படப்பிடிப்பு முடிந்ததும் மஞ்சுளா அவளுடைய வீட்டுக்கு சென்று விட திவ்யா மட்டுமே வந்து சேர்ந்தாள்.
களைத்துப்போய் வந்தவள் ஹாலில் அமர்ந்து இருந்த அர்ஜுனை கவனிக்கவில்லை. நேராக அறைப்பக்கம் சென்று விட்டாள்.
அவனும் பேசாமல் அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அறைக்குள் நுழைந்தவள் உடை மாற்றி விட்டு வந்தாள்.
பால் மட்டும் வாங்கிக் கொண்டு சாப்பாடு வேண்டாம் என்று கூறி விட்டாள்.
மீண்டும் அறைக்குள் நுழையும் போது “திவ்யான்ஷி” என்று அர்ஜுன் வந்து நின்றான்.
“என்ன?”
“மாத்திரை எத்தனை போட்ட?”
“ஹான்? என்ன மாத்திரை?” என்று முழித்தாள். பிறகு ஞாபகம் வந்து விட “ஏன்?” என்றாள்.
“தெரிஞ்சுக்க தான்.”
“ரெண்டு”
“அப்புறம் ஏன் ஆறுனு சொன்ன?”
“என் முகத்த பார்க்க பிடிக்கல. வராதனு சொன்னல அதான் அப்படி சொன்னேன்”
“நான் பிடிக்கலனு எங்க சொன்னேன். என் முன்னாடி வராதனு தான் சொன்னேன்”
“ஓஹோ.. சரி இருந்துட்டு போகட்டும். எனக்கு தூக்கம் வருது. குட் நைட்” என்று கூறி அறைக்குள் அடைந்து விட்டாள்.
அவளது சோர்வான முகத்தை பார்த்தவனுக்கு பெரு மூச்சு எழுந்தது. தன் அறைக்குள் வந்து படுத்துக் கொண்டவனுக்கு அன்று நடந்தது எல்லாம் ஞாபகம் வந்தது.
மோதிரங்களை தூக்கி எறிந்து விட்டு உறவை முறித்துக் கொண்டு ஊரை விட்டு வந்து விட்டான். ஆனாலும் மனம் கேட்காமல் லெனினை அழைத்து அம்ரிதாவை பார்த்து பேசச் சொன்னான்.
அங்கு அம்ரிதா இருந்த நிலையை பார்த்து விட்டு லெனினுக்கு கோபம் தான் வந்தது. நேராக அர்ஜுன் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு வந்து விட்டான்.
அவன் வந்ததுமே அர்ஜுன் ஓடி வந்து அணைத்துக் கொள்ள “டேய்.. தள்ளு.. உன் மேல கொலை வெறில இருக்கேன்” என்று லெனின் பிடித்து தள்ள அர்ஜுன் அசையவில்லை.
வழுக்கட்டாயமாக பிரித்து விட அர்ஜுனின் கண்கள் கலங்கிப்போயிருந்தது.
“இப்ப எதுக்குடா அழுகுற? அங்க அம்ரு அழுறா.. பைத்தியம் மாதிரி மோதிரத்த தூக்கி போட்டுட்டு வந்துருக்க”
“லெனின் ப்ளீஸ் இத பத்தி பேசாத”
“அப்படியே ஒன்னு விட்டா பல்லு பேந்துரும். எதுக்குடா இப்போ என்ன போய் நீ கிளம்பி போயிட்டனு சொல்லச்சொன்ன? அங்க போனப்புறம் தான் தெரியுது அம்ரு…”
“லெனின் வேணாம்… ப்ளீஸ் அவள பத்தி பேசாத”
“பேசாம?”
“பேச வேணாம். அவ்வளவு தான்”
“ஏன்டா இப்படி பண்ணுற? என்ன நடந்துச்சுனு கேளேன்”
“வேணாம்.. வேணாம்.. அய்யோ உனக்கும் புரியல… யார் கிட்ட போய் சொல்லுவேன்”
அர்ஜுன் புலம்ப லெனின் சற்று இறங்கி வந்தான்.
“இப்ப என்ன உன் பிரச்சனை? அத சொல்லு”
“அவ நடிக்குறது தான் பிரச்சனை…”
“பட்.. “
“எனக்கு ரீசன் சொல்லாத.. லெனின் கொஞ்சம் என் இடத்துல இருந்து யோசிச்சு பாரு..”
