308 views
பகுதி-02
மனுஸ்யபுத்திரன் சைட் சீயிங் செல்கிறேன் என்று கிளம்பி விட அதே நேரத்தில் நமசிவாயத்தின் மூன்றாம் மனைவி காட்டுக்குள் ரத்தக்களறியுடன் ஓடிக் கொண்டிருந்தாள்.
அவள் பின்னே காட்டுயானை ஒன்று ஓடி வந்து கொண்டிருந்தது. எங்கேப் போய் ஒளிந்து கொள்வது என்று அவளுக்கு புரிபடவில்லை.
பிள்ளையாரப்பா உனக்கு வெரட்ட வேற ஆளே கிடைக்கலையா… இந்த புள்ள பூச்சியா கிடைச்சேன்… சாமி நீ தொரத்துற அளவுக்கு நான் ஒர்த் இல்ல நான் இன்னும் என் வாழ்க்கையை வாழவே ஆரம்பிக்கலை என்ன விட்ரு விநாயகா உன்னை எங்க பார்த்தாலும் காசு குடுக்குறேன் அய்யோ வாழைப்பழம் தேங்கா கரும்பு எல்லாம் தரேனே என்னை விட்டுடேன் என்று மூச்சு வாங்க வேண்டிக் கொண்டே ஓடியவள் அங்கே ஒரு கார் நிற்பதை கண்டு வேகமாக கார் டிக்கியை திறந்து உள்ளே ஒளிந்து கொண்டாள்.
அந்த கார் வேறு யாருடையதும் அல்ல நம் இயக்குநர் மனுஸ்யபுத்திரனுடையது தான். அவன் காரை நிறுத்தி விட்டு ஒரு மரத்தின் மீதேறி அமர்ந்து தொலைநோக்கி மூலமாக இயற்கை அழகை பார்த்து ரசித்து கொண்டிருந்தான்.
கார் டிக்கி டப்பென்று சாத்தும் சத்தம் கேட்க தன்னிலை வந்தவன் வேகமாக மரத்திலிருந்து குதித்தான்.
கார் டிக்கியை க்ளோஸ் பண்ணாம வந்துட்டோமே… குரங்கு எதுவும் உள்ள போயிடுச்சா என்று எண்ணியபடி மெதுவாக கார் டிக்கியை திறக்க உள்ளே கண்களை இறுக மூடிக் கொண்டு உடலை குறுக்கி படுத்திருந்தாள் அவள்.
மனுஷ் அதிர்ந்து விட்டான். ஏற்கனவே ரத்தக்களறியாக அவள் இருக்கவும் யாரேனும் எதுவும் செய்து கொண்டு வந்து இவளை போட்டு விட்டார்களா என்று எண்ணியபடி அவளை நடுங்கும் கைகளால் தட்ட கண்விழித்தவளோ யானை தும்பிக்கையை வைத்து திறந்து விட்டதோ ஒரே சுழற்றில் நம்மை தூக்கி அடித்து விடுமோ என்றெல்லாம் நினைத்து பயந்தவள் மெல்ல கண் திறக்க எதிரே மனுஷ் நின்று கொண்டிருந்தான்.
அது அது போயிடுச்சா என திக்கி திணறி கேட்டவளை தீயென முறைத்தான்.
அப்போ நீ சுயநினைவோட தான் வந்து ஒளிஞ்சியா அடச்சீ கீழே இறங்குமா என்றவன் வேகமாக அவளை இழுத்து வெளியே விட்டான்.
அச்சச்சோ என்று அலறியவளைக் கண்டு பயந்தவன் ஏய் என்ன ஆச்சு ஏன் கத்துற மெதுவா தானே இழுத்தேன் என பல்லை கடித்தான்.
அட யோவ் பின்னாடி பாருயா வந்து தொலை நானும் உன்னால யானை கிட்ட மாட்டிக்குவேன் போல என்றவள் அவனை இழுத்து கொண்டு ஓடினாள்.
மனுஷ் பின்னால் திரும்பி பார்க்க மூன்று யானைகள் தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருந்தது.
