Loading

          அசுரன் -01

மதுரை மாநகரின் மையத்தில் இருந்தது அவர்களது பிரமாண்ட மாளிகை…  பரபரப்பாக எல்லாம் இல்லை… மாளிகை முழுவதும் வெறுமை சூழ்ந்திருந்தது. ஆனால் பளபளவென மாளிகை மின்ன ராப்பென்ஷலை ( Rapunzel) சிறை வைத்தது போன்று அவளும் சிறை வைக்கப்பட்டிருந்தாள். 

இப்போதே விம்மி வெடித்து செத்துவிடத் தோன்றியது அவளுக்கு… தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தவள் ஒரே அடியில் அடித்து நொறுக்கினாள் . இதே போல உள்ளுக்குள் தான் நொறுங்குவதை விட எதிராளி அவனை அடித்து நொறுக்கத் தோன்றியது.  தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.  மிடுக்காக எழுந்து நின்றாள்.  கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு அலங்காரப் பதுமையாக தன்னை அலங்கரித்து வெளியே வந்தாள். 

நெற்றி நிறைய குங்குமம்,  தலை நிறைய மல்லிகைப்பூ  , சாட்சாத் அந்த அம்மனே நேரில் வந்து நின்றது போல வந்து நின்றாள். 

பிரபலத் தொழிலதிபர்  நமச்சிவாயத்தின் மூன்றாம்  மனைவி…  நமச்சிவாயத்திற்கு நாற்பத்தி ஐந்தை தொட்டுக் கொண்டிருந்தது வயது.  ஆனால்  பார்க்கவோ  முப்பது தான் இருக்கும் என்று அடித்து சொல்வார்கள் அத்தனை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் உடலை.  உடலை கட்டுக்கோப்பாய் வைத்திருந்தவரோ மனதை அப்படி வைத்திருக்கவில்லை.  விளைவு மூன்று மனைவிகளை கட்டி ஆயிற்று.  அது போக இன்னும் ஏக போகமாக சிறப்பாக வாழ்ந்து வருகிறார் தன்னிடம் விழும் விழ வைக்கும் பெண்களிடம் எல்லாம்.

மூன்று மனைவிகளையும் ஒவ்வொரு விதமாக திருமணம் செய்து கொண்டு வந்தார்.  முதல் மனைவி அன்னையின் தேர்வு அதனால் கிராமத்திலேயே விட்டு விட்டு,   சென்னைக்கு நவநாகரீகமாக வாழ ஒருத்தியை மணந்து  சென்னையில் ஒரு வாழ்க்கை. மூன்றாமவளின் நிலை தான் அந்தோ பரிதாபம்..  வாங்கிய கடனுக்கு அப்பனவன் வட்டி குட்டி போட்டு கட்ட முடியாமல் தங்க விக்ரகம் போல இருந்த மகளை கொடுத்து,” வேலைக்காரியாக வைத்துக் கொள்ளுங்க அவள் சம்பளத்தில் கடனை சரி செய்து கொள்ளுங்கள் நான் ஊரை விட்டு போகிறேன் “என்று ஓடிப் போனான்.

தங்க விக்ரகத்தை அடுப்பிலும் வெயிலிலும் காய விட நமச்சிவாயத்திற்கு மனதில்லை. தன் மனைவி ஆக்கிக் கொண்டார் அவளின் சம்மதம் இல்லாமலேயே.. பேதையவள் வேறு வழியின்றி இருக்க மற்ற மனைவி இருவரும் எங்கே இவள் அழகில் மயங்கி இப்படியே இருந்து விடுவாரோ என பயந்து தங்களது கைங்கர்யத்தைக் காட்டி அவளை கொடுமை படுத்தினர்.