“என்ன யோசிக்கனும்? அதையும் நீயே சொல்லு”
“அம்மு என் கிட்ட காரணம் சொல்ல வந்தா.. ஏன் உனக்கும் காரணம் தெரிஞ்சுருக்கும். ஆனா அந்த காரணம் எனக்கு வேணாம்”
“ஏன் வேணாம்?”
“அந்த காரணம் தெரிஞ்சப்புறம் ? அடுத்து என்ன? என் வாயால அம்முவ நடினு நான் சொல்லனுமா?”
லெனின் இப்போது பதில் சொல்ல முடியாமல் நின்றான்.
“சொல்லு… அம்முக்கு படம் பார்க்க பிடிக்கும். சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆட பிடிக்கும். ஆனா நடிக்குற அளவு எல்லாம் அவ நினைச்சு கூட பார்த்தது இல்ல. என்ன வெறுப்பேத்த சினிமா பத்தி பேசுவா அவ்வளவு தான். திடீர்னு ஒரு படத்துல ஹீரோயின்னா நடிக்க சைன் பண்ணி இருக்கானா ஸ்ட்ராங் ரீசன் இருக்கும். அது எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அவ்வளவு முட்டாள் இல்ல நான்.
அந்த ரீசன் கேட்டுட்டு என் வாயால சரி நடிக்கப்போனு சொல்ல முடியாது. அந்த பிரச்சனைய நான் சரி பண்ணுவேன்னு அவ நினைச்சு இருந்தா என் கிட்ட தான் பேசி இருப்பா. அது என்னால முடியாதுனு தான் இந்த முடிவுக்கு வந்துருக்கனும். இவ்வளவு கூட யோசிக்காத முட்டாள்னா நினைச்ச என்ன?”
லெனினுக்கு நண்பனின் மீது இருந்த கோபம் மொத்தமாக பறந்து விட்டது. அவனுக்கு அருகில் அமர்ந்து தோளில் தட்டிக் கொடுத்தான்.
“என்னால முடியாதுனு உறுதியானப்புறம் அந்த சினிமா தான் காப்பாத்தும்னு முடிவு பண்ணி இறங்கிட்டா.. அத பணத்துக்காக பண்ணாளோ வேற எதுக்கு பண்ணாளோ.. எனக்கு அந்த விசயம் வேணாம். நான் என் கையால அவள சாக்கடையில பிடிச்சு தள்ள மாட்டேன்.
இது அவ முடிவா இருக்கட்டும். அவளோட சொந்த முடிவா இருக்கட்டும். நான் அதுல கோச்சுக்கிட்டு போனதாவே இருக்கட்டும். அவ பிரச்சனைய முடிக்கட்டும். இந்த உலகமே அழிஞ்சாலும் அவ என்ன மறக்க மாட்டா. நான் அவள தவிர யாரையும் நினைக்க மாட்டேன்.
விதி எங்களுக்கு சாதகமா இருந்தா கண்டிப்பா எங்க கல்யாணம் நடக்கும். ஆனா இப்போ இல்ல. அது மட்டும் உறுதி”
“அம்ருவும் பாவம் அர்ஜுன்”
“அவள பத்தி எனக்கு நல்லா தெரியும் லெனின். இப்போ அழுவா.. அப்புறம் நான் எப்போ கைல கிடைப்பேன் பல்ல உடைக்கலாம்னு வெயிட் பண்ண ஆரம்பிச்சுடுவா”
“அதுக்காக இப்படி எவ்வளோ நாள் போகும்?”
“அவ காண்ட்ராக்ட் முடியுற வரை. எத்தன மாசம்னு உனக்கு தெரியுமா?”
“தெரியல.. கேட்டு சொல்லுறேன்”
“அது முடியுறப்போ வந்து மொத்தமா அவள இங்க இருந்து கூட்டிட்டு போயிடுறேன். அது வரை இப்படியே போகட்டும்”
“ஒன்னு சொல்லுறேன். ஜஸ்ட் எனக்கு தோனுனது.. சினிமாவ சாக்கடைனு சொல்லிட்டு அவள தனியா விட்டுட்டு போறியே? நீயும் கூட இருந்தா அவ தைரியமா இருப்பாள்ள?”