ஏய் இரு இந்த மரத்துல ஏறிப்போம் அது போனதும் இறங்குவோம் என்று அவளை மேலே தூக்கி விட்டான். உயிர் பயத்தில் அவள் மீது இருந்த ரத்தமெல்லாம் அருவறுப்பாக தோன்றவில்லை அவனுக்கு.
அவளும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி ஒரு தைரியத்தில் ஏறி விட்டாள்.
வந்த யானைகளோ காரை தும்பிக்கையால் தூக்கி தலைகீழாக அடித்து விட்டது. கார் அப்பளம் போல நொறுங்கி கிடந்தது. அதையும் ஏறி மிதித்து காட்டுப் பாதையில் ஓடின.
“
அய்யோ அய்யோ போச்சு போச்சு என் கார் போச்சு முப்பது லட்சம் போச்சே !!” என்று அலறினான்.
“
எதேய் இந்த காரு முப்பது லட்சமா… ஹ்ஹ்ம் ஒரே அடியில் நொறுங்கி போச்சு, இது முப்பது லட்சமாம் யாரு கிட்ட கப்சா உடுற போயா “என்று அவள் நக்கலடிக்க…
பட்டென்று அவளை கீழே தள்ளி விட்டு விட்டான்.
‘
நல்லவேளை ஏறிய மரத்தின் உயரம் சிறியது இதுவே பனை மரத்தில் ஏறி இருந்தால் தன் நிலை??!’ என்று மரத்தை பார்த்தவள் தலையை குலுக்கி கொண்டாள்.
அவனும் அதே வேகத்தில் கீழே குதித்தான்.
“
ஆளைப்பாரு உன்னால தான் என் கார் இப்படி ஆச்சு…!! முப்பது லட்சம் காலி.. ஒழுங்கா ஓடிப் போயிரு… ச்சே” என்றவன் காருக்கு அருகில் செல்ல
“
மிஸ்டர். சிட்டி ரோபோ, உங்க விலை மதிப்பற்ற உசுரை காப்பாத்தி கொடுத்து இருக்கேன் அதுக்கு பாராட்டாம பிசாத்து முப்பது லட்சத்துக்கு சலிச்சுக்கிறீங்க, இந்த காரைப் பார்த்தா மூணு லட்சம் கூட தேறாது போல இதுக்கு முப்பது லட்சமா !!”என்றவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.
“
ஹேய் ஹேய்… அச்சோ மயங்கிட்டா , இப்படியே விட்டுட்டு ஓடிடலாமா… ப்ப்ச் இப்ப என்ன செய்றது… ஹேய் கேர்ள் வாட் ஹேப்பன்ட் ?, ” என அவளது கன்னம் தட்ட ம்ஹூம் விழிக்கவில்லை அவள்.
“
ஓ மை காட் எனக்குனே வருது பாரு…!!” என்று திரும்ப , அங்கிருந்து போயிருந்த யானைக் கூட்டம் திரும்பி வந்து கொண்டிருந்தது.
“
அட கடவுளே !! இது வேற வருதே ! ஏய் இந்தாம்மா ,எழுந்து தொலை “என்று கத்த யானை நெருங்கி வர வேறு வழியின்றி அவளை தூக்கி தோளில் போட்டு கொண்டு ஓடினான்.
“
ஹ்ஹா ஹ்ஹா ஆஆஆ யப்பா ஆளைப் பார்த்தா பீன்ஸு மாதிரி இருக்கா ,ஆனா வெயிட் பரங்கிக்காயை தூக்கி சுமக்குற வெயிட் ல இருக்கா… ஸ்ஸ்ஸப்பா முடியலை ஹ்ஹ்ஹம்ம் “என்று மூச்சு வாங்கி பாதை போகிற போக்கில் ஓடினான்.
ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் ஓட இயலவில்லை அவளை இறக்கி விட்டவன் அங்கேயே சாய்ந்து விட்டான்.
ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு ,அமைதியாக கவனிக்க அங்கே மெலிதான சலசலப்பு சத்தம் கேட்டது. அருகில் தான் தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது என்று உணர்ந்தவன், வேகமாக தண்ணீர் இருக்கும் இடத்தை தேடினான்.
