அபிமன்யு கடலோரம் படுத்துக் கிடக்க நிமிடங்கள் கடந்து சென்று கொண்டே இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலானதும் அவனது நண்பன் அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டான். அவனது வருத்தம் அவனுடைய பெற்றோர்களை பாதித்தது. அதற்காக தான் ஜலந்தர் செந்தில்குமாரிடம் பேசச் சென்றார்.
அதற்குள் அபிமன்யுவின் அன்னைக்கு திவ்யான்ஷியை பற்றிய வதந்திகள் சென்று சேர்ந்தது.
“ஏங்க.. அந்த பொண்ணு வேணாங்க.. ஏற்கனவே பல பசங்கள காதலிச்சுருக்காளாம்.”
“உனக்கு யார் சொன்னா?”
“யாரா? ஊரே சொல்லுது. அவளுக்கு கல்யாணமானவன் கூட எல்லாம் தொடர்பு இருக்குனு சொல்லுறாங்க. அவ நம்ம அபிக்கு வேணாம்ங்க”
“நீ சொல்லி பிரயோஜனம் இல்ல. அந்த பொண்ணே வேற ஒருத்தன லவ் பண்ணுறேன்னு சொல்லிடுச்சு. நம்ம பையன தான் மாத்த பார்க்கனும்”
இருவரும் ஒரு முடிவுக்கு வந்து அபிமன்யுவின் நண்பனை அழைத்து விசாரித்தனர். சொல்ல மறுத்தவனை அரட்டி உண்மையை வாங்கினர்.
இதில் அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று திவ்யாவிற்காக தான் அபிமன்யு தன்னைத்தானே இவ்வளவு வளர்த்துக் கொண்டான் என்பது. இவ்வளவு தூரம் காதலிப்பவனை மறந்து விடு என்றால்? அது முடியவே முடியாது என்று புரிந்தது.
அடுத்த நாள் காலை அலுவலகத்திருந்து அழைப்பு வந்தது. அபிமன்யு வேலை செய்து கொண்டிருக்கும் போதே மயங்கி விட்டதாக. பரிசோதித்த மருத்துவர் இரண்டு நாட்களாக எதுவுமே சாப்பிடவில்லை அதனால் தான் என்று கூறினார்.
பெற்றோரும் நண்பர்களும் பயந்து போயினர். அபிமன்யுவின் நிலையை பார்த்த ஜலந்தர் ஒரு முடிவுக்கு வந்தார். ஒன்று திவ்யா அபிமன்யுவை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மொத்தமாக அவன் கண்ணை விட்டு மறைந்து விட வேண்டும்.
முதல் வேலையாக செந்தில்குமாரின் மகன் யாரென்று விசாரித்தார். அவரது முழு பலத்தை கொண்டு விசாரிக்க உடனே விவரங்கள் கிடைத்து விட்டது. அதிகமாக அவன் வெளிநாட்டில் தான் இருக்கிறான். இருவருக்கும் நிச்சயமானதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
அவளது ஊர் மக்களுக்கு கூட இவ்விருவரை பற்றி எதுவும் தெரியாது. அப்படி என்றால் வெறும் காதல் தான். முதலில் அந்த காதலை உடைக்க வேண்டும்.
உடனே ஒரு யுக்தியும் கிடைத்தது. அது திவ்யான்ஷியின் பெயரை மொத்தமாக அழிப்பது. லட்சக்கணக்கில் செலவு செய்து அடுத்த நாளே திவ்யாவை மது போதைக்கு அடிமையானவள் என்று வதந்தியை பரப்பினர்.
அவள் பார்ட்டிகளில் குடிக்கும் புகைப்படங்கள் வெளியிட பட்டது. அந்த படங்களை வைத்து மக்கள் தங்களது கற்பனையும் கலந்து பல கதைகளை பறக்க விட்டனர்.
காலையில் எழும் போதே அந்த செய்தி திவ்யாவிற்கு வந்து விட்டது.
