Loading

நான் நினைத்தால் வருவாயோ அன்பே..! 02

 

 

 அனைத்து மத இன மக்களையும் ஒன்று சேர்த்த சென்னை மாநகரம் காலை நேரத்து பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்தது..

 

 

 சரியாக காலை 8 மணிக்கு அவனுக்கு புது படத்துக்கான பாடல் ரெக்கார்டிங் இருப்பதால் நேரத்தோடு எழுந்து அன்றைய நாளை புத்துணர்ச்சியோடு ஆரம்பித்தான்..

 

 

 அவனது முகம் மலர்ச்சிக்கு காரணமான சில நாட்களாக அவனுக்கு வரும் குட் மார்னிங் குட் ஈவினிங், குட் நைட் போன்ற விஷ் பண்ணி குறுந்தகவல் இன்றும் காலை சரியான நேரத்துக்கு வந்து இருந்தது..

 

 

 

கைபேசி எடுத்து வழமை போன்று இன்றும் அந்த மெசேஜ் எத்தனை முறை படித்தான் என்றே தெரியாமல் படித்து பார்த்துவிட்டு அவனது முகத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக வந்த சிரிப்பை கண்ணாடியில் பார்த்து ரசித்தபடி கைபேசியை வைத்துவிட்டு ரெக்கார்டிங் போவதற்கு குளிக்க சென்றான்..

 

 

 

 வாக்கிங் சென்று வந்த களைப்பு நன்றாக தீர குளித்துவிட்டு வந்து தயாராகி கீழே வந்தபோது அவனது தாய் மீரா அவனுக்கு காலை உணவை மேசையில் எடுத்து வைத்து அவனுக்காக காத்திருந்தார்..

 

 முகத்தில் பொலிவுடன் நடையில் துள்ளலோடும் மாடியில் இருந்து விசில் அடித்தபடியே இறங்கி நடந்து வந்து உணவு மேசையில் வந்து இருந்தவன் எதிரில் இருக்கும் தாயை பார்த்து புன்னகைத்தான்..

 

 

 மீரா எழுந்து வந்து மகனது தலையை ஒரு முறை தடவி விட்டு அவனுடன் சற்று பேச ஆரம்பித்தார்..

 

 

 அவனும் தனக்கும் தாய்க்கும் இரு தட்டுகளை எடுத்து வைத்து இருவருக்கும் அவனே உணவை தட்டில் எடுத்து வைத்து உணவு உண்ண ஆரம்பித்தான்..

 

 

 

“ கண்ணா 30 வயசு ஆயிடுச்சு டா உனக்கு.. அம்மா கேட்டுக்கிட்டே இருக்கேன் தானே.. கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கட்டுமா?.. நீ வேற சீதாவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்ட.. நாங்க உனக்கு கல்யாணம் பண்ணி வச்சா தானே சீதாக்கு நீ மாப்பிள்ளை தேடி அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க முடியும்.. ” என்று கூறிவிட்டு அவனது பதிலுக்காக அவன் முகத்தையே பார்த்திருந்தார்..

 

 

“ அம்மா உங்க மகனுக்கு கல்யாண ஜோகம் கூடிய சீக்கிரமே வந்துரும்,. நீங்க எனக்கு பொண்ணு தேடி கஷ்டப்பட வேண்டாம் நானே உங்களுக்கு நல்ல மருமகளை தேடி சீக்கிரமா உங்க முன்னாடி அழைத்து வருவேன்.. இப்பவே நீங்க மாமியாரா நடந்துக்க எல்லா சீரியலையும் பார்த்து வில்லி த்தனத்தை பழகி வச்சுக்கோங்க..” என்று தாயின் மனநிலையை சரி படுத்தி விட்டு அவர் உணவு உண்டதும் அவருக்கான காலை மாத்திரைகளை எடுத்து கையில் குடிக்குமாறு கொடுத்துவிட்டு அதை அவர் குடித்ததை தெரிந்து கொண்ட பின் அங்கிருந்து ரெக்கார்டிங் தியேட்டர் செல்வதற்காக தாயின் கன்னத்தை கிள்ளி கொஞ்சி விட்டு காரில் ஏறி புறப்பட்டு விட்டான்..

 

 

 

 ரெக்கார்டிங் தியேட்டர் வாசல் முன்பு புது பட பாடலைப் பற்றி அவனிடம் பேசி தெரிந்து கொள்வதற்காக பத்திரிக்கை நண்பர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்..

 

 நேரம் 8 மணியை நெருங்கிக் கொண்டிருப்பதால் அவன் பத்திரிக்கை மற்றும் டிவி நிருபர்கள் யாருக்கும் அவர்களது கேள்விக்கு பதில் சொல்லாமல் தலையசைத்து விட்டு வேகமாக உள்ளே சென்று விட்டான்..

