Loading

 

 

அபிமன்யு எழுந்திரிப்பதற்கு நண்பகலாகி விட்டது. எழுந்து குளித்து விட்டு அறையை விட்டு வெளியே வர அவனது தாய் தந்தை மற்றும் நண்பன் மூவரும் இருந்தனர்.

நேற்று குடிக்க ஆரம்பித்தது வரை தான் அபிமன்யுவிற்கு ஞாபகம் இருந்தது. அதன் பின் எதுவுமே ஞாபகம் இல்லை. எல்லோரையும் தலை நிமிர்ந்து பார்க்க முடியாமல் குனிந்து கொண்டே வந்து அமர்ந்தான்.

“என்னடா பழக்கம் இது? எப்போ இருந்துடா இப்படி மாறின?” என்று அவனது அன்னை கேட்க அவனால் பதில் சொல்ல முடியவில்லை.

“சொல்லுடா… என் புள்ள குடிகாரன் கிடையாதே.. நல்லபடியா புள்ளைய வளர்த்துருக்கேன்னு ஊரே பெருமை பேசிட்டு இருக்கேன். நீ இப்படியாகி உட்கார்ந்து இருக்க.. எப்போ இருந்து இந்த பழக்கம்?”

“சாரி மா”

“உன் சாரிய குப்பையில போடு.. நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு.. எதுக்காக குடிச்ச?”

உதட்டை கடித்து அமைதி காத்தான்.

“அபி.. தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளைய அடிக்க கூடாதுனு பார்க்குறேன். அம்மா கோபத்த கிளாறாம பதில் சொல்லு”

“ம்மா.. அது… ஒன்னும் இல்லமா”

“ஒன்னுமில்லாத விசயத்துக்காகவா அப்படி நிதானமே இல்லாம குடிச்சுட்டு வந்த? இவன கேட்டாலும் வாய திறக்க மாட்டுறான். இப்போ ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் சொல்லல.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்”

அபிமன்யு ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான். பிறகு,

“ம்மா.. நான் ஒரு பொண்ண லவ் பண்ணேன்மா.. அந்த பொண்ணுக்கு என்ன பிடிக்கல.. வேற யாரையோ லவ் பண்ணுறாளாம். அதான்”

“டேய்… ஒரு பொண்ணுக்காகவாடா இப்படி மாறுன? உலகத்துல வேற பொண்ணே இல்லையா?”

அபிமன்யு வாயை திறக்காமல் இறுக்கமாக அமர்ந்து இருந்தான்.

“உன்ன எதுக்குடா வேணாம்னு சொன்னா? உன் கிட்ட என்ன குறையாம்? அப்படியே வேணாம்னா போறா.. என் பிள்ளைக்கு உலகத்துல பொண்ணா கிடைக்காது?”

“ம்மா.. ப்ளீஸ் மா.. இத பத்தி பேச வேணாம்”

“யாரு அந்த பொண்ணு?” என்று தந்தை கேட்க அபிமன்யு நிதானித்தான்.

திவ்யா அவனை வேண்டாம் என்று கூறி விட்டாள். அவனை மறக்கச் சொல்லி விட்டாள். அவள் அவனை காயப்படுத்துவது போல் பேசவில்லை. நிதானமாக இருக்கும் நிலையை எடுத்துச் சொல்லி விட்டு தன்னுடைய மனதையும் குறிப்பாக சொல்லி விட்டாள். இப்போது அவள் பெயரை இழுத்தால் தந்தை கோபப்படக்கூடும். அதனால்,

“வேணாம்பா.. அவ யாரோ எவரோனு ஆகிட்டா.. இனி அவள பத்தி பேசி ப்ரயோஜனம் இல்ல. நான் கிளம்புறேன். கொஞ்சம் வேலை இருக்கு” என்று கூறி விட்டு வேகமாக வெளியேறி விட்டான். அவனது நண்பனும் அவனோடு சென்று விட்டான்.

பெற்றவர்கள் இருவரும் அடுத்து என்ன என்று புரியாமல் நின்றனர்.

காரில் அமர்ந்து இருந்த அபிமன்யு “தாங்க்ஸ் மச்சான்.. நேத்து நீ கூட்டிட்டு வரலனா அங்கயே கிடந்துருப்பேன்ல?” என்று கேட்டான்.

