 ருபி நோட் எல்லாம் நான் லைஃப்ல பார்த்ததே இல்லை மேன்.. நீ அழுக்கான உன் கையால பயன்படுத்தின அந்த பணத்தை நான் பயன்படுத்தணுமா?.. யாருக்கு மேன் வேணும் உன் பிச்ச காசு.. உனக்கும் உன் ஆட்டோக்கும் சேர்த்து நான் தரேன்.. புது ஆட்டோ வாங்கிக்கோ. என் புண்ணியத்துல.. இது என்ன உங்க அப்பன் வீட்டு ரோடா மழை வந்தால் ஒதுங்கி நிற்காமல் ரோட்டுல ஆட்டோ நிறுத்தி வச்சிருக்க.. நீ ராங் சைட் நிறுத்தி வச்சிருந்ததற்காக நான் உனக்கு பணம் தரக்கூடாது.. ஆனா உன்ன பார்த்தாலும் எனக்கு பாவமா இருக்கு.. நீயே ஆப்ட்ரால் ஒரு ஆட்டோ டிரைவர் உன்கிட்ட புது ஆட்டோ வாங்க பணம் இருக்கா? மேன். முதல் இது உன்னோட ஆட்டோவா?.. இல்லை டிரண்டுக்கு எடுத்து ஓட்டுறியா?.. உன்ன பாத்தா புது ஆட்டோ வாங்குவதை பற்றி யோசிக்க முன் இந்த ஆட்டோவை பழுது பார்க்க கைல பணம் இருக்கா மேன்.. 100 ரூபாய் கேஸ் வச்சிருக்க உன்கிட்ட எப்படி 10,000 இருக்கும்..?” இன்னும் அவனை மட்டம் தட்டி பேசிவிட்டு அவளிடம் தற்பொழுது பணம் இல்லாத காரணத்தால் அவள் கையில் போட்டிருந்த வளையலை கழட்டி அவனது காலின் கீழ் போட்டுவிட்டு வேகமாக காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்..

அவள் பேசியது அவள் நடந்து கொண்டது என அனைத்தையும் அவனும் அந்த பயணியும் பார்த்துக் கொண்டு மட்டும் இருந்தார்கள்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
10
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்