நமச்சிவாயம் இதற்கெல்லாம் சளைத்தவர் இல்லை என்பது போல புது மனைவியை அழைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றினார்.  மனைவி என்ற ஒரு உரிமையை வைத்துக் கொண்டு அத்துமீறிய அவரை எதுவும் செய்ய இயலாமல் தவித்து போனாள்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதற்கு ஏற்ப இன்று பொங்கி எழுந்து விட்டாள்.  இனி நடக்கப் போவதை காண்போம் .

முழு அலங்காரத்துடன் வெளியே வந்தவள் நமச்சிவாயத்துடன் புன்னகை முகமாக கிளம்பினாள்.

கார் கேரள எல்லையில் பயணித்தது. 

“எங்கேப் போறோம் னு கேட்க மாட்டியா டார்லிங்… ?”

அவள் அமைதி காத்தாள். 

“நீ கேட்க மாட்ட ஸோ நானே சொல்றேன் .நாம இப்போ நம்மோட எஸ்டேட் போகப் போகிறோம் அங்க உனக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் இருக்கு “என இடி இடி என சிரித்தார். அதை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. இன்று எங்கேப் போனாலும் சரி தான் நினைத்ததை நிகழ்த்தி விட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்.

கன்னியாகுமரி தாண்டி சென்றது அவர்களின் மகிழுந்து.

அந்த மலைப்பாங்கான பகுதியில் வண்டி நிற்கவும் ,நமச்சிவாயம் ஒரு மார்க்கமாக சிரித்தார்.

“என்ன டார்லிங் ஸ்டன் ஆகிட்டியா இங்க தான் நாம ஸ்டே பண்ணப் போறோம் இறங்கி வா… உனக்கு இன்று சுதந்திரமான நாள் நான் உன்னை தொடவே மாட்டேன் நீ ஹாப்பியா இருக்கலாம்” எனும் போதே அவரது தலையில் ஒரு கட்டையால் அடித்து விட்டாள்.

“அம்மா” என்று அலறியவர் பின்னால் திரும்ப அங்கே அவள் ரௌத்திரமாக,” ஏன் டா உனக்கு என்னைப் பார்த்தா வேசி மாதிரி தெரியுதா ஹான்…செத்துத் தொலைடா” என்று கத்தி விட்டு அங்கிருந்து ஓடினாள்.

‘இவனிடம் இருந்து என்ன எதிர்பார்த்தோம் பணமா !!நகையா!!  இல்லை பெருங்கொண்ட வாழ்வா…  வாழ்வின் அஸ்திவாரமான காதலை தானே எதிர்பார்த்தோம் அதை கூட தர முடியாத இவனோடு என்ன வாழ்க்கை வேண்டி கிடக்கிறது’ என்று நினைத்து கொண்டு கிளம்பினாள். 

காதலை எதிர்பார்த்து ஏமாந்து போன ஒருத்தி அவளுக்கான காதலை பெறுவாளா… 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

அழகான  அருவி வெண்மையாக இருந்தது நீர்வரத்து.  அங்கே ஒருத்தி வெண்மையான சேலையை சுற்றிக் கொண்டு தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தாள்.

அவளை ரசனையாக பார்த்து கொண்டிருந்தான் அவன்.  குளித்து முடித்து மேலே வந்தவள் அங்கிருந்த பாசி வழுக்கி கீழே விழப் போக அவளைத் தாங்கி பிடித்தான் அவன். 

“பார்த்து  வரக் கூடாதா கவி… ” என்று சிரிப்பதற்கு பதில் ஈஈஈஈ என்று பல்லை காட்டினான்.

அவளோ அவனது அழகில் மயங்கி கண்களை மூடிக் கொண்டு அவனது கரத்தில் சரிந்து நெகிழ்ந்தாள். அவளை முத்தமிட சென்ற நொடி.. 

“கட்… கட்… கட்…  எந்தா சேட்டா இது ஈஈஈஈ னு பல்லை காட்டுது..  ஆ பெண்ணை பிடிக்கும் போது ப்ரேமத்தோடு பார்க்கணும் கொறைச்சு சிரிப்பை காட்டணும்…  ப்ரேமிக்கும் போது இயல்பாயிட்டு இருக்கணும்..  திஸ் இஸ் லவ் !! இட்ஸ் எ ஃபீல் …  டோன்ட் டூ லைக்  டெய்லி ரொட்டின் “என்று கடிந்து கொண்டான் இளம் இயக்குநர் மனுஸ்யபுத்திரன்.

