“பேர் வச்சுருக்காங்க பாரு.. பேரு.. அழகுமணியாம்.. அவளுக்கு அண்ணன்.. அந்த மானஸ்தனாம்! ச்சே.. மானபரனாம்..
ஏதோ ஒரு காமெடில வர செந்திலும், அவன் தங்கச்சியும் மாதிரி..
அந்தக் குடும்பத்துல போய் நான் வாக்கப்பட்டேன் பாரு.. என் புத்திய..” என்று அவன் தெளிவாகவே முணுமுணுத்திருக்க, அந்த அழகுமணியும், மானபரனும்.. ஒருவரை ஒருவர் முறைத்தபடி அவன் அறைக்கு வெளியே நின்று அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்!.
“எல்லாம் உனக்கு வச்ச பேரால தான் எனக்கும் அசிங்கம்..” என்று அந்த மானபரன் இவளிடம் சீற, அந்த அழகுமணியோ..
“டேய்.. உனக்குப் பேர் வச்சதுக்கு அப்பறம் தான் எனக்குப் பேர் வச்சாங்க.. நான் உனக்குப் போய் தங்கச்சியா பொறந்தனே.. ச்சை என்ன சொல்லணும்..” என்று அவள் தலையில் அடித்துக் கொள்ள.. மானபரனோ..
“அதைத்தாண்டி நானும் கேட்கறேன்.. உனக்குப் போய் நான் அண்ணனா பொறந்தனே.. கல்யாணத்துக்கு அப்பறமாவது உன்ன முழுசா தலைமுழுகிடலாம்னு பார்த்தா.. அதுக்கும் அந்தக் கிழவி முட்டுக்கட்டை போட்டுடுச்சு..” என்று மானபரன் தலையில் அடித்துக் கொள்ள, அவனை முறைத்தபடியே..
“இப்போ உன்கிட்ட வெட்டி வாய் அடிக்க எனக்கு நேரமில்ல.. முதல்ல எனக்கு தாலிகட்டின தடிமாடு இருக்கே.. அத போய் பேசிக்கறேன்..” என்று தன் அண்ணனிடம் கூறியவள், பின் தனக்குள்ளாக..
‘இவன் பேர் ராகவ்.. அதையே ராம்போ ராக்கி.. ஜட்டில ஜாக்கின்னு சுருக்கி வச்சுட்டு சுத்திட்டு இருக்கான்.. இவன் என் பேர கிண்டல் பண்றானா?’ என்று கறுவியவளுக்கு, அங்கு பலியாடாக.. இல்லையில்லை.. பலி நாயாக வந்து நின்றது அவர்கள் வீட்டு ரோஸி!
உடனே அவளது மண்டையில் ஒரு குண்டு பல்ப் எரிந்திட.. முகத்தில் சிரிப்புடன் அதை எடுத்துக் கொண்டு அவர்களது அறைக்குள் நுழைந்தவள்.. தன் கணவனை ஓரக்கண்ணால் பார்த்தபடியே..
“ஏய் ரோஸிக்குட்டி.. உனக்கு யாரு இவ்வளவு சாஃப்டான பேர் வச்சது.. உனக்கு நான் இப்போ ரொம்ப அழகான பேர் ஒன்னு வைக்கப் போறேன்..
என்ன தெரியுமா?.
கெஸ் பண்ணு பார்ப்போம்..
கண்டுபிடிக்க முடியலையா.. நானே சொல்றேன்..
இன்னைல இருந்து உன் பேர் ராக்கி.. இங்க.. நான் ராக்கின்னு கூப்பிடறேன் நீ திரும்பிப் பாரு பார்ப்போம்..” என்று ஓரக்கண்ணால் ராகவைப் பார்த்தபடியே அவள் அந்த குட்டி ரோஸியை கொஞ்சிக் கொண்டிருக்க, ராகவுக்கோ காதில் புகை வந்தது.
இடுப்பில் கையை வைத்து.. பல்லை நறநறவென கடித்தவாறே அவளை முறைத்தபடி அவன், அவளைப் பார்த்துக் கொண்டிருக்க.. அழகுமணியோ நமட்டுச் சிரிப்புடன் தொடர்ந்தாள்..
“சரி ராக்கி.. உனக்கு நான் காஸ்டலியா.. உனக்குப் புடுச்ச ஜாக்கி ஜட்டி வாங்கி போட்டு விடறேன்.. சரியா? இப்போ பாரு.. உனக்குப் பேரும் மேட்ச் ஆகிடுச்சு.. உனக்குப் பிடிச்ச ஜட்டியும் மேட்ச் ஆகிடுச்சு..” என்று அவள் கூறி முடிக்கக் கூட இல்லை, கொலைவெறியுடன் வெகுண்டெழுந்த ராகவ், தன்னருகே இருந்த ஒரு பூச்சாடியை எடுத்துக் கொண்டு,
“ஏய்..” என்றபடி அவளை நோக்கி ஓங்கினான்!
Tom and Jerry couple a? Interesting 😍
Thank you 🙏🙏🙏