Loading

பாகம் – 52

வேகமாக சென்ற அந்த கார் ஓர் பெரிய பங்களாவின் நுழைவாயுலில் சென்று நின்றது. 

அதிலிருந்து இறங்கிய அந்த நான்கு பெயர் சுஜிதா கையையும் வாயையும் கட்டியபடி அவளை தர தர என இழுத்து உள்ளே சென்றார்கள். 

வீட்டின் உள்ளே ஓர் நாற்காலியில் ஒரு பொம்பளை கம்பீரமாக அமர்ந்து வாயில் பீடாவை போட்டு மென்று கொண்டு கோபமாக அமர்ந்திருந்தார். 

சுஜிதாவின் கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அந்த நான்கு பேரும் சுஜிதாவை இழுத்துச் சென்று அந்த பொம்பளை யின் கால் அடியில் தள்ளி விட்டார்கள். 

சுஜிதா உட்கார்ந்தபடியே காலை தேய்த்து தேய்த்து பிண்ணே நகர்ந்தால். 

அந்த பொம்பளை சுஜிதா கழுத்து வளைவில் கை வைத்து இறுக்கி பிடித்து தூக்கி அவள் கன்னத்தில் பளார் என்று ஓர் அரையை வைத்தாள். 

அந்த சத்தம் அந்த இடமே அதிரும்படி இருந்தது. பிறகு கடைக்கு சென்று இருந்த கண்ணம்மா வீடு திரும்பிய பொழுது வீட்டில் சக்தி கொல்லைபுரம் மயங்கி கிடப்பதை பார்த்தார்.

பதட்டமாக முகத்தில் தண்ணீர் தெளித்து, “தம்பி எழுந்திருங்க தம்பி” என்று கன்னத்தில் தட்டினார் மெதுவாக கண்விழித்த சக்தி, “சுஜிதா எங்கே? சுஜிதா” என்று கத்தினான். 

சக்தி, ஒன்றும் புரியாமல் அங்கேயே அப்படியே அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான். 

அந்த மேனேஜர் தானே சுஜி அப்பா. ஆனால், சுஜி வேறு யாரையோ பார்த்து அப்பா என்று கூறினாலே. 

இப்போ வந்தவங்க எல்லாம் யாராக இருக்கும்? ஒருவேளை அவள் சொந்தக் காரங்களா இருக்குமோ? பெரியப்பா, சித்தப்பா அப்படி யாராவது இருப்பாங்களா?. 

அப்படி இருந்தால் கூட எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு இங்க இருந்து அவளை கூட்டிட்டு போறதுக்கு யாருக்குமே உரிமை கிடையாது. 

அவ என் பொண்டாட்டி என்னை கேட்காமல் எப்படி அவங்க கூட்டிட்டு போகலாம் என்று கோபப்பட்டான். 

ஒருவேளை என்னை பிடிக்கவில்லை என்று டைவர்ஸ் கொடுக்க ரெடி பண்ணிட்டு அவள் சொந்தக்காரங்களை அவளே ஃபோன் போட்டு வர வைத்து இருப்பாளோ. 

ஆமா கண்டிப்பா அப்படித் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் அவங்க வந்து திடீர்னு இவள் கையை பிடித்து கூட்டிட்டு போனாங்க.

இவளும் வரமாட்டேன் என் கையை விடுங்க இதுபோல் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் அவர்களுடன் சேர்ந்து அமைதியாக சென்று விட்டாள்.

அப்போ அவளுக்கு நிஜமாகவே என்னை பிடிக்கவில்லையா? அவளோட வீட்டுக்கு போனாள் நான் அவளை தொந்தரவு செய்வேன் என்று யோசித்து இருப்பாளோ?.

அதனால் அவங்க ரிலேடிவ் வீட்டுக்கு போயிட்டாளோ? இப்போ வந்தவங்க யாரையும் நான் பார்த்தது இல்லையே என்று பலமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

சக்தி செய்வதறியாது திகைத்து நின்றான் அன்றைய இரவு முழுக்க கோபமாக இருந்தான்.