“சாரே ஞான்  இன்னொரு டேக் போகும்  ஹான்  ஞான் பெஸ்ட் குடுக்கும் சாரே  ப்ளீஸ்” என்று இறைஞ்சினான் அந்த நாயகன் சர்ஷிமன் .

மனுஸ்யபுத்திரன்…. வயது இருபத்தி ஒன்பதை தொடுகிறது.  இளம் இயக்குநர் தான் ஆனால் வெற்றிப்படங்களை வரிசையாக தந்து கொண்டிருப்பவன் இவனுக்கு நிறைய நடிகர்கள் கால்ஷீட் தர தயாராக இருந்தாலும் இவனது கால்ஷீட் கிடைப்பதில்லை. அத்தனை பிஸியானவன்..  இப்போது கூட ஒரு காதல் படத்தை தான் எடுத்துக் கொண்டு இருக்கிறான். 

சர்ஷிமன் தெலுங்கில் பிரபலமான நாயகன் என்றாலும் இவனது படத்தில் நடிக்க இரண்டு வருடமாக காத்திருந்து இப்போது தான் நடிக்க வந்திருக்கிறான்…   ஆறடியில் சிக்ஸ்பேக் உடலோடு வெள்ளை வெளேர் என்று இருந்தான்.  எப்போதும்  ஃபுல் மேக்கப் தான்…  ஹீரோயினை விட அதிகம் ஒப்பனை செய்பவன்…  அவனை காட்டுவாசி ஆக்கி வைத்திருந்தான் மனுஸ்யபுத்திரன்.  ஒப்பனையே கிடையாது நாயகனுக்கு என்று முதல்நாள் படப்பிடிப்பிலேயே கூறி விட சர்ஷிமனுக்கு பொக்கென்று ஆகி விட்டது.  வேறு வழியில்லை மனுஷின் படத்தில் நடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் சர்ஷிமன். 

“சேட்டா  நன்னாயிட்டு நோக்கோ  ஐ வில் ட்ரெயின் யூ “என்றவன், அந்த காட்சியை அழகாக நடித்து காட்ட ஹீரோயினாக இருந்தவள்,  அவனது அழகிலும்  நடிப்பிலும் மெய் மறந்து போய் விட்டாள்.

“ஐ லவ் யூ மனு பேபி “என்று கிறக்கமாக சொல்ல, அவளை அனலென முறைத்தவன் ,” நடிக்கிற வேலையை கேமரா முன்னாடி பண்ணுங்க மிஸ் ரிஃபாஷா “என்றவன் கோபத்துடன் “பேக் அப் “என்று கூறி விட்டு கேரவனுக்குள் நுழைந்தான்.

“என்னய்யா இது பேக் அப் னு சொல்லிட்டாரு…  ப்ப்ச்” என சலித்தபடி யூனிட் ஆட்கள் எல்லாவற்றையும் எடுத்து வைத்தனர்.

சர்ஷிமன்  ரிஃபாஷாவை ஆழ்ந்த பார்வை பார்க்க, அவளோ முகத்தை சுளித்து விட்டு தனக்கு ஒதுக்கப்பட்ட கேரவனுக்குள் புகுந்து கொண்டாள்.

‘இந்த படம் முடியறதுக்குள்ள நீ என் ஹெஸ்ட் ஹவுஸ் ல இருப்ப ‘என்று முனகிக் கொண்டு செல்ல , அங்கிருந்த யூனிட் ஆட்கள் இருவர் பேசிக் கொண்டனர்.

