
அந்த பார்க் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் தான்.. எனவே அங்கு நடந்த துப்பாக்கி சண்டை யாருக்கும் தெரியவில்லை… வாசு போகும் போதே தன் பாதுகாவலர்களுக்கு கண் காட்டி விட்டு தான் சென்று இருந்தான்… எனவே அவர்கள் இறந்து கிடந்த சஹானா உடலை யாருக்கும் சந்தேகம் வராமல் ஒரு இடத்தில சென்று போட்டுவிட்டனர்….
மருத்துவமனை செல்லும் வரை வாசுவுக்கு படபடப்பாக தான் இருந்தது… நல்வாய்ப்பாக அவளுக்கு வலது கையில் மட்டும் தான் குண்டு லேசாக உரசி சென்று இருந்தது…பயத்தில் தான் மயங்கி இருந்தாள்… மருத்துவர் அவளுக்கு கட்டு போட்டு விட்டு பயத்தில் வந்த மயக்கம் என்று மட்டும் கூறி எழுந்ததும் அழைத்து செல்லலாம் என கூறிவிட்டார்….
அவளும் அரை மணி நேரத்தில் கண் விழித்து இருக்க முதலில் அவள் தேடியது வாசுவை தான்.. அவனோ அவளின் இடது கையை பிடித்து கொண்டு அதில் தலை சாய்த்து இருந்தான்… அவள் அந்த கையை அசைக்க அதில் எழுந்த அவன் “அம்மு உனக்கும் ஒன்னும் இல்லல கை வலிக்குதா…” என்று மங்கிய குரலில் கேட்டான்…
அவனை பக்கத்தில அழைத்தவள் “மாமா எனக்கு ஒன்னும் இல்லை… இங்க பக்கத்துல வா” என்று அழைத்து அவன் தலையை கோதினாள்…. அவன் அமைதியாக இருக்க “மாமா வீட்டுக்கு போகலாமா ரொம்ப நேரம் ஆச்சு… என்னை சூட் பண்ணவங்கல நீ என்ன பண்ணி இருப்பேன்னு எனக்கே தெரியும்… ஆனா வீட்டுல இதை பத்தி சொல்லாத மாமா… என் கையில எப்படி அடிபட்டுச்சுனு கேட்டா குழந்தை எதோ கீழ விழுந்திருச்சு… அதை பிடிக்க போய் கையில கிழிச்சிகிட்டேன்னு தான் சொல்லனும்… வீட்டுல அப்பா வேற இருக்காங்க… அவங்களை பத்தி எதுவும் மூச்சு விட கூடாது” என்று மிரட்டி தான் கூறினாள்….
அவனும் சரி என்று கூற வீட்டிற்கு அழைத்து சென்றான்… வீட்டில் அனைவரும் அவளை தான் விசாரித்து தள்ளிவிட்டனர்… அவளும் வாசுவிடம் கூறிய படியே வீட்டில் அனைவரிடமும் கூறினாள்… அவர்களின் செல்ல மகளோ தன் அன்னை தன்னை இன்னும் தூக்கவில்லை என்று அழுக ஆரம்பித்துவிட்டாள்… பாப்பாவிற்கு தாய்ப்பால் திவ்யா தான் தருகிறாள்…. குழந்தையை தத்து எடுத்து கொண்டு வரும் போதே கூறிவிட்டாள்…. சைந்தவி தோழியை அணைத்து கொண்டு அழுதுவிட்டாள்…
பாப்பா எப்பபோதும் சைந்தவியிடம் தான் இருப்பாள்… அவளுக்கு சைந்தவி குரல் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்… தற்போதும் சைந்தவியை தூக்க சென்ற சைந்தவியை தடுத்த வாசு அவளை அமர வைத்து பாப்பாவை அவள் மடியில் வைத்தான்…. அந்த சின்ன வேண்டும் தாயின் பரிசம் பட்டதும் அழுகையை நிறுத்தி விட்டு பொக்கை வாய் போட்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டது…. அந்த சிரிப்பில் அனைவருமே விழுந்து விட்டனர்…
அன்று இரவு கவின் திலீப்பிடம் மட்டும் கூறிய வாசு தன் ஆட்களுக்கு அழைத்து யாருக்கும் சந்தேகம் வராதபடி புதைக்க கூறிவிட்டான்… அவனுக்கு அதை வசந்தியிடம் கூற தோன்றவில்லை… சொல்ல போனால் வசந்தியே அவளிடம் ஒரு வருடமாக பேசுவது இல்லை…. அவளை பார்த்து ஆறு மாதங்கள் மேலாகிவிட்டது…. தற்போது ஒரு ஆசிரமத்தில் வேலை பார்த்து கொண்டுள்ளார்… யாரை பற்றியும் அவர் தெரிந்துகொள்ள முயலவில்லை…
அவரின் கோவம் மட்டுமே அனைத்து பிரச்சனைக்கும் காரணம்… குருவிடம் சண்டையிட்டது அவரின் கண்மூடி தனமான சைந்தவியின் மேல் ஏற்பட்ட கோவம்… சஹானாவை தட்டி கேட்காதது…. ஒரு நிலையில் இல்லாதது…. அனைத்திற்கும் அவர் மட்டுமே காரணம்… தற்போது கணவர் பிள்ளைகள் இன்றி தனியாக இருப்பதே அவரின் மிக பெரிய தண்டனை….