“அவளுக்கு? நாம தைரியம் சொல்லனுமா? அடப்போடா”
“இல்ல எனக்கு தோனுச்சு”
“அவ தனியா எல்லாம் இல்ல. என்ன பெத்தவர் சப்போர்ட் இருக்கும். அவர் தான் பெரிய தலை ஆச்சே. அவர் வீட்டு மருமகள காப்பாத்த மாட்டாரா என்ன?”
“அப்படிங்குற?”
“அவர் இருக்க தைரியத்துல தான் இவ சைன் பண்ணி இருக்கனும். விடு.. எனக்கு எத்தனை மாசம்னு மட்டும் கேட்டு சொல்லு. போதும்”
“முடிவே பண்ணிட்டியா?”
“நான் இத கேட்டதுமே முடிவு பண்ணிட்டேன். இனி யோசிக்க ஒன்னும் இல்ல”
“உன் முடிவு எனக்கு பிடிக்கல. ஆனா உன் கோபத்துக்காக அவள நடிக்க வேணாம்னு சொல்லாம ஒதுங்கிட மட்டும் பார்க்குற. அது வரை உனக்கு சப்போர்ட் பண்ணுறேன்”
அடுத்த நாளே லெனின் விசாரித்து கூறினான். இரண்டு வருடம். அதுவும் இரண்டு படங்கள். மொத்தமாக முடிந்து வெளி வந்த பின்பே அந்த ஒப்பந்தமும் முடிவுக்கு வரும். அதை கேட்டு விட்டு மனதை இரும்பாக்கிக் கொண்டு பெங்களூரில் வேலை பார்க்கும் இடத்துக்குச் சென்று விட்டான்.
இரண்டு வருடங்கள் தமிழ்நாடு பக்கம் திரும்பிக்கூட பார்க்காமல் இருந்து விட்டு வரும் போது அம்ரிதாவின் தந்தை இறந்த செய்தி தான் முதலில் கிடைத்தது.
*.*.*.*.*.*.
அடுத்த நாளும் திவ்யா களைத்துப்போய் வந்து சேர்ந்தாள்.
“இன்னும் ரெண்டு நாள்ல சூட்டிங் முடியுது. அப்புறம் நல்லா தூங்க போறேன்”
திவ்யா காரில் ஏறிக் கொண்டே கூற “அப்போ பாலன் சாரோட படம்?” என்று கேட்டாள்.
“அட ஆமால.. அந்த ஸ்கிரிப்ட்ட படிக்கவே மறந்துட்டேன். அவரும் கேட்கல பாரேன்”
“நீயா கால் பண்ணுவனு வெயிட் பண்ணி இருப்பார்.”
“முதல்ல இத முடிப்போம். அப்புறம் படிப்போம்”
“கொஞ்ச நேரம் தூங்கு.. வீடு வந்ததும் எழுப்புறேன்”
“ம்ம்..” என்று கண்ணை மூடிக் கொண்டாள்.
திடீரென “ஹேய்.. அர்ஜுன் கூட வேற எதுவும் சண்ட போடலையை?” என்று மஞ்சுளா கேட்க “எனக்கு அதுக்கு நேரம் கூட இல்ல மஞ்சு” என்றாள்.
“அதான.. ஆனா ரெண்டு நாளா ஒரு பிரச்சனையும் நடக்கலையேனு டவுட்டா இருக்கு”
“அவன் வந்து ரெண்டு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ள எவ்வளவு சண்டை.. எவ்வளவு பிரச்சனை.. நேத்து எதோ பேச வந்தான். எனக்கு தூக்கம் வருதுனு தூங்கிட்டேன்”
“ரெண்டு பேரும் இப்படி பிசியா இருந்தா பிரச்சனை வராதுனு தோனுது”
“அப்ப காலம் முழுக்க இப்படி தான் இருப்போம். பரவாயில்லையா?”
“அதுவும் கஷ்டம் தான்”
“ம்ம்..”
“நீ ஏன் அவன் கிட்ட எல்லாத்தையும் சொல்லி பிரச்சனைய முடிச்சுக்க கூடாது?”
“அவன் கேட்க தயாரா இருக்கனுமே?”
“பிடிச்சு கை கால கட்டி போட்டாச்சும் சொல்லிடு. நான் ஹெல்ப் பண்ணுறேன்”
திவ்யாவிற்கு சிரிப்பு வந்தது.
“அவனோட பிரச்சனையே வேற மஞ்சு”
“என்ன பிரச்சனை?”