 

 

 அவன் வரவிற்க்காகவே மியூசிக் டைரக்டர் மற்றும் டைரக்டர் என அனைவரும் காத்துக் கொண்டிருந்தார்கள்..

 

 

  நடிகர்களுக்கு சவால் விடும் அழகிய தோற்றத்தில் 30 வயது கட்டிளம் காளையாக அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும் பாடல் பாடிவரும் இவனே விஜய் இந்திர பிரகாஷ்.. எனும் பிரபலமான இளம் பாடகரே இந்த விஐபி..

 

 

 அவனது அக்மார்க் புன்னகையுடன் அனைவரோடும் கைகுலுக்கி காலை விஷ் பண்ணி ரெக்கார்டிங் தியேட்டர் உள்ளே நுழைந்து விட்டான்..

 

 

 அவனது இந்த குறுகிய கால அசுர வளர்ச்சியில் அவனுக்காக காத்திருப்பார்களே தவிர அவன் யாருக்காகவும் இதுவரையும் காத்திருந்ததில்லை..

 

 

 அவன் படத்திற்காக ஒரு பாடல் பாடினான் என்றால் அந்த படம் மிகவும் வெற்றி படமாக அமைந்து விடும்..

 

 

  சண்டை காட்சி காமெடி காட்சிகள் மற்றும் சமூக கருத்து என அனைத்தையும் ரசிக்கும் வண்ணம் இருந்தாலும் அவன் குரலில் இடம்பெற்று இருந்த அந்த பாடலே

முதன்மையாக அனைவரது மனதையும் நிறைத்து அப்படத்தை பார்க்க வைக்கும்..

 

 அதனால் மிகவும் பிஸியான பாடகரே விஐபி..

 

 

 எவ்வளவு புகழ் வரவேற்பு அவனுக்கு இருந்தாலும் தாய் அவனது அத்தை குடும்பம் தந்தை பிசினஸ் என அனைத்து விதத்திலும் அவனது ஒரே முகமே வெளிப்படும்..

 

 

 சிறந்த பாடகர் என்ற எந்தவிதமான கர்வமோ தலைக்கனமோ அவனிடத்தில் சிறிதளவும் இல்லை..

 

 

 தந்தையுடன் இருந்த காலத்தில் இருந்து அவன் பணத்தை அதிகம் பார்த்து வளர்ந்தபடியால் பணத்திற்கான மதிப்பும் அவனிடத்தில் இல்லை..

 

 

 இவ்வளவு தரவேண்டும் அவ்வளவு தர வேண்டும் என்று இதுவரையும் அவன் எந்த பாடலுக்கும் தொகையை பேரம் பேசி கேட்டதில்லை..

 

 

 அவர்கள் கொடுக்கும் பணத்தை அது எவ்வளவாக இருந்தாலும் மன திருப்தியோடு வாங்கி அவனது பணியை சிறப்பாக செய்து கொடுத்துவிட்டு சென்றுவிடுவான்..

 

 

இவ்வளவு திறமை இருந்தும் அவனது இந்த அலட்டல் இல்லாத குணமே அவன் முன்னேற மிகப்பெரிய காரணமாகும்..

 

 

 தினமும் அவன் அவனுடைய நாளை பொக்கிஷமாக ரசிக்கும் நேரம் அவன் பாடும் பொழுது மட்டுமே…

 

 

 இயல்பாக கொடுத்த பாடலை மிகவும் எளிமையாக குறிப்பிட நேரத்திற்குள் பாடிவிட்டு வெளியே வந்து அவனுக்காக காத்திருந்தவர்களுடன் சற்று நேரம் பேசி விட்டு அங்கே கொடுத்த ஜூசை அருந்தி மீண்டும் வெளியே வந்தான்..

 

 

 தற்பொழுதும் அவனுக்காக டிவி நிருபர்கள் காத்துக் கொண்டிருந்ததால் அவர்களை ஏமாற்றாமல் பாடலை பற்றி மட்டும் ஒரு சில வரிகள் பேசிவிட்டு அவர்களிடமும் கையசைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி அவனது காரில் ஏறி சென்று கொண்டிருந்த நேரம் அவனது தாய் மீராவிடம் இருந்து கைபேசியில் அழைப்பு வந்தது..

 

 

 ரெக்கார்டிங் முடித்துவிட்டு அங்கிருந்து அவனது தந்தையின் ஆபீசுக்கு சென்று ஆகஸ்ட் மாதத்திற்கான கணக்கு வழக்குகளை முடிக்கும் வேலையில் ஈடுபட போனவனை கைபேசி அழைப்பு தடுத்து நிறுத்தவும் எடுத்துக் காதுக்கு ப்ளூடூத் ஐ பொருத்தி தாயிடம் பேச ஆரம்பித்தான்..