“பேசாம நம்ம டைரக்டரே இந்த படத்தில் நடிக்கலாம் என்னம்மா காதல் காட்சியில் நடிக்கிறாரு அவருடைய மனைவி ரொம்ப குடுத்து வச்சவங்க “என பெருமிதம் கொண்டனர்.

கேரவனில் இருந்தவனோ  ,”கருமம் இந்த காதல் ன்ற வார்த்தையை கேட்டாலே குமட்டுது… இதுல நான்  ரொமான்டிக் சீன் வைக்கிறதுல கை தேர்ந்த டைரக்டராம் “என்று அலுத்துக் கொண்டான் மனுஸ்யபுத்திரன்.

அவனது அலைபேசி அவனை அழைத்தது .

“ஹாய் ஹனி ஹவ் ஆர் யூ….  நான் இப்போ எங்கே இருக்கேன்னு சொல்லுங்க…!!” குழைவாக வந்து விழுந்தது ஒரு குரல்.

“நீ எங்க வேணும்னாலும் இரு எனக்கு எதுக்கு கால் பண்ண ??”எரிச்சலாக கேட்டான் மனுஸ்யபுத்திரன்.

“என்ன ஹனி?  லவ் டைரக்டரூக்கு கோபம் பீக் மோடிலேயே இருக்கு…  சரி ஓகே நானே சொல்றேன் என் ஹப்பி கூட ஹனிமூன் வந்திருக்கேன்… சச் எ ரொமான்டிக் பர்ஸன் யூ க்நோ… என்னை அவன் ஒரு நொடி கூட விடலை தெரியுமா… !!”என்று ஹாஷ்யமாக சிரித்தாள்.

“ஜஸ்ட் ஷட் அப் அன்ட் கட் த ஃபோன் இடியட் “என்று கத்த

“நோ நோ ஹனி !!! இதை நீ கேட்கணும். என்னை ரிஜெக்ட் பண்ணதும் நான் செத்திடுவேன் னு நிறைய பேர் சொன்னாங்க. அன்ட் எனக்கு ஃப்யூச்சரே இல்லைனு எல்லாம் சொன்னாங்க!! ஏன் உன் வீட்டில் சொல்லலை…  ?? நீ கூட நினைச்சு இருப்பியே…!! பட் பாரு நான் ப்ரைட்டா வாழப் போறேன் வித் லவ் ஃபில் லைஃப் ஆனா உன்னை எடுத்துக்க , காதலை உன் கதையில மட்டும் தான் வரவழைக்க முடியும் நிஜத்துல சான்ஸே இல்லை.. ” என்றாள் அவனது முன்னாள் மனைவி.

“அந்த கருமம் எனக்கு தேவையும் இல்லை இனிமேல் எனக்கு ஃபோன் பண்ணினா  ஐ வில் கில் யூ இடியட் “என கத்தி விட்டு வைத்தான்.

‘காதல் காதல் மண்ணாங்கட்டி காதல்….  இப்படி ஒரு வார்த்தை என் அகராதியிலும் விதியிலும் இல்லாமல் போனா நல்லா இருக்கும் ‘என்று நினைத்துக் கொண்டவன் கேரவனைத் திறந்து கொண்டு சைட் சீயிங் செல்கிறேன் யாரும் துணைக்கு வர வேண்டாம் என்றான்.

அவன் காருக்கு செல்லும் அதே நேரத்தில் நமச்சிவாயத்தின் மனைவியானவள் காட்டுக்குள் ஓடிக் கொண்டிருந்தாள்.  அவளது ஆடை எல்லாம் ரத்தக்களறியாக இருந்தது.

காதலுக்காக ஏங்கும் ஒருத்தி… காதலே பிடிக்காத ஒருவன்  … இவர்களுக்குள் விதி விளையாடப் போகும் சதிராட்டம் அவளுக்கான காதல் கிடைத்ததா..  !!! காதலே பிடிக்காதவனின் நிலை அடுத்து என்ன ஆகப் போகிறது 

பயணிப்போம் அசுரா அழகிய அசுராவோடு …

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்