சிறு தொலைவிலேயே தண்ணீரை கண்டு பிடித்தவன் சுத்தபத்தம் எதுவும் பார்க்கவில்லை நீரை அளைந்து இருகைகளாலும் அள்ளி குடித்தவன், சிறிது கையில் கொண்டு வந்து அவளது முகத்தில் தெளித்தான்.
மெதுவாக கண் விழித்தவள், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே ,”ஏய் யார் நீ… ? அவன் அனுப்பினானா!! அந்த கெழட்டுப்பயலுக்கு எவ்வளவு திமிர் … எதுக்கு டா என் பக்கத்தில் வர்ற? உன்னை அவனை அடிச்ச மாதிரியே …”என்றபடி அங்குமிங்கும் தேடியவள் கட்டையை எடுத்து மனுஷை அடிக்க ஓங்கி விட்டாள்.
“
ஏய் நின்ன பிராந்தோ… !!”
“
யார் நீ பக்கத்தில் வராத …” என்று கட்டையுடன் மிரட்டினாள்.
“நோக்கு சேச்சி!!”
“சேச்சியா நான் சின்ன பொண்ணு, உனக்கு அக்கா இல்ல” என்று முறைத்தாள்.
“சரி உன் பேர் தெரியாம எப்படி கூப்பிடுறதாம்… ??”
“உங்களுக்கு தமிழ் தெரியும் தானே.. !!
“ஹான் ஞான் கொன்சம் கூடுதலாயிட்டு அறியும்…!”
“அந்த அறிஞ்ச வார்த்தையில் தமிழ் ல பறையலாம்… இப்ப பறைஞ்சு…” என தனக்குத் தெரிந்த மலையாளத்தை கடித்து வைத்தாள்.
“நன்னாயிட்டு இருக்கணும் மலையாளத்தை கடித்து வைக்காதே… ஞான் குட்டி என்டு விளிக்குமோ… ??”
“குட்டியும் வேண்டா பட்டியும் வேண்டா , நீயும் நானும் என்ன உறவா கொண்டாடப் போறோம் , சும்மா ஏதாவது சொல்லி கூப்பிடு மொதோ இங்கிருந்து போகலாம்” என்று எழுந்து கொண்டாள்.
“
அச்சோ !! உன் கூட ரிலேஷனா நோ சான்ஸ் “என்று கையெடுத்து கும்பிட்டவன் தயங்கியபடி,” உன் டிரெஸ் எல்லாம் ப்ளடா இருக்கு வாஷ் பண்ணிக்கோ” என்றான்.
சற்று கூசிப் போனாள் அவள். அந்நிய ஆடவனுக்கு தெரியும்படி வந்த மாதவிடாயை சபித்தவள் வேகமாக ஆற்றுக்கு ஓடி தண்ணீரை அள்ளி மேலே அடித்து தெளித்து கொண்டு ஆடையையும் கசக்கினாள். கறை ஏதோ போனது… தன் முந்தானையை உதறி மேலோடு போர்த்தியபடி வந்தாள்.
“
நீங்க முன்னாடி போங்க நான் பின்னால வர்றேன்” என தயங்கி நிற்க
மனுஷ் எதுவும் பேசாமல் அமைதியாக நடந்தான்.
சிறிது தூரம் நடந்த பிறகு,” நான் ஒரு ஐடியா சொல்லுறேன் கேட்குறியா..!!” தட்டு தடுமாறி தமிழில் கேட்டான்.
“
ஹ்ம்ம் “என்றவள் நிமிராமல் இருக்க
“
என் கார்ல டவல் டிஷ்யூஸ் இருக்கு அதை வச்சு ஏதாவது பண்ண முடியுமா னு பாரு… இங்க இருந்து சூட்டிங் ஸ்பாட் போயிட்டா உனக்கு தேவையானது கிடைக்கும்” என்று சொல்ல சரி என்று சம்மதித்தாள்.
அவளால் ஒரு கட்டத்திற்கு மேல் நடக்க இயலவில்லை.
“
இல்ல நீங்க போங்க நான் வரலை” என்றவளுக்கு வலியின் வேதனையில் கண்ணீர் வந்தது.
நமக்கென்ன என்று விட்டும் போக முடியவில்லை அவனால்.