“லூசு… லவ் பெயிலியர் கஷ்டம் தான் அதுக்காக இப்படியா குடிப்ப?”

“ப்ச்ச்.. அப்போதைக்கு அதான் தோனுச்சு.. அப்பா எதுவும் கேட்டாரா?”

“ம்ம்.. பட் நான் எதுவுமே சொல்லல. நீயே சொல்லுறது தான் நல்லது”

அபிமன்யு நேராக திவ்யாவின் படப்பிடிப்பு நடக்கும் கல்லூரிக்குச் சென்றான். அங்கு வெவ்வேறு காட்சிகள் எடுத்துக் கொண்டிருந்தனர். பொறுமையாக இருந்தான். கடைசியாக ஒரு முறை திவ்யாவை பார்த்து பேசிவிட வேண்டும் என்று நினைத்தான்.

அவளோ அவனிடம் பேச மறுத்து கிளம்பி விட்டாள். அவனுக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் உடைந்து போக மீண்டும் மதுவையே நாடினான். ஆனால் இன்று ஒரு சொட்டு கூட உள்ளே போகவில்லை.

அந்த மதுவில் அவள் முகம் தெரிய அதையே தான் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். அடித்து பிடித்து ஓடி வந்த அவனது நண்பன் “டேய்.. குடிச்சியா?” என்று கேட்டான்.

அபிமன்யு மறுப்பாக தலையாட்ட பொத்தென நாற்காலியில் அமர்ந்து விட்டான்.

“குடிக்கலாம்னு தான் வந்தேன். ஆனா இதுல கூட அவ முகம் தான்டா தெரியுது” என்றவன் அப்படியே வைத்து விட்டு எழுந்து வேகமாக வெளியே சென்றான்.

அவன் பின்னாலே ஓடிய நண்பன் காரில் தொத்திக் கொண்டான். இல்லையென்றால் விட்டு விட்டு சென்று இருப்பான் அபிமன்யு.

கார் புயல் வேகத்தில் போன போதும் இருவரும் வாயை திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. எல்லையே இல்லாமல் வெகுதூரம் சென்று காரை நிறுத்திய அபிமன்யு அருகில் இருந்த கடற்கரையை பார்த்தான்.

அங்கு வேகமாக சென்றவன் முடிந்த மட்டும் கத்தினான். கத்தி கத்தியே தனக்குள் இருக்கும் சோகத்தை தொலைக்கப்பார்த்தான். அதுவும் முடியாமல் போக மண்ணில் படுத்து விட்டான்.

அவன் வாழ்ந்த எட்டு வருட வாழ்வும் இன்று ஒன்றுமில்லாமல் போன வலி . அதை ஜீரணிக்க முடியவில்லை. இதை தாண்டி என்ன செய்வது என்று கூட தெரியாத இயலாமை அவனை பைத்தியமாக்கிக் கொண்டிருந்தது.

*.*.*.*.*.*.

அபிமன்யுவின் தந்தைக்கு அவனது காதலி யார் என்ற விவரம் சென்று சேர்ந்தது. அதை அவர் எதிர் பார்த்து இருந்தார். ஆனால் அவனது அன்னை எதிர் பார்க்கவில்லை‌.

“ஒரு சினிமாக்காரியவா லவ் பண்ணான்?”

“ஆமா.. அந்த பொண்ணு வேணாம்னு சொல்லிருந்தா பெத்தவங்க கிட்ட பேசுவோம்”

“அந்த பொண்ண மறக்க சொல்லிடலாமே”

“அபி செய்வான்னு நினைக்கிறியா?”

அன்னை வாயை மூடிக் கொண்டார்.

அபிமன்யுவின் தந்தை ஜலந்தர் செந்தில் குமாரை சந்திக்க முடிவு செய்தார். அதிர்ஷ்டவசமாக உடனே அனுமதி கிடைத்தது. ஜலந்தரின் நிறுவனத்திலிருந்து சினிமாவில் நடிப்பவர்களுக்கு உடைகள் மற்றும் பல விசயங்கள் வந்திருக்கிறது.

