Loading

மனுஸ்யபுத்திரன் அவளைக் காப்பாற்றி அழைத்து வரவும், பத்திரிக்கையாளர்கள் அவனை சூழ்ந்து கொண்டு கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தனர் . அவளோ தயங்கியபடி அவனருகே திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றாள்.

“உங்க எல்லாருடைய கேள்விகளுக்கும் என் மேனேஜர் பதில் சொல்லுவார்  … அன்ட் இந்த பொண்ணை  எலிஃபேன்ட்ஸ் கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கேன் அவ்வளவு தான் வேறெந்த சம்மந்தமும் இல்லை…  ஓகே என்றவன் மிஸ். வாட்எவர் (whatever) என் கூட வாங்க… ” என்றவன் அவளை முன்னே செல்லும்படி கூறினான்.

மனுஷின் உதவி இயக்குனர் ஒருவனை அழைத்து,” வினித் ஈ சேச்சியை  பஸ் ஸ்டாண்டில் விட்டு வா…” என்றவன் அவளிடம் திரும்பி,” இனி உன்னை நான் எங்கேயும் பார்க்க கூடாது மனசிலாயோ!!” என கூறி விட்டு கேரவனுக்குள் நுழைந்தான்.

“சேச்சி வான் “என்று அவன் சைகையில் அழைத்தான்.

“ஹான் !!வரேன் வரேன் “என்று கேரவனை பார்த்தபடி அங்கிருந்து சென்றாள்.

மெல்ல வெளியே எட்டிப் பார்த்தவன்,  மீண்டும் கேரவனுக்குள் முடங்கிக் கொண்டான்.

“சேச்சி… ”

“ஹான் ஹான்.. ஹேய் ஒரு நிமிடம் அவர் கிட்ட நான் நன்றி மட்டும் சொல்லிட்டு வந்திடுறேன் “என்று அவனது பதிலை எதிர்பாராமல் அவசரமாக கேரவனுக்குள் நுழைந்தாள்.

மனுஷோ “ஹேய் யூ இடியட் ஒய் ஆர் யூ என்டர்ட் மை கேரவன் கெட் அவுட் “என கத்தினான்.

“சார் சார் ப்ளீஸ் கத்தாதீங்க… கொஞ்சம் எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணுங்க போதும் பண உதவி எல்லாம் இல்ல பாதுகாப்புக்கு இடம் வேணும் சார் ப்ளீஸ் !!”என்று கெஞ்சிட மனுஷ் பல்லைக் கடித்துக் கொண்டு,” ஒழுங்கா நீயா வெளியே போனா ஓகே இல்லாட்டி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிடுவேன் போயிடு.. ஏற்கனவே நடந்ததுக்கு என்னென்ன வதந்தி எல்லாம் வரப் போகுதோ தெரியலை “என்று பாதி மலையாளமும் பாதி தமிழும் கலந்து பேசினான்.

அவனது இறுக்கமான முகத்தை பார்த்தே தெரிந்து கொண்டாள் இவனிடமிருந்து உதவி கிடைக்காது என்று

கவலையுடன் வெளியேறியவள், வினித்துடன் சென்றாள். 

மனுஷ் தன் வேலையில் கவனத்தை செலுத்த துவங்கி விட்டான். 

மறுநாள் காலையில் கொட்டை எழுத்தில் செய்தி வெளியாகி இருந்தது. 

பிரபல தொழிலதிபர் நமச்சிவாயத்தின் மச்சினி “அதாவது மனைவியின் தங்கை கடத்தல் என்று கடத்தல்காரர்கள் பற்றிய விபரங்கள் கூறுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் “என்று காவல்துறை சார்பில் ஒரு துணுக்கும் இடம் பெற்று இருக்க சட்டென பார்வை அந்த புகைப்படத்தில் நிலைத்தது.

‘தன்னோடு இருந்தவள் தானே இவள்’ என்றெண்ணியபடி யோசித்தான்.

‘கடத்தினார்கள் என்றால் ஏன் இவள் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்க வேண்டும்…?’  விடை தெரியாத குழப்பத்தில் அவனிருக்க வினித் அழைத்தான்.

“சாரே… ஈ சேச்சி தாலியை குடுத்து  விற்க சொல்லுது “என்றான் அரைகுறை தமிழில்.