அந்த கோபத்தை யாரிடம் எப்படி காட்டுவது என்று தெரியாமல் வீட்டிலேயே சரக்கு பாட்டில்களை வைத்து குடித்துக் கொண்டு புலம்பினான்.

சுஜிதா உண்மையாகவே என்னை பிடிக்காமல் தான் எனக்கு டைவர்ஸ் கொடுத்து விட்டாள் என்று முழு மனதாக நம்பினான். இரவு முழுக்க சுஜிதாவை நினைத்து குழம்பிக் கிடந்தான். 

அந்த பொம்பளை அடித்த அடியில் சுஜிதா அந்த இடத்திலேயே மயங்கி சரிந்தாள். 

பிறகு அவள் வாயில் இருக்கும் கட்டையும் கையில் இருக்கும் கட்டையும் அவிழ்த்து விட்டார்கள்.

அதன் பிறகு ஒரு பனி பெண் வந்து அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார். 

கண் விழித்த சுஜிதா அந்த பொம்பளையை பார்த்து பயத்துடன், “அம்மா என்னை ஒன்றும் பண்ணிடாத மா” என்று அழுதால்.

அந்த பொம்பளை சுஜிதாவை பார்த்து தீயை கட்டும் விழிகளோடு, “என்னையே ஏமாத்திட்டு போயிட்ட இல்ல. எவ்வளவு தைரியம் இருக்கும் உனக்கு”. 

“நீ போயிட்டினா உன்னை அப்படியே விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா?.”

“நீ இந்த உலகத்தையே விட்டு போனாலும் சரி அந்த எமன் கிட்ட இருந்தே உன்னை திரும்ப கூட்டிட்டு வருவேண் டி. ஏன்னா நான் ஈஸ்வரி” என்றாள் தன் தொடையை தட்டி கம்பிரமாக. 

ஈஸ்வரி, “நான் உன்னை வச்சு பல கோடி பிசினஸ் ஏற்பாடு பண்ணி வச்சிருந்தேன். ஆனால் நீ என்ன பண்ண?”.

“நான் கண் அசருர நேரத்தில் என் கண்களிலே மண்ணை தூவிவிட்டு இங்கே இருந்து எஸ்கேப் ஆயிட்ட இல்ல”. 

“இந்த நான்கு வருஷமாக உன்னை எங்கெங்கே தேடிக்கிட்டு இருந்தேன் தெரியுமா?”. 

“ஆனா நீ எவன் கூடையோ லவ் பண்ணிக்கிட்டு சுத்திட்டு இருக்கியா?” என்று மறுபடியும் அவள் கன்னத்தில் ஒர் அறையை வைத்தார்.

“இவனுக்காக தான் அன்னைக்கு நான் ஏற்பாடு பண்ண கல்யாணத்தை நிறுத்திட்டு ஓடி போனியா?”

“உனக்காக நல்லா ஹீரோ மாதிரி நான் மாப்பிள்ளை பார்த்து ஒரு கோடி செலவு பண்ணி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினேன்”. 

“ஆனால் நீ அந்த கல்யாணத்தையே நிறுத்திட்ட. நான் எவ்வளவு கனவு வச்சிருந்தேன் என்று உன்னக்கு தெரியுமா?”. 

“ஒரு கோடி செலவு பண்ணி உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தாள் பல கோடி பிசினஸ் என்க்கு ஷேர் வரும் அது தெரியுமா? உனக்கு” என்று மறுபடி கன்னத்தில் அறைந்தார்.

ஈஸ்வரி, “என்னை பார்த்தாள் எப்படி தெரியுது? பைத்தியக்காரி மாதிரி தெரியுதா?”. 

“நான் ரெடி பண்ண கல்யாணத்தையும் நிறுத்திட்டு போற அளவுக்கு நீ பெரிய ஆள் ஆயிட்டியா”.

“அவன் யாரு உனக்கு? உன்னோட காதலனா? அவனுக்காக தான் கல்யாணத்தை நிறுத்திட்டு இங்க இருந்து போனியா?” 