“ப்ச்ச்… ஏன் டா உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? நான் குடிச்சா கூட என்னனு கேட்குறேன்? நான் குடிக்கிறது தப்புனா நைட் பப்க்கு போற அத்தனை பொண்ணுங்களும் தப்பு தான். தைரியம் இருந்தா அவங்கள பத்தி பேச வேண்டியது தான”
திவ்யா கடுப்பாக கத்த “பொறுடி.. இதுக்கு நீ கத்தி என்ன ஆக போகுது?” என்று மஞ்சுளா கேட்டாள்.
“இப்ப வேற என்ன பண்ணனும்ங்குற?”
“இதுக்கு ஒரு முடிவு கட்டலாம்”
“என்ன முடிவு?” என்று கேட்டுக் கொண்டே செந்தில் குமார் வந்து சேர்ந்தார்.
மஞ்சுளா தனது யுக்தியை கூற “நல்ல ஐடியா தான்” என்றார்.
மூன்று மணி நேரம் கழித்து மஞ்சுளா கேட்டது கிடைத்து விட்டது.
அதாவது திவ்யா பார்ட்டிகளுக்கு சென்றால் மதுபானத்தை மாற்றிவிடும் காட்சி எதாவது ஒரு கேமராவில் பதிவாகிவிடும். அதை வெளியிடக்கூடாது என்று செந்தில் குமார் கூறிவிடுவார்.
இப்போது அந்த காட்சிகள் அத்தனையும் சேகரிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் திவ்யாவை பேச சொன்னாள். மஞ்சுளா காணொளியை பதிவு செய்ய திவ்யா பேசினாள்.
“ஹாய்.. எல்லாரும் விடியோ பார்த்து இருப்பீங்க. எஸ்.. நான் எல்லா பார்ட்டிலயும் டிரின்க்ஸ மாத்திட்டு ஜூஸ் தான் குடிப்பேன். சோசியல் டிரிங்கிங் தானேனு என்ன குடிக்க வற்புறுத்துவாங்க. எனக்கு பிடிக்காதுனு சொன்னா ஹர்ட் ஆவாங்க.
அதுனால தான் இப்படி பண்ணேன். இதுல நான் யாரையும் ஏமாத்தல. எனக்கு பிடிச்சத பண்ணேன் அவ்வளவு தான். பட் என்ன டிரின்க் அடிக்ட்னு எல்லாரும் சொல்லிட்டு இருக்கீங்க.
நீங்களே பார்த்து இருப்பீங்க. நான் டிரின்க் பண்ண மாட்டேன். பட் சில போட்டோஸ் வச்சு இப்படி ஒரு பேர க்ரியேட் பண்ணிட்டாங்க.
என் மேல ஆயிரம் பழி வந்துருக்கு. நான் எதுக்கும் எக்ஸ்ப்ளைன் பண்ணது இல்ல. ஆனா இது என்னால ஏத்துக்க முடியாத ஒன்னு. சோ நேரா சொல்லிடலாம்னு வந்துட்டேன்.
இப்போ சொல்லுறேன். இனி எந்த பார்ட்டிக்கும் நான் போக மாட்டேன். அது எவ்வளவு பெரிய பார்ட்டியா இருந்தாலும் நான் போக மாட்டேன். அபீஸியலா அனோன்ஸ் பண்ணுறேன். இனி எந்த பார்ட்டிக்கும் என்ன கூப்பிடாதீங்க. அப்படி நான் வந்தா என் பேர கேவல படுத்துற மாதிரி எதாச்சும் நடந்துடும். சோ இனி இது போல போக மாட்டேன். இது போல நான் டிரின்க் பண்ணுற போட்டோஸும் கிடைக்காது. தாங்க்யூ”
திவ்யா நிதானமாக பேசி முடிக்க அதை எடுத்து மொத்தமாக செந்தில் குமார் மற்றும் மஞ்சுளாவின் சமூக வலைதள பக்கத்தில் போட்டு விட்டனர்.
அதை பார்த்த தேவ் அழைப்பு விடுத்தான்.
“மேடம் ஆன்லன்ல எக்ஸ்ப்ளைன் எல்லாம் பண்ணுறீங்க”
“மஞ்சு ஐடியா”
“சூப்பர்.. இனி ஒருத்தனும் வாய திறக்க மாட்டான்”
“ம்ம்..”