“அதெல்லாம் வேண்டாம் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டுட்டு வா “என்று இணைப்பைத் துண்டித்து விட்டான்.

வினித் மனுஸ்யபுத்திரன் கூறியபடி அவளை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு வந்து விட்டான்.

அவளுக்கு தான் எங்கு செல்வது என்று தெரியவில்லை.  அனைவரும் அவளையேப் பார்ப்பது போல இருந்தது அவளுக்கு.

வயிற்றுப்பசி வேறு நடக்கவிடாமல் செய்ய ,அருகில் இருந்த தேநீர் கடையை நோக்கிச் சென்றாள்.

டீக்கடையில் செய்தித்தாள்கள் வரிசையாகத் தொங்க விடப்பட்டு இருந்தன.  தமிழ் செய்தித் தாளில் அவளது புகைப்படம் போட்டு செய்தி வெளியாகி இருந்தது. அதனைக் கண்டு அதிர்ந்தவள் பட்டென்று புடவை தலைப்பை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டாள்.  அவ்விடத்தில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் அங்கிருந்து அகன்றாள்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

மருத்துவ மனையில் இருந்த நமசிவாயம் பிபி எகிறி கிடந்தார். 

“டேய் !! எங்க இருந்தாலும் அவ இங்க வத்தாகணும் எனக்கு அவ வேணும்…”கனலாய் காய்ந்தார்.

“சார் ஈவ்னிங் அவங்க இங்க இருப்பாங்க” என்றான் நமசிவாயத்தின் அடியாள்.

நமச்சிவாயத்தின் இரு மனைவிகளும் அந்த அடியாளை சுள்ளென்று முறைத்தனர்.

அடியாள் வெளியேறிய நேரம் ஷகீராவும் வெளியேறினாள்.

“ஏய் இந்தாடா !!, ” அடியாளை ஒருமையில் விளித்திட, அவனோ பவ்யமாக வந்து நின்றான் அவளின் முன்பாக

“அவளை ஈவ்னிங் க்குள்ள கண்டு பிடிச்சிடுவியா நீ ??”கேட்கவும் உற்சாகமாய் ஆமென்று தலையாட்டினான்.

“நீ மட்டும் அவளைக் கண்டு பிடிச்சு கொண்டு வந்த தொலைஞ்ச “என்று மிரட்டினாள்.

“ம்மா அவங்க இல்லாம சார் ரொம்ப கஷ்டப்படுறார் அதான்” என்று அவன் இழுக்க

“உன் தங்கச்சியை ஊட்டி கான்வென்ட் ல படிக்க வைக்கிறியாமே !!”என சம்மந்தம் இல்லாமல் கேட்டிட அவனோ புரியாது விழித்தான்.

“இதோப் பாரு நீ மட்டும் அவளை கூட்டிட்டு வந்த உன் தங்கச்சி உனக்கு இல்லை புரிஞ்சதா ” மிரட்டவும் சற்று அரண்டு தான் போனான் அந்த அடியாள்.

முதலாளி விசுவாசத்தை விட தங்கை பாசம் பெரிதாகப்பட்டது அவனுக்கு.

“இல்லம்மா நான் போகலை “என்று கூறி விட்டு விட்டால் போதும் என்று ஓடி விட்டான்.

ஷகீரா நிம்மதியடைந்தாள். அவளுக்கு நமச்சிவாயம் மூன்றாம் திருமணம் செய்தது சுத்தமாக பிடிக்கவில்லை.  எந்த மனைவிக்கு தான் பிடிக்கும் தன் கணவன் இன்னொரு பெண்ணை மணப்பது… ஆனால் அவள் ஒன்றை மறந்து விட்டாள். தாமும் ஏற்கனவே திருமணம் ஆனவனை தான் மணந்து கொண்டோம் என்று..  அப்போது நமசிவாயம் ஒரு பெண்ணிற்கு செய்தது துரோகம் என்று தோன்றவில்லை ஆனால் தற்போது தோன்றியது அவர் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக

நமசிவாயத்தின் மனம் தன் புதிய மனைவியின் முகத்திலேயே நிலைத்திருந்தது.  ஏழ்மையில் வாழ்ந்திருந்தாலும்  பேரழகி அவள். வறுமையில் இருந்தவள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் அத்தனை செழுமையான தேகத்தை கொண்டவள். அவளை நினைத்தாலே மனம் தேனைத் தேடும் வண்டாகிப் போகும் . இப்போதும் அப்படி தான் வேட்கையில் துடித்தார் அவள் தன்னை அடித்து காயப்படுத்தி இருக்கிறாள் என்ற கோபம் ஒரு பக்கம் கனன்று கொண்டிருந்தாலும் கோபத்தை விட அவள் மீதிருந்த ஆசையே தலை தூக்கி நின்றது அவருக்கு.