“முதல்ல என் நிலைமைய புரிஞ்சுக்காம போறானேனு தான் நானும் கோபப்பட்டேன். அப்புறம் பேசும் போது தான் புரிஞ்சது”
“என்னனு?”
“அவன் சின்ன வயசுல அனுபவிச்ச வலி தான் காரணம்.”
“ஆனா…”
“விடு. அவனுக்கு அவன் உணர்வு தான் முக்கியம்னு முதல்ல நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இல்ல. ரெண்டு வருசத்துல என் காண்ட்ராக்ட் முடிஞ்சதும் அவன பார்த்தேன். அப்போ தான் புரிஞ்சது. என் உணர்வு என் முடிவுக்கு மதிப்பு கொடுத்து தான் போயிருக்கான். நான் தான் அவனோட எண்ணங்கள மதிக்குற நிலைமையில இல்ல.
ஊரே அவன் மேல தப்பு சொல்லுது. எனக்கு தான் தெரியும். நான் பண்ண தப்பு என்னனு. எனக்கு வேற சாய்ஸ் இல்ல. அவனும் நீயா நான் வேணும்னு நினைக்குற வரை உன்ன பார்க்க வரல. என்னால நீ டிஸ்டர்ப் ஆக வேணாம். நான் போறேன்னு சொல்லிட்டு போயிட்டான்”
திவ்யா பேச்சை நிறுத்தி விட்டு சன்னல் பக்கமாக திரும்பிக் கொண்டாள். மஞ்சுளாவிற்கு வருத்தமாக இருந்தது. இரண்டு பேருமே அவளது நண்பர்கள். அவ்வளவு சீக்கிரமாக யாரையும் விட்டு கொடுக்க முடியாது. இருவரையும் சேர்த்து வைப்பது படைத்தவன் கையில் தான் உள்ளது என்ற முடிவுக்கு வந்து அமைதியாகி விட்டாள்.
வீட்டுக்கு வந்ததும் உள்ளே வராமல் மஞ்சுளா அப்படியே கிளம்பி விட்டாள். திவ்யா மட்டும் வர அர்ஜுன் வீட்டில் இல்லை. வேலை முடிந்து அவன் இன்னும் வரவில்லை. அவனை தேடிக் கொண்டிருக்க நேரம் இல்லாமல் சாப்பிட்டு விட்டு படுத்து உறங்கி விட்டாள்.
நடு இரவில் தூக்கம் கலைய பக்கத்து அறையில் சத்தம் கேட்டது. மணியை பார்க்க ஒன்றைக் கடந்து இருந்தது.
“ஒரு மணி வர ஊர் சுத்திட்டு வரானா? இல்ல வேலை முடிய இவ்வளவு நேரமா?” என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டு எழுந்து சென்றாள்.
கதவை தட்டவும் அர்ஜுன் வந்து நின்றான்.
“ஒரு மணி ஆகுது.. இவ்வளவு நேரமா எங்க போயிருந்த?”
அவளது அதட்டலில் அர்ஜுனுக்கு புன்னகை வந்தது.
“வேலை”
“அதுக்காக இவ்வளவு நேரமா?”
சொல்லலாமா என்று ஒரு நொடி யோசித்தவன் வேண்டாம் என விட்டு விட்டு “ப்ச்ச்.. மத்தவங்க லேட் பண்ணிட்டாங்க” என்றான்.
“சாப்பிட்டியா?”
“ம்ம்”
“எதுல வந்த?”
“அவங்களே கார்ல ட்ராப் பண்ணாங்க”
“ஓகே.. சீக்கிரம் தூங்கு குட் நைட்” என்றவள் தன் அறைக்குள் சென்று விட்டாள்.
அவளை அழைக்க நினைத்தவன் கடைசி நொடியில் விட்டு விட்டு கதவை பூட்டி விட்டான்.
*.*.*.*.
“மாமா எப்போ வராரு? பேசுனியா?”
“ஈவ்னிங். மேனேஜர் சொன்னாரு”
“ஓ… வேலை முடிஞ்சதா?”
“தெரியல.. வந்தப்புறம் கேட்டுக்கலாம்”
அந்நேரம் அர்ஜுன் சாப்பிட வர இருவருமே கண்டு கொள்ளவில்லை. அவனும் தனக்குத்தானே பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.
அப்போது திவ்யாவின் போன் இசைக்க எடுத்து காதில் வைத்தாள். அந்த விளம்பரத்தை எடுத்த இயக்குநர் தான் அழைத்து இருந்தாள்.