அந்த அறிமுகத்தால் செந்தில் குமார் சந்திக்க ஒப்புக் கொண்டார். சந்திப்பில் நேரடியாக ஜலந்தர் விசயத்திற்கு வந்து விட்டார்.

“என் பையன் இது வரை பெருசா எது மேலையும் ஆசை பட்டது இல்ல. அவன் அதிகமாக விரும்புறது உங்க வீட்டுப் பொண்ண தான். திவ்யான்ஷியோட பெத்தவங்கள பத்தி தெரிஞ்சா அவங்க கிட்டயே கேட்பேன். ஆனா இப்போ நீங்க தானே கார்டியன். அதான் உங்கள கேட்குறேன்”

“இதுல நான் சொல்ல ஒன்னுமே இல்ல.. திவ்யா தான் முடிவு பண்ணனும்”

“சின்ன பசங்தளுக்கு என்ன தெரியும்? நாம பேசிக்கிட்டா போதாதா?”

“சின்ன பையனுக்கு பிடிச்சுருக்குனு தான கேட்க வந்தீங்க.. அது போல எங்க வீட்டு பொண்ணயும் கேட்கனுமே” என்றவர் திவ்யாவை அழைத்தார்.

“சொல்லுங்க மாமா..”

“எங்கமா இருக்க?”

“சூட்டிங்ல..”

அவளுக்கு ஜலந்தர் பேசியதை எல்லாம் செந்தில் குமார் கூறிவிட்டார். உடனே போன் ஸ்பீக்கரில் மாற்றி முன்னால் வைக்கப்பட்டது.

“ஹலோ சார்.. நீங்க உங்க பையனோட காதலுக்காக பேசுறீங்க. ஆனா என் மனசுல வேற ஒருத்தன் இருக்கானே.. அத உங்க பையன் கிட்டயும் நான் சொல்லிட்டேன்.”

“ம்ம்.. சொன்னான்”

“உங்க பையன நான்‌ மறுத்ததுக்கு அது மட்டும் காரணம் இல்ல. வேற ஒன்னும் இருக்கு. உங்க பையன் எனக்கு கொடுத்த ப்ரஸ்னர்ல கேமரா வச்சு கொடுத்தார். நான் அத கண்டு பிடிச்சப்புறம் கூட அவர் அத பத்தி ஒரு வார்த்தை கூட பேசல. இப்போ சொல்லுங்க நான் எப்படி அவர ஏத்துப்பேன். இதுக்கு மேல எனக்கு என்ன சொல்லுறதுனு தெரியல. நான் போகனும்.‌ போன வைக்கிறேன்”

திவ்யா நிதானமாக பேசி விட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்.

“உங்க பையன் பண்ண தப்புல பெரிய தப்பு திவ்யா ரூம் வரை போற மாதிரி கேமரா வச்சது. மத்ததெல்லாம் அதுக்கப்பும் தான். இப்படி பண்ணவன நம்பி எங்க வீட்டு பொண்ண கொடுக்கனுமா?

அப்போவே எதாவது பண்ணிருப்பேன். திவ்யா தான் அவன் தான் வச்சானானு தெரியாம எதுவும் பண்ண கூடாதுனு சொல்லிட்டா. இல்லனா அன்னைக்கே உங்க மகன் இருக்க இடம் தெரியாம போயிருப்பான். உங்க பையன் ஆசை பட்டது என் மகனுக்கு நிச்சயம் பண்ண பொண்ண.. அவன் மனச மாத்திக்க சொல்லுங்க”

செந்தில் குமார் பேசியது எல்லாம் ஜலந்தருக்கு அவமானமாக இருக்க வேகமாக வெளியே வந்து விட்டார்.

*.*.*.*.*.*.*.*.

படப்பிடிப்பு ஆரம்பித்தது. இன்று கல்லூரியில் இல்லை. வெளியில் எடுத்தனர்.

அதாவது மேகா நாயகன் நாயகி மூவரும் ஒரு இடத்திற்கு வந்திருந்தனர். அது நாயகனின் தந்தை கட்டும் அலுவலகம்.

அந்த அலுவலகம் நாயகனுக்கு பிறந்தநாள் பரிசாக அவனது தந்தை கொடுத்தது. அதை தன் தோழர்களிடம் காட்ட வேண்டும் என்று அழைத்து இருந்தான்.

