Loading

அவள் சென்ற திசையையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன் மடிந்து அதே இடத்தில் அமர்ந்தான்.

அவள் சொன்னதையும் ஒரு நிமிடம் யோசித்து பார்த்தவன் ‘அவர்கிட்ட நாம பேசி இருக்கலாமோ’ என்றும் யோசித்தான். அடுத்த கிழமை அவர் பிஸ்னஸ் ட்ரிப் முடிந்து வந்ததும் ஒருதடவை பேசித்தான் பார்ப்போமே என்று முடிவெடுத்த பின்பே எழுந்து அறைக்கு செல்ல போனான்.

போகும் போது ‘என்னை யாருக்கும் தெரியவில்லையா?’ என்று பாவமாக பார்த்த தோசைகள் தெரியவும் தான் அவளும் சாப்பிடாமல் சென்றது நினைவில் வந்தது.

“ச்சே! இன்னைக்கு அவள ரொம்ப பேசிட்டேன். ஒரு சாரியாச்சும் கேக்கனும்”என்று நினைத்து விட்டு மொபைலை எடுத்து பின் “ம்ஹும்…இப்போ ஃபோன் பண்ணா கோவத்துல எடுக்க மாட்டாலே. சரி நாளைக்கு ஆபிஸ் கு வரும் போது கேட்போம்.” என்று மாடியில் தன் அறைக்கு செல்ல ஒரு ரெண்டு படியை கடந்தவன் அவள் சாப்பிடாமல் சென்றது மீண்டும் மனதை உறுத்த அழைப்பை திவ்ய பாரதிக்கு விடுத்தான்.

அழைப்பை ஏற்றவள் “சொல்லு மகிழ்” என்க

“அவ வீட்டுக்கு வந்துட்டாளா?” என்றான்.

“ஆமா டா வந்துட்டா. ஏதும் பேசனுமா குடுக்கட்டா?”

“இ..இல்ல வேணாம்”என்றவன் சிறு அமைதிக்கு பின்‌ “அவ சாப்பிட்டாளா?” என்று கொஞ்சம் உள்ளே போன குரலில் கேட்டான்.

பாரதி மொழியை திரும்பி பார்க்க அவளோ ‘சொல்ல வேண்டாம்’ என்று 

கண்ஜாடை காட்டினாள்.

“அவ இன்னும் சாப்பிடல டா.  வந்ததும் அப்படியே போய் தூங்கிட்டா”

“ஓ….” என்று இழுத்தவன் “அட்லீஸ்ட் ஒரு கப் பால் ஆச்சும் குடிக்க சொல்லுங்க. என்கிட்ட கோச்சிட்டு சாப்பிடாம இருக்க வேணாம் னு  சொல்லுங்க” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவன் தோசைகளை ஒரு பாக்ஸில் போட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு அறைக்குள் சென்று கட்டிலில் மல்லாக்க விழுந்தான்.

இவளோ‌ ‘இதுக்கு மேல என்னால முடியாது’ என்று விட்டு “யெம்மோவ்! சோத்த போடுமா பசிக்குது” என்று ஒரு தட்டை வைத்துக் கொண்டு மேசையில் அமர்ந்தாள்.

ஷாஷ்வதி உணவை தட்டில் பரிமாறி 

விட்டு அவள் ஒரு வாய் எடுக்க முன்

“ஏன் டி அவன் கிட்ட சண்டை போட்டுட்டு வர்ற?” 

“ஆளு தான் வளர்ந்தாலும் அவன் குழந்தை மாதிரி.  இப்போகூட பாத்தியா அவ்ளோ அக்கறையா நீ சாப்டியா னு கேக்குறான்”

“எப்பிடி கேட்காம இருப்பான்? அய்யாவுக்கு மனசு உறுத்தியிருக்கும்.”

“அவன் பாவம் குட்டிமா”

“அப்பிடி னா அவனை மடில தூக்கி வச்சிட்டு கொஞ்சு”

‘இவ கிட்ட பேச முடியுமா?’ என்று தலையில் அடித்து விட்டு விலகிச் சென்றார்.

பாரதி கதிரையை இழுத்து அவள் அருகே போட்டு அமர்ந்தவள் “மெனு நான் ஒரு விஷயம் சொல்லட்டா” என்று மெதுவான குரலில் கேட்க

அவள் ‘என்ன?’ என்பது போல திரும்பி பார்த்தாள்.

“இல்ல…. மகிழுக்கும் உன் மேல ஒரு இது வந்திருக்கும் நினைக்கிறேன்”

“எது?” என்று சலிப்பாக கேட்டாள்.

“அதான் டி… பியார்….பிரேமா……காதல்…..”

“யாருக்கு அவனுக்கா? போடி”

“நான் உண்மையை தான் சொல்றேன். அவன் உனக்காக பேசினதுல அக்கறையை தாண்டி ஒரு விதமான ஃபீல் இருந்துச்சு டி”

“எப்பிடி சொல்ற?”

“லவ் பண்ணி கல்யாணம் பண்ண எனக்கு தெரியாதா?”