 

 

“ ஹலோ அம்மா சொல்லுங்கம்மா.. “

 

 

“ கண்ணா முடியாதுன்னு சொல்லாம அம்மாவுக்கு ஒரு சின்ன உதவி செய்யணும்.. “

 

“ என்னன்னு சொல்லுங்கம்மா உதவி எல்லாம் என்ன பெரிய வார்த்தை.. நீங்க சொல்லி நான் முடியாதுனு சொல்லுவேனா?.. சொல்லுங்க என்ன பண்ணனும்..? “

 

 

 இன்று சென்னையில் பிரபலமான ஒரு தொழில் அதிபரின் மகனுக்கு திருமணம் என்பதால் இவர்களுக்கும் தொழில் முறையில் திருமணத்திற்கு அழைப்பு வந்திருந்தது..

 

 

 யசோதாவும் மீராவும் இன்று இந்த திருமணத்திற்கு செல்வதால் தான் நேற்று சீதாவுடன் அங்கே யசோதா செல்ல முடியாததற்கு இதுவும் ஒரு காரணம்..

 

 

 சென்னையில் வளர்ந்து வரும் ஓர் இளம் பெண்ணின் பொட்டிக் முகவரியை கூறி அங்கே சென்று ஒரு பார்சல் தருவதாகவும் அதை பெற்று தன்னிடம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்..

 

 

 

 மீரா வீட்டில் வேலைக்காரர்களுடன் தனித்து இருப்பதால் சில நேரம் ஏதேனும் ஆபத்தோ அவசரமோ இருந்தால் கைபேசியில் அழைப்போரின் கைபேசி இலக்கம் என அனைத்தையும் தாய் ஏற்காமல் விட்டால் அவனுக்கு வருவது போன்று செய்து வைத்திருந்தான்..

 

 

 மூன்று மாதங்களுக்கு முன்பு மீராவுக்கு வந்து ஒரு கைபேசி அழைப்பை அவர் ஏற்காமல் விட்டதால் அது அவனுக்கு வந்தது..

 

 

 அன்று அந்த அழைப்பு வந்து சற்று நேரத்தில் அவருக்கு வந்த மெசேஜை பார்த்துவிட்டு அவன் நேரடியாகவே அந்த இலக்கத்தில் இருந்து வரும் அழைப்பு மற்றும் மெசேஜ் என அனைத்தும் அவனது கைபேசிக்கு வருமாறு பதிந்து வைத்துக் கொண்டான்..

 

 

 அன்று ஆரம்பித்த பழக்கம் தான் இன்று வரையில் அவனுக்கு காலை மற்றும் மதியம் மற்றும் இரவு வாழ்த்து வருவது…

 

 

 அவன் நினைத்தால் யார் அது என்று தெரிந்து கொள்ள முடியும் ஆனால் தெரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை..

 

 

 தாய் அனுப்பிய லொகேஷன் பார்த்து அங்கே சென்றான்..

 

 

 அந்தப் பொட்டிக் முன்பு சற்று கூட்டமாக இருக்கவும் மீண்டும் தாய்க்கு கைபேசியில் அழைத்து தான் வந்திருப்பதை கூறி பார்சலை தன்னிடம் சேர்க்குமாறு கைபேசியில் அழைத்து கூறும் படி சொன்னான்..

 

 

 

 மீராவும் கண்மணியின் பொட்டிக் தொலைபேசி மற்றும் அவளது கைபேசிக்கும் அழைத்து சோர்ந்து போய் விட்டார்.. ஆனால் கண்மணி வேலை பிஸி காரணமாக அழைப்பை ஏற்கவில்லை..

 

 

இன்று விசேட முகுர்த்த நாள் அதனால் 

 சாரி பிளவுஸ் டச்சிங் மற்றும் ப்ராக் போன்ற பெண்களின் அலங்கார உடைகள் அதிகம் அவளிடம் இன்று தரும்படி ஒப்படைக்கப்பட்டு இருந்தது..

 

 

 சில நாட்களாக மூச்சு கூட விட நேரமில்லாத அளவு அதிகமாக உழைத்து களைத்து போனாள்..

 

 

 கண்மணியும் அவளது தாயும் இன்னொரு பெண்ணும் அந்த பொட்டிக்கை நடத்தி வருகிறார்கள்..

 

 

 அதில் ஆடைகளின் அலங்கார வேலைபாடு செய்வது அதிகம் கண்மணி தான்..