மேகாவும் அவனும் வந்துவிட அவர்களது மற்ற தோழி மட்டும் வரவில்லை.

“ப்ச்ச்.. இவ்வளவு நேரமா எங்க போனா?” என்று அவன் அவளை தேடிக் கொண்டிருந்தான். மேகா நாயகனிடம் பேச ஆரம்பித்தாள்.

“நான்.. உன் கிட்ட ஒரு விசயம் சொல்லனும்”

“ம்ம் சொல்லு..”

“என்ன பத்தி என்ன நினைக்கிற?”

“உன்ன பத்தியா?”

“ஆமா.. சொல்லு”

“உன்ன பத்தி என்ன சொல்லுறது? நீ எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட்.. சோ உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்”

“ஆனா எனக்கு உன்ன அத விட பிடிக்கும்”

“ரியலி?”

“எஸ்.. ஐ லவ் யூ”

அவள் சொன்னதும் நாயகன் அதிர்ந்து நிற்க “கட்” என்றான் பாலன்.

அடுத்த காட்சி எப்படி என்று பேச ஆரம்பித்தனர். அடுத்த காட்சியில் நாயகன் மேகா சொன்னதை நம்ப மாட்டான். அவளும் பல்வேறு வார்த்தைகளில் தன் காதலை புரிய வைத்து விடுவாள்.

அதன் பிறகே நாயகன் மேகாவின் பேச்சை நம்புவான். ஆனால் அவனது மனதில் வேறு ஒருத்தி அதாவது இருவருக்கும் பொதுவான ஒரு தோழி இருப்பாள். அதனால் வேறு பெண்ணை காதலிப்பதாக கூறுவான். உடனே மேகா அந்த கட்டிடத்தின் மாடிக்கு கோபத்தோடு சென்று விடுவாள்.

இதை தான் அடுத்து படமாக்க வேண்டும். இதையெல்லாம் திவ்யாவும் அந்த நாயகனும் ‌பேசி மனனம் செய்து கொண்டனர். மீண்டும் நடிக்க ஆரம்பித்தனர்.

“ஹேய்.. ப்ரான்க் தான?”

“இல்ல.. நான் உண்மையா உன்ன காதலிக்கிறேன். இப்போ இல்ல.. ரொம்ப வருசமா… ஏன் அவளுக்கு கூட தெரியுமே”

“அவளுக்கு தெரியுமா?”

“தெரியுமே.. அவ நம்ம கூட ஃப்ரண்ட் ஆன ரெண்டாவது நாளே சொல்லிட்டேன். உன் கிட்ட சொல்ல தான் கொஞ்சம் தயங்கிட்டே இருந்தேன். இப்போ சொல்லிட்டேன்.. ஹப்பா இப்போ தான் நிம்மதியா இருக்கு”

“மேகா…”

“நோ நோ.. உடனே பதில் சொல்ல வேணாம்.. எவ்வளவு நேரம் வேணா எடுத்துக்கோ.. ஆனா என்ன பிடிச்சுருக்குனு தான் சொல்லனும்”

“மேகா சொல்லுறத கேளு.. நான் உன்ன அப்படி எல்லாம் நினைக்கல”

“நான் தான் உடனே சொல்லாதனு சொல்லுறேன்ல?”

“அய்யோ சொல்லுறத கேளு.. நான் வேற ஒருத்திய லவ் பண்ணுறேன்”

இதை கேட்டு விட்டு மேகா சிரிக்க ஆரம்பித்து விட்டாள். சிரிக்கும் போதே இருமல் வந்து விட “கட்” என்றனர்.

திவ்யாவிற்கு தண்ணீர் கொடுக்கப்பட்டது. சில நிமிட ஓய்வுக்குப்பின் மீண்டும் எடுக்கலாம் என்று ஓய்வு கொடுத்தனர்.

மஞ்சுளா எரிச்சலோடு நிற்க “ஓய்… மூஞ்சி ஏன் இவ்வளவு கடுப்பா இருக்கு?” என்று கேட்டாள்.