“நாளைக்கு உனக்கு கல்யாணம் இருக்கு அதுல மட்டும் நீ ஏதாவது கெடுதல் பண்ணலாம் என்று நினைத்த அடுத்த நொடி உன் காதலன் உயிரோட இருக்க மாட்டான் இந்த உலகத்தில்”. 

“நீ இங்க ஒழுங்கா இருந்தால் அவன் அங்க ஒழுங்கா இருப்பான் உன்னை தேடிக்கிட்டோ அல்லது உன்னை நெனச்சுக்கிட்டோ கிடப்பான்”. 

“நீ மட்டும் இங்க இருந்து தப்பிக்கணும் என்று முயற்சி பண்ணுவதாக எனக்கு ஒரு துளி சந்தேகம் வந்தாலும் அடுத்த நொடி அங்க உன் காதலனின் உயிர் இருக்காது” என்று மிரட்டினார். 

ஈஸ்வரி, “இங்க இருந்து இவளை முதலில் கூட்டிட்டு போய்டுங்க இல்ல நான் இவளை அடிச்சே கொன்னுட போகிறேன்”. 

“அப்புறம் அந்த பாண்டியனை சமாளிக்க முடியாது” என்று பல்லை கடித்தபடி கூறினார்.

ஒரு பணி பெண்ணை அழைத்து ஈஸ்வரி, “அதை பாரு எப்படி பட்டினியா கிடந்து ஓநாய் மாதிரி மெலிஞ்சுப் போய் வந்திருக்கா”. 

“ஒழுங்கா சோத்தை போட்டு தூங்க சொல்லு நாளைக்கு மறுபடி கல்யாணம் பண்ண வராங்க” என்றார். 

சுஜிதா அழுது கொண்டே அவள் அறையில் அமர்ந்திருந்தால். அவள் நெனப்பு முழுக்க சக்தியையே சுற்றி வந்தது.

இவள் கடைசியாக பார்க்கும் பொழுது சக்தி சுஜிதாவையே கண்கள் கலங்க பார்த்துக் கொண்டே இருந்த அவன் பார்வை இன்னும் சுஜிதா கண் முன் நின்று கொண்டே இருக்கிறது. 

இவ்வளவு நேரமாக அவளை அடைத்து துன்புறுத்திய வலியை விட சக்தியை நினைக்கும் போது வரும் வலி அவளுக்கு பெரிதாக இருந்தது. 

அழுது கொண்டே அவள் கை விரலை எடுத்துப் பார்க்க அதில் சக்தி அவளுக்காக வாங்கிய அந்த ஹார்டின் மோதிரத்தை போட்டிருந்தால்.

சக்தி இவளிடம் முட்டிப் போட்டு அந்த மோதிரத்தை நீட்டிக் கொண்டிருக்கும் பொழுது சில ஆட்கள் வந்து சட்டென்று அவள் கையை பிடித்து இழுக்கும் பொழுது அவள் கை சக்தி கையை லேசாக இடித்து விட்டது. 

அப்பொழுது சக்தி கையில் வைத்திருந்த மோதிரம் டப்பாவில் இருந்து அவள் ஒரு மோதிரத்தை மட்டும் எடுத்து விட்டாள்.

சுஜிதா அந்த மோதிரத்தை தான் இப்போழுது பார்த்து அழுது கொண்டு இருக்கிறாள்.

சுஜிதா மனதுக்குள் சக்தி கண்டிப்பா நீ என்னை தேடி இங்க வருவ என்று எனக்கு நம்பிக்கை இருக்கு. 

நான் இல்லை என்று நினைத்து நீ கண்டிப்பா கவலைப்படுவ. ஆனா உன்கிட்ட நான் டைவர்ஸ் பத்திரத்தை கொடுத்து வச்சிருக்கேன். 

அப்படி இருந்தும் நீ உண்மையை தெரிஞ்சுக்கிட்டு என்னை தேடி இங்க வந்த அப்படி என்றால் நம்ப காதல் கண்டிப்பா ஜெலிக்கும். 