“
இதோ இந்த பேக் வச்சிருக்கியே அதுல ஏதாவது இருக்கானு தேடி பாரு…” என்றதும் தான் நினைவே வந்தது. அத்தனை ஓட்டத்திலும் தன் பையை விடாமல் பிடித்திருந்தது. பையைத் துழாவினாள். அவளது நல்ல நேரம் கையிருப்பில் மாதவிடாய் பட்டி இருந்தது.
“
ஸ்ஸ்ஸ் அப்பா இருக்குது “என்று பெருமூச்செறிந்தபடி அவனைத் தேட மனுஸ்யபுத்திரன் எப்போதோ அங்கிருந்து சென்று இருந்தான்.
தனது பட்டியை மாற்றியவள் விரைந்து நடக்க, அவன் தூரத்தில் நின்று கொண்டிருந்தான்.
இருளும் மெல்ல கவிழத் துவங்கி இருந்தது. காட்டுப்பகுதி என்பதால் நன்றாக இருட்டி இருக்க தனது கைபேசியை ஒளிர விட்டு நடந்தனர் இருவரும். ஒரு வழியாக கார் நொறுங்கி கிடக்கும் பகுதிக்கு வந்து விட்டிருந்தனர்.
‘
இதுல இருந்தா டவல் எடுத்து தர்றேன் னு சொன்னாரு… இது பாயாசத்துல நொறுக்கி போட்ட அப்பளம் மாதிரி கெடக்கே’ என முணுமுணுத்தாள்.
அவளை முறைத்தபடி,” வேற வழி இல்லை இதைத் தான் தேடி ஆகணும் “என்று விட்டு சுற்றி முற்றி பார்க்க காரில் எதுவும் மிஞ்சவில்லை .
“
ப்ப்ச் இதை பார்த்தா ஆகாது நீங்க உங்க ப்ரெண்டு யாருக்காவது கூப்பிடுங்க போயிடலாம்” என்க
“
டவர் இருந்தா கூப்பிட மாட்டேனா… !!”கடுப்படித்தவன் தனது பேன்ட் பாக்கெட்டில் துழாவிட லைட்டரும் சிகரெட்டும் வந்தது.
“
என்ட குருவாயூரப்பா இதுவாது கிடைச்சுதே…” என சிகரெட்டை பற்ற வைக்கப் போக படக்கென்று லைட்டரை பிடுங்கினாள்…
“
ஹேய் பிராந்து… இடியட் கிவ் மீ த லைட்டர் “
“
ப்ப்ச் இருங்க அவ அவ குளிரில் தத்தளிக்கிறா இப்ப இது முக்கியமா…!!” என்றபடி பொறுக்கி குவித்திருந்த சுள்ளிகளை பற்ற வைத்தாள். சிறிது நேரம் கழித்து தீ பற்றி விட்டது. உடல் நடுக்கத்தை அந்த சூட்டில் குறைக்க முற்பட்டாள்.
“
ப்ப்ச் அதை குடு “என்றவன் சிகரெட்டை பற்ற வைக்கப் போக அது நழுவி கீழே விழுந்து விட்டது.
“
போச்சு இருந்தது ஒண்ணு தான் அதுவும் போச்சு எல்லாம் உன்னால… “
“
சிகரெட் குடிக்க கூடாது தப்பு “என்றாள் சிறுபிள்ளையாய்
“
ரொம்ப முக்கியம் பே” என்றவன் கைபேசியை லொட் லொட் என்று தட்டிக் கொண்டிருந்தான். அது வேலை தான் செய்யவில்லை.
வயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பசி ,வலி எல்லாம் சேர்ந்து கொண்டது அவளுக்கு. அவனுக்கும் பசி தான் ,ஆனால் வெளிக்காட்டிடவில்லை.
நொறுங்கிய காருக்குள் ஏதாவது கிடைக்கிறதா என்று துழாவி காரோடு நசுங்கி ஒட்டிக் கிடந்த அவனது பேகை எடுத்து விட்டான்.
மெதுவாக இன்னொரு பேக்கையும் இழுத்து வெளியே கொண்டு வந்து விட ,அதில் பிரட் ஜாம் இரண்டும் நன்கு நசுங்கி ஒட்டிக் கொண்டிருந்தது டப்பாவுடன். ஏதோ உணவுக் கவரும் நசுங்கியே உள்ளே இருந்தது.