“யார் இப்படி கிளப்பி விட்டது?”
“தெரியல. அதெல்லாம் இப்போ தேட முடியாது. பிரச்சனை முடிஞ்சா போதும்”
“சரி சரி”
அதன் பின் விவேகாவும் பேசினாள். அவளும் ஆறுதல் கூறினாள்.
அன்றையை வேலையை மறுத்து விட்டு அமைதியாக வீட்டில் இருந்தாள் திவ்யா. அர்ஜுனுக்கு மாலை தான் செய்தி சென்று சேர்ந்தது.
“என்ன அர்ஜுன்?”
“அவ கிட்ட போன கொடு”
“நீ அவ நம்பருக்கு போட வேண்டி தான?”
“கொடு மஞ்சு”
திவ்யா வாங்கி காதில் வைக்க “என்ன குடிகாரி… குடிச்சுட்டு மட்டையாகிட்டியா?” என்று கேட்டான்.
“நேர்ல இருந்தா இத சொல்லும் போது வாய உடச்சுருப்பேன். போன்னால தப்பிச்ச.. பேசு பேசு”
“புதுசா எக்ஸ்ப்ளைன் எல்லாம் பண்ணுறீங்க?”
“ஆமா.. மஞ்சு தான் பேசி விடியோ போட்டுறேன்னு சொன்னா . நான் தான் சோசியல் மீடியாலயே இல்லையே.. சோ அவ ஐடில போட்டா”
“உனக்கு ஏன் சோசியல் மீடியா பிடிக்கல”
“அங்க நல்லது பத்து பர்ஷன்ட் கெட்டது நூற்றிதொன்னூறு பர்ஷன்ட் இருக்கு. எனக்கு டைம் வேஸ்ட் பண்ண பிடிக்கல. அப்படி நான் வேஸ்ட் பண்ணனும்னு நினைச்சா எனக்கு நிறைய புத்தகம் இருக்கு”
“அது வரை உன் முடிவு நல்ல முடிவு தான்”
“சரி திரும்ப வந்து எதோ சொல்லுறேன்னு சொன்ன? என்ன அது?”
“நான் தான் வந்து சொல்லுறேன்னு சொல்லுறேன்ல”
“ப்ச்ச் போடா” என்று அழைப்பை துண்டித்து விட்டாள்.
அன்று முழுவதும் வீட்டில் இருந்து விட்டு அடுத்த நாள் படப்பிடிப்புக்கு சென்றாள். அவளை பார்த்ததுமே பாலன் வந்து பேசினான்.
“விடியோ பார்த்தேன். சூப்பர்”
“அய்யய்யோ.. எதோ தோனுச்சு பேசி விட்டுட்டேன். நீங்க வேற.. அதெல்லாம் அப்பவே முடிஞ்சது. நாம வேற வேலைய பார்ப்போம்”
பாலன் சிரித்துக் கொண்டே தலையாட்டினான். எல்லோருமே அந்த காணொளியை பார்த்து இருந்தனர். எல்லோருக்கும் திவ்யா பேசியது பிடித்து இருந்தது. அந்த தவறான பேச்சும் மக்கள் மத்தியில் சீக்கிரமே அடி பட்டுப்போக திவ்யா பேசியதை மட்டுமே எல்லோரும் நம்ப ஆரம்பித்தனர்.
படப்பிடிப்பு புதிதாக கட்டிக் கொண்டிருந்த கட்டிடத்தில் ஆரம்பித்தது. கீழே பேசும் காட்சிகள் எல்லாம் முடிந்து மேலே சென்றனர்.
முதலில் திவ்யா உயரத்தில் நிற்க பயந்தாள். அதனால் அவளை கீழே அதுவும் திரும்பாமல் காட்சியை மாற்றி எடுத்தனர்.
அதாவது மேகா குதிக்கப்போவது போல் நிற்க வேண்டும். அப்படியே பேசிக் கொண்டிருக்க வேண்டும். பிறகு திரும்பி நாயகனிடம் பேச வேண்டும். கடைசியாக நுனிக்கு நடந்து சென்று ஒரு காலை தூக்கி குதிக்கப்போக வேண்டும்.