“ஹலோ..”
“சொல்லுங்க மேடம்.. எப்படி இருக்கீங்க?”
“நான் போன் பண்ணா நீ என்ன நலம் விசாரிக்கிறியா?”
“நலம் விசாரிச்சது ஒரு குத்தமா?”
“சரி போனா போகட்டும். ஃப்ரியா இருக்கியா?”
“ஒரு பத்து நிமிசம் ஃப்ரி தான். சாப்பிட்டுட்டு இருக்கேன். நீ சாப்பிட்டியா?”
“ம்ம்.. திவ்யா ஒன்னு கேட்கனும்”
“என்ன?”
“அந்த ஃப்ரஸ்னர் ஆட் இன்னொன்னு பண்ணி தரியா?”
“நோ.. எனக்கு சுத்தமா நேரம் இல்ல. அண்ட் ஃபர்ஸ்ட்டே சொன்னேன். இந்த ஒரு ஆட் மட்டும் தான்னு”
“எனக்கு தெரியும். ஆனா அந்த கம்பெனி நீயே பண்ணி கொடுத்தா நல்லா இருக்கும்னு கேட்குறாங்க”
“நோ மா. என்னால முடியாது. அந்த ப்ராண்ட் ஸ்போக் பர்ஷன் ஆக்க ட்ரை பண்ணாதீங்க. எனக்கு இதுல இன்ட்ரஸ்ட் இல்ல”
“சரி விடு. நான் சமாளிச்சுக்கிறேன்”
“உன் க்ளையண்ட்ட கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லு. நான் போனா போகுதுனு விட்டு வச்சுருக்கேன்”
“ஏன்? என்னாச்சு?”
“அவங்க எனக்கு கொடுத்த கிஃப்ட்ல கேமராவ ஒளிச்சு வச்சுருந்தாங்க”
“வாட்?”
“எஸ்”
“மை காட்”
“அதுக்கு உண்டு இல்லனு ஆக்கி இருக்கனும். போனா போகுதுனு விட்ருக்கேன்.”
“சாரி பா. இது எனக்கு தெரியாதே”
“தெரிஞ்சுக்க. ஓவரா பேசுனா இத சொல்லிடு. இந்த மாதிரி ஆளுங்க கூட நீயும் காண்ட்ராக்ட் வச்சுக்காத.”
“நான் பார்த்துக்கிறேன். கேமரா வரை போயிருக்காங்க. அவ்வளவு தைரியம் வந்துடுச்சா? நான் எங்க எம்.டி கிட்ட பேசிக்கிறேன்”
“ம்ம்..”
“சரி.. வேலை எல்லாம் எப்படி போகுது?”
“ரொம்ப டயர்டு பா. நிறைய வேலை.. உனக்கு எப்படி போகுது?”
“எதோ போகுது.”
“சரி சரி”
“சரி நீ சாப்பிடு. நான் எம்.டி கிட்ட பேசிட்டு உனக்கு இன்ஃபார்ம் பண்ணுறேன்”
“ஓகே.. பை”
அழைப்பை துண்டித்தவள் சாப்பிட்டு முடித்து எழுந்து விட்டாள். அவள் அந்த பக்கம் சென்றதும் “என்ன கேமரா?” என்று மஞ்சுளா விடம் கேட்டான் அர்ஜுன்.
மஞ்சுளா நடந்ததை சுருக்கமாக கூற “இந்த நல்ல காரியத்த பண்ணிட்டு இன்னும் அவன் உசுரோடவா இருக்கான்? இவ விட்டு வச்சுருக்காளா?” என்று கேட்டான்.
“இப்போதைக்கு ஆமா. கேரளா வரை பின்னாடி வந்துட்டான். இப்போ திரும்ப ஆட்ல இவள வர வைக்க பார்க்குறான். என்னைக்கு வசம்மா சிக்க போறானோ தெரியல”
“என்ன கம்பெனி?” என்று கேட்டு விவரத்தை வாங்கிக் கொண்டான்.
தொடரும்.
மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
💞ரொம்ப ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டாலும் அதிகம் வலி தான்
💞 புரிந்து கொள்ளாவிட்டாலும் பிரச்சினை தான்
💞👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌💐💐💐💐 சூப்பர் டா ஹனி
Amam 🙊 thank you 😍😍😍😍