இங்கே தேநீர் கடையிலிருந்து விலகி நடந்தவளுக்கு எங்கே போவதென்று திக்குத் தெரியவில்லை. நிச்சயம் கணவனாகப்பட்டவன் இந்நேரம் தேடுதல் வேட்டையைத் துவங்கி இருப்பான் ,’அது தான் சூட்சுமமாக பத்திரிக்கையில் மனைவியின் தங்கையைக் காணவில்லை என்று செய்தியை பிரசுரித்து விட்டானே…!!’  நமசிவாயத்தின் மீது பயம் இருந்தாலும் அதைத் தாண்டி மனுஷின் மீது கோபம் வந்தது.

‘நன்றாக தானே பார்த்துக் கொண்டான்… கண்ணியத்தை கடைபிடித்தான் பிறகென்ன கேடு வந்தது அவனுக்கு . ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விட்டிருந்தால் கூட மகிழ்ச்சியாக சென்று இருப்பாள்…  அதுவும் பணத்திற்கு ஈடாக நகையை கொடுத்தோமே பாவிப்பயல் மாட்டேன் என்று கூறி விட்டானே’ கடுப்பாக இருந்தது அவளுக்கு.

மனுஷின் நிலையோ வேறாக இருந்தது. காதலின் இயக்குநருக்கு சீன் பிடிபடவில்லை. அவள் கெஞ்சியதும், பத்திரிக்கை செய்தியும் மாறி மாறி தோன்றியது மனதில்.

“சாவடிக்கிறாள் என்னை !!”முணுமுணுத்துக் கொண்டான்.

வினித் வந்து அவளை அனுப்பி விட்டதாக கூறினான். நாளை பத்திரிக்கையில் எந்த செய்தியும் வராது என்றும் அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டதாகவும், கூறி மனுஷிடம் ஒரு பாராட்டையும் வாங்கி கொண்டான் வினித்.

“பேக்அப்” என்று கூறி விட்டான் மனுஷ் .

“அவுட்டிங் போகறதுனா போயிட்டு வாங்க டுடே நோ சூட்டிங் “என கூறவும் சர்ஷிமன் முகத்தில் பல்ப் எரிந்தது. 

‘ரிஃபாஷாவை கரெக்ட் செய்து விடலாம் ‘என்று கணக்குப் போட்டிருந்தான்.  அவனது உதவியாளரிடம் ரிஃபாஷாவை தனியே வரவழைக்க ஏதாவது செய் என்று உத்தரவு போட்டான்.

ரிஃபாஷா கேமராவுடன் சுற்றி வந்தாள்.  சர்ஷிமன் அவளை சுற்ற வாய்ப்பு தேடினான்.

“ஹாய் ஆன்ட்டி நேனு சர்ஷிமன்…”  என்று அவளது அன்னையிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அவரோ வாயெல்லாம் பல்லாக,” ஐ க்நோ சார் யூ ஆர் த பாப்புலர் ஆக்டர் இன் சௌத் இந்தியா.. ஐ லைக் யுவர் மூவீஸ்..  ஐம் எ ஹீயூஜ் ஃபேன் ஆஃப் யூ… ” மகளின் அடுத்தடுத்த பட வாய்ப்பிற்காக வலிய வந்து பேசினாள்  அமலவேணி.

‘என்னடா இது மகளை கரெக்ட் பண்ண வந்தா அம்மா கரெக்ட் ஆயிடுவா போல !!’ என்று உள்ளூர சலித்துக் கொண்டவன் வெளியே சிரித்து விழிகளை அகல விரித்தான். 

“ரியலி ஆன்ட்டி !! ஓஓ தாங்க் யூ சோ மச் ஆன்ட்டி, ஐ லைக் யுவர் டாட்டர் ஆக்டிங் ஆன்ட்டி இன் மை நெக்ஸ்ட் ஃபிலிம் ஷீ இஸ் எ ஹீரோயின் “என்றான்.