பாதுகாப்புக்காகவும் திவ்யா பயப்படுவதால் அவளது காலோடு பாதுகாப்பு கயிறு கட்டப்பட்டது. உயரத்திலிருந்து குதிக்கும் போது காலில் மாட்டி விடப்படும் கயிறு. திவ்யா விழுந்தாலும் பிடித்து விடலாம். அதை மாட்டி விட்டு ஒவ்வொரு காட்சியும் படம் பிடித்தனர்.
மேகா மிரட்டி விட்டு குதிக்கப்போகும் முன் அந்த இன்னொரு நாயகி அவளது தோழி வந்து விடுவாள்.
“மேகா.. குதிக்காத.. அவன் உன்ன தான் லவ் பண்ணுறான” என்று தடுப்பாள்.
“நிஜம்மாவா? ஆனா அவன்..”
“அவன் சும்மா விளையாட்டுக்கு சொல்லி இருப்பான். நீ இறங்கி வா”
“முடியாது.. அவன் வாயால சொல்ல சொல்லு நம்புறேன். இல்லனா செத்தே போறேன்”
“சொல்லித்தொலையேன்”
நாயகன் சிறிது தயக்கத்திற்கு பிறகு மேகாவை காப்பாற்ற பொய் சொல்லிவிடுவான். அதை கேட்டவள் “நிஜம்மாவா? என்ன காப்பாத்த பொய் சொல்லலையே?” என்று கேட்டாள்.
“இல்ல.. நீ இறங்கு”
“என் மேல சத்தியமா?”
“உன் மேல சத்தியமா.. இறங்குனு சொல்லுறேன்ல”
வேகமாக கீழே குதித்து ஓடி வந்து நாயகனை கட்டிக் கெள்வாள் அதை பார்த்த தோழி முகத்தை திருப்பிக் கெள்வாள்.
“ரொம்ப தாங்க்ஸ்டா.. நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? இனிமே என் கிட்ட இப்படிலாம் பொய் சொல்லி விளையாடாத” என்று கூறியதும் கட் என்றனர்.
அதன் பின்பு கீழே வேலை செய்பவர்கள் நாயகனை கூப்பிட வேகமாக இறங்கிச் சென்று விடுவான். அவனால் மேகாவையும் பார்க்க முடியாது. தனது காதலியையும் தலை நிமிர்ந்து பார்க்க முடியாது.
அவனோடு கீழே இறங்கப்போனவளை மேகா தடுத்து நிறுத்துவாள்.
“உனக்கும் தாங்க்ஸ்”
“பரவாயில்ல. வா”
“எதுக்குனு கேளு.. உன் வாயாலயே அவன் என்ன லவ் பண்ணுறான்னு சொன்னதுக்கு.”
அவள் அதிர்ந்து நிற்க “என்ன பார்க்குற? எனக்கு நீ பண்ண துரோகம் எனக்கு எப்படி தெரிஞ்சதுனா? நாம பார்த்த ரெண்டாவது நாளே அவன என் காதலன்னு தான் அறிமுகப்படுத்துனேன். அப்படியிருந்தும் அவன் பின்னாடி சுத்தி உன் வேலைய காட்டி லவ்ல விழ வச்சுருக்க. அசிங்கமா இல்ல?” என்று கேட்டாள்.
“இல்ல மேகா.. அது..”
“என்ன எதுவுமே இல்லனு பொய் சொல்லப்போறியா? நம்பிக்கை துரோகி கிட்ட அவன கொடுக்க நான் தாயாரா இல்ல. உன்ன தவிர அவன் யார லவ் பண்ணாலும் நான் விட்டு கொடுத்துருப்பேன். அவன் சந்தோசம் தான் முக்கியம்னு போயிருப்பேன். ஆனா நீ அவனுக்கு தகுதியே இல்லாதவ. இனி அவன மறந்துடு. அதான் உனக்கு நல்லது”
முறைப்போடு சொல்லி விட்டு மேகா கீழே செல்ல அந்த பெண் அதிர்ந்து நிற்பாள். அதோடு அந்த காட்சி முடிந்து போனது.