கவினும் திலீப்பும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டனர்… இனிமேல் அந்த வீட்டில் சஹானா வசந்தி இருவரின் பேச்சே வராது… அது தான் உண்மை…
அடுத்த நாள் நல்லபடியாக ஆரம்பிக்க வீட்டில் அனைவரும் பரபரப்பாக இருந்தனர்… எல்லாம் அந்த வீட்டின் குட்டி தேவதையின் பெயர் வைக்கும் விழாவிற்கு தான்… வீட்டினரை மட்டுமே வைத்து விழா ஏற்பாடு செய்து இருந்தது… நல்லநேரம் வந்ததும் பாப்பாவை தொட்டிலில் போட்டு பாப்பாவின் காதில் பெயரை கூறினர் வாசுவும் சைந்தவியும்… பெயரை கேட்டு வீட்டினர் அனைவர்க்கும் சந்தோஷம்… குட்டி வாண்டுக்கும் பிடித்து விட்டதோ என்னவோ பெயரை காதில் கேட்டதும் சிரிக்க ஆரம்பித்ததுவிட்டது…
வீட்டினர் ஒரு ஒருவராக வந்து குழந்தையின் காதில் “யாழிசை” என்று கூறி சென்றனர்…. நாட்கள் அதன்போக்கில் செல்ல யாழிசைக்கு முதல் பிறந்தநாளும் வருகிறது… அவள் அவர்களுக்கு கிடைத்த தினத்தில் தான் அவர்கள் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர்…. யாழிசையின் பிறந்தநாளை பெரிதகி கொண்டாடுகின்றனர்….
நிறைய பிசினெஸ்மேன்கள் நண்பர்கள் என நிறைய பேர் வந்தனர்… நல்லபடியாக கொண்டாட்டமும் முடிய வந்து இருந்தவர்கள் கிளம்பி இருக்க வீட்டினர் மட்டுமே இருந்தனர்.. பெண்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க சைந்தவி மயங்கி கீழே விழ பார்த்தாள்… அவளையே பார்த்து கொண்டு இருந்த வாசு இரண்டே எட்டில் அவளை கீழே விழாமல் பார்த்து கொண்டான்…
தண்ணீர் தெளித்தும் எழாத சைந்தவியை பார்த்து வாசு பதற ஆரம்பித்துவிட்டான்.. திலீப் தான் வாசுவை கொஞ்சம் நகர கூறி அவளின் நாடியை பிடித்து பார்த்தான்… அவனுக்கு இரட்டை நாடி தெரிந்தது… உடனடியாக வாசுவை அணைத்த திலீப் “மச்சா நீ அப்பாவா ஆகிட்ட மச்சா… பாப்பா ப்ரெக்னட் மாதிரி தெரியுது… நாளைக்கு காலைல ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிக்கலாம்…” என்று கூறினான்…
வீட்டினர் அனைவரும் வாழ்த்து கூறிக் கொண்டு இருக்கும் போதே சைந்தவி கண் விழித்து இருக்க அனைவரும் சந்தோசமாக தன்னையே பார்ப்பதை பார்த்து வாசுவை கண்களால் என்னவென்று வினவினாள்… அவன் மெதுவாக யாழி பாப்பாவை தூக்கி கொண்டு வந்தவன் பாப்பாவின் கையையும் சேர்த்து அவள் வயிற்றில் வைத்தான்… அவளுக்கு கண் எல்லாம் கலங்கிவிட்டது… எத்தனை வருட கனவு இது… அனைவரும் வாசுவிடம் அறைக்கு செல்லுங்கள் என கூறி அறைக்கு அனுப்பி வைத்தனர்…
வாசு பாப்பாவை தூக்கி கொண்டவன் சைந்தவியை மெதுவாக நடத்தி அறைக்கு அழைத்து சென்றான்…. பாப்பாவை படுக்கையில் படுக்க வைத்தவன் சைந்தவியை இறுக்கி அணைத்து கொண்டான்… இருவரும் தங்கள் சந்தோசத்தை அணைப்பினில் காட்டினர்… வாசு பாப்பாவை பார்த்து கொண்டே “நமக்கு எத்தனை குழந்தைங்க வந்தாலும் யாழி குட்டி தான் நம்ம முதல் பாப்பா… அவளுக்கு நாம அவளை அடாப்ட் பண்ணது தெரியக்கூடாது அம்மு…” என்று கூறினான்..