 

 

 தாயும் அந்தப் பெண்ணும் உடைகளை தைத்து கொடுக்க கண்மணி அதற்கு அலங்காரம் செய்வாள்..

 

 

தையல் ஓரளவுக்கு இலகுவானது.. ஆனால் அலங்கார வேலை செய்வது மிகவும் நுணுக்கமாக செய்ய வேண்டும்.. மிகவும் கஷ்டம் அதற்கு மிகவும் பொறுமையும் அவசியம்..

 

 

இயல்பில் கண்மணி மிகவும் சாந்தமான பொறுமையான குணம் கொண்டவள் என்பதால் அவளுக்கு இது பெரிய விடயமாக தெரியவில்லை..

 

 

 வாடிக்கையாளரை காத்திருக்க வைக்கும் பழக்கம் அவர்களுக்கு இல்லை என்பதால் அவர்கள் வரவர அவர்களது ஆடைகளுக்கான பில்லை வாங்கி செக் பண்ணி அவர்களிடம் கொடுத்துக் கொண்டிருந்தாள்..

 

 

 அந்த சிறிது நேரம் தான் விஐபியும் அங்கு காரில் காத்திருக்க நேர்ந்தது..

 

 

 வேலையின் காரணமாக அவளது சோர்வு நேரத்திலும் முகத்தில் இருக்கும் வாடாத அழகிய இயற்கை புன்னகை அவளை பேரழகியாக காட்டியது..

 

 

 அப்பொழுதுதான் அந்த ஒரே ஒரு கணம் ரசித்த அந்த முக அழகு அவனது மனதில் ஆழமாக பதிந்து விட்டது..

 

 

 வாடிக்கையாளர் கூட்டம் குறைந்த பின் தான் காரில் இருந்து இறங்கி அவன் பொட்டிக் முன்பு சென்று தாய் அவருக்கு கைபேசியில் அனுப்பிய பில்லின் பிரதியை காட்டி அந்த பார்சலை கேட்டான்..

 

 

 அப்பொழுது இன்று காலை அவன் டிவி நிருபருக்கு கொடுத்த பேட்டி மற்றும் பாடி காட்டிய பாடல் வரிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது..

 

 

 அவன் மாஸ்க் அணிந்து நின்றதால் அவனை அங்கு யாராலும் கண்டு கொள்ள முடியவில்லை..

 

 

 டஸ்ட் காரணமாக சிலர் மாஸ்க் அணிந்து ஆரோக்கியத்தை பேணுவதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..

 

 

 மீராவிற்கு கடந்த ஆறு மாதமாகவே இந்த பொட்டிக் யசோதா மூலம் அறிமுகமாகியதால் அவர் விஐபி தாய் என்று அங்கு யாருக்கும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை..

 

 

 அப்பொழுதுதான் கண்மணி கைபேசியை எடுத்துப் பார்த்தபோது மீராவிடம் இருந்து வந்த அழைப்பை பார்த்து மீண்டும் மீராவிற்கு அழைத்து வந்திருப்பது அவர் அனுப்பிய ஆள் தானா என்பதை செக் செய்வதற்காக அழைத்தால்..

 

 

 மீரா போன்ற பணக்கார பெண்களின் ஆடைகள் பல ஆயிரகளை தொடும் என்பதால் அவர் அனுப்பிய ஆள் என்று கூறி வேறு யாரேனும் வந்து பெற்று அதை தவறாக விற்பனை செய்து விட்டால்.. அவர்களது பொட்டிக்கின் பேர் கேட்டு விடும்.. என்பதால் அனைத்து விதத்திலும் கண்மணி மிகவும் உஷாராக இருப்பாள்..

 

 

 சில நேரங்களில் மீரா பில்லை தவறாக விட்டிருக்கலாம்.. அதை எடுத்து யாரேனும் கைபேசியில் போட்டோ பிடித்து அவளிடம் காட்டி அவரது ஆடையை பெற்றுக் கொண்டு அதை கூடிய விலைக்கு விற்பனை செய்தால் அது இருவருக்குமே பெரிய பிரச்சினை ஆகி விடும்..

 

 

 

 திருமணத்திற்கு செல்ல நேரம் செல்வதால் யசோதா அழைத்து மீராவை வேகமாக தயாராகும் படி கூறியிருந்தார்..

 

 

 பெரும்பாலும் விஐபி மதிய உணவிற்கு வீட்டுக்கு வரமாட்டான்.. அதனால் இன்று இதை சாக வைத்து மகனுக்கு மதிய உணவு வீட்டில் கொடுத்துவிட வேண்டும் என்பதால் அவரே கைப்பட சமைத்து உணவை மேசையில் எடுத்து அடுக்கி வைத்துவிட்டு கல்யாணத்துக்கு தயாராக குளிக்க சென்று விட்டார்..