“ப்ச்ச்.. இன்னைக்கு அர்ஜுன் வர்ரான்ல.. இங்க வந்ததுல இருந்து கால் ட்ரை பண்ணுறேன்.. நெட்வொர்க் சுத்தமா இல்ல”

“அவன் ஒன்னும் குழந்தை இல்ல.. காணாமலா போக மாட்டான்”

திவ்யா அடுத்த காட்சிக்கு தயாரானாள்.

மீண்டும் சிரிப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

நன்றாக சிரித்தவள் “பொய் தான? எனக்கு தெரியும். இப்படி பொய் சொல்லி நான் என்ன ரியாக்ட் பண்ணுறேன்னு பார்க்க போற? அதான… பட் நான் இதுல எல்லாம் விழ மாட்டேனே” என்றாள்.

“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். நிஜம்மாவே நான் வேற ஒரு பொண்ண லவ் பண்ணுறேன். இது நமக்குள்ள செட் ஆகாது மறந்துடு”

“போதும்டா.. எவ்வளவு நேரம் நடிப்ப?”

“நடிக்கிறதுக்கு தான்மா இங்க வந்துருக்கேன்” என்றதும் பாலன் உட்பட எல்லோருக்குமே சிரிப்பு வந்து விட்டது.

“கொடுத்த லைன பேசச் சொன்னா என்ன பேசுறீங்க?” என்று திவ்யா முறைக்க “மறந்து போச்சுமா” என்று வேகமாக காகிதங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தான்.

திவ்யா சலிப்பாக பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.

“ஹான்… இப்போ ஓகே.. போகலாம்” என்றதும் “மறுபடியும் மறந்தீங்க அவ்வளவுதான்” என்று மிரட்டினாள்.

மீண்டும் காட்சிகள் படமாக்கப்பட்டது. நாயகன் என்ன சொல்லியும் மேகா கேட்பதாக இல்லை. கடைசியில் அவன் அழுத்தம் திருத்தமாக கூற மேகாவிற்கு கோபம் வந்தது. வேகமாக அந்த கட்டிடத்தை நோக்கிச் சென்று விட்டாள்.

அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் எல்லோரும் மேகாவை வேடிக்கை பார்ப்பது போல் காட்சிகள் எடுக்கப்பட்டது.

முதலில் போனால் போகட்டும் என்று நின்றிருந்த நாயகன் எதோ தோன்ற வேகமாக அவளுக்குப்பின்னால் சென்றான்.

அதோடு அந்த காட்சி முடிந்து போக திவ்யாவும் நாயகனும் படியேறும் காட்சி படமாக்கப்பட்டது. அதன் பின் மேல் மாடிக்குச் சென்று விட்டனர்.

படக்குழுவில் பாதி‌பேர் மேல் மாடிக்குச் செல்ல திவ்யாவும் நாயகனும் பாலனிடம் அடுத்த காட்சியை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

மஞ்சுளா மாடியில் நெட்வொர்க் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் கிடைத்த அடுத்த நொடியே அர்ஜுனின் அழைப்பு வந்தது.

“ஹலோ..” என்க அந்த பக்கம் பேசுவது எதுவும் அவளுக்கு கேட்கவில்லை. பாதி கேட்டும் கேட்காமலும் இருக்க “அய்யோ அர்ஜுன் ஒன்னுமே கேட்கல” என்றாள்.

அதற்குள் அழைப்பு துண்டித்து விட்டது. மீண்டும் மஞ்சுளா நெட்வொர்க்கை தேடி அலைய சில நிமிடங்களுக்கு பிறகு கிடைத்தது. இப்போதும் அர்ஜுன் பேசுவது சரியாக கேட்கவில்லை.

ஆனால் அவள் எங்கே இருக்கிறாள் என்று கேட்பது போல் தோன்றியது. அழைப்பு மீண்டும் துண்டிக்கப்பட்டு விட‌ திரும்பவும் அதே வேலையை செய்தாள்.

ஆனால் இம்முறை இருக்கும் இடத்தை அர்ஜுனுக்கு அனுப்ப முயற்சி செய்தாள். பத்து நிமிட போராட்டத்திற்கு பிறகு செய்தி சென்றுவிட அதற்கு‌ மேல் அவள் போனை கவனிக்கவில்லை.

இங்கு காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

ஓடி வந்த மேகா மாடியின் விளிம்பில் சென்று நின்று கொண்டாள். பின்னால் வந்த நாயகனோ அதிர்ந்து போனான்.