கண்டிப்பா பாப்பாவுக்கு தெரியாது மாமா… என்று கூறி அவனிடம் இருந்து விலகியவள் பாப்பாவின் அருகில் சென்று அவள் i=உறக்கம் கலையாதவாறு மென்மையாக முத்தமிட்டாள்….
ஏழு மாதங்கள் காற்றாய் ஓடி இருக்க வளைகாப்பிற்கு முன்பே வாசு சைந்தவியின் மகன் இந்த உலகை தொட்டு இருந்தான்… அதுவும் சைந்தவியை படாத பாடுப்படுத்தி தான் வந்தான்… சைந்தவியின் சத்தம் வாசுவை நிதானம் இழக்க செய்து இருந்தது… அவனை கவனிக்கவே கவின் திலீப் இருவருக்கும் சரியாக இருந்தது…
அனைவரையும் பயப்படுத்தி தன் தந்தையை அழுகை வைத்து தான் பிறந்தான் அந்த சுட்டி கண்ணன்.. அனைவரும் அவனை தூக்கி கொஞ்சி கொண்டாடி தீர்த்து விட்டனர்… அடுத்த ஒரு மாதத்தில் அவனுக்கு வீட்டினரை மட்டும் வைத்து யாதுஷன் என்று பெயர் சூட்டினர்….
அன்று இரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து நீண்ட நேரம் பேசி கொண்டு இருந்தவர்கள் பெரியவர்கள் சத்தமிட்ட பின் தான் அவரவர் அறைக்கு சென்றனர்… கவினின் ரவுடி மகன்கள் இருவரும் தன் தந்தை கெஞ்சிய பின் போனால் போகிறது என்று உறங்கி இருந்தனர்….
கவின் காதம்பரியை அணைத்து கொண்டு “ஏய் காதும்மா நாம வேணும்னா என் பேச்சை கேட்குற மாதிரி ஒரு குட்டி தேவதையை பெத்துக்கலாமா… அதுக்கான வேலையை ஆரம்பிக்கலாமா” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தவாறு கேட்டான்…
அவளோ “ஐயே அரை கிழவனுக்கு ஆசையை பாரு… இன்னொரு குழந்தை வேணுமாம்… போய் ஒழுங்கா தூங்குற வேலையை பாருங்க” என்று அவள் கூறினாலும் அவளின் கன்னங்கள் சிவக்க ஆரம்பித்துவிட்டது….
அவனோ அவள் கூறியதை கேட்டு “ஹே டார்லிங்… யாரை பார்த்து அரை கிழவன்னு சொல்ற… இப்போ நன் வெளிய போனாலும் என்னை சைட் அடிக்க ஆளுங்க இருக்காங்க…” என்று கூறி கொண்டே அவளுள் மூழ்கிவிட்டான்…
அடுத்த அறையில் திவ்யா தந்தை மகனை முறைத்து கொண்டு இருக்க திலீப் அவளின் முறைப்பில் அஞ்சி தன் மகனை கடினப்பட்டு உறங்க வைத்தான்… திவ்யா கோவமாக அறையில் இருக்கும் ஊஞ்சலில் அமர தன் மகனை உறங்க வைத்தவன் அவள் காலடியில் வந்து அமர்ந்தான்….