 

 

  கைபேசியில் கண்மணி அழைக்க அழைப்பு சென்று கொண்டிருந்ததே தவிர மீரா அழைப்பை ஏற்கவில்லை.. அதனால் அந்த அழைப்பு மீண்டும் விஐபியின் கைபேசிக்கு வந்தது..

 

 

 அப்பொழுது தான் தெரிந்து கொண்டான்.. மூன்று மாதமாக அவனை விஷ் பண்ணி மயக்கும் மாய மோகினி யார் என்பதை..

 

 

 மெசேஜ் தவிர இதுவரைக்கும் எதுவும் தவறாக வந்ததில்லை.. இருந்தாலும் அது ஏனோ அவன் மனதை மிகவும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துவிட்டது..

 

 

 சில மெசேஜ்களை வைத்து அனுப்புவது ஆணா பெண்ணா என்பதை அறிந்து கொள்ள முடியும்.. அப்படி அறிந்து கொண்டான்.. இந்த மெசேஜ் அனுப்புவது ஒரு பெண் என்பதை..

 

 

 எதிரில் நிற்பது விஐபி என்று தெரியாமல் அப்பொழுதுதான் நிதானமாக அவனது பேட்டியை பார்த்து கொண்டிருந்தவள் வாய்விட்டு அவனது அழகையும் அவனது பாடல் திறமையும் புகழ்ந்தாள்..

 

 

“ வாவ் சூப்பர்.. என் ஆள் எவ்வளவு டக்கரு பீஸ் பாத்தியா டி.. என்ன அழகு என்ன அழகு.. சிலருக்கு வாய்ஸ் நல்லா இருக்கும் ஃபேஸ் நல்லா இருக்காது..

 ஒரு சிலருக்கு தான் இப்படி எல்லாமே அழகா இருக்கும்.. எவ வந்து கொத்திக்கிட்டு போக போறாளோ?..” என்று பெருமூச்சு விட்டு தாய் வருவது தெரிந்து வேலையில் கவனமாக இருந்தாள்..

 

 

 கண்மணியின் தாய்க்கு இதெல்லாம் பிடிக்காது.. அவரும் அவருக்கு பிடித்த எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் போன்ற ஹீரோக்களை ரசித்திருக்கிறார்.. தவிர இப்படி வாய்விட்டு அவர்களைப் புகழ்ந்தது இல்லை.. அந்த காலத்தில் எம் ஜி ஆர் அண்ணா என்று அவரை அழைத்ததால் அண்ணா என்று அவர் அனைவரும் மனதிலும் பதிந்து விட்டார்..

 

 

 ஆனால் இந்த காலத்தில் எல்லாம் ஹீரோ ஹீரோயின் மற்றும் பாடகர் டைரக்டர் போன்ற பிரபலங்களை காதலனாக சைட் அடிக்கும் ஆளாகவே இளம் பெண்கள் ஆண்கள் பார்க்கிறார்கள்..

 

 

 அவர்கள் அதை ஒரு தொழிலாக செய்வதால் ரசிக்கும் இவர்களுக்கு அது ஆரோக்கியமான விஷயம் இல்லை.. என்பதாலும் கண்மணியின் தாய் அதை கண்மணிக்கு பல விதத்தில் கண்டித்து காண்பித்து விட்டார்.. ஆனால் போகப் போக தாய் இல்லாத நேரங்களில் விஐபி திரையில் வந்தாலோ இல்லை அவனது பாடல்கள் ஒலித்தாலோ கேட்டு ரசித்து ஒரு வரியேனும் அவனைப் பற்றி புகழ்ந்து பாராட்டி விட்டு கடந்து செல்வாள்..

 

 

 இன்றும் கண்மணி அவனுக்கு எதிரியே அவனை பற்றி இப்படி கூறவும் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு சிரிப்பும் ஆச்சரியமும் தாங்க முடியவில்லை..

 

 

 யார் என்று அவனது மண்டையை குடைந்த மெசேஜ்க்கு சொந்தக்காரி இவள்தான் என்று தெரிந்து கொண்ட பின்.. இதற்கு முன்பு அவளது புன்னகை அவன் மனதை பாதித்ததாலும் நின்று நிதானமாக அவளை தலை முதல் கால் வரை ரசித்துப் பார்த்தான்..

 

 

 அவனது ரசனைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக கண்மணியின் தாய் மீராவின் பிளவுஸ் பார்சலை எடுத்து வந்து கண்மணியிடம் கொடுத்தார்..