ரிஃபாஷாவிற்கு அவன் அப்பட்டமாக வழிந்தது புரிந்தது. 

‘இந்த நாய்க்கே அடுத்த ஃபிலிம் கிடைக்குமானு தெரியாது இதுல எனக்கு சான்ஸ் தருது ‘உள்ளுக்குள் இருந்த கிராமத்து பைங்கிளி நெடுங்குழலி வெளியே வந்து குரல் கொடுத்தாள்.

ரிஃபாஷா படத்திற்காக வைத்துக் கொண்ட பெயர்  பிரபல இயக்குனர் ஒருவர் தான் இப்பெயரை வைத்தார்.

“யூ லவ் ஃபோட்டோகிராஃபி … ஐம் ஆல்ஸோ” காதோரம் கிசுகிசுப்பாக கேட்டவனை அப்படியே ஆற்றில் தள்ளி விடலாமா எனத் தோன்றியது அவளுக்கு .

“நோ ஐ ஹேட் ஃபோட்டோகிராஃபி ,தட்ஸ் ஒய் ஐ டேக் த ஃபோட்டோஸ் இன் மை கேமரா” அலட்சியமாக நக்கல் அடித்தவள் வேறிடம் சென்று விட்டாள்.

‘பச்சைக் கிளியை வளைக்க தாய்க்கிளியை பிடித்தால் போதும் ‘மனதுக்குள் கணக்கு போட்டான் சர்ஷிமன்.

இரவுப் பொழுது ஆகி விட்டது.  மனுஷ்யபுத்திரனுக்கு உறக்கம் வரவில்லை.  நாளை எடுக்கப் போகும் சீன்களை ஒரு முறை மனதில் ஓட்டியவன் வசனங்களில் சில திருத்தங்களை செய்தான்.  கைபேசி டிங் என்று ஒலி எழுப்பியது.  இன்ஸ்டாகிராமில் முதல் மனைவி இந்நாள் கணவனோடு நெருக்கமான புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு இருந்தாள்.  அதை இவனுக்கு அனுப்பி வைக்க அதனைப் பார்த்தவனுக்கு கடுப்பாகிப் போனது. 

“வெட்கங்கெட்ட ஜென்மம் சேடிஸ்ட் அந்தரங்கத்தை படம் பிடித்துக் காட்டும் புத்தியை விட மாட்டாயா காமத்தை கடை பரப்பி என்ன சாதித்தாய் ??” என ஃபேக் ஐடியில் இருந்து கருத்து தெரிவித்து இருந்தான். 

சில மணித்துளிகளில் அவனை பாராட்டி சிலரும் திட்டி சிலரும் பதில் அனுப்பி இருந்தனர்.  அவர்களுக்கு பதில் அளிக்கவில்லை அவன்.  ‘அவளுக்குப் புரிந்து இருக்கும் அது போதும்’ என்றெண்ணியவன் கேரவனுக்குள் உறங்கிட அதிகாலையில் கண் விழித்தவன் முன்பாக அமர்ந்திருந்தாள் அவள்.

பட்டென்று எழுந்தவன், கண்களை கசக்கி மீண்டும் விழிக்க வெறுமையாக இருந்தது அவ்விடம்.

“ச்சே கனவா இதென்ன ஒரு இரவு கூட இருந்தவ கனவுல எல்லாம் வர்றா நமக்கு என்ன ஆச்சு ??”என்று தலைக் கோதிக் கொண்டவன்  நேற்று கிடைத்த பத்திரிக்கையை படித்தான்

நமச்சிவாயத்தின் மச்சினி பெயர் என்ற இடத்தில் பார்க்க பெயர் போட்டிருந்தது.

“அகரயாழினி ” வயது 25 என்று

அவன் பெயர் படித்த அதே நேரத்தில் அங்கே நமசிவாயம் ,”அகா நீ இல்லாம எவ்வளவு தவிச்சுட்டேன் தெரியுமா ஏன் டா என்னை விட்டுட்டு போன ??”என்று அவளது தாடையைப் பிடித்து முகத்தை தன் அருகில் இழுத்தவன் அவளது இதழ்களை நோக்கி குனிந்தான்.

…. தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்