இது வரை எடுத்த காட்சிகளை அங்கேயே அமர்ந்து திருப்பி பார்த்தனர்.
அதில் எல்லாம் சரியாக இருக்க தூரமாக எடுக்க வேண்டிய காட்சிகள் மிச்சம் இருந்தது. அந்த மாடியில் நாயகன் நாயகி மேகா மட்டுமே நிற்கும் படியான காட்சிகள் ஏரியல் சாட்டில் எடுக்கப்பட்டது.
அதன் பின்பும் திவ்யா மாடியில் நிற்கும் காட்சிகள் சரியாக வரவில்லை. பயத்தை உதறி அங்கு ஏறி நிற்க தயாரானாள். காலில் எதையும் மாட்டாமல் காட்சியை எடுத்து விட்டு உடனே இறங்கி விடலாம் என்று ஏறி நின்றாள்.
கேமரா தூரமாக சென்று அவர்களை படம் பிடிக்க ஆரம்பித்தது. அப்போதும் எதோ சரியில்லாமல் இருக்க சாளரத்திற்காக கட்டப்பட்ட கட்டைகளின் மேல் சீட் அவுட் போன்று கட்டி இருந்தனர். அது நேற்று தான் கட்டப்பட்டது. இன்னும் ஈரமாக இருக்க அதை யாருமே கவனிக்கவில்லை.
திவ்யா அதில் அழுது கொண்டே திரும்ப நடக்க, பார்ப்பதற்கு நிஜம்மாகவே அவள் குதிக்கப்போவது போல் இருந்தது.
“மேகா..” என்று நாயகன் அலறுவதற்கும் மேகா காலை வெளியே எடுத்து வைப்பதற்கும் சரியாக இருந்தது. அந்நேரத்தில் இன்னொரு நாயகியும் “மேகா” என்று கத்தினாள்.
அந்த காட்சி தூரமாக பறந்து கொண்டிருந்த கேமராவில் பதிவாகிக் கொண்டது.
சரியாக அதே நேரம் அர்ஜுன் ஓடி வந்தான். அவன் பின்னாலும் ஒரு சிலர் வந்தனர். யாரையும் பொருட்படுத்தாமல் திவ்யா நிற்கும் இடத்தை பார்த்தான்.
ஓடிச் சென்று மேலே நிற்பவளின் முடியை பிடித்து இழுத்தான். திவ்யா “ஆ..” என்று அமர்ந்து விட அந்த இடம் ஆடுவது போல் அர்ஜுனுக்கு தோன்றியது. அடுத்த நொடி எதையும் யோசிக்காமல் அதன் மேலேறி திவ்யாவை கையில் தூக்கிக் கொண்டான்.
அவன் கீழே குதிப்பதற்கும் கட்டிடம் சரிவதற்கும் சரியாக இருந்தது. அவன் நிற்கும் இடமும் ஆட்டம் காண திவ்யாவை வேகமாக தூக்கி எறிந்தான்.
திவ்யா கீழே விழ நாயகன் ஓடி வந்து தாங்கிப்பிடித்தான். அர்ஜுன் கீழே இறங்குவதற்குள் அந்த இடமும் சரிந்து விட்டது. சுவற்றை பிடிக்க முயற்சி செய்தவன் கையில் காற்று தான் சிக்கியது.
கீழே விழுந்து கொண்டிருந்தவன் மனம் அப்போதும் திவ்யா நலமா என்று பார்க்கவே விருப்பப்பட்டது. அர்ஜுன் தூக்கி எறிந்ததால் கால் சுளுக்கிக் கொள்ள அதை பார்த்து விட்டு நிமிர்ந்தவள் அர்ஜுன் சரிந்து விழுவதை பார்த்தாள்.
உடனே வலியை மறந்து அவள் எழுந்து ஓட நாயகன் பிடித்துக் கொண்டான். அவனது கையை வேகமாக உதறி விட்டு “அர்..ஜு…ன்” என்ற அலறலோடு ஓடி வந்தாள்.
அவளது சத்தம் எங்கும் எதிரொலிப்பது போல் அர்ஜுனுக்கு கேட்க அவள் நலமாக இருக்கிறாள் என்று உணர்ந்தான். அந்நொடியே முகத்தில் புன்னகை வர அடுத்த நொடி நினைவை இழந்தான்.