 

 

அதை கையில் வாங்கியவள் வி ஐ பி யின் பக்கம் திரும்பி. “ சார் உங்க மாஸ்க் கொஞ்சம் கழட்டுங்க சார் உங்கள போட்டோ புடிச்சு வச்சுக்கிறேன்.. நாளைக்கு மீரா மேடம் வந்து நான் அனுப்பல யார்கிட்ட என்னோட பார்சல் கொடுத்தன்னு என்கிட்ட கேட்டால் நான் யாருன்னு பதில் சொல்லுவேன்.. அவங்களுக்கும் என்ன அவசரமோ தெரியல போன் எடுக்க மாட்டேங்கிறாங்க.. அவங்க எடுத்த நேரம் நானும் வேலையா இருந்ததால அதை கவனிக்கல.. நீங்க யாரு சார் அவங்களுக்கு?.. ” என்றாள் பாவை..

 

 

“ நான் அவங்க பையன் தாங்க நம்பிதாங்க உங்களை ஏமாத்திட்டு தூக்கிட்டு போக மாட்டேன்.. நம்பிக்கை இல்லாட்டி இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. உங்க அழைப்பை பார்த்துட்டு அம்மாவே கால் பண்ணுவாங்க.. அவங்களும் ஏதோ வேலையாக இருக்காங்க போல.. எந்த அவசரமும் இல்ல நிதானமா நான் இருந்தே வாங்கிட்டு போறேன்..” என்று கூறிவிட்டு கூலிங் கிளாஸ் அணிந்து இருந்தபடியால் அவளை அவன் ரசித்துப் பார்ப்பது யாருக்கும் தெரியாமல் காரின் மேல் சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தான்..

 

 

 மேலும் ஒரு பத்து நிமிடம் கழிந்ததும் மீரா அவனுக்கு கைபேசியில் அழைப்பு விடுத்து வர தாமதமாகுமா என்று கேட்டார்..

 

 அப்பொழுது தான் தாய் தனக்காக காத்திருக்கிறார்.. என்பதை உணர்ந்து இங்கு நடந்ததை கூறினான்..

 

 

 மீரா மீண்டும் கண்மணிக்கு அழைக்கவும் கண்மணி எடுத்து “ ஒருத்தவங்க வந்து இருக்காங்க.. ரொம்ப நேரமா உங்க பில்ல போன்ல காட்டி நிக்கிறாங்க. பட் எனக்கு யாருன்னு தெரியாது இல்ல.. நான் உங்க பார்சல குடுக்கல ஆன்டி சாரி.. ரூல்ஸ் உங்களுக்கு தெரியும் தானே ஆன்டி எப்படியா மிஸ் ஆயிடுச்சுன்னா அந்த பயத்துல கொஞ்சம் கவனமாக இருப்பது தப்பு இல்லையே..? ” என்றாள்..

 

 

“ தப்பே இல்லம்மா.. நான் தான் கொஞ்சம் பிளவுஸ் எடுக்க லேட் பண்ணிட்டேன்.. என்னோட பையன் தான் அது. நீ கொடுத்துவிடு.. நேத்தே வந்து வாங்கிக்கிறேன்னு சொன்னேன்.. பட் என்னால வர முடியல ஒரு இஷ்யூ ஆயிடுச்சு.. ஓகே மா எந்த பிராப்ளமும் இல்ல பாய்.. “

 

 

“ என்ன இஷு ஆன்ட்டி உங்க ஹெல்த்துக்கு எதுவும் ப்ராப்ளமா?.. ” என்றாள்.. வாடிக்கையாளரின் நலனையும் தெரிந்து வைத்துக் கொள்வது ஓர் முறை என்பதால் அவள் கேட்டாள்..

 

 

“ நோமா ஹெல்த் இஷு இல்லை.. “

 

 

“ அப்போ ஓகே ஆன்ட்டி டேக் கேர்.. நீங்க இந்த பக்கம் வந்து ஒன் மந்த் ஆயிடுச்சு டைம் இருந்தா வந்துட்டு போங்க ஆண்ட்டி.. “

 

 

“ ஓகே மா இன்னைக்கு காலையில தான் என் மகன் கல்யாணத்துக்கு சம்மதித்தான்.. அப்ப கூடிய சீக்கிரமே சாரி பிளவுஸ் எனக்கு மருமகளுக்கு எல்லாமே தைக்கிறதுக்கு வர வேண்டி இருக்கும் வருவேன்.. “

 

 

“ வாவ் ஓகே பாய் ஆன்ட்டி.. ” என்று அழைப்பை துண்டித்தாள்..