இங்கே எனக்கு கல்யாணம் ஏற்பாடு நடக்குது. ஆனால் என் கழுத்தில் இன்னொருத்தவன் தாலி கட்டுவதுக்கு முன்னாடி நீ வந்தினா இந்த பூமியில் வாழ நான் தகுதி ஆனவள் என்று அர்த்தம். 

அப்படி நீ வர வில்லை என்றால் நான் பிணம் ஆகிவிட்டேன் என்ற செய்தி தான் உன்னை வந்து சேறும் என்று மோதிரத்தை பார்த்து சக்தியை நினைத்து பேசிக் கொண்டிருந்தாள்.

மாலை நேரம் விக்ரம், நிலா மற்றும் ராஜலட்சுமி என அனைவரும் சந்தோஷமாக சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். 

 

அந்த சமயம் திடீர் என நிலாவுக்கு வாந்தி வருவது போல் இருந்தது. விக்ரம், “என்ன ஆச்சு உனக்கு? நம்ம சாப்பிட்டது ஏதாவது ஒத்துக்கலையா?”.

 

“நானும் பார்த்துக்கிட்டே இருக்கிறேன் நீ அடிக்கடி இப்படித் தான் வாமிட் வர மாதிரி பண்ணிக்கிட்டே இருக்க” என்றான்.

 

ராஜலட்சுமி கண்கள் கலங்கியபடி நிலா அருகில் சென்று அப்படியா என்று தலை அசைத்தார். 

 

நிலா வெட்கத்துடன் சிரிப்பதை பார்த்து புரிந்து கொண்ட ராஜலட்சுமி நிலாவை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்.

 

விக்ரம் ஒன்றும் புரியாமல், “அம்மா நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க”. 

 

“அவளுக்கே உடம்பு சரியில்லை அவளை போய்ட்டு கட்டி பிடிக்கறிங்க முத்தம் கொடுக்கறிங்க” என்றான்.

 

ராஜலட்சுமி சிரித்துக் கொண்டே விக்ரம் கன்னத்திலும் கை வைத்து சந்தோஷமாக நெற்றியில் முத்தம் கொடுத்தார். 

 

விக்ரம் குழப்பமாக, “அம்மா இப்போ எனக்கு எதுக்கு மா முத்தம் கொடுக்கறிங்க” என்றான். 

 

ராஜலட்சுமி, “நீ நிலாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிக்கிட்டு போயிட்டு வா பா உனக்கே தெரியும்” என்றார்.

 

நிலா, “அதெல்லாம் வேண்டாம் எனக்கு ஒன்றும் இல்லை. நான் நல்லா தான் இருக்கிறேன்” என்றாள்.

 

விக்ரம், “அப்போ சரி நான் வீட்டுக்கு டாக்டரை வர வைக்கிறேன்” என்று போனை எடுத்தான். 

 

ராஜலட்சுமி, “அதுவும் சரிதான் பா வீட்டுக்கே வர சொல்லு” என்றார். நிலா, “இல்லை வேண்டாம் நானே வரேன் ஹாஸ்பிடலுக்கு” என்று அப்படியே மாற்றி கூறினாள். 

 

விக்ரம் கோபமாக, “ஒரு முடிவை ஒழுங்கா சொல்ல மாட்டியா உடம்பு முடியாமல் இருக்கும் போது இப்படி மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டு இருக்க என்ன விளையாடுறியா” என்றான். 

 

நிலா, “டாக்டர் வீட்டிற்க்கு வந்து பார்க்கிறதை விட ஹாஸ்பிடலுக்கு நாம் சென்று பார்த்துவிட்டு வந்தால் எனக்கு கொஞ்சம் திருப்தியாக இருக்கும்” என்றாள்.

 

ராஜலட்சுமி, “சரி மா உன் இஷ்டப்படி பண்ணு. ஒரு பிரச்சனையும் இல்லை. நீயே போயிட்டு வா”. 

 

“விக்ரம் பத்திரமா பொறுமையா நிலாவை காரில் கூட்டிட்டு போயிட்டு வா” என்றார். 

 

விக்ரம் மற்றும் நிலா இருவரும் ஹாஸ்பிடலுக்கு சென்று அடைந்தார்கள். 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்