“அப்பிடின்ற?”

“ஆமாங்குறேன்” 

இனி மொழியை பிடிக்க முடியுமா? ஒரே பிளையிங் மோட் தான். 

மொழியின் வரலாற்றிலே முதன் முறையாக வெட்கப் படுகிறாள் என்று ஹெட் லைன்ஸே போட்டு விடலாம்.

இங்கே இவள் இப்படி என்றால் அங்கே அவன் இவர்களது சிறு வயது நினைவுகளை ஓட்டிக் கொண்டிருந்தான்.

இவனுக்கொரு ஆறு வயது இருக்கும் போது இவனது அம்மா வழி சொந்தம் உள்ள மாமாவும் அத்தையும் எட்டு வயது பாரதியையும் ஆறுவயது மொழியையும் அழைத்துக்கொண்டு எதிர் வீட்டில் குடியேறினர்.

இவர்கள் வந்தவுடன் தனக்கு விளையாட ஆட்கள் கிடைத்த சந்தோஷத்தில் இருந்தான் மகிழ்.

மகிழை வீட்டில் அவன் அன்னை தாங்குவது போல அவன் அத்தையும் தாங்க, அந்த சிறுவயதிலேயே தன்னை ஒரு ராஜா போல நினைத்தான்.

மகிழின் அன்னை தன் சேவைக்காக சென்றதும் அவன், அன்னை மடிக்காக ஏங்க கூடாதென்று அவனை அத்தை மடியில் வைத்து தாங்கினார் ஷாஷ்வதி.

அதில் இயல்பாக தலை தூக்கிய பொறாமையில் , மொழி அவனிடம் வேண்டுமென்றே வம்பிழுத்து சண்டை போடுவாள். 

தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவனிடம் இவள் மட்டும் வேறு விதமாக நடக்கும் போது இருவருக்கிடையில் உருவானது குட்டிப் பகை.

அதிலிருந்து இவர்கள் சண்டை போடாத நாட்களே இல்லை. 

ஆனால் ஒன்று ஜாக்கிசான் கார்ட்டூன் தொலைக்காட்சியில் போகும் போது மட்டும் ஒற்றுமையாக பார்ப்பார்கள். அதுவும் ஒரு கொஞ்ச நேரத்திற்கு தான். கார்ட்டூன் முடிந்த அடுத்த நிமிடம் அதில் ஜாக்கி சண்டை போட்டது போல தாங்களும் போடுகிறோம் என்று அடித்துக் கொள்வார்கள்.

பாரதி கொஞ்சம் ‘படிப்ஸ்’ என்பதால் இவர்களோடு கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு படிக்கச் சென்று விடுவாள்.

நாட்களும் வருடங்கள் கடந்த பின்னும் இவர்களின் சண்டை குறைந்தபாடில்லை. 

இவர்களின் சண்டையை தீர்த்து வைத்து களைத்துப்போன ஷாஷ்வதி ‘ஆள விடுங்கடா சாமி’ என்று விட்டு விட்டார்.

வளர வளர ஷாஷ்வதியின் மென்மையான குணத்தை மகிழும் மகிழின் அன்னை ஆராத்யாவின் ஆளுமையான குணத்தை மொழியும் பங்குபோட்டனர்.

இருவருக்குமே இருவரின் குணமும் பிடிக்கும். ஏனெனில் இரண்டுமே தம் உயிரானவர்களின் குணம் அல்லவா. ஆனால் இதை ஏற்றுக் கொள்ள தான் மாட்டார்கள்.

என்னவானாலும் ஒருவரை ஒருவர் வெளியில் விட்டுக் கொடுத்ததில்லை. 

மகிழ் எல்லாரிடமும் உடனே பழக மாட்டான். அதனால் சண்டை போட்டாலும் அவளுடனே சுற்றிக் கொண்டிருந்தான். இனியா என்றொரு பூதம் இவர்கள் வாழ்க்கையில் நுழையும் வரை.

இனியா வந்ததும் முதலில் இந்த இருவரையும் மொத்தமாக பிரிக்க முற்பட்டாள். அதை அறிந்து கொண்ட மொழி அதற்கான வாய்ப்பை துளி அளவும் கொடுக்கவில்லை. இவனும் மொழியோடு சுற்றிக் கொண்டிருப்பதை இனியாவிற்காக குறைத்தாலும் அவள் முன் ஒருபோதும் மொழியை விட்டுக் கொடுத்ததில்லை. 

ஆனாலும் இருவருக்கிடையில் சண்டை மூட்டாமல் இருந்ததில்லை.

கொஞ்ச காலத்தில் இவன் தன் வழிக்கு வர மாட்டான் என்று தான். வீட்டில் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை மணக்க போவதாக கூறி இவனை கலட்டி விட்டாள். 

அன்னை இறந்த பின் இருந்ததை மீண்டும் அவன் தன் வட்டத்திற்குள்ளே ஒடுங்கச் சென்றவனை மீட்டெடுத்தாள்.

ஒரு சில நேரம் இவர்கள் சண்டை போடுவதை பார்ப்பவர்களுக்கு இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் குழம்பி போய்விடுவார்கள்.