 

 

 மீராவுடன் பேசிவிட்டு கைபேசியை வைத்துவிட்டு பிளவுஸ் பார்சலை விஐபியிடம் கொடுத்துவிட்டு “ சார் ஆன்ட்டி சொன்னாங்க நீங்க கல்யாணத்துக்கு சம்மதிக்கிட்டிங்கலாமே. ஆன்ட்டி உங்கள பத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்கிறீங்களே இல்லைன்னு பீல் பண்ணி பேசுவாங்க.. இப்ப அவங்களுக்கும் ஹாப்பி. எனக்கும் ஆர்டர் கிடைக்கும்.. ரொம்ப சந்தோஷம்.. இப்பவே அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துக்கள் சார்.. உங்க கல்யாணத்துக்கு ஒரு மாசம் முன்னாடியே உங்க ரிலேட்டிவ் கேர்ள்ஸ் கான எல்லா உடை ஆர்டரையும் எங்களுக்கே தந்துடுங்க.. ” என்று கூறி முத்து பற்கள் தெரிய சிரித்தாள்..

 

 

 

 மீண்டும் மீண்டும் எதற்காகவும் இல்லாமல் அந்த சிரிப்பிற்க்காகவே நாள் முழுவதும் அவளை பார்ப்பதற்காக தற்போதே அவளை கொள்ளையிட்டுப் போனால் என்ன?.. என்ற நினைப்பை அந்தப் பாடகன் மனதில் ஓர் அசையாத ஆசையாக வளர்த்தாள்..

 

 

 அவள் தன் தாயுடன் இனக்கமாக பேசியதை கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் வாழ்த்து கூறியதும் அவனுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை..

 

 

“ இப்பவே அம்மாவோட இவ்வளவு சகஜமா பேசுறாளே நாளைக்கு எங்க அம்மாவும் இவளும் குடும்மி பிடி சண்டை பிடிச்சு அதை நம்ம ரசித்து பார்க்கிறது.. வீட்ல இலவச என்டர்டைன்மென்ட் பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.. ” என்று அவன் மனம் கவர்ந்த மங்கையை பற்றி நினைத்துக் கொண்டு வேகமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்..

 

 

 மீராவும் மகனுக்காக மதிய உணவை எடுத்து வைத்து காத்திருந்தார்..

 

 

 வீட்டுக்குள் வேகமாக வந்த விஐபி தாயை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்..

 

 

” யா கூ ம்மா உங்களுக்கு மருமக ரெடி..”

 

“ என்னப்பா சொல்ற காலையில தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன இப்ப பொண்ணு ரெடி என்கிற.. என்னடா கண்ணா அம்மாக்கு புரியும் படி சொல்லு.. ” என்றார்..

 

 

“ அம்மா சிரிப்பழகி என் மனசுல ஆசையாத இடத்தில பசை போட்டு ஒட்டிக்கிட்டா.. அவளோட சம்மதம் கிடைச்சதும் யாரு என்ன எல்லா விஷயத்தை சொல்றேன்.. கூடிய சீக்கிரம் கல்யாணத்துக்கு ரெடியாகுங்க..” என்று கூறிவிட்டு தாயின் மனதில் மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்துவிட்டு அவனது அறைக்கு சென்று முகம் கழுவி மீண்டும் உணவு அறைக்கு வந்தான்..

 

 

சுடச்சுட சாதம் அவனுக்கு பிடித்த கருவாட்டு குழம்பு இன்னும் கூட்டு பொரியல் எல்லாம் வைத்து மகன் தந்த சந்தோஷத்தினால் அவனுக்கு அள்ளி ஊட்டிவிட்டார்…

 

 

 

 இது வழமையாக நடக்கும் ஒன்றுதான் அவன் ஏதும் வேலையாக இருந்தால் உணவு நேரத்துக்கு உணவு எடுக்காமல் விடுவான். அதனால் கட்டாயப்படுத்தி மீரா ஊட்டிவிடுவார் வீட்டில் இருக்கும் பொழுது..

 

 

 அவருக்கும் உறவு என்று அவ்வீட்டில் அவன் மட்டும் தானே..

 

 

 கல்யாணராமனும் கிருஷ்ணனும் இறந்த பிறகு யசோதாவையும் சீதாவையும் மீரா தங்களது வீட்டிற்கு வரும்படி அழைத்தார்..

 

 

 இங்கு இருவர் அங்கு இருவர் என தனித்திருக்க வேண்டும் நால்வரும் ஒரே வீட்டில் இருக்கலாம் என்று கூறினார்..

 

 ஆனால் வயது ஆண் பெண் இருவரையும் ஒரே வீட்டில் வைத்திருப்பது சமூகத்திற்கு முறையாக இருக்காது என்பதால் யசோதா தனது கணவர் வாழ்ந்த விட்டில் இருக்க விரும்புவதாக கூறி மறுத்துவிட்டார்..