திவ்யா அவனின் தலையை கோதியவாறே “என் கூட சந்தோசமா இருக்கிங்களா” என்று கேட்டாள்…
அவனோ “உன்னை தவற வேற யாரையும் கல்யாணம் பண்ணி இருந்தா இவளோ சந்தோசமா நிம்மதியா இருந்து இருக்க மாட்டேன் தியாம்மா … என் இன்னொரு அம்மா.. என்ன தான் இளா அம்மா என்னை மகன் மாதிரி பாத்துக்கிட்டாலும் நான் அவங்களை அத்தை தான் சொல்லுவேன்… ஆனா உன்னை அம்மாவா தான் பாக்குறே… அது தான் உன்னை தியாம்மானு மட்டும் தான் கூப்பிடுவேன்….” என்று காதலாக கூறினான்… அவள் ஆனந்த கண்ணீருடன் அவன் உச்சந்தலையில் முத்தமிட்டவள் அவளும் கீழே இறங்கி அவனை தன் மடி மேல் படுக்க வைத்து கொண்டாள்…
அடுத்து வாசுவும் சைந்தவியும் தங்கள் பிள்ளைகளை உறங்க வைத்தவர்கள் பால்கனியில் உள்ள பீன்பேகில் அமர்ந்தனர்… வாசு அதில் அமர அவன் மேல் சைந்தவி அமர்ந்து இருந்தாள்…
சைந்தவி அவன் கண்களை பார்த்து “மாமா நீ மட்டும் இல்லனா இப்போ உயிரோட இருந்து இருப்பேனா கூட தெரியல… நீ எனக்கு கிடைச்ச பொக்கிஷம் மாமா… எனக்கு தெரியும் உன்னோட கோவத்தோட அளவு… அதுல என்கிட்ட நீ துளிகூட காட்டுனது இல்ல… அது மட்டுமில்லாம உன்னை கொல்ல வந்தவ நிறைய பேரை அசுரனா மாறி நீ கொலையும் பண்ணி இருக்க… அவங்க ஒன்னும் உத்தமனுங்களும் இல்லை…. எல்லார் கிட்டயும் அவளோ கோவப்படுற நீ என்கிட்ட மட்டும் உன்னோட இன்னொரு முகத்தை காட்டுறது எனக்கு தெரியும் மாமா.. நீ வெளியில எப்படி வேணா இருந்தாலும் என்கிட்ட நீ எப்பயும் என் கௌதம் மாமாவா மட்டும் இருந்து இருக்க…ஐ லவ் யூ மாமா… எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்கு மட்டும் தான் பொண்டாட்டியா வரணும்…. ஐ லவ் யூ சோ மச் மாமா…” என்று கூறி அவனை அணைத்து இருந்தாள்…
அவனோ “நீ என் தேவதை அம்மு…. உன்னை என்னால கஷ்டப்படுத்தவே முடியாது அம்மு… நான் வெளிய அசுரனா இருந்தாலும் என்னிக்குமே உனக்கு உன்னோட கௌதம் மாமா மட்டும் தான்… ஐ லவ் யூ டூ அம்மு…” என்று கூறி அவளின் இதழை சிறை எடுத்து இருந்தான்…
(இப்படியே அனைவரும் சந்தோசமாக வாழ வாழ்த்தி விடைபெறுவோம் ப்ரெண்ட்ஸ்.. அசுரனின் தாலாட்டு இவன் இதோட முடிஞ்சு போச்சு ப்ரெண்ட்ஸ்…. உங்கள் ஆதரவுக்கு நன்றி.. படிச்சிட்டு லைக் கமெண்ட் அண்ட் ரேட்டிங்ஸ் குடுத்தா இந்த சூப்பர் ஹீரோ ஹாப்பி அண்ணாச்சி… சைலன்ட் ரீடர்ஸ் இப்பயாச்சும் உங்க கருத்தை சொல்லிட்டு போனா நல்லா இருக்கும்… மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடைபெறுகிறேன்… இது உங்கள் சூப்பர் ஹீரோ…)
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
18
+1
+1