திவ்யா ஓடி வந்து பார்க்கும் போது எதுவும் தெரியவில்லை. கட்டைகளும் கட்டிடக் கல்லும் மட்டுமே குவிந்து கிடந்தது. அர்ஜுன் அடியில் புதைந்து விட்டான் என்று நினைக்கும் போதே தலை சுற்ற ஆரம்பித்து விட்டது.
“அ.. அர்ஜுன்.. போகாத” என்று கை நீட்டிக் கொண்டே அவளும் விழப்போக நாயகன் அவளை பிடித்து இழுத்து விட்டான்.
திவ்யா பிடித்து தள்ளியதும் விழுந்து எழுந்தவன் வேகமாக வந்து அவள் விழுவதற்கு முன் பிடித்து பின்னால் இழுத்தான்.
“திவ்யா.. பைத்தியமா நீங்க?” என்று திட்டும் போது தான் கவனித்தான். திவ்யா மயங்கிப்போய் கிடந்தாள்.
“திவ்யா திவ்யா” என்று கன்னத்தை தட்டியவன் தூக்கிக் கொண்டு தள்ளி வந்தான்.
இத்தனையும் சில வினாடிகளுக்குள் முடிந்து விட அங்கிருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
சிலர் அர்ஜுன் விழும் போதே வேகமாக அவனை காக்க கீழே ஓடினர்.
“என்ன பார்த்துட்டு இருக்கீங்க? போய் அவர காப்பாத்துங்க” என்று அந்த நாயகன் சத்தம் போட அதிர்ச்சியில் இருந்தவர்கள் எல்லோரும் கீழே இறங்கி ஓடினர்.
பாலன் வேகமாக திவ்யாவிடம் வந்தான். அர்ஜுன் விழும்போது அதிர்ச்சியில் நின்று விட்ட மஞ்சுளாவிற்கும் அதிர்ச்சி கலைந்தது.
வேகமாக அவள் அர்ஜுன் விழுந்த இடத்தை நோக்கி ஓடினாள்.
“மஞ்சுளா தண்ணி கொண்டு வாங்க” என்று நாயகன் கத்தும் போது தான் திவ்யாவை பார்த்தாள்.
அவன் மடியில் மயங்கிக் கிடந்தவளை பார்த்து விட்டு அருகில் ஓடினாள். தன்னிடமிருந்த தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தாள். திவ்யா அசையவில்லை.
சுற்றி நிற்பவர்களை பார்த்து விட்டு “எல்லாரும் கிளம்புங்க. ஆம்புலன்ஸ வரச்சொல்லுங்க” என்றான் பாலன்.
அவர்கள் கீழே இறங்க திவ்யாவை நாயகன் தூக்கிக் கொண்டான். மஞ்சுளாவிற்கோ கண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது.
அவளுக்கு யாரை பார்ப்பது என்று புரியவில்லை. அழுது கொண்டே நாயகன் பின்னால் ஓடினாள்.
அவர்கள் கீழே இறங்கி வரும்முன் அர்ஜுன் மேல் கிடந்த கட்டைகளையும் பெயர்ந்து விழுந்த கட்டிடத்தையும் நகர்த்திக் கொண்டிருந்தனர்.
திவ்யாவை மஞ்சுளாவின் மடியில் படுக்க வைத்து விட்டு அந்த நாயகன் ஓடிச் சென்று உதவினான். எல்லோருமாக சேர்ந்து அர்ஜுன் மீது கிடந்தவற்றை அகற்றி விட்டனர். சில நிமிடங்கள் கூட கடக்கவில்லை. வேகமாக நகர்த்தி பார்க்க மண் மீது கிடந்தான்.
சட்டை கிழிந்து இருந்தது. கையிலும் காலிலும் இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. நாயகன் வேகமாக ஒரு துணியை வாங்கி காலில் இரத்தம் வந்த இடத்தில் அழுத்தி கட்டி விட்டான்.