“மேகா என்ன பண்ணுற?”

“உனக்கு என்ன பிடிக்கலல.. அதான்.. நான் குதிக்க போறேன்.. பை.. நான் இல்லனு கவலை படாத.. யாரையாவது கட்டிக்கிட்டு சந்தோசமா இரு”

“மேகா.. பைத்தியமா நீ?”

“ஆமா.. உன் மேல”

“இப்போ இறங்க போறியா இல்லையா?”

“முடியாது… நான் போறேன்… நான் செத்து போறேன்” என்று கண்ணை துடைத்துக் கொண்டே அந்த தடுப்பு இல்லாத மாடியில் திரும்பி நடந்தாள்.

“மேகா.. சொல்லுறத கேளு.. இது தப்பான முடிவு”‌ என்று கத்தினான் அவன்.

“அப்போ என் காதல ஏத்துக்கோ.. உன் காதல் இல்லாம நான் வாழ மாட்டேன். என்ன ஏத்துக்க முடியலனா சாகவிடு”

“மேகா.. ஏன் புரிஞ்சுக்க மாட்ற? நான் ஏற்கனேவே வேற ஒருத்திய லவ் பண்ணுறேன்”

“பொய்….” என்று கத்தியவள் “பொய் பொய்.. என்ன ஏமாத்த பார்க்குற.. நான் நம்ப மாட்டேன்” என்று அடம் பிடித்தாள்.

“அய்யோ.. மேகா புரிஞ்சுக்கோ.. நான் பொய் சொல்லல”

“அப்போ சரி.. நீ உன் காதலியோட சந்தோசமா இரு.. நான் இருந்தா என்ன செத்த என்ன?” என்று கேட்டவள் திரும்பி விட்டாள்.

“மேகா.. ” என்று அவன் சற்று பயத்தோடு அலற அவள் திரும்பவே இல்லை.

அந்நேரம் அங்கு கூடியிருந்த அத்தனை பேரையும் மீறிக் கொண்டு புயல் போல் உள்ளே நுழைந்த அர்ஜுன் யாரையும் கவனிக்காமல் வேகமாக உச்சத்தில் நின்று இருந்தவளிடம் ஓடினான்.

அவள் கண்ணை துடைத்துக் கொண்டு குதிக்கப்போகும் போது அவளது முடி பின்னால் இருந்து இழுக்கப்பட்டு தூரமாக தூக்கி எறியப்பட்டால். அடுத்த நொடி அவள் நின்று இருந்த இடம் இடிந்து சரிய அவளைக் காப்பாற்றிய அர்ஜுன் கீழே விழ ஆரம்பித்தான்.

ஒரு நொடியில் அங்கு என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. அதற்குள் இடம் சரிந்து கீழே விழ “அர்ஜூ….ன்….” என்ற அவளது அலறல் எல்லா இடத்திலும் எதிரொலித்தது. அதை கேட்டுக் கொண்டே கீழே சரிந்தவனின் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது. அடுத்த நொடி அவனது நினைவு தப்பியது.

தொடரும்.

(இப்போ ட்ரைலர தான் அப்படியே போட்ருக்கேன். டீடைலா நெக்ஸ்ட் எபில போடுறேன். )

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
3
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Meenakshi Subburaman

      💞😳😳😳😳😳 டேய் ஏன் டா ஏன் டா ஹனி இப்படி பண்ண

      💞 யோவ் படப்பிடிப்பு பண்ற இடத்தை முதலில் சரியா கவனிக்க மாட்டிங்களா

      💞பாவிங்களா இப்போ உங்களால் அஜ்ஜு க்கு இப்படி ஆகிடுச்சே டா

      💞இதுக்கே இப்போ இரண்டு நாளாகத் தான் நல்லா இருந்துச்சுங்க அதுக்குள்ள இப்படியா

      💞இதுல அபி அப்பாவோட சூழ்ச்சி ஏதும் இருக்குமோ 🤔🤔🤔🤔🤔

      💞ஏன் டா ஹனி இப்படி ஷாக் கொடுத்து முடிச்சுட்ட

      💞👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👍👍👍👍💐💐💐💐💐

    2. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.