‘
இதாவது கிடைச்சுதே..!!’ என்று எண்ணிக் கொண்டு அதனை கவனமாக நெருப்பின் வெளிச்சத்தில் பிரித்தான்.
பசி தந்த கிறக்கத்தில் இருவரும் கிடைத்த உணவை ஆவலாய் உண்டு முடித்தனர்.
“
இந்தா இந்த டிரெஸை போட்டுக்க குளிராது… ” எனக் கையில் கொடுத்தான். மறுப்பின்றி எடுத்துக் கொண்டவள் எப்படி உடை மாற்றுவது என்று விழிக்க,
“நான் அந்த பக்கம் இருக்கேன் மாத்திட்டு கூப்பிடு “என்று நகர்ந்து சென்று விட்டான்.
ஆடை மாற்றியவள்,” மாத்திட்டேன் வாங்க “என்று அழைத்தாள்.
இருவரும் பெயர் கூட சொல்லிக் கொள்ளவில்லை. ஆனாலும் அந்த அத்துவான காட்டில் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தனர்.
சூரியனின் ஒளிக்கதிர்கள் முகத்தில் பளீரென பட முதலில் அவள் தான் கண் விழித்தாள்.
தீ மூட்டிய அந்த மூட்டம் சாம்பல் பூத்து தீ அணைந்து இருந்தது. அதன் அருகிலேயே மனுஸ்யபுத்திரன் உடலை குறுக்கி உறங்கிக் கொண்டிருந்தான்.
அதற்குள் அவனைத் தேடி யூனிட் ஆட்கள் வந்து விட்டிருந்தனர். கூடவே பத்திரிக்கையாளர்களும்.
இங்கே நமச்சிவாயம் மருத்துவ மனையில் தலையில் கட்டுடன் மயக்கத்தில் கிடந்தார். அவரது அருகில் மனைவியர் இருவரும் நின்று இருந்தனர்.
“நல்ல சவட்டி அடிச்சிருக்கா அக்கா பாரேன் ,மண்டையிலேயே போட்டு இருக்கா” என்று நமச்சிவாயத்தின் இரண்டாம் மனைவி ஷகீரா சொல்ல
முதல் மனைவி அமுதரசியோ ,”சும்மா இருடி நானே அடி பட்டிருக்குனு கவலையில இருக்கேன் “என்று பரிதாபமாக கணவனைப் பார்த்தாள்.
“ஆமா ஆமா ரொம்பபப அக்கறை தான் இந்த ஆளு இன்னும் கொஞ்சம் உன்னை தாங்கி இருந்தாரு உசுரை கூட குடுத்திடுவ போ “என்று நொடித்துக் கொண்டாள் ஷகீ.
“விடுடி என்ன இருந்தாலும் புருஷனா போயிட்டாரு… பூவுக்கும் பொட்டுக்கும் சொந்தக்காரர் இது தான் நமக்கு இந்த ஜென்மத்தில் வாய்ச்ச தலையெழுத்து… அவளாவது எங்கேயாவது நல்லா இருக்கட்டும் “என்று மூன்றாமவளுக்கு ஆசியை வழங்கினார் அமுதரசி.
நமச்சிவாயம் கண் விழித்து தன் மனைவிகளை பார்த்தவர் பார்வையை விலக்கி அங்குமிங்கும் தேடியபடி,” அவ எங்கடி??” என்று கேட்க
‘இந்த மனுசனுக்கு அடி வாங்கியும் புத்தி வரலையே ..!’என உள்ளூர சலித்துக் கொண்டு ,” எங்களை கேட்டா ??”என்றனர் இருவரும் ஒரு சேர.
அவர் தேடியவளோ இயக்குநர் மனுஸ்யபுத்திரனுடைய அருகில் நின்று திருதிருவென்று விழித்துக் கொண்டு இருந்தாள் பத்திரிக்கையாளர்களை பார்த்து பயந்தபடி.
பத்திரிக்கையாளர்கள் கேள்விக் கணைகளால் மனுஸ்யபுத்திரனை துளைத்துக் கொண்டிருந்தனர்.
….. தொடரும்.