அந்நேரம் யஷ்வந்தின் கார் வேகமாக வந்து நின்றது. மஞ்சுளாவின் மடியில் கிடந்த திவ்யாவை பார்த்து விட்டு அர்ஜுன் கிடப்பதையும் பார்த்தான்.
அவசரமாக தன்னிடமிருந்த டவலை எடுத்துக் கொண்டு ஓடி வந்தான். அர்ஜுனின் கையில் இரத்தம் வந்த இடத்தை தூக்கி அசையாமல் கட்டுப்போட்டு விட்டான்.
அவன் கட்டுப்போட்டு முடிக்க அவசர ஊர்தி வந்து விட்டது. அவர்கள் அலுங்காமல் அர்ஜுனை தூக்கி வண்டியில் ஏற்றினர். கூடவே திவ்யாவும் ஏற்றப்பட மஞ்சுளாவும் ஏறிக் கொண்டாள்.
உள்ளே போனதுமே அர்ஜுனுக்கு சிகிச்சை ஆரம்பித்து விட்டது. மஞ்சுளாவோ சத்தமிட்டு அழ முடியால் அமர்ந்து இருந்தாள். அவள் அழுகை சிகிச்சைக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று நினைத்து வாயை மூடிக் கொண்டாள்.
திவ்யாவை பார்த்து விட்டு வெறும் மயக்கம் தான். சீக்கிரம் எழுந்து விடுவாள் என்று கூறி விட்டு அர்ஜுனை தான் கவனித்தனர் மருத்துவர்கள்.
‘கடவுளே.. உனக்கு இவங்கள பிரிச்சு பார்க்குறதுல அப்படி என்ன சந்தோசம்.. அர்ஜுன திருப்பி கொடுத்துடு’ என்று மனதில் தோன்றிய அத்தனை கடவுளின் பெயரையும் மஞ்சுளா உச்சரித்துக் கொண்டே வந்தாள்.
திவ்யா எந்த உணர்வும் இல்லாமல் கிடக்க அர்ஜுனும் அதே நிலையில் தான் இருந்தான். மஞ்சுளாவிடம் இருந்த அர்ஜுனின் போனுக்கு அழைப்பு வந்தது.
பெயரை பார்த்து விட்டு எடுத்து காதில் வைத்தாள்.
“ஹலோ.. நான் அர்ஜுன் ஃப்ரண்ட் பேசுறேன். உங்க ஆம்புலன்ஸ் பின்னாடி தான் வந்துட்டு இருக்கேன். சப்போஸ் நான் ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டா நீங்க நான் சொல்லுற ஹாஸ்பிடல்க்கு போங்க. நான் அங்க யாரும் உங்கள நோட் பண்ணாத படி ஏற்பாடு பண்ண சொல்லிட்டேன்”
அவசரமாக அவன் மருத்துவமனையின் முகவரியைச் சொல்ல அதை மஞ்சுளா மற்றவர்களிடம் கூறினாள். வாகனமும் அந்த மருத்துவமனை நோக்கி பறந்தது.
யஷ்வந்த் சொன்னது போல் அங்கு யாருமே இல்லை. இவர்கள் சென்றதும் யார் கண்ணிலும் படாமல் எந்த கேள்வியும் கேட்காமல் அர்ஜுனையும் திவ்யாவையும் உள்ளே அழைத்துச் சென்று விட்டனர்.
தொடரும்.
💞ஹா ஹா நான் கூட ரொம்ப பெரிய ஆப்பு வைச்சுடுவியோன்னு எதிர் பார்த்தேன்
💞 அஜ்ஜு அவன் அம்மு காக்கவே திரும்ப வருவான் . எவ்வளவு வருடங்கள் ஆனாலும்
💞அம்மு அவளின் அஜ்ஜுக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்துக்கொண்டு இருப்பாள்
💞அபி அப்பா க் நீங்க ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டீர்கள்
💞 செந்தில் நாதன் மருமகளுக்கு ஒன்னுனாவே தாங்க மாட்டார் இதில் அவருடைய மகனுக்கு இப்படி ஆகி இருக்கும் போது நீங்கள் அவ்வளவு தான் . முடிந்தால் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்
Athana visyam therinja avangalukkum aappu irukku. 🙊
மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.