ஒரு முறை ஆபிஸில் வைத்து அவளது ஐடியா ஒன்றை குறை கூற ஆரம்பித்தது ஒரு சண்டை.

மொழி,”என்ன திங்கிங் உன் மைன்ட் ல? மீ என்ன மென்டல் னு திங்கிங் ஓகயா?” என்று கத்த

அவனும்,”யெஸ் தும் பைத்தியம்” எகிறினான்

“இங்க லுக். திஸ் ஐடியா கண்டிப்பா அரே பச்சாகே ஹார்ட் வின் கரோ”

“என்ன லுக்கிங்கா?”

“ஹான் லுக்கிங் டி”

என்று சண்டை போட்டுக் கொண்டிருக்க

நரேஷ் ஹுசைனை பார்த்து திரும்பி “என்னாடா வசனமே புரியல…..”

ஹுசைன்,” வசனமாடா முக்கியம். படத்தை பார் டா”

என்று இவர்களை வேடிக்கைப் பார்க்க

திரவ்யா தான் ‘கொடுமை டா’ என்று தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

மற்றபடி இவர்கள் சண்டையில் பாதி சேட்டைகள் தான் இருக்கும்.

மகிழ் குலாப்ஜாமுனை  வாயில் போடும் முன் மொழி பிடுங்கித் தின்பது….

அதற்கு இரவு நேரம் அவள் தூங்கும் போது அவள் அறை ஜன்னலுக்கு கல் வீசுவது….

மகிழ் வீட்டிற்கு டீ சர்ட்களில் அவனது கூர் நாசியை வரைந்து ‘யெஸ் ஐயம் கோணமூக்கன்’ என்று எழுதி வைப்பது…

அவளுக்கு புராஜெக்ட் பற்றி எழும் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்கு 

அவள் வரும் போது கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் தன்னுடைய வேலைகளை அவளை செய்ய வைப்பது…..

என்று ஒரு லிஸ்டையே போடலாம்.

இவர்களுக்குள் அழிக்க முடியாத பெயர் அறியா உணர்வினை உணர்ந்தாலும் அதை ஆராய முற்படவில்லை.

இனியாவின் காதலை மகிழ் ஏற்று அவன் அவளுக்காக கொஞ்சம் தன்னை தவிர்க்கும் போது தான் அந்த உணர்வின் பெயர் காதல் என்று உணர்ந்தாள்.

ஆனால் அவனிடம் சொல்லி யாசிப்பதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

பின் அவள் மீது அவனுக்கிருப்பது வெறும் ஈர்ப்பு தான் என்று அறிந்த பின்னும் தன் காதலை அவனுள் திணிக்க முற்படவில்லை.

ஒருமுறை மொழியை யாரோ வம்பிலுக்கிறார்கள் என்று கேள்வி பட்டவுடன் அவர்கள் இவளிடம் மட்டும் இல்லாது வேறு எந்த பெண்ணிடமும் வாலாட்ட முடியாதவாறு தன் கராட்டி திறமையை காட்டினான்.

ஆனால் அவன் அடி ஒவ்வொன்றும் இடியாக இறங்கியது.  மொழிக்கு ஒரு கெடுதல் என்றதும் அவன் கோபம் கரை கடந்திருந்தது. ஆனால் அப்போதும் இவனுக்கு பல்ப் எரியவில்லை. 

அத்தோடு மொழியின் வீர தீர சாகசம் எல்லாம் வாயில் மட்டுமே மற்றபடி நேரடியாக இவ்வாறான நிலைமை வந்தால் ‘டம்மி பீஸு பாவா…’ என்றுவிடும் இவள் திறமையை அறிந்தவன் 

அடுத்த நாளே அவள் கதற கதற காராட்டி சொல்லிக் கொடுத்தான்.

முதலில் வேண்டா வெறுப்பாக கற்றுக் கொண்டாலும் நான் தான் அடுத்த நின்ஜா என்று படம் ஓட்டினாள். 

பைத்தியக்காரி ! நின்ஜா வேறு கராட்டி வேறென்று அறியாமல்…..

முதலுக்கே மோசமாவது போல் சொல்லிக்கொடுத்தவனையே வெளுத்து வாங்க முற்பட்டாள். ஆனால் அவன் விடுவானா.

கடைசியில் ஒவ்வொரு சண்டையிலும் இருவருக்கும் கராட்டி டோர்னமெண்ட் தான்.

இந்த கொஞ்ச நாளாக தான் அடிதடி நடக்கவில்லை. அதிலும் அவள் அன்று அவன் தன்னையே மறந்து இருந்த அன்று விட்ட உதையை தவிர…

நேரம் ஆவதை உணர்ந்து நாளை ஆபிஸில் முதல் வேலை அவளை சமாதானப் படுத்துவது தான் என்று உறுதி கொண்டவன் கண்மூடி தூங்கினான்.

“நினைப்பதெல்லாம்…..நடந்துவிட்டால்…..தெய்வம்…. ஏதுமில்லை……”

தொடரும்…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்