 

 

 தினமும் யசோதா மீரா இருவரும் கைப்பேசியில் பேசிக் கொள்வார்கள்.. வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு வந்து சந்தித்துக் கொள்வார்கள்.. நல்ல காரியங்களிலும் சந்தித்துக் கொள்வார்கள்.. இல்லை என்றால் யாரேனும் மாறி மாறி வீட்டுக்கு சென்று வந்து கொண்டிருப்பார்கள்..

 

என்ன தான் இருந்தாலும் வீட்டில் சொந்தங்கள் இருக்கும் மகிழ்ச்சி வேறு எங்கும் இருக்காது..

 

 அங்கும் சீதா காலேஜ் சென்று விடுவதால் இங்கும் இவன் வேலை ரெக்கார்டிங் என்று சென்று விடுவான்..

 

 மீரா மற்றும் யசோதா இருவரும் அதிகமாகவே தனிமையில் வாடி வருகிறார்கள்..

 

 

 மீரா உணவு ஊட்டி விட மனமும் வயிறு நிறைய சந்தோஷத்தில் விஐபி மதிய உணவை தாயின் கையால் ரசித்து ருசித்து உண்டு கொண்டிருந்தான்..

 

 

அப்போது கலங்கிய கண்களோடு வேகமாக யசோதா வீட்டுக்குள் வந்தார்..

 

 

 யசோதா உள்ளே வர விஐபி கைபேசிக்கு கண்மணி இடமிருந்து மதிய வாழ்த்தும். சரியாக வந்திருந்தது..

 

 

 இனி அவளே வாழ்த்து அனுப்பினால் அதை பிக்கப் பண்ணி அவளிடம் அவனது விருப்பத்தை சொல்லி பேச வேண்டும் என்று காத்திருந்தான்..

 

 

 ஆனால் அவர்கள் பேசுவதற்கான நேரத்தை எல்லாம் காலம் கொடுக்கவில்லை..

 

 

 யசோதா கண்ணீரோடு வருவதை பார்த்த மீரா என்னவென்று கேட்டார்..

 

சீதா கல்யாணத்துக்கு சென்ற அந்த பெரியப்பாவிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதாகவும் அங்கு நடந்த அசம்பாவிதத்தையும் கேட்டதுமே யசோதா மயங்கி விழாமல் இருந்ததே பெரிய விஷயம்..

 

 

 யசோதா கூறியதைக் கேட்டு விஐபி உடனடியாக மூவரும் மதுரைக்கு செல்வதற்கு ப்லைட்டில் டிக்கெட் புக் பண்ணினான்..

 

 

 மீரா கை கழுவி விட்டு வந்து யசோதாவை தோளில் சாய்த்து ஆறுதல் கூறினார்..

 

 

 விஐபி வேக வேகமாக மதுரையில் இருக்கும் அந்த பெரியவரிடம் கைபேசியில் அழைத்து என்ன விஷயம் என்று தெளிவாக கேட்டுக்கொண்டு புறப்படுவதற்கு தயாராகினான்..

 

 

 யசோதாவும் திருமணத்திற்கு செல்ல இருந்த நேரம் வந்த அலைபேசி அழைப்பு காரணமாக அனைத்தையும் விட்டுவிட்டு மீராவுக்கு அழைத்தார்.. ஆனால் மீரா கண்மணியுடன் பேசிக்கொண்டு இருந்தால் அழைப்பு செல்லவில்லை..

 

 

 அடுத்து விஐபிக்கு அழைக்க அவனும் தொழில் விஷயமாக பேசிக் கொண்டிருந்ததால் அழைப்பு எடுக்காமல் போக கிளம்பி இங்கே வந்துவிட்டார்..

 

 

 இன்றைக்கு ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் அவரது உடைகளையும் பெட்டியில் எடுத்துக் கொண்டே வந்திருந்தார்..

 

 

  விஐபி காரில் யசோதா அழுதபடி இருக்க மீரா ஆறுதல் சொல்லியபடியே மூவரும் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டுக்கு சென்றார்கள்..

 

 

விஐபியின் மனதை மூன்று மாதமாக கொள்ளை கொண்டு இருந்த மெசேஜ்க்கு சொந்தக்காரியை இன்று கண்டுபிடித்தும் அவளுடன் பேச முடியாமல் போக சீதா செய்த காரியம் என்ன..

 

 

 தொழில் முறையில் வாடிக்கையாளராக பேசிக் கொள்ளும் கண்மணியும் மீராவும் கண்மணி தான் தனக்கு மருமகள் என்று தெரிந்தால் அந்த எளிமையான பெண்ணை மீரா ஏற்றுக் கொள்வாரா?..

 

 அழைப்பிற்காக காத்திருப்போம்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்