Loading

கண்ணை தேய்த்துக் கொண்டு அவன் பார்க்க “பால முழுசா குடிச்சுட்ட போல. வெரி குட்” என்றாள்.

 

அவன் புரியாமல் கண்ணை கஷ்டப்பட்டு திறந்து பார்த்தான்.

 

“அட இன்னுமா புரியல? நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி குடிச்ச பால்ல ஒரு.. அஞ்சு ஆறு தூக்க மாத்திரை போட்டேன். அதுக்கு மேலயும் போட்ருப்பேன். ஆனா டேஸ்ட் மாறி நீ கண்டு பிடிச்சுர கூடாது பாரு”

 

அதிர்ந்து போனவன் முன்னால் திறந்து கிடந்த லாப்டாப்பை மூடி விட்டு வேகமாக எழுந்தான். ஆனால் சரியாக நிற்க முடியவில்லை. அதிலேயே புரிந்து விட்டது. அவள் நிஜமாகவே எதையோ பாலில் கலந்து இருக்கிறாள் என்று.

 

“ஏய்..” என்று தன்னை நிதானித்துக் கொண்டு அவன் கத்த “அட.. விழுந்துடாத.. மாத்திரை பவர் ஃபுல். நல்லா வேலை செய்யுது போல” என்று நக்கலாக கேட்டாள்.

 

கோபத்தோடு அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தவன் நிலையில்லாமல் தள்ளாடி மெத்தையில் விழுந்தான். கண் இமைகள் பிரிய மறுத்து மூடிக் கொண்டன. அவனது போராட்டங்கள் வீணாக தூக்கம் அவனை கட்டி இழுத்துச் சென்றது.

 

வேகமாக அவன் அருகே வந்து எட்டிப் பார்த்தாள். கண்ணை தேய்த்துக் கொண்டு அவன் முழிக்க போராடி முடியாமல் விட்டு விட்டான்.

 

“ம்ம்.. சூப்பர். நல்லா தூங்கு மேன். குட் நைட்” என்று அவள் சிரிப்போடு கூற அது அவனது காதில் விழத்தான் செய்தது. ஆனால் எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.

 

“உன்ன… நாளைக்கு கவனிச்சுக்கிறேன்டி” என்று முணுமுணுத்துக் கொண்டே உறங்கி விட்டான்.

 

 

 

*.*.*.*.*.*.

 

மருத்துவர் சொன்னதை கேட்டவளுக்கு உலகமே இருண்டு விட்டது போல் தோன்றியது.

 

“நோ டாக்டர்.. இத நான்..‌நான் நம்ப மாட்டேன்”

 

அவளது பதட்டத்தை பார்த்த மருத்துவருக்கு பாவமாக இருந்தது.

 

“மேடம்.. நான் சொல்லுறத கேளுங்க. இப்போதைக்கு இருக்க நிலமை இதான்”

 

“நோ.. நோ.. நோ… இத என்னால ஏத்துக்க முடியாது.. நான் நம்ப மாட்டேன். நோ வே”

 

மருத்துவமனை என்பதை மறந்து அவள் கத்தி விட அருகில் இருந்த மஞ்சுளா அவளை வேகமாக பிடித்துக் கொண்டாள்.

 

“ப்ளீஸ்.. ப்ளீஸ்.. அமைதியா இரு” என்று மஞ்சுளா கெஞ்ச ” பாரு மஞ்சு என்ன சொல்லுறாங்கனு… இப்படி… இப்படி ஒரு முடிவு எதுக்கு எனக்கு வரனும்? நான்.. நான் வாழவே ஆரம்பிக்கல மஞ்சு.. அதுக்குள்ள.. அதுக்குள்ள…” என்றவளுக்கு வார்த்தை தடுமாறியது.

 

நிற்க முடியாமல் துவண்டு போய் மெத்தையில் அவள் அமர்ந்து விட மருத்துவருக்கு வருத்தமாக தான் இருந்தது. மஞ்சுளாவின் கண்ணிலோ கண்ணீர் தேங்கி விட்டது.

 

அழுது கொண்டிருக்கும் தோழியை சமாளிப்பது எப்படி என்று அவளுக்கும் புரியவில்லை. மருத்துவர் இருவரையும் பார்த்து விட்டு “மேடம்.. நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. இப்போ நான் போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்று கூறி விட்டு மஞ்சுளாவிடம் கண்ணை காட்டி விட்டு சென்றார்.

 

அவர் வெளியே சென்றதும் மஞ்சுளா தோழியை பார்த்து விட்டு வெளியே சென்றாள்.

 

“டாக்டர்.. இதுக்கு வேற எந்த தீர்வும் இல்லையா?”

 

“நான் பொய் சொல்ல ஆசை படல. ஆனா நூற்றுல ஒரு வாய்ப்பா சரியாகலாம். அதெல்லாம் பேஷண்ட்டோட மன தைரியத்தை பொறுத்து தான். டாக்டரா எங்களால முடிஞ்சத நாங்க செஞ்சுட்டோம். இனி கடவுள் தான் பார்க்கனும். எதுக்கும் அவங்கள பார்த்துக்கோங்க”

 

மருத்துவர் கூறி முடிக்கும் முன் அறைக்குள் இருந்து அவள் கதறும் சத்தம் மஞ்சுளாவின் காதில் விழுந்தது. தேங்கி இருந்த கண்ணீர் கன்னங்களில் வழிந்து ஓட ஆரம்பித்தது.

 

*.*.*.*.*.*.

 

“அவன் அங்க வர்ரத சொல்லலனு கோபம் ஒன்னும் இல்லையே?”

 

“ச்சே ச்சே.. தாங்க்ஸ்.. ஆக்ட்சுவலி நானே பார்க்கனும்னு தான் நினைச்சேன். ஆனா… அது ரொம்ப கஷ்டம்னு தான் அமைதியா இருந்தேன்”

 

“இன்னும் எத்தனை மாசத்துக்கு இப்படியே இருக்க போறீங்க?”

 

“தப்பு என் மேல …”

 

“சோ? அப்படியே பிரிஞ்சே இருக்கனுமா? ஒன்னு மொத்தமா ப்ரேக் அப்னு சொல்லிட்டு வேலைய பார்க்கனும். இல்ல ‌சண்டை போட்டு சமாதானம் ஆகிக்கனும். ரெண்டுமே இல்லாம இப்படி சுத்துறீங்க”

 

“….”

 

“உங்கள திருத்த முடியாது. இதுக்கு மேல உங்க இஷ்டம். வேற கால் வருது. வைக்கிறேன்”

 

“ம்ம் பை”

 

*.*.*.*.

 

“எதுக்கு அவள அங்க வர வச்ச?”

 

அவன் நேரடியாக விசயத்திற்கு வர அவள் சலித்துக் கொண்டாள்.

 

“அதான் சொன்னனே?”

 

“ப்ச்….”

 

“ஹேய்.. இப்போ என்ன பிரச்சனை? உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க ஒன்னும் அங்க வர வைக்கல. எனக்கு அத விட முக்கியமா ஆயிரம் வேலை இருக்கு. அவங்களும் ட்ரீட்னு கேட்டாங்க. உடனே சரினு சொல்லிட்டேன். அதான் வந்தாங்க. நீங்க சேருங்க இல்ல பிரிஞ்சு போங்க. எனக்கென்ன வந்தது. என்ன கேள்வி கேட்டு குடையாத”

 

மூச்சு விடாமல் பேசி விட்டு தண்ணீரை எடுத்து குடித்தாள்.

 

“இல்ல மினி. அவ பண்ணத மறக்கவே முடியல”

 

“அப்போ ப்ரேக் அப் பண்ணு”

 

“….”

 

“தோ.. இதுக்கும் சரி வர மாட்ட அதுக்கும் சரி வர மாட்டனா ? லூசா நீ? ஒன்னு எல்லாத்தையும் மறந்துடு. மறந்து அவங்க கூட சேர பாரு. இல்லையா மொத்தமா டாட்டா காட்டிரு. அவங்களாவது வேற யாரையாவது பார்த்துட்டு போயிட்டே இருப்பாங்க”

 

“போயிட்டாலும்…” என்று சலிப்பாக கூறியவனின் குரலில் போக மாட்டாள் என்ற உறுதியும் இருந்தது.

 

“இதுக்கு ஒன்னும் குறச்சல் இல்ல. எக்கேடோ கெட்டுப்போங்க. ஆனா என் முன்னாடி ஸ்கூல் பசங்க மாதிரி சண்டை போட்டா நடக்குறதே வேற”

 

அவன் பதிலை கேட்காமல் வேகமாக அழைப்பை துண்டித்து விட்டாள்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்